ஆனந்தரங்கர் நாட்குறிப்பு
ஆனந்தரங்கர் நாட்குறிப்பு
- பன்மொழிப் புலமையும் பல்துறை ஆளுமையும் கொண்ட ஆனந்தரங்கர் புதுச்சேரி வரலாற்றினைப் பதிவு செய்தவர்களில் முதன்மையானவர்.
- அவருடைய நாட்குறிப்பு, 18ஆம் நூற்றாண்டின் புதுவை வரலாற்றினை அறிந்துகொள்ள நமக்குக் கிடைத்த அரிய பெட்டகமாகும்.
- புதுச்சேரியில் பிரெஞ்சு ஆட்சியின் எழுச்சியும் வீழ்ச்சியும் அவரின் வாழ்வோடு ஒன்றியிருப்பது ஓர் அரிய நிகழ்வு.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
நாட்குறிப்பு என்றால் என்ன
- நாட்குறிப்பு என்பது தனிமனிதர் ஒருவரின் அன்றாட நிகழ்வுகளை அல்லது பணிகளைப் பதிவு செய்யும் ஏடாகும்,
- இதனை ஆங்கிலத்தில் ‘டைரி’ என்று அழைப்பர்.
- டைரியம் என்னும் இலத்தீன் சொல்லின் மூலமான ‘டைஸ்’ என்ற சொல்லில் இருந்து இச்சொல் உருவாயிற்று.
நாட்குறிப்புகளின் முன்னோடி
- நாட்குறிப்புகளின் முன்னோடியாகத் திகழ்வது EPHEMERIDES என்று அழைக்கப் பெறும் கிரேக்கக் குறிப்பேடு ஆகும்.
- EPHEMERIDES என்பதன் பொருள் = ஒரு நாளுக்கான முடிவு.
நாட்குறிப்பு எழுதும் வழக்கம்
- முகலாய மன்னர்களில் பாபர் காலம் முதல் நாட்குறிப்பு எழுதும் வழக்கம் இருந்து வந்துள்ளது.
- நாட்குறிப்பு எழுத தடை செய்யப்பட்ட ஆட்சி = அவுரங்கசீப் ஆட்சிக் காலத்தில்
- 1498 இல் ஐரோப்பாவிலிருந்து இந்தியாவுக்குக் கடல்வழியைக் கண்டுபிடித்த போர்ச்சுகீசிய மாலுமி வாஸ்கோடகாமா நாட்குறிப்பு எழுதும் பழக்கம் உள்ளவர்.
- அவருடைய நாட்குறிப்புகள் ஆல்வாரோ வெல்லோ என்பவரால் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஆனந்தரங்கர்
- ஆனந்தரங்கரின் காலம் = 18 ஆம் நூற்றாண்டு ஆகும்.
- இவர் பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் குழுமத்தின் மொழிபெயர்ப்பாளராகவும் துய்ப்ளே என்ற பிரெஞ்சு ஆளுநரின் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியவர்.
இளமைக்காலம்
- ஆனந்தரங்கர் சென்னை பெரம்பூரில் பிறந்தவர்.
- இவரின் தந்தை = திருவேங்கடம்
- மனைவி = மங்கத்தாய்
- இவர் தன் மூன்றாம் வயதில் தன் தாயை இழந்தார்.
- இவர் “எம்பார்” என்பவரிடம் கல்வி கற்றார்.
புதுவைக்கு செல்லுதல்
- இவரின் தந்தை திருவேங்கடம், மைத்துனர் நைனியப்பரின் வேண்டுகோளுக்கு இணங்க புதுவையில் குடியேறினார்.
- அங்கு அரசுப்பணியில் உதவியாளராகச் சேர்ந்து, நாளடைவில் திவானாகப் பதவி உயர்வு பெற்றார்.
- ‘ஆனந்தப் புரவி’ என்ற பெயரில் சொந்தமாகப் பாய்க்கப்பல் ஒன்று இவருக்கிருந்தது. துணி ஏற்றுமதியிலும் இவருக்குப் பங்கிருந்தது. சாராய உற்பத்தி உரிமையும் பெற்றிருந்தார்.
ஆனந்தரங்கர் நாட்குறிப்பு சிறந்த வரலாற்று ஆவணம்
- இவருடைய நாட்குறிப்புகள் 25 ஆண்டுகாலத் தென்னிந்திய வரலாற்றை வெளிப்படுத்துவதோடு, அக்காலத்திய பிரெஞ்சு அரசு பற்றி அறிய உதவும் சிறந்த வரலாற்று ஆவணமாகவும் இலக்கியமாகவும் திகழ்கின்றன.
வாழ்க்கை குறிப்பு
- பிரான்சுவா மர்த்தேனுக்கு பிறகு புதுச்சேரியின் தலைமை பொறுப்பை ஏற்றவர் = கியோம் ஆந்த்ரே
- கியோம் ஆந்த்ரே அவர்களிடம் தரகராக பணியாற்றியவர் = நைனியப்பர்
- நைனியப்பரின் மைத்துனர் = திருவேங்கடம்
- திருவேங்கடத்தின் மகன் = ஆனந்தரங்கர்
- ஆனந்தரங்கர் பிறப்பு = 1709 ஆம் ஆண்டு மார்ச் 30 ஆம் நாள், இடம் = பெரம்பூர்
கிடங்குத்தலைவர்
- தன்னுடைய 17 வயதில் தந்தையை இழந்த ஆனந்தரங்கர், பிரெஞ்ச் உயர் அதிகாரி “அலனுவார்” என்பவரின் உதவியால் பரங்கிப்பேட்டை நெசவுச்சாலைக்கும், சாயம் தேய்க்கும் கிடங்குக்கும் தலைவராக நியமிக்கப்பட்டார்.
தலைமை மொழிபெயர்ப்பாளர்
- பிரெஞ்ச் ஆளுநர் “துய்ப்ளே” காலத்தின் அவ்வரசின் தலைமை மொழிபெயர்ப்பாளராக பணியாற்றினார்.
- புதுச்சேரியின் அதிகாரம் மிக்க ஒருவராக உயர்ந்தார்.
நாட்குறிப்பு நிகழ்வுகள்
- ஆனந்தரங்கர், தம்முடைய நாட்குறிப்பில் ஒவ்வொரு நாள் நிகழ்வுக்கும் ஆண்டு, திங்கள், நாள், கிழமை, அந்த நாளின் நேரம், நிகழ்விடம் ஆகியவற்றைக் குறிப்பிட்டே செய்திகளை எழுதியுள்ளார்.
நாணய அச்சடிப்பு உரிமை
- 09.1736 ஆம் நாள் குறிப்பு = பிரெஞ்சு ஆளுநர் டூமாஸ் நாணய அச்சடிப்பு உரிமையைப் பெற்றதை விளக்குகிறது. இந்த உரிமையைப் பெறுவதற்காக ஆளுநர் செலவழித்த பெருந்தொகையையும் ஆனந்தரங்கர் குறிப்பிட்டுள்ளார்.
- புதுச்சேரியில் நாணயம் அச்சிடும் உரிமையை நிஜாமிடமிருந்து பிரெஞ்சு வணிகக் கழகம் பெற்றது.
- இதற்கான ஆணையை 10.09.1736 அன்று கனகராயர் பல்லக்கில் வைத்து ஊருக்குள் கொண்டு வந்தார்.
- 21 பீரங்கிகள் முழங்கின.
சென்னையை கைப்பற்றல்
- ஆங்கிலேயர் கட்டுப்பாட்டில் இருந்த சென்னையை கைப்பற்றிய பிரெஞ்ச் தளபதி = 1746 இல் பிரெஞ்ச் கப்பல் தளபதி லெபூர்தொனே கைப்பற்றினார்
- பிரெஞ்ச் அரசை எதிர்த்து ஆற்காடு நவாப் அன்வர்தீன்கானின் மூத்த மகன் மகபூஸ்கான் போரிட்டார்.
வரலாற்று ஆசிரியர்
- ஆனந்தரங்கர் ஒரு வரலாற்று ஆசிரியர் போல பல்வேறு அரசியல் நிகழ்வுகளை தமது நாட்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். அவையாவன,
- தேவனாம்பட்டணத்தை கைப்பற்ற ஆங்கிலேயருடன் பிரெஞ்ச் அரசு நடத்திய போர்
- ஆம்பூர் போர்கள்
- தஞ்சைக் கோட்டை மீதான முற்றுகை
- இராபர்ட் கிளைவ் படையெடுப்பு
- ஆங்கிலேயர் புதுச்சேரியை முற்றுகையிடல்
சென்னை கோட்டை முற்றுகை
- 1758 இல் சென்னை கோட்டையை முற்றுகையிட்டார் = பிரெஞ்ச் அதிகாரி லல்லி
- கோட்டையை இடித்தும் வீடுகளை தரைமட்டமாக்கியும் கூட லல்லியால் சென்னையை கைப்பற்ற முடியவில்லை.
- சென்னை கோட்டையின் ஆளுநர் “மேஸ்தர் பிகட்” வெற்றி பெற்ற செய்திகளை ஆனந்தரங்கர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்குறிப்பு வெளிப்படுத்தும் சமுதாய செய்திகள்
- 06.1739ஆம் நாள் குறிப்பு = புதுச்சேரியின் ஆளுநர் ‘துய்மா’ பிறப்பித்த ஆணையில், புதுச்சேரிப் பட்டணத்திற்குள்ளேயும், சம்பாக் கோவிலுக்குத் தெற்காகப் போகிற உப்பங்கழிப் பகுதியிலும் பட்டணத்தின் வீதிகள் எவ்விடத்திலும் காலைக்கடன் கழிப்பவர்களுக்கு ஆறு பணம் தண்டம் விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
- மீறியவர்களிடமிருந்து பெறப்பட்ட தண்டத்தொகையில் இரண்டு பணம் பிடித்துக் கொடுப்பவருக்கும், மீதி நான்கு பணம் சாவடிக்கும் உரியது என்று அறிவிக்கப்பட்டது.
- இது தெரியாமல் பலரும் தண்டம் கட்டியதாக’ ஆனந்தரங்கர் நாட்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
தண்டனை விவரங்கள்
- நீதி வழங்குதல், தண்டனை அளித்தல் முதலிய செய்திகளையும் இவருடைய நாட்குறிப்பு, பதிவு செய்துள்ளது.
- தொடர்ந்து வீடுகளில் திருடி வரும் கும்பல் ஒன்று பிடிபட்டபோது, அவர்களுள் தலைமைத் திருடனைக் கடைத்தெருவில் தூக்கில் தொங்கவிட்டனர்.
- ஏனைய இருவருக்கும் இரண்டு காதுகளை அறுத்து, ஐம்பது கசையடிகளும் தரப்பட்டன.
வணிகச் செய்திகள்
- ஆனந்தரங்கர் நாட்குறிப் பின் பெரும்பகுதி வணிகச் செய்திகளையே விவரித்துள்ளது.
- ஆனந்தரங்கரும் பிறரும் வணிகத்திற்கு முதன்மை அளித்துள்ளதை உணரமுடியும்.
- புதுச்சேரியில் இருந்து மணிலாவுக்குச் சென்ற கப்பலில் அழகப்பன் என்ற தமிழ் மாலுமி பணியாற்றியதையும் அவர் பதிவு செய்துள்ளார்.
- ஐரோப்பாவிலிருந்து இந்தியாவை அடைய, கப்பல்களுக்கு ஆறு திங்கள் தேவைப்பட்டன.
- 11.1737 அன்று பிரான்சிலிருந்து புறப்பட்ட கப்பல் 08.05.1738 அன்று புதுச்சேரியை அடைந்துள்ளது. கப்பல் வந்தவுடன் பீரங்கி முழங்குதல் வழக்கத்தில் இருந்துள்ளது.
- துணிகள், வர்த்தகருக்கு விற்கப்பட்ட போது உரிய இரசீதுகள் அவர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளன.
- 100க்கு 320 என்ற விகிதத்தில் அவர்கள் ஆறு திங்களுக்குள் கழகத்திற்குப் பணத்தைச் செலுத்திவிடுவதாகவும் கையெழுத்திட்டுக் கொடுத்தனர்.
- வணிகக் கழகத்தின் அதிகாரியான கொர்னே இவற்றைப் பெற்றுப் பாதுகாத்துள்ளார்.
ஆனந்தரங்கர் குறிப்பிடும் நாணயங்கள்
- எட்டு மாற்றுக்குக் குறைவான வராக நாணயங்களை வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம் என்று பிரெஞ்சு மன்னரின் ஆணையின் பேரில் 1730ஆம் ஆண்டு மே திங்களில் அறிவிக்கப்பட்டது.
- பல்வேறு விதமான வராகன்களை ஆனந்தரங்கர் குறிப்பிட்டுள்ளார்.
- புதுச்சேரிப் பிறை வராகன்
- சென்னைப் பட்டணத்து நட்சத்திர வராகன்
- வட்ட வராகன்
- பரங்கிப் பேட்டை வராகன்
- ஆரணி வராகன்
ஆனந்தரங்கர் காலத்தில் வழக்கில் இருந்த நாணயங்கள்
480 காசு |
ஒரு ரூபாய் |
60 காசு |
ஒரு பணம் |
8 பணம் |
1 ரூபாய் |
24 பணம் |
ஒரு வராகன் |
ஒரு பொன் |
1/2 வராகன் |
1 வராகன் |
3 அல்லது 3.2 ரூபாய் |
1 மோகரி |
14 ரூபாய் மதிப்புள்ள தங்க நாணயம் |
1 சக்கரம் |
1/2 வராகனுக்கும் கூடுதல் மதிப்புள்ள தங்க நாணயம் |
பேரிடர் நிகழ்ச்சி
- 1745 ஆம் ஆண்டு 21 ஆம் நாள் = வியாழக்கிழமை, புதுச்சேரியை பெரும் புயல் தாக்கியது
- பேரிடரால் உணவுக்கு தவித்த மக்களுக்கு, அப்போது ஒழுகரையிலே கனகராயர், பெருஞ்சோறு அளித்துத் தமிழரின் இரக்கத்தையும் ஈரத்தையும் வெளிப்படுத்தியதை ஆனந்தரங்கர் பெருமிதத்துடன் பதிவு செய்துள்ளார்.
வணிகத் தடை
- இங்கிலாந்திற்கும், பிரான்சுக்கும் இடையே போர் மூண்டதால் கப்பல் வணிகம் பெரிதும் தடைபட்டது.
- புதுச்சேரிக்குக் கப்பல்களின் வருகை 1745ஆம் ஆண்டில் தடைபட்டுப் பெரும் பொருளாதாரத் தட்டுப்பாடு தோன்றியது.
- புதுச்சேரி வணிகம் முழுவதும் வீழ்ந்தது.
- 06.1746ஆம் நாள் லெபூர்தொனேவின் ஒன்பது கப்பல்கள் புதுவைக்கு வந்தன.
- கப்பல் வருகையை அறிந்த மக்களின் உள்ள மகிழ்ச்சியை காகிதத்தில் எழுத இயலாது என தனது நாட்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
ஆனந்தரங்கரின் இறுதிகால நாட்குறிப்புகள்
- ஆனந்தரங்கரின் இறுதிக்கால நாட்குறிப்புகள் ஆங்கிலேயர் புதுச்சேரி மீது நிகழ்த்திய முற்றுகையையும் புதுச்சேரியின் வீழ்ச்சியையும் பற்றி குறிப்பிடுகிறது.
- 1760 பிப்ரவரியில் புதுச்சேரியைத் தாக்க ஆங்கிலேயக் கப்பல்கள் வந்தன.
- ஆங்கிலேயப் படைகள் சாரம் வரை வந்துவிட்டதைப் பொதுமக்கள் வேடிக்கை பார்த்தனர்.
- குண்டு சாலையை ஆங்கிலேயர் பிடித்ததும் புதுச்சேரி நகரில் பீதி நிலவியது.
- தேவனாம்பட்டணத்தில் மேலும் மேலும் துருப்புகளை ஆங்கிலேயக் கப்பல்கள் இறக்கின.
- புதுச்சேரியைச் சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தையும் ஆங்கிலேயர்கள் கைப்பற்றினர்.
- புதுச்சேரியின் இவ்வாறான சூழ்நிலையில் ஏற்கெனவே நோய்வாய்ப்பட்டு இருந்த ஆனந்தரங்கரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது.
- 01.1761 திங்கள் கிழமை ஐந்து நாழிகைக்குப் பட்டணத்தின் மீது பீரங்கிக் குண்டுகள் விழுந்துகொண்டிருந்த வேளையில் ஆனந்தரங்கர் மறைந்தார்.
ஆனந்தரங்கர் நாட்குறிப்பு 25 ஆண்டுகால தென்னிந்திய வரலாறு
- 1736ஆம் ஆண்டு செப்டம்பர் 6ஆம் நாள் தொடங்கி ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகாலத் தென்னிந்திய வரலாற்றைப் பதிவுசெய்த ஆனந்தரங்கரின் நாட்குறிப்பு 1761ஆம் ஆண்டு ஜனவரி 11ஆம் நாளோடு முடிவடைந்துள்ளது.
- புதுச்சேரியின் முற்றுகை பற்றிய முடிவினைக் கூறாமலேயே நாட்குறிப்பும் முடிந்துள்ளது.
- ஆனந்தரங்கர் நாட்குறிப்பு 12 தொகுதிகளாக வெளிவந்துள்ளது.
ஆனந்தரங்கர் மீது பழி சுமத்தல்
- புதுச்சேரியின் ஆளுநராக லெறி இருந்த காலத்தில், புதுச்சேரியின் இராணுவ அரசியல் செய்திகளை முகலாயருக்கும், ஆங்கிலேயருக்கும் கூறுவதாக ஆனந்தரங்கர் மீது பழி சுமத்தப்பட்டது.
- அப்போது ஆளுநரிடம், ஆனந்தரங்கர், “இப்பட்டணத்தில் உம்முடைய அதிகாரம்தான் இறுதியானது. அநீதியாகவும் உண்மைக்கு மாறாகவும் நடக்க நீர் விரும்பினால் உம்மைத் தடுக்கும் அதிகாரம் ஒருவருக்கும் இல்லை.
- ஆகவே, என்னைக் காவலில் போட விரும்பினால் உடனே செய்யலாம்.
- பிற தண்டனையும் வழங்கலாம். இரண்டு சல்லிகூட நான் செலுத்த மாட்டேன்.
- சிறையில் அடைத்துவிடுவீர் எனப் பயந்து ஒரு வாரத்தில் பணம் தருவேன் என்று நீர் கருத வேண்டாம்.
- இவ்விவரம் தொகுதி 11 பக்கம் 81-84 இல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனந்தரங்கர் பற்றிய நூல்கள்
- “ஆனந்தரங்கன் கோவை” என்ற நூலை எழுதியவர் = தியாகராய தேசிகர்
- “ஆனந்தரங்கன் பிள்ளைதமிழ்” என்ற நூலை எழுதியவர் = புலவரேறு அரிமதி தென்னகன்
- “வானம் வசப்படும்” (ஆனந்தரங்கர் தொடர்புடையது) என்னும் நூலை எழுதியவர் = பிரபஞ்சன்.
துபாசி
- ஆனந்தரங்கர் கல்வி கற்றபின்னர், பாக்குக் கிடங்கு நடத்தி வந்தார்.
- “துய்ப்ளே” என்னும் ஆளுநரின் மொழிபெயர்ப்பாளர் (துபாசி) இறந்ததால், ஆனந்தரங்கர் அப்பணிக்கு அமர்த்தப்பட்டார்.
ஆனந்தரங்கர் நாட்குறிப்பு
- ஆனந்தரங்கர் துபாசியாகப் பணியாற்றிய காலத்தில், 1736ஆம் ஆண்டு முதல் 1761ஆம் ஆண்டு வரை ஏறத்தாழ 25 ஆண்டுகள் நாட்குறிப்பு எழுதியுள்ளார்.
- தம் நாட்குறிப்புக்கு “தினப்படிச் செய்திக்குறிப்பு”, “சொஸ்த லிகிதம்” எனப் பெயரிட்டார்.
- ஆனந்தரங்கத்தின் நாட்குறிப்பைப் புதிய தமிழிலக்கிய வகையாகக் கருதலாம்.
- நாட்குறிப்பு இலக்கியத்தை இவர்தான் தொடங்கினார் எனச் சொல்லமுடியாது; ஆனால், முதன்முறையாக இவருடைய நாட்குறிப்புகளே கிடைத்துள்ளன.
- ஆனந்தரங்கத்தின் நாட்குறிப்புகளின் பெரும்பகுதி வணிகச் செய்திகளையே விவரித்துள்ளன
- சுங்கு சேஷாசல செட்டியாரின் பெண்கள் இருவருக்கு நடைபெற்ற திருமண ஊர்வலத்தையும், திருமணம் நடைபெற்ற முறையையும், ஆளுநர் அத்திருமணத்துக்கு வந்திருந்ததையும் இவரின் நாட்குறிப்பு மூலமாக அறிய முடிகிறது.
ஆனந்தரங்கர் நாட்குறிப்பு வரலாற்றுச் செய்திகள்
- பிரெஞ்சுப்படை காரைக்காலைப் பிடிக்கச் சென்று தோல்வியடைந்தது, தில்லியின் மீது பாரசீகப் படையெடுப்பு, குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கிய செய்திகள், இலபூர்தொனோ கப்பல் பிரெஞ்சு நாட்டில்லிருந்து சென்றது, வெளிநாட்டுப் பயணிகள் வந்து சென்ற நிகழ்வுகள் முதலிய முக்கிய வரலாற்றுச் செய்திகள் இடம் பெற்றுள்ளது.
- 1748 செப்டம்பரில் புதுச்சேரி நகரைச் சென்னையிலிருந்து வந்த ஆங்கிலப்படை முற்றுகையிட்டுப் பீரங்கிகளால் தாக்கியது.
- பீரங்கிக் குண்டுகள் புதுச்சேரியில் மக்கள் வாழும் பகுதியில் விழுந்ததை 1748 செப்டம்பர் 9-ஆம் நாள் எழுதிய நாட்குறிப்பில் ஆனந்தரங்கம் பதிவு செய்துள்ளார்.
- ஆனந்தரங்கரின் நாட்குறிப்பு வரலாற்றுக் கருவூலமாகத் திகழ்கிறது.
ஆனந்தரங்கர் நாட்குறிப்பு வணிகச் செய்தி
- துறைமுக நகரங்களில் உள்ள மக்களின் வருவாய்க்கு அடிப்படையாய் அமைவது அங்கு வரும் கப்பல்களின் போக்குவரத்தே ஆகும்.
- புதுச்சேரிக்கு கப்பல்கள் வந்த செய்தி கேட்டதும் மக்கள் மகிழ்தனர்.
- அது குறித்து, “நாட்பட்ட திரவியம் மீண்டும் கிடைத்தாற் போலவும், மரணமுற்ற உறவினர்கள் உயிர்பெற்று எழுந்து வந்தது போலவும், அவரவர் வளவிலே கலியாணம் நடப்து போலவும், நீண்டநாள் தவங்கிடந்து புத்திர பாக்கியம் கிட்டினாற் ஒளவும், தேவாமிர்த்ததைச் சுவைத்துபோலவும் சந்தோஷித்தார்கள்; அதைக் காகிதத்தில் எழுத முடியாது” என்று குறிப்பிட்டுளார்.
ஆனந்தரங்கர் நாட்குறிப்பு தண்டனைச் செய்தி
- நீதி வளங்கள், தண்டனை அழித்தல் முதலிய செய்திகளும் நாட்குறிப்பில் இடம் பெற்றுள்ளன.
- திருட்டு கும்பலின் தலைவனுக்கு கடைத் தெருவில் தூக்கில் இடப்பட்டது என்ற செய்தி குறிகப்படுள்ளது.
ஆனந்தரங்கர் நாட்குறிப்பு பண்பாட்டு நிலை
- ஆனந்தரங்கர், தம் நாட்குறிப்பில் தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான உறவு, பெரியவர்களை மதிக்கும் பண்பு, பெரியவர்களுக்கு வணக்கம் செய்தல், கோவில் திருவிழாக்கள், பலகை வழக்கங்கள், சடங்குகள் போன்றவற்றை குறித்துள்ளார்.
ஆனந்தரங்கர் பெற்ற சிறப்புகள்
- ஆனந்தரங்கம் இந்திய மன்னர்களுக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்கும் ஒரு பாலமாக விளங்கினார்.
- 1749-ஆம் ஆண்டு “முசபர்சங்” என்ற இந்திய மன்னர் ஆனந்தரங்கத்துக்கு 3000 குதிரைகளை வழங்கி, அவருக்கு “மன்சுபேதார்” என்ற பட்டத்தையும் வழங்கினார். பின்பு செங்கல்பட்டு கோட்டைக்குத் தளபதியாகவும், அம்மாவட்டம் முழுமைக்கும் ஜாகீர்தாரராகவும் நியமனம் பெற்றார்.
- ஆளுநருக்கு மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றுவோர் தமிழ் மக்களின் தலைவராக அறிவிக்கப்படுவார்.
- ஆனந்தரங்கம் வணிகராக, மொழிபெயர்ப்பாளராக இருந்த போதிலும் மன்னர் போல் மதிக்கப் பெற்றார்.
- ஆளுநர் துய்ப்ளே ஆட்சியில் ஆனந்த ரங்கத்துக்குத் தனிப்பட்ட சில உரிமைகள் வழங்கப்பட்டிருந்தன. ஆளுநர் மாளிகைக்குள் பல்லக்கில் செல்லும் உரிமை அவருக்கு வழங்கப்பட்டிருந்தது.
- அவ்வாறு செல்லும்போது மங்கல ஒலிகள் ஒலிக்கும். அவர் தங்கப் பிடி போட்ட கைத்தடி வைத்துக்கொள்ளவும் செருப்பணிந்து ஆளுநர் மாளிகைக்குள் செல்லவும் உரிமை இருந்தது.
- பொதுமக்கள் தொடர்பான வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்கும் உரிமையும் அவருக்கு இருந்தது.
- ஆளுநர் துய்ப்ளேக்சு தன் அரசாங்க விவகாரங்களையும், வீட்டு விவகாரங்களையும் இவரிடம் மனம் விட்டுப் பேசினார். இத்தகைய பல செய்திகள் அவரது நாட்குறிப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பெப்பிசு
- உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் முன்னோடி = சாமுவேல் பெப்பிசு
- இந்தியாவின் பெப்பிசு = ஆனந்தரங்கர்
- நாட்குறிப்பு வேந்தர் = ஆனந்தரங்கர்
ஆனந்தரங்கர் சிறப்பு பெயர்கள்
- இந்தியாவின் பெப்பிசு
- இந்தியாவின் சாமுவேல் பெப்பீசு
- டைரி வரலாற்றின் தந்தை
- நாட்குறிப்பு வேந்தர்
பிறமொழி சொற்கள்
- சொஸ்த = தெளிந்த அல்லது உரிமையுடைய
- லிகிதம் = கடிதம் அல்லது ஆவணம்
- வளவு = வீடு
- துபாசி = இருமொழிப்புலமை உடையவர் (மொழிப்பெயர்ப்பாளர்)
- டைஸ் என்னும் இலத்தின் சொல்லுக்கு நாள் என்பது பொருள்.
- இச்சொல்லில் இருந்து டைரியம் என்னும் இலத்தின் சொல் உருவானது. இச்சொல்லுக்கு நாட்குறிப்பு என்பது பொருள். இதிலிருந்து டைரி என்னும் ஆங்கிலச் சொல் உருவானது.
ஆனந்தரங்கர் நாட்குறிப்பு – குறிப்புகள்
- ஆனந்தரங்கம் மறைந்து 85 ஆண்டுகள் கழித்தே அவர் எழுதிய நாட்குறிப்புகள் கிடைத்தன. இந்த நாட்குறிப்புகளை 1896-இல் பிரெஞ்சு அரசாங்கம் பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்துள்ளது.
- இவரின் நாட்குறிப்பு எட்டுத் தொகுதிகளாக வெளிவந்துள்ளது. ஆனந்தரங்கம் தமிழ் மொழியில் பற்றுடையவராகத் திகழ்ந்தார். தமிழிலேயே தான் கையெழுத்திட்டார். நவீன தமிழ் இலக்கியத்தில் அவரது பங்கு முக்கியமானதாகும்.
- இவர் தனது 51-ஆம் வயதில் 1761-ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 10-ஆம் நாள் மறைந்தார்.
- 1846-ஆம் ஆண்டு புதுச்சேரியில் வருவாய்த்துறை அதிகாரியாகப் பணியாற்றிய ‘அர்மோன்கலுவா மொபார்’ என்ற பிரெஞ்சுக்காரரால் ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்புகள் ஆனந்தரங்கம் பிள்ளையின் வீட்டில் கண்டெடுக்கப்பட்டன.
- 1836-இல் நாட்குறிப்பின் மூலப் பிரதியிலிருந்து நகலெடுக்கும் பணியை அவர் செய்து முடித்தார். ‘எதுவார் ஆரியேல்’ என்ற பிரெஞ்சுக்காரரும் 1849 – 50-களில் ஆனந்தரங்கர் நாட்குறிப்பின் மூலத்திலிருந்து படியெடுக்கும் பணியைச் செய்து முடித்தார்.
- இந்நகல்கள் இரண்டும் பாரிஸ் நகரிலுள்ள தேசிய நூலகத்தில் உள்ளன. அர்மோன்கலுவா மொபார் முதன் முறையாக எடுத்த நகலிலிருந்து மற்றொரு நகலைத் தயாரிக்கும் பணியைச் சென்னை ஆவணக் காப்பகம் மேற்கொண்டது.
- 1892-இல் தொடங்கிய இப்பணி 1896-இல் முடிந்தது.
அருணாச்சலக் கவிராயர் |
தம் இராமநாடகத்தைத் திருவரங்கத்தில் அரங்கேற்றிய பின்னர், மீண்டும் ஒருமுறை ஆனந்தரங்கர் முன்னிலையில் அரங்கேற்றினார். |
கே.கே.பிள்ளை |
“ஆனந்தரங்கருடைய நாட்குறிப்புகள் அவரது காலத்தில் யாருமே புரிந்திராத அரியதொரு இலக்கியப் பணி” என்றார். |
வ.வே.சு ஐயர் (தமது ‘பால பாரதி’ இதழில்) |
“தான் நேரில் கண்டும் கேட்டும் அறிந்துள்ள செய்திகளைச் சித்திரகுப்தனைப் போல் ஒன்றுவிடாமல் குறித்து வைத்துள்ளார்” |
ஆனந்தரங்கர் குறித்து வெளிவந்த இலக்கியங்கள்
- ஆனந்தரங்கர் கோவை = தியாகராச தேசிகர்
- ஆனந்தரங்கர் தனிப்பாடல்கள் = தியாகராச தேசிகர்
- கள்வன் நொண்டிச் சிந்து = தியாகராச தேசிகர்
- ஆனந்தரங்கர் பிள்ளைத்தமிழ் = அறிமதி தென்னகன்
- ஆனந்தரங்கர் புதினங்கள் = அறிமதி தென்னகன்
- ஆனந்தரங்கர் விஜயசம்பு = சீனிவாசக்கவி (வடமொழி)
- ஆனந்தரங்கர் ராட்சந்தமு = கஸ்தூரிரங்கக்கவி (தெலுங்கு)
ஆனந்தரங்கர் பற்றி உ.வே.சா கூற்று
- உ.வே.சா = “தமிழ்த்தாய் நெருப்பினாலும் வெள்ளத்தினாலும் பாதிக்கப்பட்டாலும் அவளது ஆபரணங்கள் தொலைவில் உள்ள நகரமான பாரீசில் மிகவும் பாதுகாக்கப்பட்டுப் பராமரிக்கப்படுகின்றன” என்கிறார்
ஆனந்தரங்கர் பற்றி வ.வே.சு ஐயர் கூற்று
- வ.வே.சு ஐயர் = “அந்தக் காலத்தில் நடந்த செய்திகளையெல்லாம் முக்கியமானது, முக்கியமில்லாதது என்று கூடக் கவனிக்காமல், ஒன்று தவறாமல் சித்திரகுப்தன் எழுதி வரும் பதிவைப் போல நல்ல பாஷையில் அன்றாடம் விஸ்தாரமாக எழுதி வைத்திருக்கிறார், ஆனந்தரங்கர்” என்றார்.
ஆனந்தரங்கர் நாட்குறிப்பு – நாட்குறிப்பு இலக்கியத்தின் தந்தை
- உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் தந்தை எனப்படுபவர் = சாமுவேல் பெப்பிசு
- சாமுவேல் பெப்பிசு, ஆங்கிலேயக் கடற்படையில் பணியாற்றிய அவர் ‘இரண்டாம் சார்லஸ்’ மன்னர் காலத்து நிகழ்வுகளை (1660 – 1669) நாட்குறிப்பாகப் பதிவு செய்துள்ளார்.
- “இந்தியாவின் பெப்பிசு” எனப்படுபவர் = ஆனந்தரங்கர்
- ஆனந்தரங்கரும் 06.09.1736 முதல் 11.01.1761 வரை நாட்குறிப்பு எழுதியுள்ளார். இந்நாட்குறிப்பு இந்தியாவின் முதன்மையான நாட்குறிப்பாகும்.
- ந.பிச்சமூர்த்தி
- சி.சு.செல்லப்பா
- தருமு சிவராமு
- பசவய்யா
- இரா.மீனாட்சி
- சி.மணி
- சிற்பி பாலசுப்ரமணியம்
- மு.மேத்தா
- ஈரோடு தமிழன்பன்
- அப்துல் ரகுமான்
- கலாப்ரியா
- கல்யாண்ஜி
- ஞானக்கூத்தன்
- தேவதேவன்
- சாலை இளந்திரையன்
- ஷாலினி இளந்திரையன்
- ஆலந்தூர் மோகனரங்கன்
- அய்யப்ப மாதவன்