TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – JULY 19, 2021

Table of Contents

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – JULY 19, 2021

 

       TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – JULY 19, 2021 TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 19, 2021 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுகக்பட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது.

“ஒரு தொகுதி, ஒரு தயாரிப்பு” திட்டம்:

  • “ஒரு தொகுதி, ஒரு பொருள்” என்னும் திட்டத்தை ஹரியானா மாநில அரசு விரைவில் செயல்படுத்த உள்ளது / The Haryana government will soon introduce the ‘One Block, One Product’ scheme, to encourage and promote small industries in the rural areas
  • கிராமங்களில் சிறு தொழில்களை ஊக்குவித்தல் இதன் முக்கிய நோக்கமாகும். இதன் மூலம் மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு வட்டத்திற்கும், சில தொழில்துறை நடவடிக்கைகள் மூலம் இணைக்கப்பட்டு, ஒவ்வொரு வட்டத்தையும் தொழில்துறையில் முன்னேற்ற இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

பிமல் ஜலான் எழுதிய ‘தி இந்தியா ஸ்டோரி’ என்ற புதிய புத்தகம்:

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் பிமல் ஜலன் ‘தி இந்தியா ஸ்டோரி’ என்ற புதிய புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார்.. இந்த புத்தகம் இந்தியாவின் பொருளாதார வரலாற்றை மையமாகக் கொண்டுள்ளது மற்றும் இந்தியாவின் அரசியல் பொருளாதாரத்தின் எதிர்காலத்திற்கான படிப்பினைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. / Former RBI governor Bimal Jalan writes a new book titled ‘The India Story’
  • பிமல் ஜலான் நவம்பர் 22, 1997 முதல் செப்டம்பர் 6, 2003 வரை இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்தார். இவர் எழுதிய மற்ற புத்தகங்கள், India Then and Now, The Future of India, Resurgent India, Emerging India Economics, Politics and reforms, India Ahead 2025 and beyond.

‘NBDriver’:

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • மனித செல்களில் புற்றுநோயினால் ஏற்படும் மாற்றங்களை கண்டறியும் புதிய “என்.பி.டிரைவர்” என்ற செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கணித மாதிரியை உருவாக்கி , மெட்ராஸ் அகில இந்திய தொழில்நுட்ப நிறுவன ஆராய்ச்சியாளர்கள் சாதனை படைத்துள்ளனர் / Indian Institute of Technology Madras Researchers has developed an Artificial Intelligence-based Mathematical Model called ‘NBDriver’ to identify cancer-causing alterations in cells.
  • புற்றுநோய் முன்னேற்றத்திற்கு காரணமான மரபணு மாற்றங்களை சுட்டிக்காட்டுவதற்கு டி.என்.ஏ கலவையை மேம்படுத்துவதற்கான ஒப்பீட்டளவில் ஆராயப்படாத நுட்பத்தை இந்த வழிமுறை பயன்படுத்துகிறது

99-வது வெற்றி பெற்ற லூயிஸ் ஹாமில்டன்:

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • இங்கிலாந்தில் நடைபெற்ற “பிரிட்டிஷ் கிராண்ட் பிரிக்ஸ் 2௦21” கார்பந்தய போட்டியில், 8-வது வெற்றியை பதிவு செய்துள்ளார். 7 முறை உலக சாம்பியனான லூயிஸ் ஹாமில்டன், இப்பொடியுடன் சேர்த்து சர்வதேச போட்டிகளில் 99 வெற்றியை பதிவு செய்துள்ளார் / Lewis Hamilton (Mercedes-Great Britain), won the British Grand Prix 2021, for a record-extending eighth time. This is the 99th career win of seven times world champion Hamilton and the fourth win of the current season after 10

ஆப்பிரிக்கா: டிஜிட்டல் நில பயன்பாட்டு தரவு சேகரிப்பை முடித்த முதல் கண்டம்:

  • மிகவும் விரிவான, துல்லியமான மற்றும் இணக்கமான டிஜிட்டல் பயன்பாட்டுத் தரவின் தொகுப்பை நிறைவு செய்த உலகின் முதல் கண்டமாக ஆப்பிரிக்கா மாறியுள்ளது / Africa has become the world’s first continent to complete the collection of comprehensive, accurate, and harmonized digital use data and land-use change data
  • இதற்காக ஆப்ரிக்க கண்டம் முழுவதும் DEAL என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு, நிலத் தகவல்கள் சேகரிக்கப்பட்டன.
  • DEAL = Data for the Environment, Agriculture, and Land Initiative

பெகாசஸ் ஸ்பைவேர்:

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • இந்தியாவை சேர்ந்த அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் இந்திய விஞ்ஞானிகள் மீது கண்காணிப்பு நடத்த பெகாசஸ் ஸ்பைவேர் பயன்படுத்தப்பட்டுள்ளது / Pegasus spyware has been used to conduct surveillance on ministers, opposition leaders, journalists, government officials and scientists of India.
  • சுமார் 40 இந்திய பத்திரிகையாளர்களின் தொலைபேசி எண்கள் கண்காணிப்புக்கான இலக்குகளின் கசிந்த பட்டியலில் காணப்பட்டன. பட்டியலில் செய்யப்பட்ட தடயவியல் சோதனைகள் அடையாளம் தெரியாத ஏஜென்சி அவற்றில் சிலவற்றை பெகாசஸ் மென்பொருளைப் பயன்படுத்தி வெற்றிகரமாக பறித்திருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது
  • இஸ்ரேலிய நிறுவனமான என்எஸ்ஓ குழு, பெகாசஸ் என்ற ஸ்பைவேரை உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களுக்கு விற்கிறது. IOS மற்றும் Android கணினிகளில் இயங்கும் தொலைபேசிகளைத் தேட இந்த ஸ்பைவேர் பயன்படுத்தப்படலாம் / The NSO group, an Israeli company, sells the spyware named Pegasus to governments across the world

11௦௦ கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்களை துவக்கி வைத்த பிரதமர்:

  • குஜராத்தில் 11௦௦ கோடி ரூபாய் மதிப்பிலான ரயிலே திட்டங்களை மெய்நிகர் முறையில் பிரதமர் துவக்கி வைத்தார்
  • மேலும் இந்நிகழ்ச்சியின் ஒருபகுதியாக, “இந்தியாவின் முதல் மறு மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையமான, காந்திநகர் தலைநகர ரயில் நிலையத்தையும்” (India’s First re-developed Railway Station – Gandhinagar Capital Railway station) துவக்கி வைத்தார். இந்த ரயில்நிலைய கட்டிடத்தில் மேல்பகுதியில் 5 நட்சத்திர ஹோட்டல் (5 Star hotel atop of the Gandhinagar Railway Station) அமைக்கப்பட்டுள்ளது.

தேசிய நோய்த்தடுப்பு பாதுகாப்பு மதிப்பீடுகள்:

  • உலக சுகாதார அமைப்பு (WHO – World health Organisation) மற்றும் ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியம் (UNICEF – United Nations Childrens Fund) ஆகியை இணைந்து வெளியிட்ட “தேசிய நோய்த்தடுப்பு பாதுகாப்பு மதிப்பீடுகள்” (WHO / UNICEF estimates of national immunization coverage) அறிக்கையின் படி, உலகம் முழுவதும் கடந்த ஆண்டு 23 மில்லியன் குழந்தைகள், தொடர் தடுப்பூசிகளை போடாமல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
  • 2௦19 ஆம் ஆண்டை காட்டிலும் இது 3.7 மில்லியன் அதிகமாகும். இதில் “டி.டி.பி” (DTP = Diptheria, Tetanus, Pertussis) தடுப்பூசி உலக அளவில் இந்தியாவில் தான் அதிக குழந்தைகள் போடாமல் உள்ளனர்.

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • டி.டி.பி எனப்படுவது, “தொண்டை அடைப்பான், டெட்டனஸ், கக்குவான் இருமல்” ஆகிய நோய்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது. ஒரு ஊசி மூலம் மூன்று தடுப்பு மருந்துகள் செலுத்தப்படுவதால், இதற்கு ‘முத்தடுப்பு ஊசி’ என்றும் பெயர் வந்தது.

நாடு

2௦19 ல் செலுத்தாத குழந்தைகள் 2௦20 ல் செலுத்தாத குழந்தைகள்
இந்தியா 14,03,000

30,38,000

பாகிஸ்தான்

5,67,000 9,68,000
இந்தோனேசியா 4,72,000

7,97,000

உலகின் முதல் கார்பன் எல்லை வரி:

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

 

  • “உலகின் முதல் கார்பன் எல்லை வரி” (World’s First Carbon Border Tax from 2026 launched by European Union), என்ற வரித் திட்டத்தை வருகின்ற 2௦26 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் முடிவெடுத்துள்ளது.
  • 2026 ஆம் ஆண்டளவில் உலகின் முதல் பெரிய காலநிலை இறக்குமதி கட்டணத்தை (World’s First major climate import tariff) அறிமுகப்படுத்தும் இத்திட்டத்தை, “கார்பன் எல்லை சரிசெய்தல் பொறிமுறை (சிபிஏஎம்)” (CBAM = Carbon Border Adjustment Mechanism) எனக் கூறப்படுகிறது.
  • TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 

மத்திய – தெற்காசிய கருத்தரங்கம் 2௦21:

  • “மத்திய – தெற்காசியா கருத்தரங்கம் 2௦21” (Central – South Asia Conference 2021, held at Tashkent, Uzbekistan), உஸ்பெகிஸ்தான் நாட்டின் “தாஸ்கண்ட்” நகரில் நடைபெற்றது.
  • இக்கருத்தரங்கில் இந்தியாவின் சார்பில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துக் கொண்டார்.

ஷாங்காய் கூட்டமைப்பின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டம்:

  • ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கூட்டம் (Shanghai Cooperation Organisation – Foreign Ministers Meet), தஜிகிஸ்தான் நாட்டின் தலைநகர் துசான்பேவில் நடைபெற்றது.
  • இக்கூட்டத்தில் இந்தியாவின் சார்பில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துக் கொண்டார்

பூமத்தியரேகைப் பரிசு 2௦21:

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்ட அமைப்பின் (UNDP – United Nations Development Programme) “பூமத்தியரேகைப் பரிசு 2௦21” (UNDP Equator Prize 2021), இரண்டு இந்திய அமைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவை,
    1. ஆதிமலை பழங்குடியினர் தயாரிப்பு உற்பத்தி நிறுவனம்
    2. சிநேககுஞ்சா ட்ரஸ்ட்
  • ஆதிமலை பழங்குடியினர் தயாரிப்பாளர் நிறுவனம்:
    1. இந்நிறுவனம் தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் உள்ளது.
    2. இதில் தற்போது 17௦௦ பேர் உறுப்பினர்களாக உள்ளனர்
    3. பாதுகாப்பு மற்றும் பல்லுயிர் துறையில் அவர்களின் பணிக்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது
    4. இது தமிழ்நாட்டின் நீலகிரி உயிர்க்கோள ரிசர்வ் பகுதியைச் சேர்ந்த பழங்குடியினரால் நிர்வகிக்கப்பட்டு கடந்த எட்டு ஆண்டுகளில் அதன் பணிகள் 147 கிராமங்களில் வாழ்வாதாரத்தை மேம்படுத்தியுள்ளன.

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • சிநேககுஞ்சா ட்ரஸ்ட்:
    1. சமூக அடிப்படையிலான மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பை மையமாகக் கொண்டு, இந்த அமைப்பு மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் கர்நாடகாவில் உள்ள முக்கியமான ஈரநிலங்களையும் கடலோர சுற்றுச்சூழல் அமைப்புகளையும் கடந்த 45 ஆண்டுகளாக பாதுகாத்துள்ளது.
    2. இந்த அமைப்பு இதுவரை 375 ஹெக்டேர் சதுப்பு நிலங்களை உருவாக்கி உள்ளது.
    3. இந்த அமைப்பே, “இந்தியாவில் முதல் நீல கார்பன் திட்டத்தை” (first blue carbon project in india) செயல்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.

இந்திய இணைய மற்றும் மொபைல் சங்கம்:

  • இந்திய இணைய மற்றும் மொபைல் சங்கத்தின் (IAMAI – Internet and Mobile Association of India) தலைவராக, சஞ்சய் குப்தா தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • இந்திய இணைய மற்றும் மொபைல் சங்கத்தின் துணை தலைவராக அஜித் மோகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கேன்ஸ் சிறந்த ஆவணப்பட விருதை வென்ற பாயல் கபாடியா:

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் நடைபெற்ற 74-வது கேன்ஸ் திரைப்பட விழாவில், இந்திய பெண் இயக்குனரான “பாயல் கபாடியா”வின் “A Night of Knowing Nothing” என்ற படத்திற்கு சிறந்த ஆவணப்படத்திற்கான “தங்கக் கண்” விருது வழங்கப்பட்டது / Director Payal Kapadia’s, “A Night of Knowing Nothing” won the Oeil d’or (Golden Eye) award for best documentary at the 74th Cannes Film Festival
  • TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 

இணைய பாதுகாப்பு நிறுவனமான ”ரிஸ்க்IQ”வை வாங்கிய மைக்ரோசாப்ட்:

  • உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான “மைக்ரோசாப்ட்”, பிரபல இணைய பாதுகாப்பு நிறுவனமான “RiskIQ” நிறுவனத்தை 5௦௦ மில்லியன் டாலருக்கு வாங்கி உள்ளது.
  • இதன் மூலம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆண்டிவைரஸ் சேவைகளின் தரம் உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

வரதட்சணை தடை சட்டம்:

  • கேரள மாநில அரசு, அம்மாநிலத்தின் “வரதட்சணை தடை சட்டத்தில்” திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.
  • சமிபத்தில் கேரளாவில் நடைபெற்ற வரதட்சணை கொடுமை தற்கொலையால், அம்மாநில அரசு இம்முடிவை எடுத்துள்ளது.

பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் கல்வி ஆவணங்களை வழங்கும் முதல் மாநிலம்:

  • பிளாக்செயின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கல்வி ஆவணங்களை வெளியிடும் நாட்டின் முதல் மாநிலமாக மகாராஷ்டிரா உருவெடுத்துள்ளது / Maharashtra will be the first state in the country to issue educational documents using blockchain technology
  • இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு மில்லியன் டிப்ளோமா சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று மகாராஷ்டிராவின் திறன் மேம்பாட்டு அமைச்சர் நவாப் மாலிக் தெரிவித்தார்.
  • இதன் மூலம் இந்தவகை சேவை வழங்கும் உலகின் நான்காவது நாடாக இந்தியா உயர்ந்துள்ளது. இந்த சேவையை வழங்கிய உலகின் முதல் நாடு “மால்டா” ஆகும்.

காதம்பினி கங்குலியின் 16௦-வது பிறந்த தினம்:

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • நாட்டின் முதல் பெண் மருத்துவர்களில் ஒருவரான காதம்பினி கங்குலியின் 16௦-வது பிறந்த தினம், ஜூலை 18 ஆம் தேதி அவர்க்கு புகழஞ்சலி செலுத்தப்பட்டது
  • ஆனந்தி ஜோஷியுடன் இணைந்து காதம்பினி கங்குலியும் பிரிட்டிஷ் இந்தியாவின் முதன் முதலாக மருத்துவம் படித்த பெண்களாக அறியப்பட்டனர் / She was the very first Indian female doctor who practiced with a degree in western medicine
  • இவர் கல்கத்தா மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்றார். பிரிட்டிஷ் இந்தியாவில் மருத்துவம் பயின்ற முதல் 2 பட்டதாரி பெண்மணிகள் = காதம்பினி கங்குலி மற்றும் சந்திரமுகி பாசு (ஆனந்தி ஜோஷி, அமெரிக்காவில் மருத்துவம் பயின்றார்)
  • இந்திய தேசிய காங்கிரசில் அமைக்கப்பட்ட முதல் அனைத்துப் பெண்கள் பிரதிநிதிகள் குழுவின் 6 உறுப்பினர்களில் ஒருவராக காதம்பினி இடம்பெற்றார்.
  • இந்திய தேசிய காங்கிரசில் முதல் பெண் பேச்சாளராகவும் இருந்தார் / She was also the first female speaker at the Indian National Congress.
  • அன்னி பெசன்ட் கடம்பினியை “இந்தியாவின் சுதந்திரம் இந்தியாவின் பெண்மையை உயர்த்தும் என்பதற்கான சின்னம்” என்று தனது ‘சுதந்திரத்திற்கான இந்தியா எவ்வாறு தயாரித்தது’ என்ற புத்தகத்தில் பாராட்டினார் / Annie Besant also hailed Kadambini as a “symbol that India’s freedom would uplift India’s womanhood” in her book ‘How India Wrought For Freedom’.
  • வங்காளப் பிரிவினைக்குப் பிறகு, கடம்பினி 1906 இல் கல்கத்தாவில் பெண்கள் மாநாட்டை ஏற்பாடு செய்தார் / After the Bengal Partition, Kadambini organized the Women’s Conference in Calcutta in 1906

மாநில மொழிகளில் பி.டெக் பொறியியல் படிப்புகள்:

  • பி.டெக் பொறியியல் படிப்புகளை 11 மாநில வட்டார மொழிகளில் கற்பிக்க அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.
  • 11 மாநில மொழிகள் = ஹிந்தி, மராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடா, குஜராத்தி, மலையாளம், பெங்காலி, அசாமி, பஞ்சாபி மற்றும் ஒடியா
  • மேலும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகம், நாட்டில் 8 மாநிலங்களில் உள்ள 14 பொறியியல் கல்லூரிகளில் அந்தந்த மாநில வட்டார மொழிகளில் கற்பிக்க அனுமதி அளித்துள்ளது.

நாற்கர குழுவை உருவாக்கும் அமேரிக்கா:

  • அமேரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நான்கு நாடுகளை இணைத்து புதிய நாற்கர குழுவினை, அமேரிக்கா துவக்கயுள்ளது / S., Afghanistan, Pakistan, Uzbekistan to form quad group to enhance regional connectivity
  • பிராந்திய இணைப்பை மேம்படுத்த இக்குழு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியா – நேபாளம் இடையேயான ரயில் சோதனை வெற்றி:

  • இந்தியாவின் ஜெயநகர் மற்றும் நேபாளத்தின் குர்தா இடையே ரயில் சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
  • பீகாரின் மதுபானி மாவட்டத்தின் ஜெயாநகர் ரயில் நிலையத்தில் இருந்து, நேபாளத்தின் மகோதரி மாவட்டத்தின் குர்தா வரையிலான 34.50 கிலோமீட்டர் தூரம் இச்சோதனை மேற்கொள்ளப்பட்டது.

கேன்ஸ் திரைப்பட திருவிழா 2௦21:

  • பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் நடைபெற்ற “கேன்ஸ் திரைப்பட திருவிழா 2௦21” நிகழ்ச்சியில், சிறந்த திரைப்படத்திற்கான Palme d’or விருது, பிரான்ஸ் நாட்டின் ஜூலியா டுகர்நோவ் என்பாருக்கு வழங்கப்பட்டது / first female director in the last 28 years to win the Palme d’or at Cannes Film Festival.
  • இஓவர் இயற்றிய படம் = TITANE
  • 28 ஆண்டுகளுக்கு பிறகு இவ்விருதை பெறும் முதல் பெண்மணி என்ற சிறப்பை இவர் பெற்றுள்ளார்

ருஸ்டம்ஜி நினைவு நிகழ்ச்சி:

  • புது தில்லியில் நடைபெற்ற எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் கூட்டத்தில், “ருஸ்டம்ஜி நினைவு நிகழ்ச்சி” நடைபெற்றது.
  • எல்லை பாதுகாப்புப் படை (பி.எஸ்.எஃப்) நிறுவிய வருடாந்திர ‘ருஸ்டாம்ஜி நினைவு சொற்பொழிவை’ அதன் முதல் இயக்குநர் ஜெனரல் (டி.ஜி) கே எஃப் ருஸ்தாம்ஜியின் நினைவாக ஷா நிகழ்த்தினார் / Shah was delivering the annual ‘Rustamji memorial lecture’ instituted by the Border Security Force (BSF) in the memory of its first director general (DG) K F Rustamji.

ஜி-7 நாடுகளின் “மீண்டும் சிறந்த உலகை உருவாக்குவோம்” இயக்கம்:

  • அண்மையில் நடந்த 47 வது ஜி 7 உச்சி மாநாட்டில், ஜி 7 நாடுகள் சீனாவின் பெல்ட் மற்றும் சாலை முன்முயற்சியை (BRI – BUILD AND ROAD INITIATIVE) எதிர்கொள்ள ‘மீண்டும் சிறந்த உலகை உருவாக்குவோம் (B3W – BUILD BACK BETTER WORLD) முன்முயற்சியை முன்மொழிந்தன.

இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் தினம்:

  • இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் (ICAR – INDIAN COUNCIL FOR AGRICULTURAL RESEARCH) துவக்க நாள் ஜூலை 16 ஆகும். இந்த ஆண்டு 93 வது அடித்தள நாள் ஆகும்.
  • 1929 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. இந்திய கவுன்சில் வேளாண் ஆராய்ச்சி என்பது இந்தியாவில் விவசாய கல்வி மற்றும் ஆராய்ச்சியை ஒருங்கிணைப்பதற்கான ஒரு தன்னாட்சி அமைப்பு ஆகும்.

ஹில்சா மீன்:

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • கங்கை பராகா திட்டத்தினால் அழிந்துபோன ஹில்சா மீன் (HILSA FISH) இனம், 3 தசாப்த ஆண்டுகளுக்கு பிறகு முதன் முறையாக கங்கையில் தென்பட்டுள்ளது.
  • ஹில்சா மீன் (TENUALOSA ILISHA) சிறப்பானது, “இது முட்டையிடுவதற்காக உப்புநீரில் இருந்து நன்நீருக்கு செல்லும் தன்மையுடையது”.

மங்கல் பாண்டே பிறந்த தினம்:

  • முதல் புரட்சிகர இந்திய சுதந்திர போராட்ட வீரரான மங்கல் பாண்டேவின் 194 வது பிறந்தநாளில் பல அரசியல்வாதிகள் அஞ்சலி செலுத்தினர். அவர் ஜூலை 19, 1827 இல் பைசாபாத்திற்கு அருகிலுள்ள ஒரு நகரத்தில் பிறந்தார், இப்போது வட இந்தியாவில் கிழக்கு உத்தரப்பிரதேச மாநிலமாக உள்ளது
  • படையினரின் மத உணர்வுகளை புண்படுத்தியதால் விலங்குகளின் கொழுப்புடன் தடவப்பட்ட தோட்டாக்களை அறிமுகப்படுத்தியதற்காக கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக அவர் கிளர்ச்சி செய்தார்
  • இறுதியில், கிளர்ச்சியாளர்களின் இந்த இயக்கம் இந்தியாவின் பிற பகுதிகளை அடைந்தது, இது அரசாங்கத்திற்கு எதிராக வெகுஜன கிளர்ச்சிக்கு வழிவகுத்தது.
  • எதிர்ப்பு மற்றும் கிளர்ச்சியின் இயக்கம் 1857 இன் சிப்பாய் கலகம் என்று அறியப்பட்டது, இது முதல் சுதந்திரப் போர் என்றும் அழைக்கப்படுகிறது.

நிலவின் தள்ளாட்டம்:

  • 2030 ஆம் ஆண்டுகளில் அமெரிக்க கடற்கரையோர பகுதிகள் கடுமையான வெள்ளப்பெருக்கை சந்திக்கும் என எச்சரித்துள்ளனர். இதற்கு முன் இல்லாத வகையில் கடற்கரையோர பகுதிகளில் வெள்ளப்பெருக்கு இருக்கும் என தெரிவித்துள்ள ஆய்வாளர்கள், இதற்கு சந்திரனின் சுற்றுவட்டப்பாதையில் ஏற்படும் மாற்றமும் காரணமாக இருக்கும் என கூறியுள்ளனர் / According to a recent study, the Wobble effect of the Moon is expected to lead to more flooding on Earth in the middle of the next decade
  • தற்போது நிலவின் சுற்றுவட்டப்பாதையில் தள்ளாட்டம் இருப்பதை கண்டுபிடித்துள்ள நாசா விஞ்ஞானிகள், இதனால் பூமி மீதான சந்திரனின் ஈர்ப்பு விசை அதிகரிக்கும் எனக் கூறியுள்ளனர். இந்த ஈர்ப்பு விசை அதிகரிக்கும்போது கடலில் அலைகளின் வேகமும், உயருமும் அதிகரிக்கும் எனத் தெரிவித்துள்ளனர் / The study warned the wobble to heighten high tides in the middle of the 2030s, but it also showed that this prediction does not apply uniformly to every coastline everywhere
  • ஏற்கனவே கடற்கரையோர பகுதிகளில் கரைகள் அரிப்பு ஏற்பட்டு கடல்நீர் உட்புகும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றனர். வரும் காலங்களில் இந்த தன்மை மேலும் அதிகரித்து, கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்படும் என எச்சரித்துள்ளனர்.

வேகமான இணைய வேகத்திற்கான உலக சாதனை:

  • ஜப்பானில் ஆராய்ச்சியாளர்கள் உலகின் மிக வேகமான இணைய வேகத்திற்கான வினாடிக்கு 319 டெராபைட்டுகள் என்ற புதிய உலக சாதனையை 3,001 கிலோமீட்டருக்கு மேல் நீண்ட தூர பரிமாற்ற வடிவத்தில் அமைத்துள்ளனர் / Researchers in Japan have set a new world record for the world’s fastest internet speed at 319 Terabytes per second in the form of a long-haul transmission over 3,001 kilometres.
  • ஒரு டெராபைட் என்றால் 1,000 ஜிகாபைட்.

6000 ஒருநாள் ஓட்டங்களை எட்டிய அதிவேக இந்திய தொடக்க வீரர்:

  • ஷிகர் தவான் ஒருநாள் கிரிக்கெட்டில் 6000 ரன்கள் எடுத்த வேகமான இந்திய தொடக்க வீரர் ஆனார், 2021 ஜூலை 18 அன்று கொழும்பில் இலங்கைக்கு எதிரான தொடர் தொடக்க ஆட்டத்தில் மைல்கல்லை எட்டினார்
  • 126 இன்னிங்சில் இந்த புள்ளியைக் கடந்த ஹஷிம் அம்லாவுக்குப் பின்னால் சாதனை படைத்த உலகின் இரண்டாவது அதிவேக தொடக்க வீரர் தவான்.

நார்மன் போர்லாக் விருது:

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • நீரிழிவு உள்ளிட்ட வாழ்க்கை முறை நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக கடற்பாசிகளிலிருந்து ஊட்டச்சத்து தயாரிப்புகளை உருவாக்குவதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்ட மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் (Central Marine Fisheries Research Institute (CMFRI) principal scientist Kajal Chakraborthy) முதன்மை விஞ்ஞானி காஜல் சக்ரவர்த்திக்கு அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது
  • வேளாண் மற்றும் உழவர் நல அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.ஏ.ஆர்) நிறுவிய வேளாண் ஆராய்ச்சியில் சிறந்து விளங்குவதற்கான மதிப்புமிக்க நார்மன் போர்லாக் தேசிய விருதை அவர் பெற்றார்.

 

 

Leave a Reply