தாயுமானவர்

தாயுமானவர்

தாயுமானவர்

தாயுமானவர் வாழ்க்கைக்குறிப்பு

  • பெயர் = தாயு மானவர்
  • பெயர் காரணம் = திருச்சி மலைமீது உள்ள இறைவனான தாயு மானவர் அருளால் பிறந்தமையால் இவருக்கு தாயுமானவர் என்று பெயர் சூட்டப்பட்டது.
  • பெற்றோர் = கேடிலியப்பர் – கெசவல்லி அம்மையார்
  • மனைவி = மத்துவார்குழலி
  • மகன் = கனகசபாபதி
  • ஊர் = நாகபட்டினம் மாவட்டத்தில் உள்ள திருமறைக்காடு(வேதாரண்யம்)
  • பணி = திருச்சியை ஆண்ட விஷய ரகுநாத சொக்கலிங்கரிடம் கருவூல அலுவலர்
  • காலம் = கி.பி. 18ம் நூற்றாண்டு

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

சிறப்பு பெயர்

  • தமிழ் சமய கவிதையின் தூண்

படைப்பு

  • தாயு மானவர் திருப்பாடல் திரட்டு

தாயுமானவர்

தாயுமானவர் குறிப்பு

  • இவரின் பாடலை “தமிழ்மொழியின் உபநிடதம்” எனப் போற்றுவர்
  • இவர் திருமூலர் மரபில் வந்த மௌனகுருவிடம் கல்வி கற்றார்
  • இவரின் “பராபரக்கண்ணி” 389 கண்ணிகளை உடையது
  • இவர் முக்தி அடைந்த இடம் இராமநாதபுரம் மாவட்டம் இலட்சுமிபுரம்
  • சமரச சன்மார்கத்தை உலகிற்கு முதன் முதலில் அறிமுகம் செய்தவர்
  • உபநிடதக் கருத்துக்களை தமிழில் மிகுதியாக சொன்னவர்
  • தாயு மானவர் தனிப்பாடல் திரட்டில் 56 உட்பிரிவுகளும் 1452 பாடல்களும் உள்ளன
  • பராபரக் கண்ணி, எந்நாட் கண்ணி, கிளிக் கண்ணி, ஆனந்த களிப்பு, ஆகார புவனம் போன்றன இவர் தம் பாடல் தலைப்புகளில் சிலவாகும்
  • இவர் பாடலில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் குணங்குடி மஸ்தான் சாகிபு
  • “கந்தர் அநுபூதி சொன்ன எந்தை” என்று அருணகிரி நாதரைப் பாராட்டியுள்ளார்

தாயுமானவர்

மேற்கோள்

  • எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே
    அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே
  • நெஞ்சமே கோயில் நினைவே சுகந்தம் அன்பே
    மஞ்சன நீர் பூசை கொள்வாய் பராபரமே
  • ஆசைக்கோர் அளவில்லை அகிலமெல்லாம் கட்டி ஆளனும்
  • சும்மா இருப்பதே சுகம்
  • பார்க்கின்ற மலரூடு நீயே இருத்தி அப்
    பனிமலர் எடுக்க மனம் நண்ணேன்

 

 

 

தமிழ்ப்பணி

தமிழ்த்தொண்டு

Leave a Reply