திருமழிசையாழ்வார்

திருமழிசையாழ்வார்

திருமழிசையாழ்வார்

திருமழிசையாழ்வார்

  • இவரின் ஊர் தொண்டை நாட்டில் உள்ள திருமழிசை
  • இவர் திருமாலின் சக்கர அம்சமாகப் பிறந்தவர்
  • இவரின் தந்தை பார்கவ முனிவர்.
  • இவரை திருவாளன் என்னும் தாழ்குலத்தவர் வளர்த்தார்
  • இவரின் சீடர் = கணிக்கண்ணன்
  • கணிக்கண்ணன் காஞ்சிப் பெருமாள் கோயிலில் இருந்த மூதாட்டியை குமரியாக மாற்றினார்
  • இதை அறிந்த மன்னன் தன்னையும் மாற்றக் கூற, அதை மறுத்த கனிகண்ணனை நாட்டை விட்டு வெளியேறும் படி கூறினான்
  • இதனை அறிந்த ஆழ்வார் திருமாலிடம் பாடியதே “கணிகண்ணன் போகின்றான்” என்ற பாட்டு
  • இவ்விருவரும் நாட்டை விட்டு வெளியேற திருமாலும் தன் பாம்பு படுக்கையை எடுத்து கொண்டு வெளியேறினார். இதனை அறிந்த மன்னன் தன் தவற்றை உணர்ந்து மன்னிப்பு கேட்க மீண்டும் இறைவன் கோயிலுக்கு வந்தார். இதனால் இவ்விறைவனை “சொன்ன வண்ணம் செய்த பெருமாள்’ எனப் போற்றுவர்.
  • இவரை சித்தர் சிவவாக்கியர் என்பர்
  • சைவ சமயத்தில் இருந்து வைணவர் ஆனார்
  • இவர் மற்ற சமயத்தை சாடுகிறார்
  • இவர் பேயாழ்வாரிடம் உபதேசம் பெற்றவர்.
  • சைவத்திற்கு திருமூலர் போன்று வைணவத்திற்கு திருமழிசை யாழ்வார்
  • கணிக்கண்ணன் கூறியதே = “நாராயணனைப் பாடும் வாயால் நரனைப் பாடேன்”

படைப்புகள்

  • திருச்சந்த விருத்தம்
  • நான்முகன் திருவந்தாதி (நான்காம் திருவந்தாதி)

திருமழிசையாழ்வார் சிறப்பு பெயர்கள்

  • பக்தி சாரார்
  • சக்கரத்தாழ்வார்

மேற்கோள்

  • கணிக்கண்ணன் போகின்றான் காமருபூங்கச்சி

            மணிவண்ணா நீ கிடக்க வேண்டாம் – துணிவுடைய

            செந்நாப் புலவன்யான் சொல்கின்றேன் நீயுமுன்றன்

             பைந்நாகப் பாய்சுருட்டிக்கொள்

  • அறியார் சமணர் அயர்ந்தார் பௌத்தர் சிறியார் சிவப்பட்டார்
  • செவிக்கு இன்பமாவதும் செங்கண் மாலே

            நாக்கொண்டு மனிதனைப் பாடேன்

 

 

 

நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

Leave a Reply