சைமன் குழு – 1927
சைமன் குழு – 1927
- சைமன் குழு – 1927 என்பது இந்திய சட்ட ஆணைக் குழு (Indian Statuory Commission) எனப்படும் “சைமன் குழு அல்லது ராயல் குழு” (Simon Commission or Royal Commission) 1919-ம் ஆண்டு “மாண்டேகு – செமஸ்போர்ட் சீர்திருத்த” சட்டத்தின் செயல்பாட்டினை ஆராய அமைக்கபட்ட குழுவாகும்
- 1919-ம் ஆண்டு மாண்டேகு – செமஸ்போர்ட் சீர்திருத்த சட்டத்தில், சட்டம் துவங்கியதில் இருந்து 1௦ ஆண்டுகள் கழித்து இச்சட்டத்தின் செயல்பாட்டினை ஆராய “ஒரு சட்ட ஆணையம்” அமைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது
- ஆனால் அதற்கு முன்னரே, 8 ஆண்டுகளிலே, 1927-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் நாள் 1919-ம் ஆண்டு சட்டத்தின் செயல்பாட்டினை ஆராய “சர் ஜான் சைமன்” தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது
சைமன் குழுவின் நோக்கம்
- 1919 ஆண்டு இந்திய அரசாங்க சட்டவிதிபடி உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பதனை ஆராயவும்
- இரட்டை ஆட்சி முறையின் நிறைகள் மற்றும் குறைகளை அறியவும்
- மக்கள் பிரதிநிதிகளை கொண்ட நிறுவனங்கள் எவ்வாறு செயல்படுகிறது என்பதனை அறியவும்
பிரகன் ஹெட் பிரபு
- இந்தியாவில் பல சமயங்களும், கட்சிகளும் இருப்பதால் எந்த ஒரு இந்தியரை இக்குழுவில் நியமித்தாலும் அது கருது வேற்றுமைக்கும் விவாதத்துக்கும் உள்ளாகும் என்றும், குழுவின் ஒருமித்த அறிக்கையை தயாரிப்பதில் சிக்கல் ஏற்படும் என்று அப்போதைய இந்திய அரசு செயலராக இருந்த “பிர்கன் ஹெட் பிரபு” தெரிவித்தார்.
- மேலும் அணைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் ஒரு இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கி காட்டுங்கள் என்று இந்தியத் தலைவர்களுக்கு சவால் விட்டார்.
சைமன் குழு அமைக்கப்பட்டபொழுது இந்தியாவில் நிலைமை
- இக் குழு அமைக்கப்பட்டதற்கு இந்தியர்கள் இடையே பெரும் எதிர்ப்பு இருந்தது. நேரு, காந்திஜி, ஜின்னா, முஸ்லிம் லீக், இந்திய காங்கிரஸ் போன்றவை எதிர்த்தன
- 1927 மதராசில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில், புறக்கணிப்பு முடிவு எடுக்கப்பட்டது
- காரணம் = குழுவின் உறுபினர்களாக ஒரு இந்தியர் கூட இல்லை
- ஆனால் இக்குழுவினை ஆதரித்த இந்தியர்கள் = அம்பேத்கர், பெரியார் (ஈ.வெ.ரா), தமிழகத்தின் நீதிக்கட்சி மற்றும் முஸ்லீம் லீகின் ஒரு பகுதியை சேர்ந்த ஷாபி குழு
சைமன் குழு – 1927 – குழு உறுபப்பினர்கள்
- சர் ஜான் சைமன்
- கிளெமென்ட் அட்லி (பின்நாளில் பிரதமராக உயர்ந்தவர்)
- ஹாரி லெவி லாசன்
- எட்வார்ட் காடோகன்
- வெர்னான் ஹார்ட்ஷாம்
- ஜார்ஜ் லான் பாக்ஸ்
- டொனால்ட் ஹோவார்ட்
சைமன் குழுவிற்கு எதிர்ப்பு
- “திரும்பிப்போ சைமன்” (Go Back Simon) என்ற பதாகைகளை ஏந்தி இந்தியா முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன
- லாகூரில் நடைபெற்ற எதிர்ப்பு போராட்டத்தில், ஆங்கில படையினரின் தாக்குதலில் “லால லஜபதி ராய்” படுகாயம் அடைந்தார். 1928 நவம்பர் 17-ம் நாள் மரணம் அடைந்தார். “சாண்டர்ஸ்” என்ற ஆங்கில காவலாளி தாக்கியதால் உயிர் இழந்தார்.
சைமன் குழுவின் அறிக்கை
- இக்குழுவின் அறிக்கை 193௦ம் ஆண்டு வெளியிடப்பட்டது
- இக்குழுவின் அறிக்கை 2 தொகுதிகளாக வந்தது
- சைமன அறிக்கையில் முக்கியமானவை
- இரட்டை ஆட்சிக்கு பதில் மாகாண சுயாட்சி (Provincial Autonomy) வழங்கப்பட வேண்டும்
- மாநில சட்ட மன்றங்கள் விரிவுபடுத்தப்பட்டு மக்கள் பிரதிநிதிகளுக்கு மேலும் அதிக அதிகாரங்கள் வழங்கப்படல் வேண்டும்
- மாநில சட்டமன்றங்களில் அரசாங்க நியமன உறுப்பினர்கள் இறுக்கக் கூடாது
- முஸ்லிம்களுக்கு வகுப்புப் பிரதிநிதித்துவம் (Communal Representation) வழங்கப்பட வேண்டும்
- உயர்நீதிமன்றங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்
- 1௦ ஆண்டுகளுக்கு ஒருமுறை அரசியல் அமைப்பை பரிசீலனை சட்டத்திற்கு பதில், தேவையானபொழுது மதிப்பீடு செய்வதற்கான புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும்
- மத்தியில் பிரிட்டிஷ் இந்தியப் பகுதிகளும், மன்னர் மாநிலப் பகுதிகளும் ஒருங்கிணைந்த கூட்டாட்சி (Federation) ஏற்பட வேண்டும்.
- மாகாணங்களில் பொறுப்புள்ள ஆட்சி அமைத்தல்
சைமன் அறிக்கையின் குறைகள்
- குழுவில் இந்தியர்கள் எவரும் இல்லை
- வாக்களிக்கும் உரிமை வழங்குதல் தொடர்பான விவரம் இல்லை
- கவர்னர் ஜெனரலின அதிகாரம், பதவி நிலை பற்றி எவ்வித கருத்தும் இல்லை
- வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை ஒழிக்காமல், அதனை அதிகப்படுத்தியது
- நிதி தொடர்பான அதிகாரப் பகிர்வு இல்லை (No Financial Devolution)
சைமன் குழு – 1927 – குறிப்பு
- இக் குழுவின் அறிக்கைக்கு போட்டியாக மோதிலால் நேரு ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதுவே புகழ்பெற்ற “நேரு அறிக்கை” எனப்படும்
- இக் குழுவின் அறிக்கையை பற்றி மூன்று வட்டமேஜை மாநாடுகளில் விவாதிக்கப்பட்டது.
- மாநாட்டில் கடும் எதிர்ப்பை இந்திய தலைவர்கள் பதிவு செய்தனர்.
- மாநாட்டின் முடிவில் வெள்ளை அறிக்கையை (White Paper on Constitutional Reforms) ஆங்கில அரசு வெளியிட்டது
- இந்த வெள்ளை அறிக்கையின் அடிப்படையில் ஒரு மசோதா உருவாக்கபட்டு, பின்னர் அது “1935ம் ஆண்டு இந்திய அரசுச் சட்டமாக” (Government of India Act, 1935) நிறைவேற்றப்பட்டது.
- CHARTER ACT OF 1813 (பட்டயச் சட்டம் 1813)
- CHARTER ACT OF 1833 (பட்டயச் சட்டம் 1833)
- CHARTER ACT OF 1853 (பட்டயச் சட்டம் 1853)
- GOVERNMENT OF INDIA ACT 1858 (இந்திய அரசுச் சட்டம் 1858)
- INDIAN COUNCIL ACT 1861 (இந்திய கவுன்சில் சட்டம் 1861)
- INDIAN COUNCIL ACT 1892 (இந்திய கவுன்சில் சட்டம் 1892)
- INDIAN COUNCIL ACT OF 1909 (இந்திய கவுன்சில் சட்டம் 1909)
- GOVERNMENT OF INDIA ACT 1919 (இந்திய அரசுச் சட்டம் 1919)