பட்டயச் சட்டம் 1833

பட்டயச் சட்டம் 1833

பட்டயச் சட்டம் 1833

  • இச்சட்டத்தை “செயின்ட் ஹெலனா சட்டம் 1833” எனவும் அழைக்கப்பட்டது. செயின்ட் ஹெலனா என்பது ஆங்கிலேய அரசு கட்டுப்பாட்டில் உள்ள ஒரு சிறிய தீவாகும்.

பட்டயச் சட்டம் 1833

  • இச்சட்டம் கொண்டுவரும் பொழுது இங்கிலாந்து பிரதமர் = இயர்ல் சார்லஸ் கிரே

பட்டயச் சட்டம் 1833 தேவை

  • 1813ம் வருட பட்டய சட்டப்படி கம்பெனிக்கு மேலும் இருபது வருட காலத்திற்கு வழங்கப்பட்ட சாசனம் முடிவடையும் நேரத்தில் கம்பெனி நிர்வாகக் குழுவினர் சாசனத்தை புதுபிக்கும்படி பாராளுமன்றத்தில் விண்ணப்பித்தனர்

பட்டயச் சட்டம் 1833 சிறப்பியல்புகள்

  • கம்பெனியின் வியாபார உரிமை முடிவுக்கு வந்தது
    • பட்டயச் சட்டம் 1833 படி கம்பெனியின் அணைத்து வியாபார நடவடிக்கைகளும் முடிவுக்கு வந்தன. இனிமேல் கம்பெனி இங்கிலாந்து அரசின் சார்பாக நிர்வாகத்தை மட்டுமே நடத்த முடியும்.
    • கம்பெனியின் வியாபார நடவடிக்கைகளை நிறுத்தியதற்காக கம்பெனிக்கு இழப்பீடாக 9௦ மில்லியன் பவுண்டுகள் இந்திய வருவாயில் இருந்து கொடுக்க முடிவு செய்யப்பட்டது
    • கம்பெனிக்கு சீனாவில் இருந்த வணிகமும் இச்சட்டத்தின் மூலம் முடிவுக்கு வந்தது
  • இந்திய கவர்னர் – ஜெனரல்
    • வங்காளத்தின் கவர்னர் ஜெனரல் (Governor General of Bengal) என்பதனை “இந்தியாவின் கவர்னர் ஜெனரல்” (Governor General of India) என மாற்றம் செய்யப்பட்டது. இதன்படி இந்தியாவின் முதல் ஆங்கிலேய கவர்னர் ஜெனரலாக பதவி ஏற்றவர், வில்லியம் பெண்டிங் (Lord William Bentick) ஆவார்.

பட்டயச் சட்டம் 1833

  • மைய ஆட்சிமுறை
    • பட்டயச் சட்டம் 1833 இந்தியாவில் ஒரு மைய ஆட்சிமுறை அமைய வேண்டியதின் அவசியத்தை உணர்ந்து அதற்கான நடவடிக்கையை எடுத்தது
    • அணைத்து மாகாண கவர்னர்களும், இந்திய கவர்னர் ஜெனரலின் அதிகாரத்திற்கு கீழ் கொண்டுவரப்பட்டு, இந்தியா முழுமைக்கும் “ஒரே வரவு செலவு திட்டம்” அமல்படுத்தப்பட்டது.

பட்டயச் சட்டம் 1833

  • சட்ட அதிகாரம்
    • இந்தியா முழுவதும் பிரிட்டிஷ் ஆளுகை உட்பட்ட பகுதி ஒற்றை ஆட்சியின் கீழ் வந்தது. மதராஸ் மற்றும் பம்பாய் மாகாண ஆளுனர்கள் தங்களின் சட்ட அதிகாரத்தை இழந்தனர்
  • கவர்னர் ஜெனரல் குழு
    • கவர்னர் ஜெனரலின் கவுன்சில் குழுவிற்கு நான்கு பேர் கொண்ட குழுவாக மாற்றி அமைக்கப்பட்டது. குழுவின் நான்காவது உருபஈனரின் அதிகாரம் குறைக்கப்பட்டது.
    • முதல் முறையாக கவர்னர் ஜெனரலின் ஆட்சி, “இந்திய அரசாங்கம்” என்றும் ஆளுநர் கவுன்சிலை “இந்திய கவுன்சில்” என்றும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது
  • இந்திய சட்டக் கமிசன்:
    • கவர்னர் ஜெனரல் கவுன்சில் குழுவில் அமைக்கப்படும் எவ்வித ஆணைகளும் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டு, அது “சட்ட”மாக இந்தியாவில் அறிவிக்கப்படும்.
      • இதன் படி, “இந்திய சட்டக் கமிசன்” (Indian law Commission) அமைக்கப்பட்டது. இந்த சட்டக் கமிசனின் முதல் உறுப்பினராக நியமிக்கப்பட்டவர் = மெக்காலே பிரபு ஆவார். இதன் மூலம் இந்தியாவிற்கான சட்டங்கள் உருவாக்கப்படும்.

பட்டயச் சட்டம் 1833

  • வங்க மாகாணம் பிரிப்பு
    • வங்க மாகாணம் இரண்டாக பிரிக்கப்பட்டு, ஆக்ரா மற்றும் வில்லியம் கோட்டை என அறிவிக்கப்பட்டது. ஆனால் நடைமுறை படுத்தப்படவில்லை.
  • அரசு பணிகளில் இந்தியர்கள்
    • பிறப்பு, நிறம், சமயம், சாதி வேற்பாடு இன்றி ஆங்கிலேய அரசு பணிகளில் இந்தியர்களுக்கு இடம் அளிக்கப்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியர்களுக்கு எதிரான வேற்றுமை ஒழிக்கப்பட்டது.
  • அடிமை முறை ஒழிப்பு
    • இந்தியாவில் அடிமை முறையை ஒழிக்க இச்சட்டம் வழிவகை செய்தது
  • சிவில் சர்விஸ் தேர்வு
    • சிவில் சர்விஸ் தேர்வுகளில் திறந்தவெளி போட்டி நிலை உருவாக்கப்பட்டது
  • மதபோதகர்கள்
    • இந்தியாவில் கிறித்துவ மதத்தினை பரப்ப கூடுதல் மதபோதகர்கள் அனுப்பப்பட்டனர். அவர்கள் இந்தியாவில் மிஷினரிகள், பள்ளிகள், மருத்துவமனைகள் போன்றவற்றை உருவாக்கி மதத்தினை பரப்பினர்
  • கட்டுப்பாட்டு வாரியத்தில் செய்யப்பட்ட மாற்றம்
    • கட்டுப்பாட்டு வாரியத்தின் அமைப்பு முறை இச்சட்டப்படி மாற்றப்பட்டது. கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் இனி “ இந்தியாவிற்கான அமைச்சர்” (Minister for Indian Affairs) என்று அழைக்கப்படுவார்.

குறிப்பு

  • இந்திய நிர்வாகத்தில் மையநிர்வாக முறை அறிமுகம் ஆனது
  • கிழக்கிந்திய கம்பெனியின் வர்த்திக அதிகாரம் முடிந்தது
  • சட்டங்களை உருவாக்க மெக்காலே தலைமையில் குழு உருவானது
  • அரசு பணிகளில் இந்தியர்களின் நுழைவு.

 

 

Leave a Reply