கில்ஜி வம்சத்தின் வரலாறும் சாதனைகளும்
கில்ஜி வம்சத்தின் வரலாறும் சாதனைகளும்
- கில்ஜி வம்சம் என்பது, “துருக்கிய, ஆப்கன் கலந்த பிரிவினர்”.
- கில்ஜி வம்சத்தை துவக்கியவர் = ஜலாலுதீன் பெரோஷா கில்ஜி
- கில்ஜி வம்சம் ஆண்ட மொத்த ஆண்டுகள் = 30 ஆண்டுகள்.
- கில்ஜி வம்ச ஆட்சியாளர்கள்
-
-
- ஜலாலுதீன் கில்ஜி = 1290 – 1296
- அலாவுதீன் கில்ஜி = 1296 – 1316
- ஷிகாபுதின் உமர் = 1316 (35 நாள்)
- குத்புதின் முபாரக் ஷா கில்ஜி = 1316 – 1320
- நசுருதின் குஸ்ரூ கான் = 1320 (சுமார் 5 மாதம்)
-
-
- கில்ஜி வம்ச ஆட்சியாளர்களில் நீண்ட நாள் ஆட்சி செய்தவர் = அலாவுதீன் கில்ஜி
- கில்ஜி வம்ச ஆட்சியாளர்களில் மிகக் குறைந்த நாள் ஆட்சி செய்தவர் = சிகாபுதின் உமர்
- டெல்லி சுல்தான்களிலே மிகக் குறைந்த நாள் ஆட்சி செய்தவர் = சிகாபுதின் உமர்
- கில்ஜி வம்சத்தின் வரலாறும் சாதனைகளும்

ஜலாலுதீன் கில்ஜி
- கில்ஜி வம்ச ஆட்சியை துவக்கி வைத்தவர்.
- கி.பி. 1290 இல் பதவி ஏற்றார்.
- அடிமை வம்ச மன்னர் சம்சுதீன் கைமர்ஸ் இடம் போர்ப்படை தளபதியாக பணியாற்றி அவரை கொன்று ஆட்சியை கைப்பற்றினார்.
- இவரின் பெயர் = பிரோஸ்.
- “சயிஷ்ட கான்” என்னும் பட்டம் வழங்கப்பட்டது.
- “கருணையுள்ள ஜலாலுதீன்” என்று அழைக்கப்பட்டார்.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
- ஆட்சியை கைப்பற்றிய உடன் தனது பெயரை “ஜலாலுதீன் கில்ஜி” என மாற்றிக் கொண்டார்.
- பால்பனால் ஏற்படுத்தப்பட்ட கடுமையான ஆட்சி முறையை குறைத்த சுல்தான் = ஜலாலுதீன் கில்ஜி.
- மக்கள் சுதந்திரமாக வாழ அனுமதித்த முதல் டெல்லி சுல்தான்.
- ஜலாலுதீன் கில்ஜியை கொன்று ஆட்சியை கைப்பற்றியவர் = அலாவுதீன் கில்ஜி.
- ஜலாலுதீன் கில்ஜி கொல்லப்பட்ட இடம் = காரா (மாணிக்பூர்)
- கில்ஜி வம்சத்தின் வரலாறும் சாதனைகளும்

அலாவுதீன் கில்ஜி
- நிரந்தர ராணுவ படையை உருவாக்கிய முதல் டெல்லி சுல்தான்.
- வீரர்களுக்கு ஊதியமாக பணத்தை வழங்கிய முதல் டெல்லி சுல்தான்.
- முஸ்லிம் உலேமாக்களின் பேச்சை கேட்காத முதல் டெல்லி சுல்தான்.
- “சிக்கந்தர்-ஐ-சனி” என்ற பட்டத்தை தானே சூட்டிக் கொண்டார்.
- தன்னை “இரண்டாம் அலெக்சாண்டர்” என்று அழைத்துக் கொண்ட டெல்லி சுல்தான் = அலாவுதீன் கில்ஜி.
- இவரின் நடவடிக்கைகளில் சிறந்தது = அங்காடி சீர்திருத்தம்.
- அங்காடி சீர்திருத்தம் மூலம் வீரர்களுக்கு குறைந்த விலையில் பொருட்களை வழங்கினார்.
- லஞ்சத்தை ஒழிக்க முயற்சி செய்தார்.
- டெல்லி பகுதிகளில் மதுபானங்களை விற்கவோ, குடிக்கவோ தடை விதித்தார்.
- அரசியலையும், மதத்தையும் தனியாக பிரித்த முதல் டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜி ஆவார்.
- மேய்ச்சல் வரி (சேராய்) விதித்த முதல் டெல்லி சுல்தான்.
- வீட்டு வரி (காரி) விதித்த முதல் டெல்லி சுல்தான்.
- படை வீரர்கள் பட்டியல் (சேரா) முறையை கொண்டு வந்தார்.
- குதிரைகளுக்கு சூடு போடும் (தாக்) முறையை கொண்டு வந்தார்.
- புலனாய்வு அதிகாரிகளை (பரித்-ஐ-மண்டி) நியமித்தார்.
- சுல்தானின் ரகசிய ஒற்றர் படை (முன்ஹியன்) உருவாக்கினார்.
- யாருடைய ஆட்சி காலத்தில் மிக அதிக அளவு மங்கோலிய படையெடுப்பு நிகழ்ந்தது = அலாவுதீன் கில்ஜி.
- மங்கோலிய படையெடுப்பை மிக அதிகளவு சந்தித்த டெல்லி சுல்தான் = அலாவுதீன் கில்ஜி.
- மங்கோலியர்களுக்கும் அலாவுதீன் கில்ஜிகும் எல்லையாக அமைந்த ஆறு = ராவி நதி.
- சுல்தானாக பதவி ஏற்ற பின்னர் அலாவுதீன் நடத்திய முதல் தாக்குதல் = அரசர் ராயகர்ணா (குஜராத்)
- அலாவுதீன் கில்ஜியால் ஆதரிக்கப்பட்டவர்கள் = அமீர் குஸ்ரூ.
- தபேலா, சிதார், நவீன வீணை ஆகிய கருவிகளை உருவாக்கியவர் = அமீர் குஸ்ரூ
- ஏழு டெல்லி சுல்தான்களின் ஆட்சியில் உயரிய அந்தஸ்தை பெற்றவர் = அமீர் குஸ்ரூ.
- அமீர் குஸ்ரூவிற்கு, “துதி-ஐ-ஹிந்த்” என்ற பட்டத்தை வழங்கினார்.
- முதன் முதலில் “குதிரை காலனி வடிவ வளைவு” எங்கு கட்டப்பட்டது = அலய் தார்வாசா (குதுப்மினாரின் நுழைவாயில்).
- அலாவுதீன் கில்ஜி கட்டிய கட்டிடங்கள் = ஜமைத் கானா மசூதி, அலய் தார்வாசா, ஹவுஸ் காஸ், மஹால் ஹசர் சதூன் (1000 தூண் மஹால்), அலய் மினார்.
- “சிரி கோட்டை” என்ற புதிய நகரை உருவாக்கினார்.
- லஞ்சத்தை ஒழிக்க முயற்சி செய்த டெல்லி சுல்தான் இவரே.
- கில்ஜி வம்சத்தின் வரலாறும் சாதனைகளும்

அலாவுதீன் கில்ஜியின் படையெடுப்புகள்
- விந்திய மழைத்தொடர்களை தாண்டி படையெடுப்பை நிகழ்த்திய முதல் டெல்லி சுல்தான் = அலாவுதீன் கில்ஜி
- தென்னக பகுதிகள் மீது படையெடுப்பை நிகழ்த்திய முதல் டெல்லி சுல்தான் = அலாவுதீன் கில்ஜி.
- அலாவுதீன் கில்ஜியின் வடஇந்தியப் பகுதிகளில் படையெடுப்பை நடத்திய தளபதி = காஸி மாலிக்.
- அலாவுதீன் கில்ஜியின் தென்னக படையெடுப்பை தலைமை ஏற்று நடத்திய தளபதி = மாலிக்கபூர்.
- கில்ஜி வம்சத்தின் வரலாறும் சாதனைகளும்
அலாவுதீன் கில்ஜியின் வடஇந்திய படையெடுப்புகள்
- தலைமை = அலாவுதீன் கில்ஜி, உலூக் கான்.
- முதலில் தாக்கப்பட்டது = குஜராத்.
- குஜராத் படையெடுப்பின் பொழுது தான் “மாலிக் காபூரை” ஆயிரம் தினார்களுக்கு வாங்கினார் அலாவுதீன் கில்ஜி.
- சித்தூரை ஆண்ட ராஜா ரத்தன் சிங்கை, தோற்கடித்து அவரின் மனைவியான “பத்மினி தேவியை” மணக்க முயற்சி செய்தான். ஆனால் பத்மினிதேவி, “ஜவகர்” என்னும் முறையான தீயில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
- வடஇந்திய படையெடுப்புகள் = குஜராத் ரத்னாம்போர் சித்தூர் மால்வா தார் சந்தேரி சிவனா ஜலூர்.
- சித்தூரின் பெயரை “கிஸ்ரபாத்” என பெயர் மாற்றம் செய்தான்.
அலாவுதீன் கில்ஜியின் தென்னக படையெடுப்புகள்
- தலைமை = மாலிக் காபூர்
- தோற்றவர்கள் = தேவகிரி யாதவர்கள் (அரசன் – ராம் சந்திர தேவன்), வாரங்காலின் காகதிய அரசன் பிரதாப் ருத்ர தேவன், துவாரசமுத்திராவை ஆண்ட ஹோய்சால அரசன் மூன்றாம் வீரா பல்லாளன் மற்றும் மதுரையை ஆண்ட பாண்டியன் மாறவர்மன் குலசேகர பாண்டியன்.
- தென்னக படையெடுப்புகள் = தேவகிரி வாரங்கால் துவாரசமுத்திரா மலபார் மதுரை.
- கில்ஜி வம்சத்தின் வரலாறும் சாதனைகளும்
கோகினூர் வைரம்
- வாரங்கால் பகுதியை ஆண்ட “இரண்டாம் பிரதாப் ருத்ர தேவர்” மீது மாலிக்காபூர் தனது படையெடுப்பை மேற்கொண்டார்.
- தோல்வியை ஏற்றுக்கொண்டு இரண்டாம் பிரதாப் ருத்ர தேவர், “கோகினூர் வைரத்தை” மாலிக்காபூருக்கு பரிசாக வழங்கினார்.
- அதனை அவர் அலாவுதீன் கில்ஜிக்கு வழங்கினார்.
- கில்ஜி வம்சத்தின் வரலாறும் சாதனைகளும்
மாலிக் கபூர்
- 1000 தினார்களுக்கு வாங்கப்பட்டதால் இவன் “ஹசர் தினாரி” என்று அழைக்கப்பட்டான்.
சிகாபுதின் உமர்
- 35 நாட்கள் மட்டுமே ஆட்சி புரிந்தார்.
குத்புதின் முபாரக் ஷா கில்ஜி
- “காலிப்” பட்டத்தை தங்கு தானே சூட்டிக் கொண்டார்.
- “காலிபா” பட்டத்தை தனக்கு தானே சூட்டிக் கொண்ட முதல் டெல்லி சுல்தான் இவரே.
- மக்களின் நன்மதிப்பை பெற முயற்சி செய்தார்.
- அலாவுதீன் கில்ஜி விதித்த கடுமையான சட்டங்களை நீக்கினார்.
- கில்ஜி வம்சத்தின் வரலாறும் சாதனைகளும்
நசுருதின் குஸ்ரூ கான்
- இந்து தாயிற்கு பிறந்து டெல்லியை ஆண்ட முதல் சுல்தான் மன்னன்.
- காசி மாலிக்கால் கொல்லப்பட்டார்.