சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரத்தின் உருவம்

  • ஆசிரியர் = இளங்கோவடிகள்
  • காலம் = கி.பி.2ஆம் நூற்றாண்டு
  • அடிகள் = 5001
  • காதைகள் = 30
  • காண்டங்கள் = 3
  • பாவகை = நிலைமண்டில ஆசிரியப்பா
  • சமயம் = சமணம்

உரைகள்

  • அரும்பதங்களுக்கு மட்டும் உரை எழுதியவர் அரும்பத உரைகாரர்.
  • அடியார்க்கு நல்லாரின் உரை
  • ந.மு.வேங்கடசாமி நாட்டார் உரை

சிலப்பதிகாரம் ஆசிரியர் குறிப்பு

  • பெயர் = இளங்கோவடிகள்
  • பெற்றோர் = இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சோழன் மகள் நற்சோனை
  • அண்ணன் = சேரன் செங்குட்டுவன்
  • இவர் இளமையிலே துறவே பூண்டு குணவாயிற் கோட்டம் என்னும் இடத்தில் தங்கினார்.

சிலப்பதிகாரம் வேறு பெயர்கள்

  • தமிழின் முதல் காப்பியம்
  • உரையிடையிட்ட பாட்டைச் செய்யுள்
  • முத்தமிழ்க்காப்பியம்
  • முதன்மைக் காப்பியம்
  • பத்தினிக் காப்பியம்
  • நாடகப் காப்பியம்
  • குடிமக்கள் காப்பியம்(தெ.பொ.மீ)
  • புதுமைக் காப்பியம்
  • பொதுமைக் காப்பியம்
  • ஒற்றுமைக் காப்பியம்
  • ஒருமைப்பாட்டுக் காப்பியம்
  • தமிழ்த் தேசியக் காப்பியம்
  • மூவேந்தர் காப்பியம்
  • வரலாற்றுக் காப்பியம்
  • போராட்ட காப்பியம்
  • புரட்சிக்காப்பியம்
  • சிறப்பதிகாரம்(உ.வே.சா)
  • பைந்தமிழ் காப்பியம்

நூல் அமைப்பு

  • காண்டங்கள் = 3 (புகர்ர் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம்)
  • காதைகள் = 30
  • முதல் காதை = மங்கல வாழ்த்துப் பாடல்
  • இறுதி காதை = வரந்தருகாதை

புகார் காண்டம்

  • புகார் காண்டத்தில் உள்ள காதைகள் = 10
  • முதல் காதை = மங்கல வாழ்த்துப் பாடல் காதை
  • பத்தாவது காதை = நாடுகாண் காதை

மதுரைக் காண்டம்

  • மதுரைக் காண்டத்தில் உள்ள காதை = 13
  • 11வது காதை = காடுகாண் காதை
  • 23வது காதை = கட்டுரைக் காதை

வஞ்சிக் காண்டம்

  • வஞ்சிக் காண்டத்தில் உள்ள காதை = 7
  • 24வது காதை = குன்றக்குரவை காதை
  • 30வது காதை = வரந்தருகாதை

நூல் எழுந்த வரலாறு

  • மலைவளம் காண சென்ற இளங்கோவடிகள், சேரன் செங்குட்டுவன், சீத்தலை சாத்தனார் ஆகிடோரிடம் அங்கு இருந்த மக்கள் ஒரு பெண் தெய்வத்தை பார்த்ததாக கூறினர்.
  • சீத்தலை சாத்தனார் தனக்கு அப்பெண்ணின் கதை தெரியும் என்று கூறி, அக்கதையை இளங்கோவடிகள் எழுதவேண்டும் எனக் கேட்டார்.
  • சீத்தலைச் சாதனார்ர், இளங்கோவடிகளை “முதுகெலு வேந்தர் மூவர்க்கும் உரியது; அடிகள் நீரே அருளுக” என வேண்டிக்கொண்டார்.
  • இளங்கோவடிகளும், “நாடதும் யாமோர் பாட்டைச்செய்யுள்” ஈனக் கூறி சிலப்பதிகாரத்தை படைத்தார்.

சிலப்பதிகாரம் கூறும் மூன்று உண்மைகள்

  • ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும்
  • அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்
  • உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்துவர்

சிலப்பதிகாரம் கதாபாத்திரங்கள் பெயர்கள்

  • கோவலனின் தந்தை மாசாத்துவான்
  • கண்ணகிடின் தந்தை மாநாய்கன்
  • கோவலனின் தோழன் மாடலன்
  • கண்ணகியின் தோழி தேவந்தி
  • மாதவியின் தோழி சுதமதி, வயந்தமாலை
  • கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்தவள் = மணிமேகலை
  • கண்ணகி கோவில் கட்டியவன் சேரன் செங்குட்டுவன்
  • கோவில் உள்ள இடம் திருவஞ்சிக்களம்(குமுளி)
  • சேரன் செங்குட்டுவன் போர் செய்த இடம் குயிலாலுவம்

சிலப்பதிகாரம் சிறப்புகள்

  • “நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்” என பாரதியார் கூறுகிறார்.
  • “சிலபதிகாரச் செய்யுளைக் கருதியும்……..தமிழ்ச் சாதியை அமரத்தன்மை வாய்ந்தது என்று உறுதி கொண்டிருந்தேன்” என கூறுகிறார் பாரதியார்.
  • “யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவனைப் போல் இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணமே பிறந்ததில்லை” என்றார் பாரதியார்
  • “முதன் முதலாகத் தமிழ் மக்கள் எல்லோரையும் ஒருங்கே காணும் நெறியில் நின்று நூல் செய்தவர் இளங்கோவடிகள்” – மு.வரதராசனார்
  • பாவின் வளர்ச்சிக்கு வித்திட்ட நூல் சிலப்பதிகாரம்

மேற்கோள்

  • மாசறு பொன்னே, வலம்புரி முத்தே

            காசறு விரையே, கரும்பே, தேனே

            அரும்பெறல் பாவாய், ஆருயிர் மருந்தே

            பெருங்குடி வாணிகன் பெருமட மகளே

  • இன்துணை மகளிர்க்கு இன்றியமையாக்

            கற்புக் கடம்பூண்ட இத்தெய்வம் அல்லது

             பொற்புடைத் தெய்வம்

  • பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுகத்துக்

             குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள

 

 

 

Leave a Reply