இந்திய சுதந்திரச் சட்டம் 1947

இந்திய சுதந்திரச் சட்டம் 1947

இந்திய சுதந்திரச் சட்டம் 1947

இந்திய சுதந்திரச் சட்டம் 1947

                இந்திய சுதந்திரச் சட்டம் – 1947 ஆனது, இந்தியாவிற்கு சுதந்திர வழங்குவது தொடர்பாக இங்கிலாந்து பாராளுமன்றத்தால் உருவாக்கப்பட்ட இறுதி சட்டம் ஆகும்.

அட்லியின் அறிவிப்பு

இந்திய சுதந்திரச் சட்டம் 1947

  • இங்கிலாந்து பிரதமர் அட்லி 1947 பிப்ரவரி 20-ம் தேதி பாராளுமன்றத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். இதுவே “அட்லியின் அறிவிப்பு” எனப்படும்
  • அதில் குறிப்பிட்டவை,
    • 1948 ஜூன் 30-ம் தேதி பிரிட்டிஷ் இந்திய அரசாங்கம் இந்தியாவுக்கு அதிகார மாற்றம் செய்து விடும் (Transfer of Powers)
    • இந்தியாவில் யாரிடம் அதிகாரத்தை ஒப்படைப்பது என்பதைப் பிரிட்டிஷ் அரசாங்கம் முடிவு செய்யும்
    • வைசிராய் வேவலுக்கு பதிலாக “அட்மிரல் மவுன்ட் பேட்டன்” நியமிக்கப்படுவார்

மவுண்ட்பேட்டன் திட்டம்

இந்திய சுதந்திரச் சட்டம் 1947

  • “பிரிவினையோடு விடுதலை” (Freedom with Partition) என்பதே மவுண்ட்பேட்டன் திட்டத்தின் முடிவாகும். இத்திட்டத்தை “ஜூன் 3 திட்டம்” எனவும் கூறுவர்.
  • இத்திட்டம் ஜூன் 3-ம் தேதி 1947-ல் அறிவிக்கப்பட்டது. இதுவே இந்திய சுதந்திரச் சட்டம் 1947 ஆகும்
  • இத்திட்டத்தை அணைத்து கட்சிகளும் ஏற்றுக்கொண்டன.

இந்திய சுதந்திரச் சட்டம் 1947

  • ஆங்கிலப் பேரரசு பெற்றிருந்த இந்திய ஆட்சி அதிகாரங்கள் “இந்தியா, பாகிஸ்தான்” ஆகிய இரண்டு தனி டொமினியன் நாடுகளிடம் ஒப்படைக்கப்படும்
  • இவ்விரு டொமினியன்களும் தனித்தனியே எல்லைகளாக வரையறுக்கப்பட்ட நிலப் பகுதிகளை ஏற்பதற்கும் , மறுப்பதற்கும் அந்த டொமினியன்களுக்கு அதிகாரம் உண்டு
  • ஒவ்வொரு டொமினியனுக்கும், தலைமை ஆளுநர் இருப்பார். அவர் அரசியலமைப்பின் தலைவ்ராக இருப்பார்
  • 2 டொமினியன்களின் அரசியலமைப்பு நிர்ணய சபைகளும் அந்தந்த டொமினியன்களின் விருப்பங்கள், தேவைக்கு ஏற்ப உருவாக்கும். இந்த அரசியல் அமைப்பு நிர்ணய சபைகளே மத்திய சட்டமன்றமாகவும் செயல்படும்
  • நடைமுறையில் ஏற்கனவே உள்ள சட்டங்கள், திருத்தங்கள் செய்யும் வரை நடைமுறையில் இருக்கும்
  • 1935-ம் ஆண்டு இந்திய அரசாங்க சட்டத்தின் அமைப்புகள், செயல்முறைகள்செயல்படும். தலைமை ஆளுநருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் நீக்கப்படும்.
  • இந்திய சிவில் சர்விஸ் அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்டிருக்கிற தனிச் சலுகைகளும், அதிகாரங்களும் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். பதவிக்காலம் முடிகிற வரை பதவியிலிருக்கும் உரிமை அவர்களுக்கு இருக்கும்.
  • இந்திய சமஸ்தான அரசுகளின் மீதுள்ள ஆங்கிலப் பேரரசின் ஆதிக்கம் நீக்கப்பட்டு விடும். ஆதிக்கத்தில் இருந்து விடுபட்ட சமஸ்தான அரசுகள் அவைகளின் விருப்பங்களுக்கு ஏற்ப இந்திய யூனியனிலோ, பாகிஸ்தானுடனோ சேர்த்துக் கொள்ளலாம்.
  • சிந்து சட்டமன்றம் யார் பக்கம் இருக்க வேண்டும் என்பதை அம்மன்றமே தீர்மானித்துக் கொள்ள வேண்டும்
  • வடமேற்கு எல்லை மாகாணத்தைப் பொறுத்தவரை இப்பிரச்சனை மக்கள் வாக்கெடுப்பு மூலம் முடிவு செய்யப்படும்
  • அஸ்ஸாமில் உள்ள சில்ஹெட் (Shyllet) மாவட்டம் மக்கள் வாக்கெடுப்பு (Referendum) மூலம் தீர்மானிக்கப்படும்.

இந்திய சுதந்திரச் சட்டம் 1947 – குறிப்பு

இந்திய சுதந்திரச் சட்டம் 1947

  • “எல்லைக் கமிசன்” (Boundary Commission) = இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான எல்லைகளை வரையறுக்க ஒரு எல்லைக் கமிசனை “ரேட்கிளிப்” தலைமையில் அமைக்கப்பட்டது (Boundary Commission headed by Radcliff). பாகிஸ்தானுடன் மேற்கு பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான், கிழக்கு வங்காளம், வடமேற்கு எல்லை மாகாணம், அசாமில் உள்ள சில்ஹெட் மாவட்டம் சேர்க்கப்பட்டது.
  • பிரிட்டிஷ் இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனெரல் = மவுண்ட்பேட்டன் பிரபு
  • சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் = ராஜாஜி
  • இந்தியாவின் முதல் பிரதமர் = ஜவஹர்லால் நேரு

சுதந்திர இந்தியாவின் முதல் அமைச்சரவை (1947)

இந்திய சுதந்திரச் சட்டம் 1947

வ.எண்

உறுப்பினர் இலக்கா
1 ஜவஹர்லால் நேரு

பிரதமர்

வெளியுறவுத்துறை

காமன்வெல்த் உறவுகள்

அறிவியல் ஆராய்ச்சி

2

சர்தார் வல்லபாய் படேல்

உள்துறை

தகவல், ஒளிபரப்பு

மாநிலங்கள்

3

ராஜேந்திர பிரசாத்

உணவு, வேளாண்மை

4

மவுலான அபுல்கலாம் ஆசாத்

கல்வி

5

ஜான் மதாய் ரயில்வே, போக்குவரத்து
6 சண்முகம் ஷெட்டி

பைனான்ஸ்

7

பி.ஆர்.அம்பேத்கர் சட்டம்
8 ஜகஜீவன் ராம்

தொழிலாளர் துறை

9

சர்தார் பல்தேவ் சிங் ராணுவம்
10 ராஜகுமாரி அம்ரித்கவுர்

மருத்துவ சுகாதாரம்

11

சி.எச்.பாபா வணிகம்
12 ரபி அகமதி கித்வாய்

தொலைத்தொடர்பு

13

சியாமா பிரசாத் முகெர்ஜி தொழிசாலை
14 வி.என்.காட்கில்

சுரங்கம், ஆற்றல் துறை

 

 

Leave a Reply