சமசீர் கல்வி 10 ஆம் வகுப்பு பாட புத்தகம் நாலாயிரத் திவ்விய பிரபந்தம்

நாலாயிரத் திவ்விய பிரபந்தம்

நாலாயிரத் திவ்விய பிரபந்தம்

நாலாயிரத் திவ்விய பிரபந்தம்

மீன்நோக்கும் நீள்வயல்சூழ் வித்துவக்கோட் டம்மாஎன்

பானோக்கா யாகிலுமுன் பற்றல்லால் பற்றில்லேன்

தானோக்கா தெத்துயரம் செய்திடினும் தார்வேந்தன்

கோனோக்கி வாழுங் குடிபோன் றிருந்தேனே

–           குலசேகர ஆழ்வார்

  • தமிழகத்தின் பழம்பெரும் சமயங்களுள் ஒன்று வைணவம்.
  • வைணவம் திருமாலை முழுமுதற் கடவுளாய்க்கொண்டு போற்றும். பன்னிரு ஆழ்வார்கள் பாடியருளிய தேனினும் இனிய தீந்தமிழ்ப் பனுவல் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

 

 

download1

குலசேகர ஆழ்வார் ஆசிரியர் குறிப்பு

  • கேரள மாநிலத்திலுள்ள திருவஞ்சைக்களத்தில் பிறந்தவர் குலசேகர ஆழ்வார்.
  • இராமபிரானிடம் பத்தி மிகுதியாக வாய்க்கப்பெற்ற காரணத்தால், இவர், குலசேகரப் பெருமாள் எனவும் அழைக்கப்பட்டார்.
  • இவர் பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர்.
  • இவர் அருளிய பெருமாள் திருமொழி, நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் ஒன்று.
  • இதில் நூற்றைந்து பாசுரங்கள் உள்ளன.
  • இவர் வடமொழி, தென்மொழி இரண்டிலும் வல்லவர்.
  • குலசேகரர் தமிழில் பெருமாள் திருமொழியையும், வடமொழியில் முகுந்தமாலை என்னும் நூலையும் இயற்றியுள்ளார்.
  • குலசேகரர், திருவரங்கத்தின் மூன்றாவது மதிலைக் கட்டியதால், அதற்குக் குலசேகரன் வீதி என்னும் பெயர் இன்றும் வழங்கி வருகிறது.
  • இவரது காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு.
  • குலசேகர் ஆழ்வாரின் பாடல், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் “முதல் ஆயிரத்தில்” உள்ளது.

நாலாயிரத் திவ்விய பிரபந்தம்

தார் வேந்தன் கோல் நோக்கி வாழும்

  • தார் வேந்தன் கோல் நோக்கி வாழும் குடி போன்றிருன்தேனே.
  • “தார் வேந்தன் கோல் நோக்கி வாழும் குடி போன்றிருன்தேனே” என்று பாடியவர் = குலசேகர ஆழ்வார்.

சொற்பொருள்

  • மீன்நோக்கும் – மீன்கள் வாழும்
  • என்பால் – என்னிடம்
  • தார்வேந்தன் – மாலையணிந்த அரசன்
  • கோல்நோக்கி – செங்கோல் செய்யும் அரசனை நோக்கி

இலக்கணக்குறிப்பு

  • நோக்காய் – முன்னிலை ஒருமை வினைமுற்று
  • கோல்நோக்கி – இரண்டாம் வேற்றுமைத்தொகை
  • தார்வேந்தன் – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
  • வாழும்குடி – பெயரெச்சம்

பிரித்தறிதல்

  • பற்றில்லேன் = பற்று + இல்லேன்
  • போன்றிருந்தேன் = போன்று + இருந்தேன்

 

 

Leave a Reply