பிட் இந்திய சட்டம் 1784
- பிட் இந்திய சட்டம் 1784, இங்கிலாந்து பாராளுமன்றத்தில், அப்போதைய பிரதமர் இளைய வில்லியம் பிட் (William Pitt the Younger) அவர்களால் கொண்டுவரப்பட்டது. இவரே இங்கிலாது வரலாற்றில் இளவயது (24 வயது) பிரதமர் ஆவார்.
- பிட் இந்திய சட்டம் 1784, “கிழக்கிந்திய கம்பெனி சட்டம் 1784” (EIC Act – East Indian Company Act, 1784) எனவும் அழைக்கப்பட்டது
- இச்சட்டத்தின் பொழுது கவர்னர் ஜெனரலாக இருந்தவர் = வாரன் ஹேஸ்டிங்ஸ்
பிட் இந்திய சட்டம் 1784 – தேவை:
- 1773ம் ஆண்டு ஒழுங்குமுறை சட்டத்தின் குறைகளை களைய இச்சட்டம் கொண்டுவரப்பட்டது
- இச்சட்டம் 1858ம் ஆண்டு வரை நடைமுறையில் இருந்தது.
- இச்சட்டத்தின் முக்கிய நோக்கங்கள் இரண்டாகும். ஒன்று இந்தியாவில் சிறந்த அரசை ஏற்படுத்துவது, மற்றொன்று கம்பெனியின் இந்தியப் பகுதிகளுக்கு பாதுகாப்பு அளித்தல்
பிட் இந்திய சட்டம் சட்டத்தின் சிறப்பியல்புகள்:
- இச்ட்சட்டதின் மூலம் இந்திய நிர்வாகத்தில் ஆங்கில அரசின் நேரடி செயல்பாடுகள் முதல் முறையாக கொண்டுவரப்பட்டது
- இச்சட்டம், ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் வணிக மற்றும் அரசியல் செயல்பாடுகளை தெளிவாக தனியாக பிரித்தது
- வணிக செயல்பாடுகள் = வணிக செயல்பாடுகளை கண்காணித்து செயல்படுத்த ஏற்கனவே இருந்த “இயக்குனர் மன்றத்திற்கு” (Commercial Affairs – Directors of Court) பொறுப்பு வழங்கப்பட்டது
- அரசியல் செயல்பாடுகள் = அரசியல் செயல்பாடுகள் செயல்படுத்த “கட்டுப்பாட்டு மன்றத்தை” (Political Affairs – Board of Control) உருவாக்கி பொறுப்பு வழங்கப்பட்டது. இதன் மூலம் “இரட்டை அரசு” (Double System of Government) முறை கொண்டுவரப்பட்டது.
- இந்தியாவில் பிரிட்டிஷ் ஆளுகைக்கு உட்பட்ட அணைத்து பகுதிகளிலும் “சிவில் மற்றும் இராணுவ செயல்பாடுகள் மற்றும் வரிவருவாய்” போன்ற அணைத்து செயல்பாடுகளையும் கண்காணித்து கட்டுப்படுத்தும் அணைத்து அதிகாரமும் “கட்டுப்பாட்டு மன்றத்திற்கு” வழங்கப்பட்டது.
- முதல் முறையாக ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் நில அதிகார எல்லையை, “இந்தியாவில் உள்ள ஆங்கிலேய பகுதிகள்” (British Possessions in India) என அறிவிப்பு செய்யப்பட்டது. மேலும் பிரிட்டிஷ் ஆளுகைக்கு உட்பட்ட இந்தியப் பகுதிகளுக்கு தலைநகராக “கொல்கத்தா” நகரம் அறிவிக்கப்பட்டது.
- கட்டுப்பாட்டு மன்றத்திற்கு 6 பேர் கொண்ட குழு இங்கிலாந்தில் அமைக்கப்பட்டது. இக்குழுவின் தலைவராக பிரிட்டிஷ் அரசின் அமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட்டார். பிரிட்டிஷ் அரசின் நிதி அமைச்சரும் இக்குழுவில் இடம் பெற்றார்.
- கவர்னர் ஜெனரல் தலைமையிலான நிர்வாகக் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையை நான்கில் இருந்து மூன்றாக குறைக்கப்பட்டது
- கிழக்கிந்திய கம்பெனிக்கு “தலையீடா கொள்கை” (Non – Intervention Policy) அறிமுகம் செய்யப்பட்டது
- கவர்னர் ஜெனரலுக்கு வீட்டோ அதிகாரம் வழங்கப்பட்டது
- 3 பேர் கொண்ட “ரகசிய குழு” (Secret Committee) ஒன்றும் அமைக்கப்பட்டது. கம்பெனியின் குழுவில் இருந்த 24 பேரில் இருந்து இந்த 3 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இங்கிலாந்தில் உள்ள கட்டுப்பாட்டு வாரியத்தில் இருந்து இந்தியாவிற்கு அனுப்பப்படும் ரகசிய ஆணைகள் அனைத்தும் இந்த ரகசிய குழுவின் மூலமே இந்தியாவில் செயல்படுத்தப்படும்.
- மாகாணங்கள், மத்திய அரசின் வழிகாட்டுதலின் படியே செயல்பட வேண்டும் எனவும், தவறும் பட்சத்தில் மாகாணங்களை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் கவர்னர் ஜெனரலுக்கு வழங்கப்பட்டது
பிட் இந்திய சட்டம் 1784 – குறிப்பு:
- இச்சட்டத்தின் படி கவர்னர் ஜெனரல் இரண்டு தலைமைக்கு கட்டுப்பட்டவர் ஆவர். 1. கிழக்கிந்திய கம்பெனி 2. பிரிட்டிஷ் அரசு
- கட்டுப்பாட்டு மன்றம் மற்றும் இயக்குனர் மன்றம் இரண்டிற்கு இடையேயான அதிகார எல்லைகள் இறுதி செய்யப்படவில்லை இச்சட்டத்தில்
- கவர்னர் ஜெனரலின்9 முடிவே இறுதியானதாக இருந்தது
- HISTORICAL BACKGROUND (வரலாற்றுப் பின்னணி)
- REGULATING ACT OF 1773 (ஒழுங்குமுறைச் சட்டம் 1773)
- AMENDING ACT OF 1781 (திருத்தச் சட்டம் – 1781)
- இந்திய அரசியலமைப்பு உருவாக்கம்
- இந்திய அரசியலமைப்பின் சிறப்பம்சம்கள்
- இந்திய அரசியலமைப்பு பகுதிகள்