குப்தர்கள் காலம் இந்தியாவின் பொற்காலம்

Table of Contents

குப்தர்கள் காலம் இந்தியாவின் பொற்காலம்

குப்தர்கள் காலம் இந்தியாவின் பொற்காலம்
குப்தர்கள் காலம் இந்தியாவின் பொற்காலம்

குப்தர்கள் காலம் இந்தியாவின் பொற்காலம்

  • குப்த வம்சத்தின் முதல் மன்னன்? = ஸ்ரிகுப்தர்
  • “பண்டைய இந்தியாவின் பொற்காலம்” எனப்படுவது = குப்தர்கள் ஆட்சிக்காலம்
  • “இந்திய நெப்போலியன்” என அழைக்கப்படுபவர் = சமுத்திரகுப்தர்.
  • “பரமபகவதன்” என்ற பட்டதை முதலில் சூட்டிக்கொண்டவர்? = சமுத்திரகுப்தர் (இரண்டாம் சந்திரகுப்தரும் இப்பெயரை சூட்டிக் கொண்டார்)
  • “குப்த சகாப்தத்தை” துவக்கிய மன்னன் = முதலாம் சந்திரகுப்தர்
  • “தேவகுப்தர்” என அழைக்கப்பட்ட குப்த மன்னர்? = இரண்டாம் சந்திரகுப்தர்.
  • நாணயங்களை வெளியிட்ட முதல் குப்த மன்னன்? = முதலாம் சந்திரகுப்தர்
  • குப்தர்கள் காலத்தில் வெளியிடப்பட்ட நாணயத்தின் பெயர்? = தினார்
  • குப்தர்கள் காலத்தில் வெளியிடப்பட்ட வெள்ளி நாணயத்தின் பெயர் = ருபாகா

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

TNPSC WINNERS

  • “இந்திய அறுவை சிகிச்சையின் தந்தை” எனப்பட்டவர் = சுஸ்ருதர்
  • சமுத்திரகுப்தரின் ராணுவ படை எடுப்புகள், வெற்றிகள் பற்றிய குறிப்புகள் உள்ள இடம் = அலகாபாத் கல்வெட்டு (பிரயாக் பிரகஸ்தி)
  • அலகாபாத் கல்வெட்டின்படி, சமுத்திரகுப்தன் வடக்கே 9 அரசர்களையும், தெற்கில் 12 அரசர்களையும் அழித்து, அட்டவிக தேசங்கள் அனைத்தையும் துணை நாடுகளாக ஆக்கினான்.
  • அலகபாத் தூண் கல்வெட்டை உருவாக்கியவர் = சமுத்திரகுப்தரின் அமைச்சர் ஹரிசேனர்
  • “100 போர்களின் வீரன்” என்றும் “கவிராஜா” என்றும் சமுத்திரகுப்தரை அழைத்தவர் = ஹரிசேனர்
  • புஷ்யமித்ர சுங்க மன்னனுக்கு பிறகு “அஸ்வமேத யாகத்தை” செய்த அரசன் = சமுத்திரகுப்தர்
  • சமுத்திரகுப்தர் அவரது நாணயங்களில், அவர் வீணை வாசிப்பதாகக் காட்டப்பட்டுள்ளது.
  • புத்தகயாவில் ஒரு மடம் கட்ட இலங்கை அரசன் மேகவர்மனுக்கு அனுமதி அளித்தார் சமுத்திரகுப்தர்.
  • “டெல்லி இரும்புத்தூணை” உருவாக்கியவர் = இரண்டாம் சந்திரகுப்தர் (சந்திரகுப்த விக்கிரமாதித்யா)
  • “நவரத்ன அவையை” அமைத்த மன்னன் = இரண்டாம் சந்திரகுப்தர்.
  • குமாரகுப்தர் காலத்தில் அதிகளவு வெள்ளி நாணயங்கள் வெளியிடப்பட்டன.
  • ஸ்கந்தகுப்தர் காலத்தில் அதிகளவு தங்க நாணயங்கள் வெளியிடப்பட்டன.
  • “நாளந்தா பல்கலைக்கழகத்தை” உருவாக்கியவர் = குமாரகுப்தர்.
  • சீனப் பயணி பாகியான் யாருடைய ஆட்சிக் காலத்தில் இந்தியா வந்தார்? = இரண்டாம் சந்திரகுப்தர்
  • “சதி” (உடன்கட்டை ஏறுதல்) பற்றிய முதல் குறிப்பு காணப்படுவது = எரான் கல்வெட்டில்
  • குப்தர்கள் காலத்தில் புகழ்பெற்ற வானவியல் அறிஞர்கள் = வராகமிரர், ஆரியபட்டர்
  • விஷாகதத்தர் எழுதிய “தேவிசந்திரகுப்தம்” நூலில், இரண்டாம் சந்திரகுப்தர் தனது சகோதரனான ராமகுப்தரை கொன்று அவரின் மனைவி தேவியை திருமணம் செய்துக் கொண்டார் என கூறப்பட்டுள்ளது.
  • குப்தர்களில் ஓவியக் கலைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு = அஜந்தா குகை ஓவியங்கள்
  • கடைசி குப்தா மன்னன் = விஷ்ணு குப்தர்.
  • “ஷாஹாரி” என்ற பட்டதை சூட்டிக்கொண்ட மன்னன் = இரண்டாம் சந்திரகுப்தர் (சாகர்களை வென்றதால்)
  • யாருடைய ஆட்சியின் பொழுதி ஹூனர்கள் இந்தியாவின் மீது படை எடுத்தனர் = ஸ்கந்தகுப்தர் காலத்தில் (ஹூனர்களை ஸ்கந்தகுப்தர் தோற்கடித்தார்)
  • “குப்த வம்சத்தை” “கடோத்கஜ வம்சம்” என எங்கு கூறப்பட்டுள்ளது = மத்தியப்பிரதேசத்தில் உள்ள ரேவா மாவட்டத்தில் உள்ள சூபியா கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது.
  • மேகருலி இரும்புத்தூண் கல்வெட்டு இரண்டாம் சந்திரகுப்தரின் படையெடுப்புகள் பற்றி விவரிக்கிறது.
  • தனது இரண்டாவது தலைநகராக உஜ்ஜைன் நகரை இரண்டாம் சந்திரகுப்தார் உருவக்கினார்.
  • சுதர்சன ஏரியை ஸ்கந்தகுப்தரின் படைத் தளபதி பர்னதத்தர் சீரமைத்தார் என்ற செய்தி ஜூனாகார் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • நில வருவாய் 6 இல் 1 ஒரு பங்கு வசூலிக்கப்பட்டது.
  • “ஸ்ம்ரிதி”கள் குப்தர்கள் காலத்தில் தோன்றியது.
  • தற்போதைய இந்தியாவின் வடிவம் குப்தர்கள் காலத்தில் அமைந்ததே.
  • முப்பெரும் கடவுள்கள் முறை பிரபலமானது.
  • குப்தர்கள் காலத்தில் குறிப்பாக வைணவம் வளர்ச்சி பெற்றது.
  • “ஸ்வபந்வஸ்வதத்தம், ப்ரதியோக்யோகாந்தர்யங்கம், சாருதத்தம்” ஆகிய நூல்களை எழுதியவர் = பாஷா
  • “முத்ராராட்சசம், தேவிசந்திரகுப்த்ம்” ஆகிய நூல்களை எழுதியவர் = விசாகதத்தர்.
  • ராமாயணம், மகாபாரதம், புராணங்கள், ஸ்ம்ரிதிகள் ஆகியவை குப்தர்கள் காலத்தில் தான் தொகுக்கப்பட்டன.
  • இந்திய கோவில் கட்டிடக்கலை குப்தர்கள் காலத்தில் இருந்து துவங்குகின்றன.
  • “பஞ்சசிந்தாந்தகா, பிரகத்சம்கிதை” நூலின் ஆசிரியர் = வராகமிரர்.
  • குப்தர்கள் காலம் இந்தியாவின் பொற்காலம்

குப்த வம்சம்

  • குப்த வம்சத்தை நிறுவியவர் = ஸ்ரீகுப்தர்.
  • நாணயங்களில் முதன் முதலாக உருவம் பொறிக்கப்பட்ட குப்தா அரசர் = ஸ்ரீகுப்தர்.
  • ஸ்ரீகுப்தரின் மகன் = கடோத்கஜர்.
  • கல்வெட்டுகளில் “மகாராஜா” எனக் குறிப்பிடப்பட்டுள்ள குப்தா அரசர்கள் = ஸ்ரீகுப்தர், கடோத்கஜர்.

முதலாம் சந்திரகுப்தர்

  • முதலாம் சந்திரகுப்தர் ஆட்சி செய்த காலம் = கி.பி. 319 – 335.
  • “லிச்சாவி” அரச குடும்பத்தை சேர்ந்த “குமாரதேவியை” மணந்தார்.
  • சந்திரகுப்தர் வெளியிட்ட நாணயங்களில் “சந்திரகுப்தர், குமாரதேவி” ஆகிய இருவரின் உருவமும், “லிச்சாவையா” என்ற வாசகமும் பொறிக்கப்பட்டிருந்தது.
  • குப்தர்கள் காலம் இந்தியாவின் பொற்காலம்
சமுத்திரகுப்தர் வரலாறு
சமுத்திரகுப்தர் வரலாறு

சமுத்திரகுப்தர் வரலாறு

  • சமுதிரகுப்தரின் ஆட்சிக்காலம் = கி.பி. 335 – 380.
  • முதலாம் சந்திரகுப்தரின் மகன் = சமுத்திரகுப்தர்.
  • குப்த வம்சத்தின் தலைசிறந்த அரசர் = சமுத்திரகுப்தர்.
  • சமுத்திரகுப்தரின் அவைகளப் புலவர் = ஹரிசேனர்.
  • ஹரிசேனர் இயற்றியது = பிரயாகை மெய்க்கீர்த்தி (பிரசஸ்தி).
  • பிரயாகை மெய்க்கீர்த்தி எங்கு பொறிக்கப்பட்டுள்ளது = அலகாபாத் தூண் கல்வெட்டில்.
  • சமுத்திரகுப்தர் ஆட்சிக்கான மிக முக்கியச் சான்று = அலகாபாத் தூண் கல்வெட்டு.
  • தென்னிந்தியாவின் மீது படையெடுத்த குப்த மன்னன் = சமுத்திரகுப்தர்.
  • சமுத்திரகுப்தர் தென்னிந்தியாவின் மீது படையெடுத்து எந்த பல்லவ மன்னனை தோற்கடித்தார் = விஷ்ணுகோபன்.
  • வடஇந்தியாவில் எத்தனை அரசுகளை சமுத்திரகுப்தர் கைப்பற்றினார் = 9 அரசுகள்.
  • தென்னிந்தியாவை சேர்ந்த எத்தனை அரசர்களை தோற்கடித்து தனக்கு கப்பம் கட்டச் செய்தார் = 12 அரசுகள்.
  • சமுத்திரகுப்தர் விஷ்ணு பக்தர் ஆவார்.
  • சமுத்திரகுப்தரின் மேலாதிக்கத்தை ஏற்றுக் கொண்ட நாடுகள், குதிரைகளை பலியிடும் “அஸ்வமேத யாகத்தை” மீண்டும் நடைமுறைப்படுத்தினார்.
  • தான் வீணை வாசிப்பது போன்று உருவம் பொறிக்கப்பட்ட தங்க நாணயங்களை வெளியிட்டவர் = சமுத்திரகுப்தர்.
  • வீணை வாசிப்பதில் சிறந்த குப்த அரசர் = சமுத்திரகுப்தர்.
  • “கவிராஜா” என்ற பட்டதை பெற்ற குப்த மன்னன் = சமுத்திரகுப்தர்.
  • சமுத்திரகுப்தரின் சமகாலத்தவர் = இலங்கையை சேர்ந்த பௌத்த மன்னன் ஸ்ரீ மேகவர்மன்.
  • குப்தர்கள் காலம் இந்தியாவின் பொற்காலம்
இரண்டாம் சந்திரகுப்தர்
இரண்டாம் சந்திரகுப்தர்

இரண்டாம் சந்திரகுப்தர்

  • சமுத்திரகுப்தரின் மகன் = இரண்டாம் சந்திரகுப்தர்.
  • இரண்டாம் சமுத்திரகுப்தரின் ஆட்சிக்காலம் = கி.பி. 380 – 415 வரை.
  • “விக்கிரமாதித்யர்” என்று அழைக்கப்பட்ட குப்த மன்னன் = இரண்டாம் சந்திரகுப்தர்.
  • சாக அரசர்களை தோற்கடித்த குப்த மன்னன் = இரண்டாம் சந்திரகுப்தர்.
  • குதுப்மினாருக்கு அருகே “இரும்புத் தூணை” உருவாக்கியவர் = இரண்டாம் சந்திரகுப்தர் விக்கிரமாதித்யா.
  • யாருடைய ஆட்சிக்காலத்தின் பொழுது சீனப் பயணி “பாகியான்” இந்தியா வந்தார் = இரண்டாம் சந்திரகுப்தர் விக்கிரமாதித்யா.
  • இரண்டாம் சந்திரகுப்தர் விக்கிரமாதித்யா அவையில் ஒன்பது அறிஞர்கள் இருந்தனர். இவர்களை “நவரத்தினங்கள்” என்பர்.

இரண்டாம் சந்திரகுப்தரின் பட்டப் பெயர்கள்

  • இரண்டாம் சந்திரகுப்தரின் பட்டப் பெயர்கள் = விக்கிரமாதித்தியர், நரேந்திர சந்திரர், சிம்ம சந்திரர், நரேந்திர சிம்மர், விக்கிரம தேவராஜர், தேவ குப்தர், தேவஸ்ரீ.

முதலாம் குமாரகுப்தர்

  • இரண்டாம் சந்திரகுப்தரின் மகன் = முதலாம் குமாரகுப்தர்.
  • “நாளந்தா பல்கலைக்கழகத்தை’ உருவாக்கியவர் = முதலாம் குமாரகுப்தர்.
  • குப்தர்கள் காலம் இந்தியாவின் பொற்காலம்

பிற குப்த அரசர்கள்

  • குமாரகுப்தருக்கு பின்னர் பதவி ஏற்றவர் = ஸ்கந்த குப்தர்.
  • ஹூணர்களின் படையெடுப்பை சந்தித்த குப்த அரசன் = ஸ்கந்தகுப்தர்.
  • ஹூனர்களை தோற்கடித்த குப்த மன்னர் = ஸ்கந்தகுப்தர்.
  • எத்தனை ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஸ்கந்தகுப்தர் ஹூனர்கள் படையெடுப்பை சந்தித்தார் = 12 ஆண்டுகள்.
  • 12 ஆண்டுகளுக்கு பிறகு ஹூனர்கள் மீண்டும் படையெடுத்து ஸ்கந்தகுப்தரை தோற்கடித்தனர்.
  • குப்தப் பேரரசின் கடைசி பேரரசர் = பாலாதித்யர் (முதலாம் நரசிம்மகுப்தர்).
  • பௌத்த மதத்திற்கு மாறிய குப்த மன்னன் = பாலாதித்யர் (முதலாம் நரசிம்மகுப்தர்).
  • பாலாதித்யர் யாருக்கு கப்பம் கட்டி வந்தார் = மிகிரகுலர்.
  • குப்த பேரரசின் அங்கீகரிக்கப்பட்ட கடைசி அரசர் = விஷ்ணுகுப்தர் சந்திராதித்யா.
  • குப்த வம்சத்தின் கடைசி அரசர் = விஷ்ணுகுப்தர் சந்திராதித்யா.
  • குப்தர்கள் காலம் இந்தியாவின் பொற்காலம்

குப்தர்களின் ஆட்சி அமைப்பு

  • குப்த அரசர்களின் கோட்பாடு = தெய்வீக உரிமைக் கோட்பாடு.
  • குப்த அரசர்களுக்கு நிர்வாகத்தில் உதவி செய்த குழு = அமைச்சர்கள் குழு.
  • உயர் பதவிகளில் அமர்த்தப்பட்ட அதிகாரிகள் எவ்வாறு அழைக்கப்பட்டனர் = தண்ட நாயகர் மற்றும் மகாதண்ட நாயகர்.
  • குப்த பேரரசில் பிராந்தியங்கள் எவ்வாறு பிரிக்கப்பட்டிருந்தது = தேசம் அலல்து புக்தி.
  • குப்த பேரரசில் பிராந்தியங்களை நிர்வகிக்கும் ஆளுநர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர் = உபாரிகா.
  • பிராந்தியங்கள் எவ்வாறு பிரிக்கப்பட்டிருந்தது = மாவட்டங்களாக.
  • பிராந்தியங்கள் “விஷ்வா” என்னும் மாவட்டங்களாக பிரிக்கப்பட்டிருந்தது.
  • மாவட்ட நிர்வாகத்தை நிர்வகிக்கும் அதிகாரிகள் = விஷ்யாபதிகள்.
  • குப்தர்கள் ஆட்சிக்காலத்தில் கிராமத்தை நிர்வகிக்கும் அதிகாரிகள் எவ்வாறு அழைக்கப்பட்டனர் = கிராமிகா, கிராமதியாகஷா.
  • “பாலாதிகிரிதா” எனப்படுவது = காலாட்படையின் தளபதி.
  • “மகாபாலாதிகிரிதா” எனப்படுவது = குதிரைப்படையின் தளபதி.
  • குப்த அரசின் ஒற்றர்களை உள்ளடக்கிய உளவு படையின் பெயர் = தூதகா.
  • குப்தர்கள் காலம் இந்தியாவின் பொற்காலம்
குப்தர்கள் கால இலக்கியம் மற்றும் அறிவியல்
குப்தர்கள் கால இலக்கியம் மற்றும் அறிவியல்

குப்தர்களின் ஆட்சியில் சமூகமும் பொருளாதாரமும்

  • “நிதிசாரம்” என்னும் நூலின் ஆசிரியர் = காமாந்தகர்.
  • எந்த நூலில் அரசுக் கருவூலத்தின் முக்கியத்துவத்தையும், வருமானத்திற்கான பல வழிகளும் குறிப்பிடப்பட்டுள்ளது = காமாந்தகர் எழுதிய “நிதிசாரம்” என்னும் நூலில்.
  • குப்த அரசின் முக்கிய வருவாய் = நிலவரி.
  • குப்தர்கள் காலத்தில் விவசாயிகளின் நிலை மோசமாக இருந்தது. பல்வேறு வகையான வரிகள் விதிக்கப்பட்டிருந்தது.

குப்தர்கள் காலத்தில் நிலங்களின் வகைகள்

  1. சேத்ரா = வேளாண்மைக்கு உகந்த நிலங்கள்.
  2. கிலா = தரிசு நிலங்கள்
  3. அப்ரகதா = வனம் அல்லது காட்டு நிலங்கள்.
  4. வஸ்தி = குடியிருப்பதற்கு உகந்த நிலங்கள்.
  5. கபத சரகா = மேய்ச்ச்சல் நிலங்கள்

குப்தர்கள் கால வணிகம்

  • குப்தர்கள் காலத்தில் அதிக வட்டிக்கு கடன் கொடுக்கும் முறை இருந்தது.
  • குப்தர்கள் ஆட்சியில் இரண்டு வகை வணிகர்கள் இருந்தனர். அவை,
    1. சிரோஸ்தி
    2. சார்த்தவாகா
  • சிரோஸ்தி என்றால் என்ன = சிரோஸ்தி பிரிவை சார்ந்த வணிகர்கள் ஒரே இடத்தில் நிலையாக இருந்து வணிகம் செய்தனர்.
  • சார்த்தவாகா என்றால் என்ன = சார்த்தவாகா வணிகர்கள் எருது பூட்டிய வண்டியில் பல்வேறு இடங்களுக்கு சென்று வணிகம் செய்தவர்கள்.
  • குப்தர்கள் காலத்தில் முக்கிய வணிக நகரங்களாக இருந்தவை = பாடலிபுத்திரம், உஜ்ஜைன், வாரணாசி, மதுரா.
  • வங்காளத்தின் “தாமிரலிப்தி” என்னும் துறைமுகம் முக்கிய வணிக மையமாக இருந்தது.
  • குப்தர்கள் காலத்தில் உலோகத் தொழிலும், சுரங்கத் தொழிலும் செழிப்புற்று இருந்தன.
  • குப்தர்கள் காலம் இந்தியாவின் பொற்காலம்

குப்தர்கள் கால சமூக முறை

  • குப்தர்கள் காலத்தில் “வர்ணாஸ்ரம முறை” பின்பற்றப்பட்டது.
  • குப்தர்கள் சமூகம் தந்தை வழி சமூகமாகும்.
  • பலதார மணம் நடைமுறையில் இருந்தது.
  • இரண்டாம் சந்திரகுப்தரின் அரசிகள் என கல்வெட்டில் குறிப்பிடப்பட்டவர்கள் = குபேரநாகா, துருபசுவாமினி.
  • உடன்கட்டை (சதி) ஏறும் முறை நடைமுறையில் இருந்தன.

அடிமை முறை

  • குப்தர்கள் காலத்தில் பல வகைப்பட்ட அடிமை முறைகள் பின்பற்றப்பட்டதாக சான்றுகள் கூறுகின்றன.

குப்தர்கள் சமயம்

  • குப்தர்கள் பின்பற்றிய சமயம் = வேத சமயம்.
  • அஸ்வமேத யாகம் நடத்திய இரண்டு குப்த அரசர்கள் = சமுத்திரகுப்தர், முதலாம் குமாரகுப்தர்.
  • எந்த அரசின் ஆட்சிக்காலத்தில் உருவ வழிபாட்டு முறை இந்தியாவில் தோன்றியது = குப்தர்கள் ஆட்சிக்காலத்தில்.
  • சைவம், வைணவம் என்ற பிரிவுகள் எந்த ஆட்சிக்காலத்தில் தோன்றியது = குப்தர்கள் ஆட்சிக்காலத்தில்.
  • குப்தர்கள் காலம் இந்தியாவின் பொற்காலம்

குப்தர்கள் கால கட்டிடக்கலை

  • இந்தியாவில் கட்டுமானக் கோவில்களை முதன் முதலில் அமைத்தவர்கள் = குப்தர்கள்.
  • பாறைக் குடைவரைக் கோவிலின் அடுத்த கட்ட வளர்ச்சி = கட்டுமானக் கோவில்கள்.
  • அணைத்து இந்து தெய்வங்களுக்கும் கட்டுமானக் கோவில்கள் கட்டப்பட்டன.
  • குப்தர்கள் கால முக்கிய பாறைக் குடைவரைக் கோவில்கள் உள்ள இடம் = அஜந்தா, எல்லோரா (மகாராஷ்டிரா), குவாலியர் பாக் (மத்தியப்பிரதேசம்), உதயகிரி (ஒடிசா).
  • குப்தர்களின் உலோகச் சிற்பங்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டு,
    1. நாளந்தாவில் உள்ள 18 அடி உயர புத்தரின் செப்புச் சிலை.
    2. சுல்தான் கஞ்ச் என்னுமிடத்தில் உள்ள ஏழரை அடி உயர புத்தரின் உலோகச் சிலை.
  • குப்தர்களின் ஓவியக் கலைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு = அஜந்தா குகை ஓவியங்கள், குவாலியர் பாக் குகை ஓவியங்கள்.
  • குப்தர்கள் காலம் இந்தியாவின் பொற்காலம்

குப்தர்கள் கால இலக்கியம்

  • குப்தர்கள் காலத்தில் மக்களின் பேச்சு மொழி = பிராகிருதம்.
  • குப்தர்கள் காலத்தில் அரசின் அலுவல் மொழி = சமஸ்கிருதம்.
  • பாணினி எழுதிய நூல் = அஷ்டதியாயி.
  • பதஞ்சலி எழுதிய நூல் = மகாபாஷ்யம்.
  • வங்காளத்தை சேர்ந்த பௌத்த அறிஞர் = சந்திரோகோமியோ.
  • சந்திரோகோமியோ எழுதிய நூல் = சந்திர வியாகரணம்.
  • காளிதாசர் இயற்றிய நூல்கள் = சாகுந்தலம், மாளவிகாக்னிமித்ரம், விக்கிரம ஊர்வசியம், மேகதூதம், ரகுவம்சம், குமாரசம்பவம், ரிதுசம்காரம்.
  • குப்தர்கள் காலம் இந்தியாவின் பொற்காலம்

குப்தர் கால அறிவியல் கண்டுபிடிப்புகள்

  • பூஜியத்தை கண்டுபிடித்தவர் = ஆரியபட்டர்.
  • தசம எண் முறையை உலகிற்கு அறிமுகம் செய்தவர்கள் = குப்தர்கள்.
  • குப்தர்கள் காலத்தின் சிறந்த வானியல், கணித அறிஞர்கள் = ஆரியபட்டர், வராகமிகிரர், பிரம்ம குப்தர்.
  • ஆரியபட்டர் எழுதிய நூல் = சூரிய சித்தாந்தா.
  • சூரிய, சந்திர கிரகணங்களுக்கான உண்மையான காரணத்தை முதல் முதலில் விளக்கியவர் = ஆரியபட்டர்.
  • ஆரியபட்டர் தனது “சூரிய சிந்தாந்தா” என்னும் நூலில் சந்திர, சூரிய கிரகணங்களை பற்றி விளக்கி உள்ளார்.
  • பூமி தனது அச்சில் சுழல்கிறது என்ற உண்மையை அறிவித்த உலகின் முதல் அறிஞர் = ஆரியபட்டர்.
  • பூமி தனது அச்சில் சுழல்கிறது என்ற உண்மையை அறிவித்த முதல் இந்திய வானியல் ஆய்வாளர் = ஆரியபட்டர்.
  • குப்தர்கள் காலத்தில் புகழ்பெற்ற ஆயுர்வேத நிபுணராக இருந்தவர் = தன்வந்திரி.
  • அறுவை சிகிச்சை முறை பற்றி விளக்கிய முதல் இந்தியர் = சுஸ்ருதர்.
  • குப்தர்கள் காலம் இந்தியாவின் பொற்காலம்

மெக்ராலி இரும்புத் தூண்

  • மெக்ராலி இரும்புத் தூணை நிறுவியவர் = முதலாம் சந்திரகுப்தர்.
  • மெக்ராலி இரும்புத் தூண் உள்ள இடம் = டெல்லி.

குப்தர்களின் நாணய அமைப்பு முறை

  • குப்தர்களின் நாணய அமைப்பு முறையை அறிமுகம் செய்தவர் = சமுத்திரகுப்தர்.
  • யாருடைய நாணயங்கள் சமுத்திரகுப்தருக்கு உந்துதலை வழங்கின = குஷானர்களின் நாணயங்கள்.
  • குப்தர்களின் பொற்காசுகள் எவ்வாறு அழைக்கப்பட்டன = தினாரா.
  • குப்தர்கள் வெள்ளி, செப்புக் காசுகளை குறைந்த அளவே வெளியிட்டனர்.
  • அதிகளவு தங்கக் காசுகளை வெளியிட்டவர்கள் = குப்தர்கள்.
  • குப்தர்கள் காலம் இந்தியாவின் பொற்காலம்
குப்தர் காலம் முக்கிய குறிப்புகள்
குப்தர் காலம் முக்கிய குறிப்புகள்

பாகியான் குறிப்புகள்

  • இரண்டாம் சந்திரகுப்தரின் அவைக்கு வந்த சீனப்பயணி = பாகியான்.
  • பாகியானின் பயணக்குறிப்புகள் குப்தர்கள் கால வரலாற்றை அறிந்துக் கொள்ள பெரிதும் உதவுகிறது.
  • மகத தேசத்து மக்கள் மகிழ்ச்சியுடனும், செழிப்புடனும் வாழ்ந்ததாக தனது நூலில் குறிப்பிட்டுள்ளார் பாகியான்.
  • கடுமையான தண்டனைகள் கிடையாது என்றும், மரன தண்டனைகள் வழங்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார் பாகியான்.
  • புத்தகயா பாழடைந்துள்ளது என்றும், கபிலவஸ்து காடாகி இருந்ததாகும் தெரிவித்துள்ளார். ஆனால் பாடலிபுத்திரத்தில் மக்கள் செல்வத்தோடும் செழிப்போடும் வாழ்ந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

நாளந்தா பல்கலைக்கழகம்

  • நாளந்தா பல்கலைக்கலகத்தை கட்டியவர் = குமாரகுப்தர்.
  • நாளந்தா பல்கலைக்கழகத்தை வளர்த்தவர்கள் = குப்தர்கள், ஹர்ஷர்.
  • நாளந்தா பல்கலைக்கழகத்தில் இருந்த முக்கிய பாடம் = பௌத்தத் தத்துவம்.
  • நாளந்தா பல்கலைக்கழகத்தில் புகழ்பெற்ற சீனப் பயணி “யுவான் சுவாங்” பல காலம் தங்கி புத்த தத்துவங்களை பயின்றார்.
  • நாளந்தா பல்கலைக்கழகத்தில் எத்தனை மகாபாடசாலைகள் இருந்தன = எட்டு.
  • நாளந்தா பல்கலைக்கழகத்தில் எத்தனை நூலகங்கள் இருந்தன = மூன்று.
  • நாளந்தா பல்கலைக்கழகத்தில் எட்டு மகாபாடசாலைகளும், மூன்று பெரிய நூலகங்களும் இருந்தன.
  • நாளந்தா பல்கலைக்கழகத்தை யாரால் அழிக்கப்பட்டது = பக்தியார் கில்ஜி (துருக்கிய இஸ்லாமிய அடிமை வம்சம்).
  • நாளந்தா யுனஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னமாகும்.
  • குப்தர்கள் காலம் இந்தியாவின் பொற்காலம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *