நாடாளுமன்ற இறையாண்மை நீதித்துறை மேலாண்மை ஒருங்கிணைப்பு
நாடாளுமன்ற இறையாண்மை நீதித்துறை மேலாண்மை ஒருங்கிணைப்பு
பாராளுமன்ற இறையாண்மை கோட்பாடு, இங்கிலாந்து பாராளுமன்ற (British Parliament) முறை உடையது. அனால் நீதித்துறை மேலாண்மை என்பது அமெரிக்க பாராளுமன்ற (American Parliament) முறை உடையது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் நெகிழ்வு – நெகிழ்வற்ற தன்மைகளின் ஒருங்கிணைப்பை போலவே, இந்திய அரசியல் அமைப்பு சட்டமானது, பிரிட்டனின் நாடாளுமன்ற இறையாண்மை (Sovereignty) முறையையும், அமெரிக்காவின் நீதித்துறை மேலாண்மை (Judicial Supremacy) முறையையும் ஒருங்கே பெற்றுள்ளது. இவ்வகை முறை உலகில் வேறு எந்த நாட்டின் அரசியல் அமைப்பு சட்டங்களிலும் இல்லை.
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் 21-வது சரத்துச் சட்டப்படி தீர்மானிக்கப்பட்ட விதிமுறையின்படி (Procedure Established by Law) நாடாளுமன்ற இறையாண்மை நிலை நாட்டப்படுகிறது. அதே சமயம் அமெரிக்க அரசியல் அமைப்புச் சட்டத்தில் காணப்படும் இயல்பான சட்ட விதிமுறைப்படி (Due Process of Law) என்ற வாசகமும் தக்க மாற்றத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில், உச்ச நீதிமன்றம் தந்து நீதிப்புனராய்வு (Judicial Review) அதிகாரத்தின் படி, அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரான பாராளுமன்ற விதிகளை இரத்து செய்யும் (Unconstitutional) அதிகாரத்தை பெற்றுள்ளது. அதே நேரம் பாராளுமன்ற அரசானது, தனது சட்டத்திருத்த (Amending Power) அதிகாரங்களை கொண்டு சட்டதிட்டங்களை மாற்றி அமைக்கிறது.
- SALIENT FEATURES OF INDIAN CONSTITUTION / இந்திய அரசியலமைப்பின் சிறப்பியல்புகள்
- LENGTHIEST WRITTEN CONSTITUTION / நீளமான எழுதப்பட்ட ஆவணம்
- DRAWN FROM VARIOUS RESOURCES / பல்வேறு நாடுகளில் இருந்து பெறப்பட்டவை
- BLEND OF RIGIDITY AND FLEXIBILITY / நெகிழும் மற்றும் நெகிழா தன்மை
- FEDERAL SYSTEM WITH UNITARY BIAS / கூட்டாட்சி ஒற்றையாட்சி கலப்பு
- PARLIAMENTARY FORM OF GOVERNMENT / நாடாளுமன்ற அரசாங்க அமைப்பு