சமசீர் கல்வி 10 ஆம் வகுப்பு பாட புத்தகம் நாலாயிரத் திவ்விய பிரபந்தம்

0
1

நாலாயிரத் திவ்விய பிரபந்தம்

மீன்நோக்கும் நீள்வயல்சூழ் வித்துவக்கோட் டம்மாஎன்
பானோக்கா யாகிலுமுன் பற்றல்லால் பற்றில்லேன்
தானோக்கா தெத்துயரம் செய்திடினும் தார்வேந்தன்
கோனோக்கி வாழுங் குடிபோன் றிருந்தேனே
– குலசேகர ஆழ்வார்

சொற்பொருள்:

 • மீன்நோக்கும் – மீன்கள் வாழும்
 • என்பால் – என்னிடம்
 • தார்வேந்தன் – மாலையணிந்த அரசன்
 • கோல்நோக்கி – செங்கோல் செய்யும் அரசனை நோக்கி

இலக்கணக்குறிப்பு:

 • நோக்காய் – முன்னிலை ஒருமை வினைமுற்று
 • கோல்நோக்கி – இரண்டாம் வேற்றுமைத்தொகை
 • தார்வேந்தன் – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
 • வாழும்குடி – பெயரெச்சம்

பிரித்தறிதல்:

 • பற்றில்லேன் = பற்று + இல்லேன்
 • போன்றிருந்தேன் = போன்று + இருந்தேன்

ஆசிரியர் குறிப்பு:

 • கேரள மாநிலத்தில் உள்ள திருவஞ்சைக்களத்தில் பிறந்தவர் குலசேகர ஆழ்வார்.
 • இராமபிரானிடம் பக்தி மிகுதியாக கொண்டதால், இவர் “குலசேகரப் பெருமாள்” எனவும் அழைக்கப்பட்டார்.
 • இவர் 12 ஆழ்வார்களுள் ஒருவர்.
 • இவர் இயற்றிய பெருமாள் திருமொழியில் 105 பாசுரங்கள் உள்ளன.
 • இவர் தமிழில் பெருமாள் திருமொழியும், வடமொழியில் முகுந்தமாலை என்னும் நூலையும் இயற்றியுள்ளார்.
 • குலசேகரர், திருவரங்கத்தின் மூன்றாவது மதிலைக் கட்டியதால், அதற்குக் குலசேகரன் வீதி என்னும் பெயர் இன்றும் வழங்கி வருகிறது.
 • இவரின் காலம் கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here