குறிக்கோள் தீர்மானம்

குறிக்கோள் தீர்மானம்

குறிக்கோள் தீர்மானம்

குறிக்கோள் தீர்மானம்

  • 1946 டிசம்பர் 13-ம் நாள், ஜவஹர்லால் நேரு அவர்கள், அரசியல் நிர்ணய சபையில், “குறிக்கோள் தீர்மானத்தை” தாக்கல் செய்தார்
  • இதில், அரசமைப்பு சட்டத்தை உருவாக்குவதற்கான அடிப்படை கொள்கைகளும், அதற்கான நடைமுறைகளும் இடம்பெற்றிருந்தன.
  • இதில் கூறப்பட்டதாவது,
    • இந்த அரசியல் நிர்ணய சபையானது இந்தியாவை இறையாண்மை மிக்க நாடாக அறிவிக்கும் உறுதியான மற்றும் புனிதமான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும், எதிர்கால நிர்வாகத்திற்கான தேவைகளை எடுக்கும்.
    • பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்த பகுதிகள், தற்போது இணைந்து இந்திய அரசுப் பகுதிகளாக இருக்கவும், சுந்தந்திர அரசுகளின் பகுதிகள் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப இந்திய இறையாண்மை பகுதிகளில் சேர்ந்து ஒன்றிய அரசாக ஏற்க்கப்படும்
    • சுதந்திர, இறையாண்மை கொண்ட இந்திய அரசின அதிகாரங்கள் யாவும் நாட்டு மக்களிடம் இருந்தே பெறப்படும்
    • நாட்டு மக்களுக்கு சமூக நீதி, பொருளாதார நீதி, அரசியல் நீதி, சாம்துவம், கருத்து தெரிவிக்கும் உரிமை, வழிபாட்டு உரிமை ஆகியவை உறுதி செய்யப்படும்
    • சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர் உள்ளிட்டோரின் உரிமைகள் பாதுகாக்கப்படும்
    • நாட்டின் ஒருமைப்பாடு உறுதிபடுத்தப்படும்
    • நாட்டின் எல்லைக்குட்பட்ட நிலம், ஆறு, கடல் உள்ளிட்டவற்றின் உரிமைகள் பாதுகாக்கப்படும்
    • உலக அமைதியை பேணுவதற்கான வழிமுறைகள் உருவாக்கப்படும்.

குறிக்கோள் தீர்மானம்

குறிப்பு

  • குறிக்கோள் தீர்மானம் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தினம் = 1947 ஜனவரி 22
  • குறிக்கோள் தீர்மானத்தின் திருத்தப்பட்ட வடிவமே, இந்நாளின் அரசியல் அமைப்பு சட்டத்தின் முகப்புரையாக இணைக்கப்பட்டது.

 

Leave a Reply