பட்டயச் சட்டம் 1813

பட்டயச் சட்டம் 1813

பட்டயச் சட்டம் 1813

  • பட்டயச் சட்டம் 1813-ஐ, “கிழக்கிந்திய கம்பெனி சட்டம், 1813” எனவும் அழைக்கப்பட்டது.
  • இங்கிலாந்து பாராளுமன்றத்தில் 1813ம் ஆண்டு ஜூலை 21ம் தேதி, இந்த சட்டத்திற்கு பாராளுமன்றத்தில் ஒப்புதல் கிடைத்தது

பட்டயச் சட்டம் 1813

  • பட்டயச் சட்டம் 1793-ல் தெரிவிக்கப்பட்ட படி, 2௦ ஆண்டுகள் கழித்து புதிய பட்டயச் சட்டம் ஏற்படுத்தப்பட்டு புதுபிக்கப்பட்டது

பட்டயச் சட்டம் 1813

  • ஐரோப்பிய கண்டத்தில், நெப்போலியன் போணாபர்டின் ஆங்கிலேய பொருட்களை புறக்கணிப்பு கொள்கையால், ஆங்கிலேய வணிகர்கள் பெரிதும் பாதிப்பு அடைந்தனர்.
  • கிழக்கிந்திய கம்பெனியின் தனி வர்த்தகத்தை ஒழித்து, அதில் வரும் வருவாயில் இருந்து பங்கு கேட்க பிரிட்டிஷ் வணிகர்கள் கோரிக்கை வைத்தனர்
  • இறுதியாக ஆங்கிலேய வணிகர்கள் நேரடியாக இந்தியாவில் வணிகம் செய்ய இச்சட்டத்தின் மூலம் அனுமதிக்கப்பட்டனர்.

பட்டயச் சட்டம் 1813 – சிறப்பியல்புகள்

  • இச்சட்டம் இங்கிலாந்து அரசின் இறையாண்மையை இந்திய பிரிட்டிஷ் நிலப் பகுதிகளில் உறுதி செய்தது
  • கம்பெனியின் வணிக முற்றுரிமை (Monopoly) முடிவுக்கு வந்தது
  • முடிவுக்கு வந்த வணிகம் = கம்பெனியின் வணிக விதிகள் அடுத்த 2௦ ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டது. இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனியின் தனி வர்த்தக ராஜாங்கம் முடிவுக்கு வந்தது. டீ, ஓபியம் மற்றும் சீனாவில் வர்த்தகம் ஆகிய மூன்று வணிகத்தில் மட்டுமே கிழக்கிந்திய கம்பெனி தனியாக வணிகம் செய்ய அனுமதிக்கப்பட்டது
  • கம்பெனியின் வருவாயில் இருந்து அளிக்கப்படும் பங்கு ஈவுத் தொகை 1௦.5% ஆக நிர்ணயம் செய்யப்பட்டது
  • ஆங்கிலேய நீதிமன்றங்களுக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டது

பட்டயச் சட்டம் 1813

  • மதம் பரப்புதல் = இச்சட்டத்தில் முக்கியமானது ஆங்கிலேய கிறித்துவ மதத்தினை இந்தியாவில் பரப்ப ஏதுவாக கிறித்துவ மத சங்கங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
  • இந்திய இலக்கியத்துறை, மற்றும் அறிவியலின் வளர்சிக்கு நிது ஒதுக்கீடு செய்யப்படும்
  • கல்விக்கு நிதி ஒதுக்கீடு = இச்சட்டத்தில் மற்றொரு முக்கியமான அறிவிப்பு, இந்தியாவில் ஆங்கிலவழிக் கல்வி வளர்ச்சிக்கு ஒரு லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்பதாகும் இந்திய மக்களின் கல்வியானது பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் பொறுப்பு எனத் தெரிவிக்கப்பட்டது.
  • இந்திய மக்களின் வறுமை, எழுத்தறிவு இன்மை ஆகியவற்றை ஒழிக்க வேண்டும்
  • மேற்கத்திய கலாசாரம் மற்றும் இலக்கியத்தை இந்தியாவில் அனுமதிக்க இச்சட்டம் வழிவகை செய்தது
  • இச்சட்டதின் படி கம்பெனி தனது வாணிபம் சம்பந்தப்பட்ட வரவு செலவுகளை தனியாகவும், நிர்வாகம் சம்பந்தப்பட்ட வரவு செலவுகளை தனியாகவும் பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தியது
  • ஊழியர்களுக்கு பயிற்சி = கம்பெனியில் பணிபுரியும் சிவில் மற்றும் ராணுவ பணியாளர்கள், வீரர்கள் ஆகியோர்களுக்கு தக்க பயிற்சி வேண்டும் என கூறப்பட்டது

பட்டயச் சட்டம் 1813

  • ஸ்தல சுயாட்சி நிறுவனங்களுக்கு (Local Government) மேலும் சில அதிகாரங்கள் வழங்கப்பட்டன. மக்கள் மீது வரி விதிக்கவும், வரி செலுத்தாதவர்களைக் தண்டிக்கவும் உரிமை வழங்கப்பட்டது
  • இந்திய ஆட்சிப் பகுதியில் 2௦௦௦௦ ஆங்கிலேய ராயல் இராணுவ வீரர்களை நிறுத்தவும், அவர்களுக்கான செலவுகளை கம்பெனியே ஏற்றுக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது

குறிப்பு

  • பட்டயச் சட்டம் 1813 மூலம் பிரிட்டிஷ் அரசு இந்தியாவில் முதல் முறையாக அரசியலமைப்பு நிர்வாகத்தினை, இந்திய ஆட்சிப் பகுதிகளில் கொண்டு வந்தது
  • இந்தியர்களின் கல்விக்கு என ஒதுக்கப்பட்ட 1௦௦௦௦௦ ரூபாய் தொகை, இறுதி வரை செலவு செய்யப்படவில்லை
  • இச்சட்டமானது “தடையில்லா வாணிபக் கொள்கை”க்கு வழிவகை செய்தது
  • வணிக முற்றுரிமை நீக்கப்பட்டதால், ஐரோப்பாவில் இருந்து பொருட்கள் இந்திய சந்தையில் குவிந்தன. இதனால் இந்திய பொருட்கள் விற்பனை பாதிக்கப்பட்டது
  • கிறித்துவ மதத்தை பரப்ப வந்த சமயபரப்பாளர்கள் பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் போன்றவற்றை உருவாக்கி, அதன் மூலம் பல்லாயிரக்கணக்கான இந்தியர்களை கிறித்துவர்களாக மதம் மாற்றினர்.

 

Leave a Reply