கூட்டுறவு அமைப்புகள்

கூட்டுறவு அமைப்புகள்

கூட்டுறவு அமைப்புகள்

கூட்டுறவு அமைப்புகள்

                 இந்திய அரசியல் அமைப்பு (Constitution of India) சட்டத்தில், 2௦11-ம் ஆண்டு 97-வது சட்டத்திருத்த மசோதா (97th Amendment Act) மூலம், “கூட்டுறவு அமைப்புகளுக்கு” (Co-Operative Societies) பாதுகாப்பு வழங்கி, அதற்கு அரசியல் அமைப்பு சட்ட அந்தஸ்து (Constitutional Status) வழங்கப்பட்டது. இதன் மூலம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில், மூன்று மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

கூட்டுறவு அமைப்புகள்

  1. விதி 19 = கூட்டுறவு சங்கங்களை அமைத்துக்கொள்வது ஒரு அடிப்படை உரிமை ஆகும் (It made the right to form co-operative societies a fundamental right (Article 19)
  2. விதி 43-பி = “கூட்டுறவு சங்கங்களை ஊக்குவித்தல்” என புதிய விதி சேர்க்கப்பட்டது (It included a new Directive Principle of State Policy on promotion of co-operative societies (Article 43-B))
  3. பகுதி 9-பி = “கூட்டுறவு அமைப்புகள்” என்ற பெயரில் புதிய பகுதி சேர்க்கப்பட்டது (விதி 243-ZH முதல் 243-ZT வரை) (It added a new Part IX-B in the Constitution which is entitled as “The Co-operative Societies” (Articles 243-ZH to 243-ZT))

கூட்டுறவு அமைப்புகள்

                      இந்த 3 மாற்றங்களும் 97-வது சட்டத்திருத்தத்தின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கூட்டுறவு சங்கங்களுக்கு பல்வேறு விதிகள் வகுக்கக்பட்டு அதனை மேம்படுத்த, நாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் ஜனநாயக (Democratic), தொழில்முறை தன்னாட்சி (Autonomous) மற்றும் பொருளாதார ரீதியாக சிறந்த முறையில் செயல்படுவதை உறுதிசெய்ய அரசியல் சட்டம் முயன்றது.

கூட்டுறவு அமைப்புகள்

              இது மத்திய பாராளுமன்றத்திற்கு, மாநிலங்கள் இடையேயான கூட்டுறவு அமைப்புகளை (Multi State Co-Operative Societies) உருவாக்கவும், மாநிலங்களில் அந்தந்த மாநிலத்திற்கு ஏற்ப கூட்டுறவு சங்கங்களை (Co-operative Societies) உருவாக்கவும், அரசியல் அமைப்பு சட்டம் வழிவகை செய்துள்ளது.

 

 

Leave a Reply