இந்திய அரசுச் சட்டம் – 1858

இந்திய அரசுச் சட்டம் – 1858

  • இந்திய அரசுச் சட்டம் – 1858 என்பது இங்கிலாந்து நாடாளுமன்றத்தால் ஆகஸ்ட் 2ம் தேதி, 1858ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டமாகும்

இந்திய அரசுச் சட்டம் - 1858

  • இந்திய அரசுச் சட்டம் – 1858 சட்டத்தின் முக்கிய முடிவானது, கிழக்கிந்திய கம்பெனி கலைக்கப்பட்டதாகும்.
  • இச்சட்டத்தினை “இந்தியாவில் நல் அரசாங்கத்திற்கான சட்டம் (அல்லது) இந்திய நல்லாட்சி சட்டம்” (Act for the Good Government in India) எனவும் கூறப்பட்டது

இந்திய அரசுச் சட்டம் – 1858 – சட்டத்தின் தேவை

  • 1857ம் ஆண்டு இந்திய வீரர்களின் பெருங்கலகம் இங்கிலாந்து அரசிற்கு பேரதிர்ச்சியாக இருந்தது
  • சிப்பாய்கள் முன்னின்று நடத்திய “முதல் சுதந்திர போர் அல்லது சிப்பாய் கழகம்” (First War of Independence or Sepoy Mutiny) ஆனது நடைபெற கம்பெனி கொள்கைகளே காரணம் எனப்பட்டது

இந்திய அரசுச் சட்டம் - 1858

  • 1857ம் ஆண்டு சிப்பாய் கழகத்தின் பொழுது கவர்னர் ஜெனரலாய் இருந்தவர் = கானிங் பிரபு

இந்திய அரசுச் சட்டம் – 1858 – சட்டத்தின் சிறப்பு இயல்புகள்

முதல் இந்திய வைசிராய்

  • இந்தியாவின் கவர்னர் ஜெனரல் என்ற பதவியை ஒழித்துவிட்டு “இந்திய வைசிராய்” (Viceroy of India) என்ற பதவி அறிமுகம் செய்யப்பட்டது. இங்கிலாந்து அரசின் நேரடி பிரதிநியாக வைசிராய் இருப்பார் என தெரிவிக்கப்பட்டது

இந்திய அரசுச் சட்டம் - 1858

கம்பெனி ஆட்சி முடிவு

  • இந்தியாவில் கம்பெனியின் ஆட்சிக்கு முடிவுகட்டப்பட்டது. அது தனது அரசியல் அதிகாரங்களை எல்லாம் இழந்தது. இனி இந்தியாவை, இங்கிலாந்து அரசியலும், அரசியின் பெயரால் இங்கிலாந்து அரசாங்கத்தாலும் ஆளப்படும்.

நியமன அதிகாரம்

  • இந்திய வைசிராய், மாகாண கவர்னர்கள் ஆகியோரை நியமிக்கும் அதிகாரம் இங்கிலாந்து அரசியிடமே இருந்தது.
  • அரசியின் ஒப்புதலோடு மாகாண துணைநிலை ஆளுநர்களை வைசிராய் நியமனம் செய்யலாம்

இரட்டை அரசு முறை ஒழிப்பு

  • கட்டுபாட்டு மன்றம் (Board of Control) மற்றும் இயக்குனர்கள் மன்றம் (Court of Directors) ஆகிய அதிகார மையங்கள் ஒழிக்கப்பட்டு, இரட்டை ஆட்சி முறை (பிட் இந்திய சட்டத்தினால் கொண்டு வரப்பட்டது) (Abolition of Double Government) முடிவுக்கு கொண்டுவரப்பட்டது

இந்திய அரசு செயலகம்

  • கட்டுப்பாட்டு வாரியமும், இயக்குனர்கள் மன்றமும் ஒழிக்கப்பட்டு, அவர்களின் பொறுப்புகள் அனைத்தும் “இந்திய அரசு செயலரிடம்” (Secretary of State for India) ஒப்படைக்கப்பட்டது. இந்திய அரசு செயலர், இங்கிலாந்து அமைச்சரவையில் ஒரு அங்கம் வகித்தார்.
  • இதன்படி இந்தியாவின் முதல் அரசு செயலர் = ஸ்டான்லி பிரபு ஆவார் (Lord Stanley, the First Secretary of State in India)

15 பேர் கொண்ட கவுன்சில்

  • அரசு செயலருக்கு ஆலோசனை கூற 15 பேர் கொண்ட இந்திய கவுன்சில் ஏற்படுத்தப்பட்டது. இதில் எட்டு பேர் அரசியால் நேரடியாக நியமனம் செய்யப்படுவர். இக்குழு ஒரு அறிவுரை வழங்கும் குழுவாகும் (Advisory Body)
  • இந்த கவுன்சிலின் தலைவராக இந்திய அரசு செயலர் இருப்பார்

நாடு பிடிக்கும் கொள்கை

  • இந்த சட்டத்தில் “இனி ஆக்கிரமிப்பு செய்வதில்லை” என்று உறுதி கூறப்பட்டதால் இந்திய அரசர்கள் நிம்மதி அடைந்தனர். டல்ஹௌசி பிரபுவின் நாடு பிடிக்கும் கொள்கை கைவிடப்பட்டது (Doctrine of Lapse)

இந்திய அரசுச் சட்டம் - 1858

சுதந்திர நிலை

  • 56௦ க்கும் மேலான சுதேச அரசுகளை ஆட்சி செய்து வந்த இந்திய மன்னர்கள், பிரிட்டிஷ் மேலதிகாரத்தை ஏற்றுக்கொண்டால் சுதந்திரமாக ஆட்சி செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

மற்ற முக்கிய சரத்துக்கள்

  • இந்திய சிற்றரசர்கள் ஆங்கிலேயக் கம்பெனியுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்கள், உடன்பாடுகள், கடன் பற்றுகள் ஆகியவை அனைத்தும் ஆங்கில அரசுடன் பிணைத்துக் கொள்ளப்படும்.
  • பாராளுமன்றத்தின் முன் அனுமதி இன்றி நெருக்கடியற்ற நேரங்களில் இந்திய இராணுவத்தை இந்தியாவிற்கு வெளியே பயன்படுத்தக்கூடாது

இந்திய அரசுச் சட்டம் – 1858 – குறிப்பு

  • இந்தியாவை முடியாட்சியின் கீழ் நேரடியாக ஆள்வதற்கு இங்கிலாந்து பிரதமர் பெஞ்சமின் டிஸ்ரோலி எதிர்ப்பு தெரிவித்தார்
  • இந்தியக் கவுன்சிலின் செலவுகள் அனைத்தும் இந்திய வருவாயில் இருந்து செய்யப்பட்டன என்றாலும் எந்த இந்தியரும் கவுன்சிலின் உறுப்பினராக இருக்கவில்லை.
  • ஆனால் இந்தச் சட்டத்தால் இந்தியர்களுக்கு எவ்வித நன்மையையும் கிடைக்கவில்லை.

Leave a Reply