பிட் இந்திய சட்டம் 1784

பிட் இந்திய சட்டம் 1784

பிட் இந்திய சட்டம் 1784

  • பிட் இந்திய சட்டம் 1784, இங்கிலாந்து பாராளுமன்றத்தில், அப்போதைய பிரதமர் இளைய வில்லியம் பிட் (William Pitt the Younger) அவர்களால் கொண்டுவரப்பட்டது. இவரே இங்கிலாது வரலாற்றில் இளவயது (24 வயது) பிரதமர் ஆவார்.
  • பிட் இந்திய சட்டம் 1784,  “கிழக்கிந்திய கம்பெனி சட்டம் 1784” (EIC Act – East Indian Company Act, 1784) எனவும் அழைக்கப்பட்டது
  • இச்சட்டத்தின் பொழுது கவர்னர் ஜெனரலாக இருந்தவர் = வாரன் ஹேஸ்டிங்ஸ்

பிட் இந்திய சட்டம் 1784 – தேவை:

  • 1773ம் ஆண்டு ஒழுங்குமுறை சட்டத்தின் குறைகளை களைய இச்சட்டம் கொண்டுவரப்பட்டது
  • இச்சட்டம் 1858ம் ஆண்டு வரை நடைமுறையில் இருந்தது.
  • இச்சட்டத்தின் முக்கிய நோக்கங்கள் இரண்டாகும். ஒன்று இந்தியாவில் சிறந்த அரசை ஏற்படுத்துவது, மற்றொன்று கம்பெனியின் இந்தியப் பகுதிகளுக்கு பாதுகாப்பு அளித்தல்

பிட் இந்திய சட்டம் சட்டத்தின் சிறப்பியல்புகள்:

  • இச்ட்சட்டதின் மூலம் இந்திய நிர்வாகத்தில் ஆங்கில அரசின் நேரடி செயல்பாடுகள் முதல் முறையாக கொண்டுவரப்பட்டது
  • இச்சட்டம், ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் வணிக மற்றும் அரசியல் செயல்பாடுகளை தெளிவாக தனியாக பிரித்தது
  • வணிக செயல்பாடுகள் = வணிக செயல்பாடுகளை கண்காணித்து செயல்படுத்த ஏற்கனவே இருந்த “இயக்குனர் மன்றத்திற்கு” (Commercial Affairs – Directors of Court) பொறுப்பு வழங்கப்பட்டது
  • அரசியல் செயல்பாடுகள் = அரசியல் செயல்பாடுகள் செயல்படுத்த “கட்டுப்பாட்டு மன்றத்தை” (Political Affairs – Board of Control) உருவாக்கி பொறுப்பு வழங்கப்பட்டது. இதன் மூலம் “இரட்டை அரசு” (Double System of Government) முறை கொண்டுவரப்பட்டது.
  • இந்தியாவில் பிரிட்டிஷ் ஆளுகைக்கு உட்பட்ட அணைத்து பகுதிகளிலும் “சிவில் மற்றும் இராணுவ செயல்பாடுகள் மற்றும் வரிவருவாய்” போன்ற அணைத்து செயல்பாடுகளையும் கண்காணித்து கட்டுப்படுத்தும் அணைத்து அதிகாரமும் “கட்டுப்பாட்டு மன்றத்திற்கு” வழங்கப்பட்டது.
  • முதல் முறையாக ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் நில அதிகார எல்லையை, “இந்தியாவில் உள்ள ஆங்கிலேய பகுதிகள்” (British Possessions in India) என அறிவிப்பு செய்யப்பட்டது. மேலும் பிரிட்டிஷ் ஆளுகைக்கு உட்பட்ட இந்தியப் பகுதிகளுக்கு தலைநகராக “கொல்கத்தா” நகரம் அறிவிக்கப்பட்டது.

பிட் இந்திய சட்டம் 1784

  • கட்டுப்பாட்டு மன்றத்திற்கு 6 பேர் கொண்ட குழு இங்கிலாந்தில் அமைக்கப்பட்டது. இக்குழுவின் தலைவராக பிரிட்டிஷ் அரசின் அமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட்டார். பிரிட்டிஷ் அரசின் நிதி அமைச்சரும் இக்குழுவில் இடம் பெற்றார்.
  • கவர்னர் ஜெனரல் தலைமையிலான நிர்வாகக் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையை நான்கில் இருந்து மூன்றாக குறைக்கப்பட்டது

பிட் இந்திய சட்டம் 1784

  • கிழக்கிந்திய கம்பெனிக்கு “தலையீடா கொள்கை” (Non – Intervention Policy) அறிமுகம் செய்யப்பட்டது
  • கவர்னர் ஜெனரலுக்கு வீட்டோ அதிகாரம் வழங்கப்பட்டது

பிட் இந்திய சட்டம் 1784

  • 3 பேர் கொண்ட “ரகசிய குழு” (Secret Committee) ஒன்றும் அமைக்கப்பட்டது. கம்பெனியின் குழுவில் இருந்த 24 பேரில் இருந்து இந்த 3 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இங்கிலாந்தில் உள்ள கட்டுப்பாட்டு வாரியத்தில் இருந்து இந்தியாவிற்கு அனுப்பப்படும் ரகசிய ஆணைகள் அனைத்தும் இந்த ரகசிய குழுவின் மூலமே இந்தியாவில் செயல்படுத்தப்படும்.
  • மாகாணங்கள், மத்திய அரசின் வழிகாட்டுதலின் படியே செயல்பட வேண்டும் எனவும், தவறும் பட்சத்தில் மாகாணங்களை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் கவர்னர் ஜெனரலுக்கு வழங்கப்பட்டது

பிட் இந்திய சட்டம் 1784 – குறிப்பு:

  • இச்சட்டத்தின் படி கவர்னர் ஜெனரல் இரண்டு தலைமைக்கு கட்டுப்பட்டவர் ஆவர். 1. கிழக்கிந்திய கம்பெனி 2. பிரிட்டிஷ் அரசு
  • கட்டுப்பாட்டு மன்றம் மற்றும் இயக்குனர் மன்றம் இரண்டிற்கு இடையேயான அதிகார எல்லைகள் இறுதி செய்யப்படவில்லை இச்சட்டத்தில்
  • கவர்னர் ஜெனரலின்9 முடிவே இறுதியானதாக இருந்தது

 

Leave a Reply