அரசியல் அமைப்பிற்கான தேவை

அரசியல் அமைப்பிற்கான தேவை

அரசியல் அமைப்பிற்கான தேவை

அரசியல் அமைப்பிற்கான தேவை என்பது ஒரு நாட்டின் இன்றியமையாத ஒன்றாகும். ஒரு நாடு நேர்மையாக, நியாயமாக செயல்பட அரசியல் அமைப்பு சட்டம் அத்தியாவசியமாகும்
  • ஒரு நாட்டு மக்கள் ஆளப்படுவதற்கான அரசியல் அமைப்புக்கு அடிப்படையாக இருப்பதே அரசியல் சட்டம் ஆகும்
  • ஆட்சியமைப்பின் மிக முக்கிய கூறுகளான சட்டமியற்றுதல், நிர்வாகம், நீதி – ஒழுங்கு போன்றவற்றைப் பற்றி எடுத்துரைப்பதும்; அவற்றின் அதிகாரங்களை விவரிப்பதும்; அவற்றின் பொறுப்பை நடைமுறைப்படுத்துவதும்; அவற்றிற்கிடையேயான பரஸ்பர தொடர்பையும், மக்களுடனான தொடர்பையும் கட்டுப்படுத்துவது அரசியல் சட்டமாகும்.
  • “அணைத்து பிரிவினரும் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு இந்திய அரசியல் அமைப்பு சட்ட வரைவைக் கொடுக்க முடியுமா?” என்று இந்தியத் தலைவர்களுக்கு சவால் விட்டார், அப்போதைய இந்திய விவாகாரத் துறை செயலராக இருந்த பிர்கன் ஹெட் பிரபு (Lord Birkenhead)

அரசியல் அமைப்பிற்கான தேவை

  • இதனை ஏற்று மோதிலால்நேரு தலைமையிலான குழு அரசியல் நிர்ணயசபை தொடர்பாக ஒரு வரைவு அறிக்கையை தயாரித்து வெளியிட்டது. அதுவே “நேரு அறிக்கை” (1928 – Nehru Report) எனப்படுகிறது
  • அரசியல் அமைப்பிற்கான தேவை பற்றி = 1934ல் இந்தியாவிற்கென்று தனி அரசியல் அமைப்பு சட்டம் வேண்டுமென்று முதன் முதலில் கூறியவர் எம்.என்.ராய் ஆவார்.

அரசியல் அமைப்பிற்கான தேவை

  • திரு எம்.என்.ராய் அவர்கள் 1927ல், “இந்தியன் பேட்ரியாட்” (INDIAN PATRIOT) என்ற இதழில் முதலில் இந்திய அரசியல் நிர்ணய சபை பற்றி கூறியுள்ளார்
  • 1936ம் ஆண்டு பைசாபூர் இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில், இந்தியாவிற்கு அரசியல் நிர்ணய சபை வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது (மாநாட்டு தலைவர்= நேரு)
  • 1938-ல் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பாக, “சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு கட்டாயம் உருவாக்கப்படும், எந்தவொரு வெளித்தொடர்பு உதவியும் இன்றி, வயதுவந்தோர் வாக்குரிமையின் படி அரசியல் நிர்ணயசபை உருவாக்கப்படும்” என அறிவித்தார்
  • 1939-ல் நவமபர் 15-ம் தேதி, ராஜாஜி அவர்கள், வாக்குரிமையின் அடிப்படையில் தேர்தல் நடத்தப்பட்டு, அரசியல் நிர்ணயசபை வேண்டும் எனக் வேண்டுகோள் விடுத்தார்
  • 1939-ல் காங்கிரஸ் சட்ட மன்றங்களைப் புறக்கணித்து விலகிய பொழுது காங்கிரஸ் செயற்குழு அரசியலமைப்பு சட்டமன்றம் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தது
  • அரசியல் அமைப்பிற்கான தேவை பற்றி, இந்தியாவின் அரசியல் நிர்ணய சபை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆங்கில அரசு 1940ம் ஆண்டு “ஆகஸ்ட் நன்கொடை”யில் ஏற்றுக்கொண்டது. அப்போதைய இந்திய வைசிராயான “லின்லித்தோ பிரபு” (Lord Linlithow), இந்தியரே அவர்களது அரசியல் அமைப்பை அமைத்துக் கொள்ள அனுமதிக்கப்படுவர் என அறிவித்தார்
  • 1942 மார்ச் 26-ம் நாள், “ஸ்டபோர்டு கிரிப்ஸ்” தலைமையிலான “கிரிப்ஸ் தூதுக்குழு” இந்திய வந்து, “அமைச்சரவைக் குழுத் திட்டத்தை” (Cabinet Scheme) வெளியிட்டது. அதில் பிரிட்டன் அரசாங்கத்தின் சார்பாக இந்திய அரசியலமைப்பு சட்டமன்றம் 2-ம் உலகப் போருக்கு பின் அமைக்கபடும் என உறதி அளிக்கப்பட்டது.
  • கிரிப்ஸ் தூதுக்குழு அறிக்கையை, “திவாலாகும் வங்கியின் பின்தேதியிட்ட காசோலை” என்றார் காந்தியடிகள் (Post dated cheque in a falling bank)
  • ஆனால் கிரிப்ஸ் தூதுக்குழுவின் அறிவிப்பு தோல்வியில் முடிந்தது. முஸ்லிம் லீக் இதனை ஏற்கவில்லை. இந்தியாவை இரண்டாக பிரித்து, இரண்டு தனி அரசியல் அமைப்பு உருவாக்க வேண்டும் என முஸ்லிம் லீக் அறிவித்தது
  • அரசியல் அமைப்பிற்கான தேவை பற்றி = 1945-ம் வருடம், அப்போதைய இந்திய வைசிராய் “வேவல் பிரபு” (Archibald Wavell), காந்தியை சிறையில் இருந்து விடுவித்தவுடன், “வேவல் திட்டத்தை” அறிவித்து, அதில் “இந்தியர்கள் தங்களுக்கென ஒரு அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கிக் கொள்ளலாம்” என தெரிவித்தார்.

அரசியல் அமைப்பிற்கான தேவை

  • பெதிக் லாரன்ஸ், சர் ஸ்டாபோர்ட் கிரிப்ஸ் மற்றும் ஏ.வி.அலெக்சாண்டர் ஆகியோரை கொண்ட “காபினட் மிசன்” குழுவை இந்தியாவிற்கு அனுப்பி வைத்தது இங்கிலாந்து அரசு. அக்குழுவில் இந்தியாவில் ஆய்வு செய்து, தனது அறிக்கையை 1946-ம் ஆண்டு மே 16-ம் தேதி வெளியிட்டது. இதன் அடிப்படையிலேயே இந்தியாவிற்கு அரசியல் அமைப்பு சட்டமன்றம் உருவாக்கிக்கொள்ள ஆங்கில அரசு அனுமதி அளித்தது.

 

 

 

Leave a Reply