தன்னேர் இலாத தமிழ்
தன்னேர் இலாத தமிழ் பாடல்
ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழவிளங்கி ஏங்கொலிநீர் ஞாலத்(து) இருளகற்றும் – ஆங்கவற்றுள் மின்னோர் தனியாழி வெங்கதிரொன்(று) ஏனையது தன்னேர் இலாத தமிழ்! – தண்டியலங்கார உரை மேற்கோள் |
பாடல் குறிப்பு
- இப்பாடலில் இடம்பெற்ற பா வகை = நேரிசை வெண்பா
- இப்பாடலில் பொதிந்துள்ள அணி = பொருள் வேற்றுமை அணி
பொருள் வேற்றுமை அணி
- இருவேறு பொருள்களுக்கிடையே ஒற்றுமையை முதாளில் கூறிப் பின் வேறுபடுத்திக் காட்டுவது பொருள் வேற்றுமை அணி எனப்படும்.
இலக்கணக் குறிப்பு
- வெங்கதிர் = பண்புத்தொகை
- உயர்ந்தோர் = வினையாலணையும் பெயர்
- இலாத = இடைக்குறை (இல்லாத)
- இலாத தமிழ் = எதிர்மறைக் குறிப்பு பெயரெச்சம்
- இடை = ஏழாம் வேற்றுமை உறுப்பு
- ஏங்கு ஒலி = வினைத்தொகை
- ஒலி நீர் = இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை ( ஒலியைக் கொண்ட நீர்)
- நீர் = தானியாகு பெயர்
- நீர் ஞாலம் = மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை (நீரினால் சூழப்பாட்ட ஞாலம்)
- தொழ = வினையெச்சம்
- ஆழி = சினையாகு பெயர்
பிரித்து எழுதுக
- ஆங்கவற்றுள் = ஆங்கு + அவற்றுள்
- தனியாழி = தனி + ஆழி
- வெங்கதிர் = வெம்மை + கதிர்
நூல் குறிப்பு
- தண்டியலங்காரம், அணி இலக்கணத்தை மட்டும் கூறும் சிறப்பான நூல்களில் ஒன்றாகும்
- மேற்கூறப்பட்ட பாடல், பொருளணியியல் பகுதியில் இடம் பெற்றுள்ளது
- “காவியதர்சம்” என்னும் வடமொழி இலக்கண நூலைத் தழுவி எழுதப்பட இந்நூலின் ஆசிரியர் “தண்டி” ஆவார்
- இவர் கி.பி (பொ.ஆ) 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவர்
- இந்நூலின் 3 பெரும் பிரிவுகள் = பொதுவியல், பொருளணியியல் மற்றும் சொல்லணியியல்
- இலக்கண நூலார், உரையாசிரியர்கள் ஆகியோர் பலரால் எடுத்தாளப்பட்ட பெருமை பெற்றது இந்நூல்.
அணி இலக்கணம் மட்டும் கூறும் நூல்கள்
- தண்டியலங்காரம்
- மாறன் அலங்காரம்
- குவலயானந்தம்
பிற இலக்கணத்தையும் கூறும் நூல்கள்
- தொல்காப்பியம்
- வீரசோழியம்
- இலக்கண விளக்கம்
- தொன்னூல் விளக்கம்
- முத்துவீரியம்
தண்டியலங்காரம் நூலினை பற்றி மேலும் அறிந்துக் கொள்ள “இங்கே கிளிக் செய்யவும்”
பனிரெண்டாம் வகுப்பு – இளந்தமிழே
பனிரெண்டாம் வகுப்பு – தமிழ் மொழியின் நடை அழகியல்