சேர்த்து எழுதுக
சேர்த்து எழுதுக – TNPSC தேர்வில் கேட்கப்படும் சேர்த்து எழுதுக பகுதிக்கு தேவையான பாடக்குறிப்புகள் தொகுக்கப்பட்டு தேர்விற்கு பயன்படும் வகையில் வழங்கப்பட்டுள்ளது

சேர்த்து எழுதுக
ந வரிசை
- நகை + சுவை = நகைச்சுவை
- நச்சு + இலை = நச்சிலை
- நடுவு + இகந்து + ஆம் = நடுவிகந்தாம்
- நமக்கு + ஈது = நமக்கீது
- நமது + என்பது + அறிந்தோம் = நமதென்பதறிந்தோம்
- நமது + ஊர் (அல்லது நாம் + அது + ஊர்) = நமதூர்
- நமன் + இல்லை = நமனில்லை
- நாம் + ஊர் = நம்மூர்
- நலம் + எல்லாம் = நலமெல்லாம்
- நலன் + அழித்து = நலனழித்து
- நன்மை + அறிஞர் = நல்லறிஞர்
- நன்மை + அறம் = நல்லறம்
- நன்மை + இனம் = நல்லினம்
- நன்மை + எள் + நெய் = நல்லெண்ணெய்
- நன்மை + வினை = நல்வினை
- நல் + ஐ = நல்லை
- நவின்று + இலர் = நவின்றிவர்
- நன்மை + கருத்து = நற்கருத்து
- நன்மை + கறிகள் = நற்கறிகள்
- நன்மை + பயன் = நற்பயன்
- நன்மை + தவர் = நற்றவர்
- நன்மை + திறம் = நற்றிறம்
- நன்மை + கலம் = நன்கலம்
- நன்கு + உடையான் = நன்குடையான்
- நன்மை + செய் = நன்செய்
- நன்மை + பால் = நன்பால்
- நல் + மாடங்கள் = நன்மாடங்கள்
- நன்மை + மொழி = நன்மொழி
- நன்மை + விலை = நன்விலை
- நன்று + அன்று = நன்றன்று
- நன்றி + அறிதல் = நன்றியறிதல்
- நன்றி + உணர்வு = நன்றியுணர்வு
- நன்மை + நடை = நன்னடை
- நன்மை + நயம் = நன்னயம்
- நன்மை + நாள் = நன்னாள்
- நன்மை + நுதல் = நன்னுதல்
- நன்மை + நூல் = நன்னூல்
- நாடு + ஆக்கிட = நாடாக்கிட
- நாடு + யாது = நாடியாது
- நாடு + உண்டு = நாடுண்டு
- நாடு + என்ப = நாடென்ப
- நாடு + ஆண்மை = நாட்டாண்மை
- நாடு + ஒரு = நாட்டொரு
- நாள் + காட்டி = நாட்காட்டி
- நாள் + மதி = நாண்மதி
- நாள் + மீன் = நாண்மீன்
- நாதன் + கு = நாதற்கு
- நா + தொலைவு + இல்லை = நாத்தொலைவில்லை
- நாமம் + அது = நாம்மது
- நாம் + என்றும் = நாமென்றும்
- நாவை + அசைத்த = நாவையசைத்த
- நாள் + அணி = நாளணி
- நான்கு + கரணம் = நாற்கரணம்
- நான்கு + சந்தி = நாற்சந்தி
- நான்கு + திசை = நாற்றிசை
- நான்கு + பொருள் = நாற்பொருள்
- நான்கு + மறை = நான்மறை
- நாய் + ஓடியது = நாயோடியது
- நிகர் + ஆவார் = நிகராவார்
- நியதி + ஆகும் = நியதியாகும்
- நிறுவனம் + ஒன்றில் = நிறுவனமொன்றில்
- நிலத்து + இயல்பால் = நிலத்தியல்பால்
- நிலம் + அத்து + இயல்பு = நிலத்தியல்பு
- நிலத்தின் + இடையே = நிலத்தினிடையே
- நிலத்து + உயர் = நிலத்துயர்
- நிலம் + எல்லாம் = நிலமெல்லாம்
- நிலவு + அழகு = நிலவழகு
- நிலா + ஒளி = நிலாவொளி
- நிலை + ஆகி = நிலையாகி
- நிற்பது + இல்லை = நிற்பதில்லை
- நின்ற + ஒன்றே = நின்றவொன்றே
- நின்று + இருந்த = நின்றிருந்த
- நீ + அதை = நீயதை
- நீர் + அதன் = நீரதன்
- நீர் + உலையில் = நீருலையில்
- நீ + ஆல் = நீயால்
- நீர் + ஓடை = நீரோடை
- நீலம் + வானம் = நீலவானம்
- நீள் + உழைப்பு = நீளுழைப்பு
- நுண்மை + பொருள் = நுண்பொருள்
- நூல் + ஆடை = நூலாடை
- நூறு + ஆண்டு = நூற்றாண்டு
- நெடுமை + கடல் = நெடுங்கடல்
- நெடுமை + தமிழ் = நெடுந்தமிழ்
- நெடுமை + நாவாய் = நெடுநாவாய்
- நெடுமை + நீர் = நெடுநீர்
- நெடுமை + நூல் = நெடுநூல்
- நெடுமை + மரம் = நெடுமரம்
- நோய் + அற்ற = நோயற்ற
- நோய் + இன்றி = நோயின்றி
- சேர்த்து எழுதுக
- சேர்த்து எழுதுக

ப வரிசை
- பல் + துளி = பஃறுளி
- பகல் + உணவு = பகலுணவு
- பகை + அகத்து = பகையகத்து
- பங்கு + இட்டார் = பங்கிட்டார்
- பங்கு + உறை = பங்குறை
- பங்கு + ஏற்கும் = பங்கேற்கும்
- பசுமை + தழை = பசுந்தழை
- பசி + அறாது = பசியறாது
- பசி + இன்றி = பசியின்றி
- பசுமை + ஊன் = பச்சூன்
- படர் + உற = படருற
- படுவது + யாது = படுவதியாது
- படை + எடுப்பு = படையெடுப்பு
- பட்டது + என = பட்டதென
- பட்டு + ஆடை = பட்டாடை
- படிப்பு + அறிவு = படிப்பறிவு
- படுக்கை + ஆகிறது = படுக்கையாகிறது
- பணிந்து + இவர் = பணிந்திவர்
- பணி + ஆற்றினார் = பணியாற்றினார்
- பண் + தரு + விபஞ்சி = பண்டருவிபஞ்சி
- பண்பு + அற்ற = பண்பற்ற
- பண்பு + இலான் = பண்பிலான்
- பண்பில் + உயர் = பண்பிலுயர்
- பண்பு + உடைமை = பண்புடைமை
- பண்பு + எனப்படுவது = பண்பெனப்படுவது
- பத்து + ஆண்டு = பத்தாண்டு
- பதி + போல் + ஆகம் = பதிபோலாகம்
- பத்து + பத்து = பதிற்றுப்பத்து
- பத்து + நான்கு = பதினான்கு
- பயன் + ஆக = பயனாக
- பயம் + இல்லை = பயமில்லை
- பயன் + உடையார் = பயனுடையார்
- பரணி + ஆகும் = பரணியாகும்
- பரிந்து + ஓம்பி = பரிந்துஓம்பி / பரிந்தோம்பி
- பல + பணி = பலபணி
- பல + பல = பலபல
- பல + பல = பலப்பல
- பல + என்று = பலவென்று
- பலா + பழம் = பலாப்பழம்
- பல + பணி = பல்பணி
- பல + பொறி = பல்பொறி
- பல் + ஆறு + ஆன் = பல்லாற்றான்
- பல்லில் + உள்ள = பல்லிலுள்ள
- பல + உயிர் = பல்லுயிர்
- பல் + வலி = பல்வலி
- பல் + யூதர் = பல்யூதர்
- பல் + கலை = பல்கலை
- பழமை + காலம் = பழங்காலம்
- பழம் + சாறு = பழச்சாறு
- பழமை + தமிழர் = பழந்தமிழர்
- பழமை + தமிழ் = பழந்தமிழ்
- பழம் + பெருமை = பழம்பெருமை
- பழமை + பாடல் = பழம்பாடல்
- பழம் + இல்லை = பழமில்லை
- பனை + காய் = பனங்காய்
- பனை + ஓலை = பனையோலை
- பல் + நூல் = பன்னூல்
- பல் + முகம் = பன்முகம்
- பல + மொழி = பன்மொழி
- பறை + அறை = பறையறை
- பல + பல = பற்பல
- பல் + பொடி = பற்பொடி
- பற்று + இல்லேன் = பற்றில்லேன்
- பாகு + அல் + காய் = பாகற்காய்
- பாகத்தான் + அகம் = பாகத்தானகம்
- பாடு + அறிந்து = பாடறிந்து
- பாடி + இருப்பினும் = பாடியிருப்பினும்
- பசுமை + இலை = பாசிலை
- பாடும் + குயில் = பாடுங்குயில்
- பாடு + உன்றும் = பாடுன்றும்
- பாடு + என = பாடென
- பாட்டு + இயல் = பாட்டியல்
- பாட்டு + எழுது = பாட்டெழுது
- பார்ப்பு + ஒழுக்கம் = பார்ப்பொழுக்கம்
- பாலை + எல்லாம் = பாலையெல்லாம்
- பா + இசை = பாவிசை
- பா + இனங்கள் = பாவினங்கள்
- பார் + அகம் = பாரகம்
- பால் + கடல் = பாற்கடல்
- பிணி + நோய் + உற்றோர் = பிணிநோயுற்றோர்
- பிணி + அறியோம் = பிணியறியோம்
- பிரிவு + உளது + என்ன = பிரிவுளதென்ன
- பிரிவு + இல்லை = பிரிவிலை
- பிள்ளை + தமிழ் = பிள்ளைத்தமிழ்
- பின்பு + உளது + இடை = பின்புளதிடை
- பீடு + உற = பீடுற
- புகழ் + எனின் = புகழெனின்
- புகழ் + ஒளி = புகழொளி
- புகுந்து + ஈங்கு = புகுந்தீங்கு
- புக்கு + இனிது = புக்கினிது
- புகு + உழி = புக்குழி
- புள் + கள் = புட்கள்
- புணர்வு + உவத்தல் = புணர்வுவத்தல்
- புதுமை + பெயல் = புதுப்பெயல்
- புதுமை + உணர்ச்சி = புத்துணர்ச்சி
- புதுமை + ஊர் = புத்தூர்
- புரவலர் + ஆகிய = புரவலராகிய
- புவி + ஆட்சி = புவியாட்சி
- புள் + இனம் = புள்ளினம்
- புள் + உறு = புள்ளுறு
- புறம் + தருதல் = புறந்தருதல்
- புறம் + திண்ணை = புறந்திண்ணை
- புன்மை + கண் = புன்கண்
- பூ + கூடை = பூக்கூடை
- பூ + கொடி = பூங்கொடி
- பூ + கோதை = பூங்கோதை
- பூ + தாழை = பூந்தாழை
- பூ + பாவாய் = பூம்பாவாய்
- பூ + புனல் = பூம்புனல்
- பூட்டு + மின் = பூட்டுமின்
- பூதம் + தம் + தொழில் = பூதந்தந்தொழில்
- பூண் + மாலை = பூண்மாலை
- பெண் + அணங்கு = பெண்ணணங்கு
- பெயர் + அறியா = பெயரறியா
- பெருமை + அன் = பெரியன்
- பெருக்கு + ஆற்று = பெருக்காற்று
- பெருக்கு + அற்று = பெருக்கற்று
- பெருக்கு + எடுத்து = பெருக்கெடுத்து
- பெருமை + கடல் = பெருங்கடல்
- பெருமை + கலம் = பெருங்கலம்
- பெருமை + காவலர் = பெருங்காவலர்
- பெருமை + கிரி = பெருங்கிரி
- பெருமை + குடி = பெருங்குடி
- பெருமை + சிரம் = பெருஞ்சிரம்
- பெருமை + செல்வம் = பெருஞ்செல்வம்
- பெருமை + தவத்தாய் = பெருந்தவத்தாய்
- பெருமை + தவம் = பெருந்தவம்
- பெருமை + தேன் = பெருந்தேன்
- பெருமை + நாள் = பெருநாள்
- பெருமை + பெயர் = பெரும்பெயர்
- பெருமை + வரி = பெருவரி
- பெற்றது + அன்றோ = பெற்றதன்றோ
- பெற்று + அருள் = பெற்றருள்
- பெற்று + இருந்தார் = பெற்றிருந்தார்
- பெற்று + எடுத்த = பெற்றெடுத்த
- பெற்று + எடுத்தோம் = பெற்றெடுத்தோம்
- பெருமை + அன்பு = பேரன்பு
- பெருமை + ஆண்மை = பேராண்மை
- பெருமை + ஆறு = பேராறு
- பெருமை + அழகு = பேரழகு
- பெருமை + உரம் = பேருரம்
- பெருமை + உரு = பேருரு
- பை + தலை = பைத்தலை
- பசுமை + தமிழே = பைந்தமிழே
- பசுமை + நிறம் = பைந்நிறம்
- பசுமை + நிணம் = பைந்நிணம்
- பொடி + ஆக்கு = பொடியாக்கு
- பொதி + அலர் = பொதியலர்
- பொது + சிறப்பு = பொதுச்சிறப்பு
- பொய் + அறு = பொய்யறு
- பொய் + இல்லை = பொய்யில்லை
- பொருள் + செல்வம் = பொருட்கெல்வம் / பொருட்செல்வம்
- பொருப்பு + இழி = பொருப்பிழி
- பொருள் + அல்லவரை = பொருளல்லவரை
- பொருள் + ஆக = பொருளாக
- பொருள் + இலார்க்கு = பொருளிலார்க்கு
- பொருள் + உடைமை = பொருளுடைமை
- பொருள் + உதவியாலும் = பொருளுதவியாலும்
- பொறை + ஆளால் = பொறையாளால்
- பொறை + உடைமை = பொறையுடைமை
- பொன் + களம் = பொற்களம்
- பொன் + கொல்லர் = பொற்கிடலர் / பொற்கொல்லர்
- பொன் + குடம் = பொற்குடம்
- பொன் + கோட்டு = பொற்கோட்டு
- பொன் + சிலம்பு = பொற்சிலம்பு
- பொன் + தீது = பொற்றீது
- பொன் + தொழில் = பொற்றொழில்
- பொன் + தீது = பொன்றீது
- பொன் + நன்று = பொன்னன்று
- போகி + பண்டிகை = போகிப்பண்டிகை
- போகு + என = போகென
- போது + அறிய = போதறிய
- போதும் + இனி = போதுமினி
- போவது + இல்லை = போவதில்லை
- போன்று + இருந்தேன் = போன்றிருந்தேன்
- சேர்த்து எழுதுக
- சேர்த்து எழுதுக
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
ம வரிசை
- மகற்கு + ஆற்றும் = மகற்காற்றும்
- மக்கள் + பண்பு = மக்கட்பண்பு
- மக்கள் + பேறு = மக்கட்பேறு
- மக்கள் + ஒப்பு = மக்களொப்பு
- மண் + கலம் = மட்கலம்
- மண் + குடம் = மட்குடம்
- மண் + தீது = மட்டீது
- மடமை + அறிவு = மடஅறிவு
- மடம் + கொடி = மடக்கொடி
- மடுத்து + யார் + அவன் = மடுத்தியாரவன்
- மணம் + செய் = மணஞ்செய்
- மணம் + தழைப்ப = மணந்தழைப்ப
- மணம் + நூல் = மணநூல்
- மணி + குளம் = மணிக்குளம்
- மணி + ஒலி = மணியொலி
- மண் + தீது = மண்டீது
- மண்டும் + இருள் = மண்டுமிருள்
- மண் + இடத்தும் = மண்ணிடத்தும்
- மண் + உடை = மண்ணுடை
- மண் + உலகம் = மண்ணுலகம்
- மதி + எனும் = மதியெனும்
- மயக்கு + ஒழிய = மயக்கொழிய
- மரம் + கிளை = மரக்கிளை
- மரம் + நார் = மரநார்
- மரம் + அடி = மரவடி
- மரம் + இலை = மரவிலை
- மரம் + வேர் = மரவேர்
- மருள் + கெட = மருட்கெட
- மருப்பு + ஊசி = மருப்பூசி
- மலம் + அற = மலமற
- மலை + அளவு = மலையளவு
- மற்று + ஆங்கே = மற்றாங்கே
- மற்று + இரண்டு = மற்றிரண்டு
- மற்று + ஒன்று = மற்றொன்று
- மனம் + நலம் = மனநலம்
- மனம் + இல்லை = மனமில்லை
- மனம் + உருகி = மனமுருகி
- மனம் + எனும் = மனமெனும்
- மனன் + எனும் = மனனெனும்
- மனை + என = மனையென
- மன்னவர் + அன்னவர் = மன்னவரன்னவர்
- மன் + உயிர் = மன்னுயிர்
- மாசு + அணுகா = மாசணுகா
- மாசு + அற = மாசற
- மாசு + அற்றார் = மாசற்றார்
- மாசு + இலன் = மாசிலன்
- மாசு + இல்லா = மாசில்லா
- மாதிரத்து + உறை = மாதிரத்துறை
- மார்பு + ஓலை = மார்போலை
- மா + இலை = மாவிலை
- மான் + யாது = மான்யாது
- மாலைகள் + இட்டும் = மாலைகளிட்டும்
- மிக்கன + ஆயினும் = மிக்கனவாயினும்
- மின் + ஆர் = மின்னார்
- மின் + இயல் = மின்னியல்
- மீது + அமர்ந்து = மீதமர்ந்து
- முள் + தீது = முட்டீது
- முள் + நன்று = முண்ணன்று
- முள் + மாட்சி = முண்மாட்சி
- முதல் + உதவி = முதலுதவி
- முதல் + இரண்டு + பத்து + ஆண்டு = முதலிருபதாண்டு
- முதுமை + மரம் = முதுமரம்
- மூன்று + தமிழ் = முத்தமிழ்
- மூன்று + நீர் = முந்நீர்
- மூன்று + பால் = முப்பால்
- மூன்று + பழங்கள் = முப்பழங்கள்
- முரடு + காளை = முரட்டுக்காளை
- முற்று + உணர்ந்த = முற்றுணர்ந்த
- முள் + ஆறு = முள்ளாறு
- முள் + இருக்கும் = முள்ளிருக்கும்
- முள் + இலை = முள்ளிலை
- முறை + அறிந்து = முறையறிந்து
- முன்பு + உளெம் = முன்புளெம்
- முன்னிய + எல்லாம் = முன்னியவெல்லாம்
- முன் + உடை = முன்னுடை
- முடிவு + உளது + என்ன = முடிவுளதென்ன
- மூச்சு + அடக்கி = மூச்சடக்கி
- மூப்பு + இல்லார் = மூப்பில்லார்
- மூன்று + உலகு = மூவுலகு
- மூன்று + எய்தோன் = மூன்றெய்தோன்
- மெய்யனே + என்று = மெய்யனேயென்று
- மெய்மை + பொருள் = மெய்ப்பொருள்
- மென்மை + அடி = மெல்லடி
- மென்மை + கண் = மென்கண்
- மென்மை + தாள் = மென்தாள்
- மென்பு + உடையார் = மென்புடையார்
- மேன்மை + தகு = மேதகு
- மேற்கு + நாடு = மேல்நாடு
- மேல் + குலத்தார் = மேற்குலத்தார்
- மேல் + உதடு = மேலுதடு
- மை + அணி = மையணி
- மை + இருட்டு = மையிருட்டு
- மொய்ம்பு + உளது = மொய்ம்புளது
- மொய் + இலை = மொய்யிலை
- சேர்த்து எழுதுக
ய வரிசை
- யான் + அறிந்த = யானறிந்த
- யா + உள = யாவுள
- யாழ் + இசை = யாழிசை
- சேர்த்து எழுதுக
வ வரிசை
- வடிவு + அமைப்பு = வடிவமைப்பு
- வடிவு + என்றும் = வடிவென்றும்
- வனம் + தொறும் = வணந்தொறும்
- வந்து + அணைந்த = வந்தணைந்த
- வரலாறு + சிறப்பு = வரலாற்றுச்சிறப்பு
- வருங்காலம் + உண்டு = வருங்காலமுண்டு
- வலம் + கொண்டு = வலங்கொண்டு
- வன்மை + உயிர் = வல்லுயிர்
- வழக்கு + என்ப = வழக்கென்ப
- வள்ளிக்கு + இசைந்த = வள்ளிக்கிசைந்த
- வளமை + உகிர் = வள்ளுகிர்
- வன்மை + தாள் = வன்தாள்
- வன்மை + பாலை + கண் = வன்பாற்கண்
- வசை + ஒழிய = வசையொழிய
- வாழ் + நாள் = வாணாள்
- வாய் + அம்பு = வாயம்பு
- வாய் + ஓரம் = வாயோரம்
- வால் + எங்கே = வாலெங்கே
- வால் + உண்டு = வாலுண்டு
- வாழிய + வேந்து = வாழிவேந்து
- வானம் + புனல் = வானப்புனல்
- வான் + இயல் = வானியல்
- வான் + இன்று = வானின்று
- வான் + உறு = வானுறு
- வான் + ஒலி = வானொலி
- விடுதலை + உணர்வு = விடுதலையுணர்வு
- விண் + இல் = விண்ணில்
- விதை + ஆகும் = விதையாகும்
- விரிவு + ஆக்கு = விரிவாக்கு
- விருத்தம் + பா = விருத்தப்பா
- விலை + ஆகும் = விலையாகும்
- விலை + உண்டு = விலையுண்டு
- வில் + இகல் = வில்லிகல்
- வில் + போட்டி = விற்போட்டி
- வீடுதோறும் + இரந்தும் = வீடுதோறிரந்தும்
- வெண்மை + குடை = வெண்குடை
- வெம்மை + சிலை = வெஞ்சிலை
- வெயில் + ஒழுகும் = வெயிலொழுகும்
- வெம்மை + முனை = வெம்முனை
- வேடம் + அணிந்து = வேடமணிந்து
- வேண்டியது + இல்லை = வேண்டியதில்லை
- வேந்தன் + கு = வேந்தற்கு
- வேதி + உரங்கள் = வேதியுரங்கள்
- வேலை + உண்டு = வேலையுண்டு
- வேல் + உண்டு = வேலுண்டு
- வெல் + தல் = வேறல்
- வேறு + ஓர் = வேறோர்
- சேர்த்து எழுதுக
- சேர்த்து எழுதுக
- சேர்த்து எழுதுக