சிற்பக்கலை

சிற்பக்கலை

சிற்பக்கலை

சிற்பக்கலை

  • சிற்பங்கள் செதுக்குவதையும், சிற்பங்களிலும் வெளிப்படும் தமிழரின் அழகியலையும் மரபையும் நுட்பங்களையும் தமிழர் சிற்பக்கலை குறிக்கும்.
  • இக்கலை பண்டைக்காலம் முதற்கொண்டே தமிழரால் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது.
  • சங்க காலத்தில் மண், மரம், தந்தம், கல் ஆகியவற்றில் சிற்பங்கள் செதுக்கப்பட்டன.
  • மண்ணில் சிற்பங்கள் உருவாக்கியவர்கள் “மண்ணீட்டாளர்கள்” எனப்பட்டனர்.
  • அக்காலத்தில் இறந்த போர் வீரர்களுக்கு கற்களால் சிலை அமைக்கும் வழக்கமும் இருந்தது.
  • கல்லைக் குடைந்து செதுக்கியும் கோயில் கலையை வளர்த்த பல்லவர்கள் சிற்பக்கலையையும் வளர்த்தார்கள்

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

  • மகேந்திரவர்மன் காலந்தொட்டே சிற்பக்கலை வளர்ந்து வருகிறது
  • பல்லவர் காலத்தில் கோயில் சிற்பங்கள், திறந்தவெளி சிற்பங்கள் எனவும் புடைப்புச் சிற்பங்கள், தனிச்சிலைகள் எனவும் வளர்ந்தன
  • மண்டகப்பாட்டு, திருச்சிச் சிவன் கோயில், தளவானூர், சீயமங்கலம், மாமல்லாபுரம், காஞ்சி கைலாசநாதர் கோயில், வைகுந்த பெருமாள் கோயில் போன்ற இடங்களில் பல்லவர்காலச் சிற்பங்கள் உள்ளன
  • சோழர் காலச் சிற்பங்கள் தனிச் சிறப்புடையன. அதனால் உலகெங்கும் உள்ள பொருட்காட்சிகளில் இடம் பெற்றுள்ளன
  • saivam, வைணவம், சமணம், பௌத்தம், சிறுதெய்வ வழிபாடு என அனைத்துச் சமய தெய்வங்களுக்கும் சோழர் காலத்தில் சிற்பங்கள் வடிக்கப்பட்டன
  • கி.பி.7ஆம் நூற்றாண்டு முதல் 13 நூற்றாண்டு வரை சோழர்கள் சிறந்த ஆட்சி செய்தனர். இவர்கள் காலத்தில் சிற்பக்கலையும் வளர்ந்தது
  • கும்பகோணம், தக்கோலம், தஞ்சாவூர், கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம் போன்ற இடங்களில் சோழர் காலச் சிற்பங்கள் உள்ளன
  • தொடக்கத்தில் கோயில் கட்டுவதற்கு முதன்மை கொடுத்த சோழர்கள், பின் சிற்பங்களுக்கு முதன்மை கொடுத்தனர்
  • சிற்பங்களின் ஆடை ஆபரணங்கள் அளவாக இருந்தது பொய் மிகை அலங்காரச் சிற்பங்கள் தோன்றின
  • மூன்று பக்கங்களிலும் புடைப்பு மிகுதியாக இருக்கும்
  • இலக்கியம், சமயம் சார்ந்த சிற்பங்கள் மிகுதியாகச் செதுக்கப்பட்டன
  • கோயில் கட்டுவதில் மிகுத்த ஆர்வம் காட்டாத நாயக்கர்கள் சிற்பக்கலையில் மிகுந்த ஈடுபாடு கொண்டார்கள்
  • மீனாட்சி அம்மன் கோயில் ஆயிரங்கால் மண்டபம், பேரூர்பட்டிப் பெருமாள் கோயிலின் கனகசபை, இராமேஸ்வரம் தூண்சிற்பங்கள் போன்ற இடங்களில் நாயக்கர் காலச் சிற்பங்கள் உள்ளன
  • பல்லவர் காலச் சிற்பத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவது மாமல்லபுரத்தில் உள்ள ஒற்றைப்பாறைச் சிற்பம் உலகப் புகழ் பெற்றதாகும்
  • கட்டடக் களையும் சிற்பக்கலையும் கொழிக்கும் ஊர் கும்பகோணம்
  • அரிசிலாற்றின் தென்கரையில் தாராசுரம் என்னும் ஊர் அமைந்துள்ளது.

சிற்பக்கலை

சிற்பம் செய்யும் பொருட்கள்

  • சிற்பம் செய்யும் பொருட்கள் பற்றி “திவாகர நிகண்டு” கூறுகிறது,

“கல்லும் உலோகமும் செங்கலும் மரமும்

மண்ணும் சுதையும் தந்தமும் வண்ணமும்

கண்ட சருக்கரையும் மெழுகும் என்றிவை

பத்தே சிற்பத் தொழிற்குறுப் பாவன’’

  • மெழுகு, அரக்கு, சுதை, மரம், தந்தம், கல், பஞ்சலோகம் முதலியவைகளினால் சிற்ப உருவங்கள் அமைக்கப் படுகின்றன
  • மணிமேகலையில்,
‘‘மண்ணினும் கல்லினும் மரத்தினும் சுவரினும்

கண்ணிய தெய்வதம் காட்டுநர் வகுக்க’’

சிற்பக்கலை

சிற்பக்கலை குறிப்புகள்

  • மயிலை சீனி வேங்கடசாமி = நமது சிற்பங்கள் அயல்நாட்டுச் சிற்பங்களைப்போன்று, வெறும் அழகிய காட்சிப் பொருள்களாக மட்டும் இல்லாமல், காட்சிக்கும் அப்பால் சென்று கருத்துக்களையும் உணர்ச்சிகளையும் ஊட்டுகின்றன
  • வை.கணபதி = நம் நாட்டுச் சிற்பக்கலை மரபின் சிறப்பியல்புகளில் ஒன்று ஆடற்கலையின் இலக்கணங்களையும் இக்கலையில் புகுத்தியதாகும்
  • காவிரிப்பூம் பட்டினத்திலிருந்த மாளிகைகளிலே, சுதையினால் செய்யப்பட்ட சிற்ப உருவங்கள் அமைக்கப் பட்டிருந்ததை, இந்திர விழாவின்போது அந்நகரத்துக்கு வந்த மக்கள் கண்டு களித்தனர் என்று மணிமேகலை என்னும் நூல் கூறுகிறது.

வம்ப மாக்கள் கம்பலை மூதூர்

சுடுமண் ஓங்கிய நெடுநிலை மனைதொறும்

மையறு படிவத்து வானவர் முதலா

எவ்வகை உயிர்களும் உவமங் காட்டி

வெண்சுதை விளக்கத்து வித்தகர் இயற்றிய

கண்கவர் ஓவியங் கண்டு நிற்குநரும்

சிற்ப வகைகள்

  • சிற்ப உருவங்களை முழு உருவங்கள் என்றும் புடைப்புச் சிற்பங்கள் என்றும் இரண்டு விதமாகப் பிரிக்கலாம்.
  • முழு உருவச் சிற்பம் என்பது, பொருள்களின் முன்புறம், பின்புறம் முதலிய முழு உருவமும் தெரிய அமைக்கப்படுவது.
  • புடைப்புச் சிற்பம் என்பது, பொருள்களின் ஒருபுறம் மட்டும் தெரியும்படி சுவர்களிலும் பலகைகளிலும் அமைக்கப்படுவது ஆகும்.

சிற்பக்கலை

தாராசுரம் கோவில்

  • கும்பகோணத்திற்கு தென்புறம் பாயும் அரிசிலாற்றின் தென்கரையில் அமைந்துள்ள ஊர் தாராசுரம்.
  • இங்குள்ள ஐராவதிஸ்வரர் கோயில் 800 ஆண்டுகளுக்கு முன் இரண்டாம் ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்டது.
  • முப்புரம் எரித்தவன்(திரிபுராந்தகன்) கதை ஒரு சிற்பம்.
  • யானையை வதம் செய்து, அதன் தோலைத் தன் மீது உடுதிகொள்ளும் ஈசனின் யானை உரி போர்த்தவர்(கஜசம்ஹாரமூர்த்தி) கதை ஒரு சிற்பம்.
  • அடிமுடி தேடவைக்கும் அண்ணாமலையார்(லிங்கோத்பவர்) கதை மற்றொரு சிற்பம்.
  • கோவிலின் நுழைவாயிலில் அமைந்த 7 கருங்கற் படிகள் “சரிகமபதநி” எனும் 7 நாதப்படிகளாக வடிக்கப்பட்டுள்ளன.
  • தாராசுரம் கோவிலின் கூம்பிய விமானத் தோற்றமும், அதற்குக் கீழே இருபுறமும் யானைகளும் குதிரைகளும் பூட்டிய இரதம்போல் அமைந்த மண்டபமும் வான்வெளி இரகிசியத்தை காட்டுவதாக வானவியல் அறிஞர் கார்ல் சாகன் கூறுகிறார்.
  • தஞ்சை அரண்மனைக்கு சொந்தமான இக்கோவில் தற்போது மத்தியத் தொல்பொருள் துறையினர் பாதுகாத்து வருகின்றனர். இதை மரபு அடையாளச்சின்னமாக யுனெஸ்கோஅறிவித்துள்ளது. இக்கோவிலை “கலைகளின் சரணாலயம்” என்றே கூறலாம்.

 

 

கடித இலக்கியம்

Leave a Reply