துக்ளக் வம்ச வரலாறு மற்றும் ஆட்சியாளர்கள்

துக்ளக் வம்ச வரலாறு மற்றும் ஆட்சியாளர்கள்
- துக்ளக் வம்சம் ஆண்ட மொத்த ஆண்டுகள் = 94 ஆண்டுகள்.
- துக்ளக் வம்ச ஆட்சியை துவக்கியவர் = முதலாம் கியாசுதின் துக்ளக் ஷா (காஸி மாலிக்)
- அலாவுதீன் கில்ஜியின் படைத் தளபதியான காஸி மாலிக், கியாசுதின் துக்ளக் ஷா என்ற பெயரில் துக்ளக் ஆட்சியை நிறுவினார்.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
துக்ளக் வம்ச ஆட்சியாளர்கள்
-
-
- கியாசுதின் துக்ளக் = 1320-1325
- முகமது பின் துக்ளக் = 1325–1351
- பிரோஸ் ஷா துக்ளக் = 1351–1388
- கியாசுதின் துக்ளக் கான் II = 1388–1389
- அபுபக்கர் ஷா = 1389–1390
- நசுருதின் முஹம்மது ஷா III = 1390–1393
- அலாவுதின் சிக்கந்தர் ஷா = 1393
- நசுருதின் நுஸ்ரத் ஷா துக்ளக் = 1394-1398
- நசுருதின் முகமது ஷா துக்ளக் = 1394-1413
-
- துள்ளக் வம்சத்தில் மிக நீண்ட காலம் ஆட்சி செய்தவர் = பிருஸ் ஷா துக்ளக்.
- துக்ளக் வம்ச வரலாறு மற்றும் ஆட்சியாளர்கள்
கியாசுதின் துக்ளக்
- துக்ளக் வம்சத்தை நிறுவியவர் = முதலாம் கியாசுதின் துக்ளக் ஷா (காஸி மாலிக்)
- காஸி பட்டதை சூட்டிக்கொண்ட முதல் டெல்லி சுல்தான்,
- பாசனத்திற்கு கால்வாய்கள் வெட்டிய முதல் டெல்லி சுல்தான்
- அஞ்சல் முறையை உருவாக்கிய முதல் டெல்லி சுல்தான் = முதலாம் கியாசுதின் துக்ளக்.
- “நிசாமுதின் அவுலியா” என்ற சூபி துறவியுடன் விரோதம் கொண்டார்.
- “துக்ளதாபாத்” நகரை நிறுவினார்.
- துக்ளக் வம்ச வரலாறு மற்றும் ஆட்சியாளர்கள்

முகமது பின் துக்ளக்
- இயற் பெயர் = ஜூனா கான்
- ராஜமுந்திரி கல்வெட்டில், இவரை “உலகின் கான்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது
- டெல்லி சுல்தான்களிலே மிக அதிக கல்வியறிவு கொண்ட சுல்தான்.
- இவரது ஆட்சிப் பகுதிகள் 23 மாகாணங்களாக பிரிக்கப்பட்டிருந்தது.
- வேளாண்மைக்காக “திவான்-அமீர்-ஐ-கோகி” என்னும் புதிய துறையை உருவாக்கினார்.
- முதன் முதலில் நாணய மாற்று முறையை அறிமுகம் செய்த சுல்தான்.
- “நாணய சீர்திருத்த இளவரசர்” என்று அழைக்கப்பட்டார்.
- “முட்டாள்களில் அறிவாளி முட்டாள்”, “காலத்திற்கு பொருந்தாத அறிவாளி”, “அவர்கால அரிஸ்டாட்டில்” என்றெல்லாம் அழைக்கப்பட்டார்.
- இந்தியாவில் முதன் முதலில் கையொப்பம் இட்ட நாணயத்தை அறிமுகம் செய்த ஆட்சியாளர்.
- புகழ்பெற்ற மொராக்கோ நாட்டு பயணியான “இபின் பதுதா” முகமது பின் துக்ளக் அவைக்கு கி.பி. 1333 ல் விஜயம் செய்தார்.
- இபின் பதுதா எழுதிய புத்தகம் = ரஹேலா (சப்ராநாமா)
- இவர் கட்டிய கோட்டை = அதிலாபாத்
- இவர் உருவாக்கிய நகரம் = ஜகன்பானா.
- கி.பி. 1336ல் முகமது பின் துக்ளக் ஆட்சியின் பொழுது, விஜயநகர அரசை ஹரிஹரர் மற்றும் புக்கர் உருவாக்கினர்.
- இவரது ஆட்சிக் காலத்தில் தென்னிந்திய பகுதிகள் சுதந்திர அரசுகளாக மாறின.
- கி.பி. 1347ல் பாமினி அரசை “ஹசன் கங்கு” உருவாக்கினார்.
- இந்து பண்டிகையான “ஹோலி” பண்டிகையில் பங்கேற்ற முதல் டெல்லி சுல்தான்.
- “ஜினாபிரபா சூரி” என்னும் சமணத் துறவியுடன் நல்ல நட்பினை கொண்டிருந்தார்.
- பாராணி என்பவர் இவரை “முரண்பாடுகளின் மொத்த உருவம்” என்றார்.
- பதானி என்பவர் இவரின் மரணத்தை பற்றி “மக்களிடம் இருந்து மன்னருக்கும், மன்னரிடம் இருந்து மக்களுக்கும் விடுதலை கிடைத்தது” என்கிறார்.
- துக்ளக் வம்ச வரலாறு மற்றும் ஆட்சியாளர்கள்

முகமது பின் துக்ளக்கின் பரிசோதனைகள்
|
தலைநகர் மாற்றம் (கி.பி. 1326-27) |
|
|
தோஆப் பகுதியில் வரி உயர்வு (கி.பி 1327-28) |
|
|
செப்பு நாணய புழக்கம் (கி.பி. 1330) |
|
|
குராசன் படையெடுப்பு (கி.பி. 1336-37) |
|
|
காராச்சில் படையெடுப்பு (கி.பி. 1337-38) |
|

பிரோஸ் ஷா துக்ளக்
- மிக அதிக காலம் ஆட்சி செய்த சுல்தான்.
- இவர் எழுதிய சுயசரிதை நூல் = பதுகத் பிரோஷாகி
- சுயசரிதை எழுதிய ஒரே டெல்லி சுல்தான்.
- “பொதுப்பணித்துறை” துறையை உருவாக்கிய முதல் டெல்லி சுல்தான்.
- டெல்லியில் அதிகளவு கால்வாய்களை வெட்டினான்.
- மீரட் மற்றும் தோப்ராவில் இருந்த அசோகரின் பாறைக் கல்வெட்டுகளை, டெல்லிக்கு கொண்டு வந்தவர்.
- மிக அதிக அளவு அடிமைகளை அவையில் பயன்படுத்திய டெல்லி சுல்தான்.
- “மொழிபெயர்ப்பு துறையை” உருவாக்கிய முதல் சுல்தான்.
- ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள நிதி ஒதுக்கிய முதல் டெல்லி சுல்தான்.
- “அடிமைகளுக்கான துறையை” உருவாக்கினார்.
- “பாசன வரி” விதித்த முதல் சுல்தான்.
- “தண்ணீர் வரி” விதித்த முதல் சுல்தான்.
- டெல்லியில் ஒரு மருத்துவமனையை (தருள் ஷபா) கட்டினார்.
- பிராமணர்கள் மீது “ஜசியா வரி” விதித்த முதல் டெல்லி சுல்தான்.
- உருவாக்கிய நகரங்கள் = ஜான்பூர், பாதேபாத், ஹிஸ்ஸார், பிரூஸ்பூர், பிரூஸபாத்.
- இரண்டு நாணயங்களை அறிமுகம் செய்தார் = அதா (50% ஜிடால்), பிட்ச் (23% ஜிடால்)
- “தோட்டங்களை நேசிப்பவர்” என்று அழைக்கப்பட்டார்
- பூரி ஜகன்னாதர் ஆலையத்தை சேதப்படுத்தினான்.
- மின்னல் தாக்கியதால் சேதமடைந்த “குதுப்மினாரை” சீரமைத்தார்.
- வேலைவாய்ப்பற்ற நபர்களுக்காக தனி துறையை உருவாக்கிய முதல் டெல்லி சுல்தான்.
- “குரான்” அடிப்படையில் நான்கு வரிகளை விதித்தார்
-
- கரஜ் = நில விளைச்சலில் 10ல் ஒரு பங்கு வரி
- ஜகாத் = சொத்தில் 2.5% வரி (முஸ்லிம்களுக்கு மட்டும்)
- ஜசியா = முஸ்லிம்கள் தவிர்த்து பிற அனைவருக்கும் (பிராமின் உட்பட)
- கம்ஸ் = போரில் கைப்பற்றுவதில் ஆறில் ஒரு பங்கு.
-
- இவரால் ஆதரிக்கப்பட்டவர் = பாராணி
- பாராணி எழுதிய நூல்கள் = தாரிகி-இ-பெரோஷாஹி மற்றும் பத்வா-ஐ-ஜகாங்கிரி
- துக்ளக் வம்ச வரலாறு மற்றும் ஆட்சியாளர்கள்
இரண்டாம் கியாசுதின் துக்ளக் கான்
- சிற்றின்பங்களில் மூழ்கிக் கிடந்தார்.
- இவரின் நடத்தை மக்களிடம் வெறுப்பை பெற்றது.
- துக்ளக் வம்ச வரலாறு மற்றும் ஆட்சியாளர்கள்
நசுருதின் முகமது ஷா துக்ளக்
- துக்ளக் வம்சத்தின் கடைசி மன்னன்.
- தைமூர் படையெடுப்பு நடைபெற்றது.
- துக்ளக் வம்ச வரலாறு மற்றும் ஆட்சியாளர்கள்