பேயாழ்வார்
பேயாழ்வார்
- இவர் சென்னையில் உள்ள மயிலாப்பூரில் செவ்வல்லிப் பூவில் பிறந்தார்.
- இவர் திருமாலின் நந்தகம் எனப்படும் வாளின் அம்சம்
- இவர் பக்திப் பரவசத்தில் மெய்மறந்துப் ஆடிப் பாடித் துள்ளி குதித்தபடி இருந்ததால் பேய் ஆழ்வார் எனப்பட்டார்.
- இவர் பாடிய நூறு பாடல்களை மூன்றாம் திருவந்தாதி எனப்படும்.
மேற்கோள்
- திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணிநிறமும் கண்டேன்
- பொருப்பிடையே நின்றும் புனல் குதித்தும் ஐந்து
நெருப்பிடையே நிற்கவும் நீர்வேண்டா
- தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்
சூழரவும் பொன்னாணும் தோன்றுமால்
முதல் ஆழ்வார்கள் மூவர்
- பொய்கை, பூதம், பேய் ஆழ்வார் மூவரும் ஐப்பசி மாதத்தில் அடுத்தடுத்த நாளில் தோன்றியவர்கள் என்பர்.
- மூவரும் தாமரை, குருக்கத்தி, செவ்வல்லி என்னும் மலர்களில் தோன்றியவர்கள்
- மூவரும் பிற ஆழ்வார்களைக் காட்டிலும் காலத்தால் முந்தியவர்கள்
- மூவரும் ஒரே நாளில் ஒரே இடத்தில ஒரே நேரத்தில் திருமாலால் ஆட்கொள்ளப்பட்டனர்
- மூவரும் சந்தித்து கொண்ட இடம் = திருகோவிலூர்