தமிழில் கடித இலக்கியம்

தமிழில் கடித இலக்கியம்

தமிழில் கடித இலக்கியம்

தமிழில் கடித இலக்கியம்

  • ஆள் மூலம் சொல்லி அனுப்புவது – தூது.
  • சொல்லி அனுப்ப இயலாதனவற்றை எழுத்து ஆணிக்கொண்டு பனை ஓலையில் எழுதினர். அது முடங்கல் எனப்பட்டது.
  • பத்திரம் என்னும் வடமொழிக்கு இலை என்ற பொருள்.
  • கடி என்றால் விரைவு என்று பொருள் விரைவாக சென்று சேர்வதால் கடிதம் எனப்படுகிறது.
  • பண்டைய காலத்தில் கடிதப் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்பட்டவை: புறா, நாய், கிளி.
  • பாடல்கள் மூலம் கடிதம் எழுதும் முறை சீட்டுக்கவி ஆகும்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

  • கடிதம் என்பதன் வேறு பெயர்கள் = மடல், முடங்கல்
  • எண்ணங்களை வண்ணமுற வடிப்பது = கடிதம்
  • மறைமலையடிகளின் ‘கோகிலாம்பாள் கடிதங்கள்’, வெ.சாமிநாத சர்மாவின் ‘அவள் பிரிவு’ என்பன புனைகதை வடிவில் மலர்ந்தவை.
  • ரா.பி.சேதுப்பிள்ளை இலக்கியக் கடிதங்கள் தீட்டுவதில் வல்லவர்.
  • பாரதிதாசன் பல கடிதங்களைக் கவிதையில் படைத்துள்ளார்.
  • உண்மைக் கடிதங்கள், புனைவுக் கடிதங்கள் எனக் கடித இலக்கியம் இரு வகைப்படும்.
  • தற்சார்புக் கடிதங்கள், தற்சார்பில்லாக் கடிதங்கள் எனவும் இரு வகைப்படும்
  • தமிழில் மொழிபெயர்ப்புக் கடிதமும் காணப்படுகிறது.

உண்மைக் கடித வடிவில் அமைந்தவை

  1. கருமுத்துத் தியாகராச செட்டியார் கடிதங்கள்
  2. டாக்டர் மு.வ.வின் கடிதங்கள்
  3. ரசிகமணி கடிதங்கள்
  4. மறைமலையடிகளார் கடிதங்கள்
  5. பாரதியின் கடிதங்கள்

தமிழில் கடித இலக்கியம் – புனைவுக் கடிதம் வடிவில் அமைந்தவை

  • மு.வ. – அன்னைக்கு, தங்கைக்கு, தம்பிக்கு, நண்பருக்கு
  • அண்ணாதுரை – தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் (ஒன்பது தொகுதி)
  • கவியோகியின் கடிதங்கள், தலைவர்களுக்கு, முக்தி நெறி, வீரத் தமிழருக்கு, இல்லற நெறி

தமிழில் கடித இலக்கியம் – மொழிபெயர்ப்புக் கடிதங்கள்

  • செஸ்டர்பில்டின் கடிதங்கள் (1954)
  • டால்ஸ்டாய் கடிதங்கள் (1961)
  • பிலேட்டோவின் கடிதங்கள் (1965)
  • ஜவகர்லால் நேருவின் கடிதங்கள் (1941)
  • ஹோரேஸ் வால்போல் கடிதங்கள் (1949)
  • செய்திகள் கூறல், அறிவுறுத்தல், சீர்திருத்த நோக்கு போன்ற பல தன்மைகள் கடித இலக்கிய இயல்பாகும்.
  • அங்கதம், எள்ளல், சொற்பொழிவுத் தன்மை என்பன கூடச் சில சமயம் கடிதங்கள் இயல்பாகின்றன.
மா.செல்வராசன் கடித இலக்கியத்திற்கு கால்கோள் செய்தவர் மு.வ., கட்டிடம் எழுப்பியவர் அண்ணா, கை வண்ணம் காட்டுபவர் கலைஞர்

 

 

Leave a Reply