நாடகக்கலை

Table of Contents

நாடகக்கலை

நாடகக்கலை

நாடகம் பொருள் விளக்கம்

  • நாடு + அகம் = நாடகம்
  • நாட்டை அகத்துள் கொண்டது நாடகம்.
  • நாட்டின் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் வருங்காலத்தையும் தன் அகத்தே காட்டுவதால், நாடகம் எனப் பெயர் பெற்றது.
  • நாடகம் என்பது உலக நிகழ்சிகளைக் காட்டும் கண்ணாடி என்பது முற்றிலும் பொருந்தும்.
  • கதையை, நிகழ்ச்சியை, உணர்வை நடித்துக் காட்டுவதும், கூத்தாக ஆடிக்காட்டுவதும் நாடகம் என்பர்.
  • இதற்குக் கூத்துக்கலை என்னும் பெயர் உண்டு.

நாடகக்கலையின் தோற்றமும் வளர்ச்சியும்

  • தமிழின் தொன்மையான கலை வடிவம் நாடகம்.
  • நாடகம் என்பது “போலச் செய்தல்” என்னும் பண்பு அடிப்படையாக கொண்டது.
  • பிறர் செய்வதைப்போல தாமும் செய்து பார்க்க வேண்டும் என்ற மனித உணர்சித்தான் நாடகம் தோன்றக் காரணம்.
  • மரப்பாவைக்கூத்து->பொம்மலாட்டம்->தோல்பாவைக்கூத்து->நிழற்பாவைக்கூத்து என வளர்ச்சி அடைந்தது.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

இலக்கியங்களில் நாடகம்

  • தொல்காப்பிய மெய்பாட்டியல் நாடகப்பாங்கிலான உணர்வுகளுக்கு இலக்கணம் வகுத்துள்ளது.
  • “கூத்தாட் டவைக்குல்லாத் தற்றே” என்னும் குறள் வழியாக நாடக அரங்கம் இருந்த செய்தி அறியலாம்.
  • சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள், “நாடகமேத்தும் நாடகக் கணிகை” என்று மாதவியை குறிப்பிடுகிறார்.

கூத்து

  • தனிப்பாடல்களுக்கு மெய்ப்பாடு தோன்ற ஆடுவதை நாட்டியம் என்றும், ஏதேனும் ஒரு கதையை தழுவி வேடம் புனைந்து ஆடுவதை நாடகம் என்றும் குறிப்பிட்டு வந்துள்ளார்.
  • நாட்டியம், நாடகம் இரண்டிற்கும் பொதுவாகக் “கூத்து” என்ற சொல்லே வழக்கில் இருந்தது.

அடியார்க்கு நல்லார்

  • சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதியவர்.
  • இவர் கூத்துவகைகளைப் பற்றியும், நாடகநூல்கள் பற்றியும் தமது உரையில் கூறியுள்ளார்.

நாடக நூல்கள்

  • முறுவல், சயந்தம், செயிற்றியம், மதிவாணர் நாடகத்தமிழ் நூல், விளக்கத்தார் கூத்து, குணநூல், கூத்து நூல் முதலிய பல நாடக நூல்கள் நாடகத்திற்கு இலக்கணம் வகுத்துள்ளது.

நாடகவியல்

  • பரிதிமாற்கலைஞர், செய்யுள் வடிவில் இயற்றிய தம் நாடகவியல் எனும் நூலில் நாடகம் அதன் விளக்கம், வகைகள், எழுதப்பட வேண்டிய முறைகள் பற்றி கூறியுள்ளார்.

நாடக ஆராய்ச்சி நூல்கள்

  • சுவாமி விபுலானந்தர் = மதங்க சூளாமணி
  • மறைமலையடிகள் = சாகுந்தலம்
  • இவ்விரண்டு நூல்களும் நாடகம் பற்றிய ஆராய்ச்சி நூல்கள்.

தொழில்முறை நாடக அரங்குகள்

  • பம்மல் சம்பந்தனார், “நாடகத்தமிழ்” என்ற தம் நூலில் தொழில் முறை நாடக அரங்குகளைப்பற்றிய செய்திகளை நன்கு ஆராய்ந்து எழுதியுள்ளார்.

காலம்தோறும் நாடகக்கலை

  • ஏழாம் நூற்றாண்டில் மகேந்திரவர்ம பல்லவன் “மத்தவிலாசம்” என்ற நாடக நூலை எழுதியுள்ளான்.
  • பதினொன்றாம் நூற்றாண்டில் இராசராசசோழன் ஆட்சிக் காலத்தில் “இராசராசேச்சுவர நாடகம்” நடைபெற்றதாகக் கல்வெட்டு குறிப்பிடுகிறது.
  • நாயக்க மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் குறவஞ்சி நாடகம் தோன்றின.
  • பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நொண்டி நாடகம் தோன்றின.

கட்டியங்காரன் உரையாடல்

  • பதினெட்டாம் நூற்றாண்டில் அருணாச்சலக் கவிராயரின் இராம நாடகம், கோபால கிருட்டின பாரதியின் நந்தனார் சரித்திரம் ஆகியன கட்டியங்காரன் உரையாடலோடு முழுவதும் பாடல்களாக அமைந்தன.

சமுதாய சீர்திருத்த நாடகங்கள்

  • காசி விஸ்வநாதரின் “டம்பாச்சாரி விலாசம்”.
  • பேராசிரியர் சுந்தரனாரின் “மனோன்மணியம்”.

தேசிய நாடகங்கள்

  • “கதரின் வெற்றி” நாடகம் தான் தமிழ்நாட்டில் முதன் முதலாக நடத்தப்பட்ட தேசிய சமுதாய நாடகம்.
  • இதனைத் தொடர்ந்து தேசியக்கொடி, தேசபக்தி முதலிய நாடகங்கள் நடத்தப்பட்டன.

நாடகக்கலை

சிறப்பிடம் பெற்றவர்கள்

  • பரிதிமாற் கலைஞர்           –         தமிழ் நாடக பேராசிரியர்
  • சங்கரதாசு சுவாமிகள்           –         தமிழ் நாடக உலகின் இமயமலை
  • பம்மல் சம்பந்தனார்           –         தமிழ் நாடக தந்தை
  • கந்தசாமி           –         தமிழ் நாடக மறுமலர்ச்சி தந்தை

கவிமணியின் கூற்று

  • “நாடகச் சாலையொத்த நற்கலாசாலையொன்று நீடுலகில் உண்டோ நிகழ்த்து” என்ற கவிமணியின் கூற்றிற்குஏற்ப மக்களின் கண்ணை, செவியை, கருத்தைக் கவரும் வகையிலும் நாடகங்கள் கதை அழகோடு கவிதை அழகையும் கொண்டு வாழ்வைத் தூய்மைப்படுத்தும் வகையிலும் அமைதல் வேண்டும்.

நாடகம், கூத்து

  • தமிழர் மரபில் தோன்றி வளர்ந்து நிலைபெற்று நிற்கும் நாடகக்கலையை தமிழர் நாடகக்கலை எனலாம். தமிழ் மரபில் கதை தழுவிவரும் ஆட்டத்தைக் கூத்து என்பர்.
  • வசனத்தில் பெரும்பாலும் அமைவதை நாடகம் என்பர். கூத்தும் நாடகமும் நெருக்கமுடைய கலைகள்.
  • நாடகம் என்பது பாட்டும், உரையும், நடிப்பும் என்பது தமிழ் மரபுவழி கூறும் இலக்கணமாக விளங்குகின்றது.
  • சங்க காலத்தில் குணநூல், கூத்தநூல், சயந்தம் நூல், மதிவாணர் நாடகத் தமிழர், முறுவல் போன்ற நாடக நூல்கள் இருக்கப்பெற்றன என்பதனை சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகின்றது குறிப்பிடத்தக்கது.
  • தொல்காப்பியம், சிலப்பதிகாரம் போன்ற நூல்களில் நாடகம் பற்றி பல குறிப்புகள் உண்டு.

தொல்காப்பியத்தில் நாடகம்

  • தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தில்

“நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்

பாடல் சான்ற புலனெறி வழக்கம்”

எனத் தொல்காப்பியர் தனது வாழ்நாளினிலும் முற்பட்ட இலக்கிய மரபினைப் பற்றி விளக்குகையில் ‘பாடல் சார்ந்த’ எனப் பொருள்படும் ‘பாடல் சான்ற’ எனக் கூறுகின்றார்.

சிலப்பதிகாரத்தில் நாடக அரங்கம்

  • கி. பி. இரண்டாம் நூற்றாண்டளவில் தோற்றம்பெற்ற சிலப்பதிகாரத்தில் நாடக அரங்கத்தின் அளவுகளைப் பற்றி இப்பாடல் வரிகள் விளக்குகின்றன. சிலப்பதிகாரத்தின் அரங்கேற்று காதையில்,

“நூல்நெறி மரபின் அரங்கம் அளக்கும்

கோலளவு இருப்பத்து நல்விர லாக

எழுகோல் அகலத்து எண்கோல் நீளத்து

ஒருகோல் உயரத்து உறுப்பின தாகி

உத்தரப் பலகையோடு அரங்கின் பலகை

வைத்த இடைநிலம் நாற்கோ லாக

ஏற்ற வாயில் இரண்டுடன் பொலியத்

தோன்றிய அரங்கில்

அரங்கம் அளக்கப்பயன்படும் கோள்|கோளானது, கண்ணிடை ஒரு சாண்கொண்ட மூங்கிலைக் கொண்டு, மனிதர் ஒருவரின் பெருவிரல் இருபத்துநான்கு கொண்ட அளவில் ஒரு கோல் நறுக்கினர்.அதுவே அக்கால அளவு கோலாகும்.

  • எட்டு அணுக்கள் கொண்டது ஒரு தேர்ந்துகள். எட்டு தேர்ந்துகள் கொண்டது ஒரு இம்மி. எட்டு இம்மிகள் கொண்டது ஒரு எள். எட்டு எள் கொண்டது ஒரு நெல். எட்டு நெல் கொண்டது ஒரு பெருவிரல்.
  • இவ்வகை அளவு முறையினையே பண்டைக்காலத் தமிழர் பயன்படுத்தினர்.சிலப்பதிகாரத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கும் அரங்கின் அகலம் ஏழு கோலாகவும். நீளம் எட்டு கோலாகவும் குறட்டின் உயரம் (அடைக்கல்) ஒரு கோல் ஆகவும் அமைத்து அரங்கின் மேற்பகுதியில் பலகை பதித்து அதற்கும் தூண்களின் மேல் பாவிய உத்தரப்பலகைக்கும் இடையே நான்குகோல் உயரம் இருக்கச் செய்து அரங்கத்தினுள் செல்லவும், வெளியேறுவதற்கும் இரண்டு வாயில்கள் அமைத்துத் தூண்களின் நிழல்கள், ஆடும் இடத்தில் (நாயகப்பத்தியில்) விழாமல் ஒளிவிடும் (மாண்சுடர் காந்தும்) நிலை விளக்குகளையேற்றினர்.

நாடகக்கலை

நாடக திரைகள்

  • மூன்று வகையான திரைகள் பண்டைக்காலந்தொட்டு உபயோகத்திலிருந்து வந்தன. இவற்றை பற்றி சிலப்பதிகாரம் கூறுகிறது
    1. ஒருமுக எழினி
    2. பொருமுக எழினி
    3. கரந்து வரல் எழினி
  • இடைகால நூலான “பெருங்கதை”, நாடகத்தின் பிற திரைகள் பற்றி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கூத்து வகைகள்

  • கூத்து இரண்டு வகைப்படும். அவை,
    1. அகக்கூத்து
    2. புறக்கூத்து
  • அகக்கூத்து இரண்டு வகைப்படும். அவை,
    1. சாந்திக்கூத்து (4 வகைகள்)
    2. விநோதக்கூத்து (7 வகைகள்)

நாடகம்

  • கண்ணுக்கும் காதுக்கும் மனத்துக்கும் இன்பம் பயக்கும் கலை நாடகக்கலை.
  • உணர்ச்சியை தூண்டி, உள்ளத்தில் புதைத்து கிடக்கும் அன்பையும் அறிவையும் வெளிப்படுத்தி மக்களைப் பண்படுத்தும் சிறந்த கலை நாடகம்.
  • சயந்தம், முறுவல், மதிவாணன் நாடகத்தமிழ், செயிற்றியம் முதலிய நாடக இலக்கான நூல்களின் பெயர்கள் மட்டுமே இப்போது கிடைக்கின்றன.
  • இடைக்காலச் சோழப் பேரரசர்கள் ஆதரவில் ஆலயங்களில் நாடங்கங்கள் நடத்தப் பெற்றுள்ளன என அறிகிறோம்.

பரிதிமாற் கலைஞர் (1870 – 1903)

தமிழ் நாடக பேராசிரியர்

  • உயர்தனிச் செம்மொழித் தகுதி தமிழுக்கே உண்டு என அக்காலத்திலேயே முழங்கியவர்.
  • சூரிய நாராயண சாஸ்திரி என்னும் தம் பெயரைத் தூய தமிழில் பரிதிமாற் கலைஞர் என மாற்றி அமைத்துக் கொண்டார்.
  • இவர், தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டே நாடகத் தொண்டாற்றினார்.
  • மேலைநாட்டு நாடக ஆசிரியர்களான ஷேக்ஸ்பியர், எப்சன், மோலியர் ஆகியோரைப் போன்று தமிழகத்தில் நாடகாசிரியர்கள் தோன்ற வேண்டும் எனப் பெரிதும் விழைந்தவர்.
  • ரூபாவதி, கலாவதி, மான்விஜயம் என்பது இவரின் நாடங்கங்கள்.

ரூபாவதி, கலாவதி, மானவிஜயம், நாடகவியல்

  • இவர் வடமொழி, மேனாட்டு மரபுகளைத் தமிழ் நாடக மரபோடு இணைத்து “நாடகவியல்” என்னும் நூலைப் படைத்தார்.
  • இவரது “மானவிஜயம்” நாடகம், “களவழி நாற்பது” என்னும் இலக்கியத்தை அடிப்படையாக கொண்டு இயற்றப்பட்டது. சேரமான் கணைக்கால் இரும்போரையுடன் புலவர் பொய்கையாரும் இறந்துபடுகின்றார்; இவ்விருவர் இறப்பிற்கும் தானே காரணம் என்று எண்ணிய சோழன் செங்கணான்

“மானப் பெருமையை மனக்கொண்டு அந்தோ

ஈனப் பாரில் இருத்தல் வேட்டிலை

உண்ணும் போழ்தினில் உன்னைத் கொன்றவன்

செங்கணான் எனும்இச் சிறுமதி யுடையான்”

                                 என்று புலம்பித் தன்னை மாய்த்துக்கொள்ளும் காட்சி, செந்தமிழ் நடைபயில, அவலச்சுவையை வெளிப்படுத்தும் இடமாகும்.

நாடகக்கலை

சந்க்கரதாசு சுவாமிகள் (1867 – 1920)

நாடகத்தமிழ் உலகின் இமயமலை, தமிழ்த் நாடக தலைமை ஆசிரியர்

  • நாடகம் மக்களை மகிழ்விக்க வேண்டும் என்பதை சுவாமிகளின் முதல் நோக்கமாகும்.
  • எனவே, பாமர மக்களுக்குத் தெரிந்த பழங்கதைகளை நாடகமாக்கினார்.
  • நாடகத்தைச் சமுதாய சீர்திருத்தக் கருவியாகவும் கையிலெடுத்த சுவாமிகள், தம் நாடகங்கள் வாயிலாகப் பக்தி, ஒழுக்கம் ஆகியனவற்றை வலியுறுத்தி, மக்களுக்கு நல்லறிவு புகுட்டினார்.
  • சிறுவர்களைக் கொண்டு நாடகக் குழுக்களைத் தோற்றுவித்தார்.
  • சிறுவர்களைக் கொண்ட ‘பாய்ஸ் கம்பெனி’ என்ற பாலர் நாடகக்குழுவை இவர் உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.
  • சிறுவர்களைக் கொண்டு “பாய்ஸ் கம்பெனி” என்ற பாலர் நாடகக்குழுவை உருவாக்கியவர் = சங்கரதாசு சுவாமிகள்
  • “தமிழ் நாடகத் தலைமையாசிரியர்” என அழைக்கப்படுபவர் = சங்கரதாசு சுவாமிகள்
  • “தமிழ் நாடகத் தலைமையாசிரியர்” என்ற நூலினை எழுதியவர் = டி.கே.சண்முகம்

நாடகங்கள்

வள்ளி திருமணம், கோவலன் சரித்திரம், சதி சுலோச்சனா, இலவகுசா, பக்தப் பிரகலாதா, நல்லதங்காள், சதி அனுசுயா, வீர அபிமன்யு,

  • இவர் நாற்பது நாடகங்களை இயற்றியுள்ளார்.

புத்தநெறி சுப்பிரமணியம் பாராட்டு

“துடிப்பிருக்கும் சங்கரதாசு எழுத்தில் எல்லாம் சுவைசொட்டும் சந்தநயம் தேய்ந்திருக்கும்”

என்று சுவாமிகளின் சந்தப்பாடல்களை பற்றி புகழ்கிறார்.

சதி சுலோசனா

சதி சுலோச்சனா நாடகத்தில் இந்திரசித்து, தன் நண்பனிடம் பூக்கள் பற்றிக் கேட்க,

“பூவின் வேய்வறம் பலகோடி அதனை

எவர் போதிப்பார் தேடி

அப்பு கலப்பு பதிப்பு கொதிப்பு

செப்பு அருப்பு இருப்பு நெருப்பு

உப்பு உரப்பு கசப்பு புளிப்புஇத்தனை பூவிற்குமேல் இரவில் கண்விழிப்பு

இயம்பிய மொழியெல்லாம் தமிழ்ப் புத்தகக் குறிப்பு”

என அடுக்குமொழி பகர்வது இவரது சந்த நடைக்குச் சான்றாகும்.

கோவலன் சரித்திரம்

  • இவர் இயற்றிய “கோவலன் சரித்திரம்” மதுரையில் அரங்கேறியபொழுது, காற்சிலம்பு விற்று வர நகருக்குப் போவதாகக் கோவலன் கூறக் கண்ணகியோ,

“மாபாவியோர் கூடி வாழும் மாநகருக்கு மன்ன போகாதீர்”

    என்று பாடுவது போன்ற காட்சி. இதனால் அங்கு குழப்பம் ஏற்பட்டது.

  • சுவாமிகள் அவையினர் முன்பு, “மா என்பது அலைமகளையும், பா என்பது கலைமகளையும், வி என்பது மலைமகளையும் குறிக்கிறது” என்று திருவிளையாடல்புராணம் சான்று காட்டி விளக்கினார்.

நடிப்புத் திறமை

  • நல்ல உடற்கட்டும் எடுப்பான தோற்றமும் உடைய இவர் “எமன், இராவணன், இரணியன்” முதலிய வேதங்கள் புனைந்து மேடையில் நிற்கும் பொது பார்பவர்களுக்குக் கிலி அடிக்கும். இவர் எழுத்துத் திறமையோடு நடிப்புத் திறமையும் பெற்றிருந்தார்.

பம்மல் சம்பந்தனார் (1875 – 1964)

தமிழ் நாடகத் தந்தை, கலைஞர்

  • பம்மல் சம்பந்தனார் தனது 18வது வயதில் “சுகுணவிலாச சபையைத்” தொடினார்.
  • இவர் தேவையற்ற ஆடல் பாடல்களைக் குறைத்தார்.

கலைஞர்

  • பம்மல் சம்பந்தனார், கட்டுக்குலையாதக் நாடகக் குழுவை வெற்றிகரமாக நடத்திக் காட்டினார்.
  • அதனால், நாடகர்களால், “கலைஞர்” என மதிக்கப்பட்டார். இவர் நீதித்துறையில் பணியாற்றியவர்.

நாடகங்கள்

  • இவர் 94 நாடகங்களைத் படைத்துள்ளார்.

மனோகரா, யயாதி, சிறுத்தொண்டன், கர்ணன், சபாபதி, பொன்விலங்கு, வாணிபுரத்து வீரன் (ஷேக்ஸ்பியர் நாடகங்களை தழுவி), விரும்பிய விதமே, அமலாதித்தியன்

கேளிக்கை நாடகம், நையாண்டி நாடகம்

  • இவர், நாடகக் காட்சிக்கேற்பத் திரைச்சீலைகளையும் பொருத்தமான ஓவியங்களையும் தொங்கவிடுமாறு வற்புறுத்தினார். இவர் கேளிக்கை நாடகம் என்ற வகையினையும், நாடக நையாண்டியினையும் தமிழ் நாடக உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தார்.

அடுக்குமொழிகள்

“போட்டும் புனைந்தழகாய்க் கட்டும்

பீதாம்பரமாம் பட்டும்

சோதி செய் பகட்டும்

செயலைக் கண்டு கிட்டும் வருணிக்கும்

பொழுது எனக்கு மட்டும்.

சபாபதி நாடகம்

  • இவரின் சபாபதி என்ற நாடகம் இன்றளவும் மறக்கமுடியாத நகைச்சுவை நாடகம் ஆகும்.
  • சபாபதி என்ற இந்நாடகம் படிக்கவும் பார்க்கவும் நகைச்சுவையை ஏற்படுத்தவல்லது.

குறள் மாற்றுதல்

  • குறள் வடிவத்தைத் தன் போக்கிற்கேற்ப மாற்றி எழுதுவார்.

“சூதினும் சூதானது யாதெனில் சூதினும் சூதே சூதா னது”

நாடகக்கலை பிற குறிப்புக்கள்

  • கி. பி. ஏழாம் நூற்றாண்டுன் காலப்பகுதியில் தமிழகத்தில் பல்லவ மன்னர்களின் ஆட்சி நிலைகொண்டிருந்த சமயம் நாடகக்கலை சிறப்புப்பெறாமலேயே இருந்தது. வடமொழியில் பற்றுக்கொண்ட பல்லவ மன்னனான மகேந்திர வர்மன் ‘மத்த விலாசப் பிரகசனம்’ என்னும் வடமொழி நாடகத்தினை எழுதினான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
  • கி. பி. 1246 முதல் 1272 வரை ஆட்சி செய்த மூன்றாம் இராசேந்திர சோழன் காலத்தில் தமிழ் நாடகக்கலை வளர்ச்சிபெற்றது.
  • தெருக்கூத்தென அழைக்கப்பட்டிருந்த நாடகக்கலையின் வளர்ச்சிக்கு வித்திட்டவராகக் கோவிந்தசாமி ராவ் விளங்குகின்றார். நாடகத்தின் நேர அமைப்பினை இக்காலத்திற்கேற்ப மாற்றி அமைத்தவரும் இவரே ஆவார்.
  • கி. பி. 1891 ஆம் ஆண்டளவில் பயின்முறை நாடகக்குழுவினைத் தோற்றுவித்த ‘நாடகத் தந்தை’ என அழைக்கப் பெற்ற பம்மல் சம்பந்த முதலியாரால் தமிழ் உரை நடை நாடகங்கள் தமிழ் நாடக மேடையினுள் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது
  • கி. பி. 1891 ஆம் ஆண்டு தனது 24 ஆம் அகவையில் நாடகத்துறையில் தன்னை ஈடுபடித்திக்கொண்டு ‘தமிழ் நாடகத் தந்தை’ ‘தமிழ்நாடகத் தலைமையாசிரியர்’ போன்ற பட்டங்களினைப் பெற்ற சிறப்பினை உடையவர் தவத்திரு சங்கரதாச சுவாமிகள்.
  • கி. பி. 1872 ஆம் ஆண்டு பிறந்தவரான சி. கன்னையா தமது பதினேழாவது வயதில் ‘இந்து வினோத சபா’ என்ற நாடகக் குழுவொன்றில் சேர்ந்து தனது 26 ஆம் வயதில் ‘ஸ்ரீகிருஷ்ணவினோத சபா’ என்ற நாடகக்குழுவொன்றினை தோற்றுவித்தார். மின் விளக்கு ஒளிகளால் வண்ணத்திரைகளுடன் புதிய வடிவங்களினை மேடையில் தோற்றுவித்த முதல் நாடக அமைப்பாளர் என்ற பெருமையினை உடையவர். மேலும் இவரது நாடகங்களில் உயிருள்ள மான், காளை, பசு, யானை போன்ற விலங்கினங்களை நடிக்க வைத்துப் புதுமை நிகழ்த்தினார். நாடக மேடைகளை முக்கோண கனபரிமாண அமைப்புமூலம் அரங்குகளை அமைத்து ஒரு அரங்கில் காட்சி நடந்து கொண்டிருக்கும் வேளை அடுத்த அரங்கில் அடுத்த காட்சிக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யப்பட்டிருக்கும் இவரது நாடகங்களில். “நாடகங்களின் காட்சியமைப்புக்களின் வழிகாட்டி” சி. கன்னையா எனப் பலராலும் போற்றப்படுகிறார்.
  • ‘நவாப் ராஜமாணிக்கம்’ என அழைக்கப்பெற்ற டி. எஸ். இராசமாணிக்கம் என்பவரால் நாடகம் ஒரு மக்கள் இலக்கியம் என்ற பொருளால் அழைக்கப்பெற்றது. மேலும் இவர் தமது நாடக மேடையினை இயங்கு உலகமாக மாற்றியமைத்தவர் என்ற பெருமையினை உடையவர். நவாப் ராஜமாணிக்கத்தின் அனைத்து நாடகங்களும் ஏறத்தாழ எட்டாயிரம் முறைகள் மேடையேறியதும் குறிப்பிடத்தக்கது.
  • தி. கெ. சண்முகத்தின் இராஜராஜசோழன் என்ற நாடகத்தின் மூலமும், ‘நாடகக் காவலர்’ என அழைக்கப்பெற்ற ஆர். எஸ். மனோகரின் இலங்கேஸ்வரன் என்ற நாடகத்தின் மூலமும் தமிழ் நாடகக்கலை மிகவும் பிரபலமடைந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

கடித இலக்கியம்

1 thought on “நாடகக்கலை”

  1. blank
    மணிவண்ணன்

    தமிழ் நாடக தலைமையாசிரியர் சங்கரதார் சுவாமிகள்.

Leave a Reply