மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்

மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்

Table of Contents

மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்

அறிவு மலர்ச்சிக் காலம் என்றால் என்ன

  • அறிவு மலர்ச்சிக் காலம் எனப்படுவது = கி.மு (பொ.ஆ.மு) ஆறாம் நூற்றாண்டு.
  • பண்டைய இந்திய வரலாற்றில் முக்கியமான காலகட்டம் = கி.மு (பொ.ஆ.மு) ஆறாம் நூற்றாண்டு.
  • இந்தியாவின் அறிவு மற்றும் ஆன்மீக வளர்ச்சியின் அடையாளச் சின்னமாக விளங்கிய காலம் = கி.மு (பொ.ஆ.மு) ஆறாம் நூற்றாண்டு.

நட்சத்திரங்களின் மழை

  • இந்தியாவின் அறிவு மலர்ச்சிக் காலமான, கி.மு (பொ.ஆ.மு) ஆறாம் நூற்றாண்டை, வரலாற்று ஆய்வாளர் வில் டூராண்ட் “நட்சத்திரங்களின் மழை” என்று கூறியுள்ளார்.
  • இந்தியாவின் அறிவு மலர்ச்சிக் காலமான, கி.மு (பொ.ஆ.மு) ஆறாம் நூற்றாண்டை “நட்சத்திரங்களின் மழை” என்று வருணித்த வரலாற்று ஆய்வாளர் = வில் டூராண்ட்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்

  • சமண சமய நூல்கள் யாவை = அங்கங்கள்.
  • பௌத்த சமய நூல்கள் யாவை = திரிபீடங்கள் மற்றும் ஜாதகங்கள்.

சமணம் பௌத்தம் தோன்றுவதற்கான காரணங்கள்

  • பின்வேத காலத்தில் பரிந்துரைக்கப்பட்ட சிக்கலான சடங்குகளும் வேள்விகளும்.
  • அதிக அளவில் செலவு செய்ய வேண்டி இருந்த வேள்விச் சடங்குகள்.
  • மூடநம்பிக்கைகளும், நடைமுறைகளும் சாதாரண மக்களைக் குழப்பம் அடையச் செய்தன.
  • வேள்விச் சடங்குகளுக்கு மாற்றாகக் கற்பிக்கப்பட்ட உபநிடதத் தத்துவங்களைச் சாதாரண மக்களால் புரிந்துகொள்ள இயலவில்லை.
  • அடிமைமுறை, சாதிமுறை மற்றும் பாலியல் பாகுபாடுகளும் புதிய விழிப்புணர்வு தோன்றுவதற்குக் காரணமாயின.
மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்
மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்

மகாவீரர் வரலாறு

  • மகாவீரர் இயற்பெயர் = வர்த்தமானர்.
  • மகாவீரர் பிறந்த இடம் = பீகார் மாநிலத்தின் வைசாலிக்கு அருகே உள்ள குந்தகிராமம்.
  • மகாவீரர் தந்தை = சித்தார்த்தர்.
  • மகாவீரர் தாய் = திரிசலா.
  • மகாவீரர் இறந்த இடம் = பீகார் மாநிலத்தின் “பவபுரி” என்னுமிடம்.

சமண மதம் வரலாறு

  • சமணம் 24 தீர்த்தங்கரர்களைக் மையமாக கொண்ட சமயம் ஆகும்.
  • சமண சமயத்தின் முதல் தீர்த்தங்கரர் யார் = ரிஷ்பர் எனப்படும் ரிஷப தேவர்.
  • சமண சமையத்தின் கடைசித் தீர்த்தங்கரர் (24வது தீர்த்தங்கரர்) = மகாவீரர்.
  • கி.மு (பொ.ஆ.மு) ஆறாம் நூற்றாண்டில், மகாவீரரின் வழிகாட்டுதலின் படி சமண சமயம் முக்கியத்துவம் பெற ஆரம்பித்தது.

சமணம் என்றால் என்ன

  • “சமணம்” என்ற சொல் எம்மொழியில் இருந்து பெறப்பட்டது = சமஸ்கிருதம்.
  • “சமணம்” (Jain) என்னும் சொல் “ஜினா” (Jina) என்ற சம்ஸ்கிருத சொல்லில் இருந்து பெறப்பட்டது.
  • சமணம் என்ற சொல்லின் பொருள் = தன்னையும், வெளியுலகத்தையும் வெல்வது.
  • ஜினா என்பதன் பொருள் = தன்னையும், வெளியுலகத்தையும் வெல்வது.
மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்
மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்

மகாவீரர் குறிப்புகள்

  • மகாவீரர் என்பதன் பொருள் = தலைசிறந்த வீரர்.
  • வர்த்தமானர் என்பதன் பொருள் = செழிப்பு.
  • வர்த்தமானர் ஒரு சத்திரிய இளவரசர் ஆவார்.
  • மகாவீரர் தன்னுடைய எந்த வயதில் துறவறம் மேற்கொண்டார் = 30வது வயதில்.
  • மகாவீரர் எத்தனை ஆண்டுகள் தவம் புரிந்தார் = 12 ஆண்டுகள்.
  • 12 ஆண்டுகள் கடுமையான தவத்தின் பயனாக “கைவல்ய” என்னும் “எல்லையற்ற அறிவு” நிலையை அடைந்தார்.
  • “கைவல்ய” நிலையை அடைந்த பிறகு மகாவீரர் எவ்வாறு அழைக்கப்பட்டார் = ஜினா (Jina).
  • மகாவீரரை பின்பற்றியோர் = “சமணர்” (Jains) என்று அழைக்கப்பட்டனர்.
  • மகாவீரர் எந்த மரபுகளை மறு ஆய்வு செய்தார் = சிரமானிய (Sramanic) மரபுகள்.
  • மகாவீரர் எத்தன அடிப்படையில் புதிய கோட்ப்பாடுகளை உருவாக்கினார் = சிரமானிய (Sramanic) மரபுகள்.
  • சமண சமையத்தை உருவாக்கியவர் = மகாவீரர்.
  • சமண சமயத்தை உண்மையிலேயே தோற்றுவித்தவர் = மகாவீரர்.

சமண சமய போதனைகள்

  • இப்பிரபஞ்சத்தை உருவாக்கியவர் கடவுள் என்ற கோட்பாட்டை மறுக்கிறது சமண சமயம்.
  • சமண சமயத்தின் அடிப்படை தத்துவம் = அகிம்சை அல்லது அறவழி.
  • சமண சமயத்தின் இறுதி லட்சியம் = முக்தி அடைதல் (அல்லது) பிறப்பு-இறப்பு-மறுபிறப்பு என்னும் சுழற்சியில் இருந்து விடுபடுதல்.
  • “இறுதித் தீர்ப்பு” என்பதை சமணம் மறுக்கிறது.
    • இறுதித் தீர்ப்பு என்றால் என்ன = யார் சொர்கத்திற்கு செல்வது? யார் நரகத்திற்கு செல்வது? என்பதை கடவுள் தீர்மானிப்பார் என்பதாகும்.
  • ஒருவருடைய வாழ்வின் நலன் அல்லது தரம் என்பது அவருடைய கர்மவினையால் தீர்மானிக்கப்படுகிறது என்பதை சமண சமயம் ஏற்றுக்கொள்கிறது.

கர்மா என்றால் என்ன / கர்மவினை என்றால் என்ன

  • இப்பிறவியில் ஒருவர் செய்யும் செயல்களே அவருடைய / அவளுடைய இப்பிறவியின் பிற்பகுதி வாழ்க்கையையும், அடுத்த பிறவியில் அவர் வாழப்போகும் வாழ்க்கையையும் தீர்மானிக்கிறது என்ற நம்பிக்கை ஆகும்.

மகாவீரர் கூறிய திரிரத்தினங்கள்

  • திரிரத்தினங்கள் அல்லது மூன்று ரத்தினங்கள்.
  • கர்மாவில் இருந்து விடுதலை பெறுவதற்கு மகாவீரர் கூறியது = திரிரத்தினங்கள் அல்லது மூன்று ரத்தினங்கள்.
  • மோட்ச நிலையை அடைவதற்கு மகாவீரர் கூறியது = திரிரத்தினங்கள் அல்லது மூன்று ரத்தினங்கள்.
  • மகாவீரர் கூறிய திரிரத்தினங்கள் யாவை?
    1. நன்னம்பிக்கை.
    2. நல்லறிவு.
    3. நற்செயல்.
  • மோட்சம் என்றால் என்ன = பிறப்பு மற்றும் இறப்பின் சுழற்சியில் இருந்து விடுதலை பெறுதல்.

சமண சமயத்தின் நடத்தை விதிகள்

  • சமண சமயத்தின் நடத்தை விதிகளை உருவாக்கியவர் = மகாவீரர்.
  • சமண சமயத்தின் நடத்தை விதிகள் யாவை,
    1. அகிம்சை = எந்த உயிரினத்தையும் துன்புறுத்தல் கூடாது.
    2. சத்யம் = உண்மையை மட்டுமே பேசுதல்.
    3. அஸ்தேயம் = திருடாமை.
    4. அபரிக்கிரகம் = பணம், பொருள், சொத்துக்கள் மீது ஆசை கொள்ளாமை.
    5. பிரம்மச்சரியம் = திருமணம் செய்து கொள்ளாமை.

ஆகம சித்தாந்தம்

  • மகாவீரரின் தலைமைச் சீடர் = கௌதமசுவாமி.
  • மகாவீரரின் போதனைகளை தொகுத்தவர் = கௌதமசுவாமி.
  • மகாவீரரின் போதனைகளின் தொகுப்பு = ஆகம சித்தாந்தம் என்னும் நூல் ஆகும்.
  • “ஆகம் சித்தாந்தம்” என்னும் நூலினை தொகுத்தவர் = கௌதமசுவாமி.

திகம்பரர் சுவேதாம்பரர்

  • சமண சமயம் எத்தனை பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது = இரண்டு பிரிவுகள்.
  • சமண சமயத்தின் இரண்டு பிரிவுகள் யாவை = திகம்பரர், சுவேதாம்பரர்.

திகம்பரர்

  • வைதீக பழமைவாத போக்குடைய சீடர்கள்.
  • திகம்பர பிரிவை சார்ந்த துறவிகள் ஆடைகளை அணிவதில்லை. நிர்வாணமாக வாழ்வர். எந்த விதமான உடைமைகளையும் வைத்துக் கொள்ளக் கூடாது.
  • பெண்கள் நேரடியாக நிர்வாண நிலையை அடையவோ, விடுதலை பெறவோ முடியாது என்று நம்பினார்.

சுவேதாம்பரர்

  • முற்போக்கு எண்ணங்களை கொண்டவர்கள்.
  • வெள்ளை நிற ஆடைகளை அணிவர்.
  • ரஜோகரனா, பிச்சைப் பாத்திரம், புத்தகம் ஆகியவற்றை வைத்துக் கொள்ள அனுமதி உண்டு.
    • ரஜோகரனா என்றால் என்ன = கம்பிளி நூல்களைக் கொண்ட சிறிய துடைப்பம்.
  • ஆண்களைப் போலவே பெண்களும் விடுதலை பெற சமமான தகுதிகளை கொண்டுள்ளனர் என்று நம்பினர்.

சமண சமயம் பரவியதற்கான காரணங்கள்

  • மக்கள் பேசிய மொழியிலேயே சமணக் கருத்துக்கள் சொல்லப்பட்டன.
  • புரிந்து கொள்ளும்படியான போதனைகள்.
  • அரசர்கள் மற்றும் வணிகர்களின் ஆதரவு.
  • சமணத் துறவிகளின் விடாமுயற்சி.

தமிழகத்தில் சமண சமயத்தின் செல்வாக்கு

  • பண்டைய தமிழ் இலக்கியங்கள் “ஜைனம்” என்பதனை “சமணம்” என்று குறிப்பிடுகின்றன.
  • அறவோர் பள்ளி என்பது சமணத் துறவிகள் வாழ்ந்த இடங்கள் என மணிமேகலையில் குறிப்பு உள்ளது.
  • கோவலனும் கண்ணகியும் மதுரைக்குச் செல்லும் வழியில் சமண பெண் துறவியான கவுந்தியடிகள் அவர்களை ஆசீர்வதித்து அவர்களுடன் சென்றதாக தமிழ் காப்பியம் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.
  • புகார், உறையூர், மதுரை, வஞ்சி (கருவூர்) காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் சமண மடாலயங்கள் இருந்துள்ளன.
  • தமிழகத்தின் சமண மடாலயங்கள் இருந்த இடங்கள் = புகார், உறையூர், மதுரை, வஞ்சி (கருவூர்), காஞ்சிபுரம்.
  • திருப்பருத்திக்குன்றம், சித்தன்னவாசல், சிதாறல் மலைக்கோவில்கள்.
  • சிதாறல் மலைக்கோவில் உள்ள இடம் = கன்னியாகுமரி மாவட்டம்.
மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்
மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்

சமணர் மலை

  • சமணர் மலை எங்கு உள்ளது = மதுரை அருகே கீழ்க்குயில்குடி கிராமத்தில்.
  • மதுரை நகரிலிருந்து 15 கி.மீ தொலைவில் கீழக்குயில்குடி கிராமத்தில் சமணர் மலை என்ற பெயரில் ஒரு குன்று உள்ளது.
  • சமணத் துறவிகளால் உருவாக்கப்பட்ட தீர்த்தங்கரர்களின் உருவங்கள் இம்மலையில் காணப்படுகின்றன.
  • இது இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையால் பாதுகாக்கப்படும் நினைவு சின்னமாக உள்ளது.

பாண்டவர் படுக்கை

  • பாண்டவர் படுக்கை எங்கு உள்ளது = மதுரையிலிருந்து 25 கி.மீ தொலைவிலுள்ள அரிட்டாபட்டி என்ற கிராமத்தில் உள்ள கலிஞ்சமலையில் உள்ளது.
  • கலிஞ்ச மலையின் ஒரு பகுதியில் பாண்டவர் படுக்கை என்று அழைக்கப்படும் சமணர் குகைகள் உள்ளன.
  • சமணத் துறவிகளுக்கான கற்படுக்கைகளே பாண்டவர் படுக்கை என அழைக்கப்படுகிறது.
  • “பாண்டவர் படுக்கை” எனப்படுவது = சமணத் துறவிகளின் கல் படுக்கைகள்.

ஜைனக் காஞ்சி

  • “ஜைனக் காஞ்சி” என்று அழைக்கப்படுவது = காஞ்சிபுரத்திலுள்ள திருப்பருத்திக் குன்றம் என்ற கிராமம்.
  • காஞ்சிபுரத்திலுள்ள திருப்பருத்திக் குன்றம் என்ற கிராமத்தில் இரண்டு பழமையான சமணக் கோவில்கள் உள்ளன. இக்கிராமம் முன்னர் ஜைனக் காஞ்சி என்று அழைக்கப்பட்டுள்ளது.
  • திருபருத்திக் குன்றம் என்ற கிராம உள்ள இடம் = காஞ்சிபுரம்.

கௌதம புத்தர்

  • புத்தரின் இயற்பெயர் = சித்தார்த்தர்.
  • புத்தர் பிறந்த இடம் = நேபாளத்தில் உள்ள “லும்பினி தோட்டம்”.
  • புத்தரின் தந்தை பெயர் = சுத்தோதனா
  • புத்தரின் தாய் பெயர் = மாயாதேவி.
  • புத்தரின் சிற்றன்னை பெயர் = கௌதமி.
  • புத்தர் இறந்த இடம் = உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள குசி நகரம்.
மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்
மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்

கௌதம புத்தர் வரலாறு

  • பௌத்த மதத்தை தோற்றுவித்தவர் = கௌதம புத்தர்.
  • புத்த மதத்தை தோற்றுவித்தவர் = கௌதம புத்தர்.
  • புத்தரின் இயற்பெயர் = சித்தார்த்தர்.
  • புத்தர் ஒரு சத்திரிய இளவரசர் ஆவார். (மகாவீரரும் சத்திரிய இளவரசர் ஆவார்).
  • புத்தர் எந்த வம்சத்தை சார்ந்தவர் = சாக்கிய வம்சம்.
  • சித்தார்த்தர் ஏழு நாள் குழந்தையாக இருந்த பொழுது, அவரின் தாயார் உயிர் இழந்தார்.
  • தாயின் மறைவிற்கு பிறகு புத்தரை வளர்த்தவர் = சிற்றன்னை கௌதமி.

நான்கு பெரும் துயரக் காட்சிகள்

  • தனது 29 வது வயதில் புத்தர் நான்கு பெரும் துயரக் காட்சிகளை கண்டார். அவை,
    1. கூன் முதுகு, கிழிந்த ஆடைகளுடன் கூடிய முதியவர்.
    2. குணப்படுத்த முடியாத நோயினை கொண்ட நோயாளி/
    3. இறந்த மனிதனின் சடலத்தை அழுதுக் கொண்டே எடுத்துச் செல்லும் உறவினர்கள்.
    4. ஒரு துறவி.
மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்
மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்

புத்தர் ஞானமடைதல்

  • புத்தர் என்பதன் பொருள் = ஞானம் பெற்ற ஒருவர்.
  • அரண்மனையை விட்டு வெளியேறிய பொழுது புத்தரின் வயது = 29.
  • புத்தர் எந்த வயதில் துறவறம் மேற்கொண்டார் = 29 வது வயதில்.
  • ஆறு ஆண்டுகள் தொடர்ந்து தவம் இருந்தார்.
  • தன்னைத்தானே வருத்திக் கொள்வதால் எவ்வித பயனும் இல்லை எனபதை உணர்ந்தார்.
  • “கயா” என்னுமிடத்தில் ஒரு அரசமரத்தின் கீழ் அமர்ந்து தியானத்தை மேற்கொண்டார்.
  • புத்தர் எந்த மரத்தின் கீழ் தியானம் செய்தார் = அரசமரம்.
  • புத்தர் தியான நிலையின் எத்தனையாவது நாளில் “ஞானம்” பெற்றா = 49வது நாளில்.
  • அப்பொழுதில் இருந்து அவர் “புத்தர்” என்று அழைக்கப்பெற்றார்.
  • இவர் சாக்கிய வம்சத்தை சேர்ந்தவர் என்பதால் இவரை “சக்கய் முனி” என்று மக்கள் அழைத்தனர்.
  • “சாக்கிய முனி” என்று அழைக்கப்படுபவர் = புத்தர்.

புத்தரின் முதல் போதனை

  • புத்தரின் முதல் போதனை நடைபெற்ற இடம் = வாரணாசிக்கு அருகே உள்ள சாரநாத் என்னும் இடத்தில் உள்ள மான் பூங்கா.
  • புத்தரின் முதல் போதனை எவ்வாறு அழைக்கப்படுகிறது = தர்ம சக்ர பிரவர்த்தனா (அல்லது) தர்ம சக்கரத்தின் பயணம்,
  • தர்ம சக்ர பிரவர்த்தனா எனப்படுவது = புத்தரின் முதல் போதனை.
மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்
மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்

புத்தர் கூறிய நான்கு உண்மைகள்

  • வாழ்க்கை துன்பங்கள், துயரங்கள் நிறைந்தது.
  • ஆசையே துன்பங்களுக்கான காரணம்.
  • ஆசையைத் துறந்துவிட்டால் துன்ப துயரங்களைப் போக்கி விடலாம்.
  • சரியான பாதையைப் பின்பற்றினால் (எண்வகை வழிகள்) ஆசைகளை வென்று விடலாம்.

புத்தரின் எண் வகை வழிகள்

  1. நல்ல நம்பிக்கை
  2. நல்ல எண்ணம்
  3. நல்ல பேச்சு
  4. நல்ல செயல்
  5. நல்ல வாழ்க்கை
  6. நல்ல முயற்சி
  7. நல்ல அறிவு
  8. நல்ல தியானம்

புத்தரின் போதனைகள்

  • மக்கள் பேசும் மொழியிலேயே புத்தரின் போதனைகள் இருந்தன.
  • மக்களின் அன்றாட வாழ்க்கையை பற்றியே அவரின் போதனைகள் இருந்தன.
  • புத்தர் சடங்குகளையும், வேள்விகளையும் எதிர்த்தார்.

புத்தரின் முக்கிய போதனைகள்

  • புத்தரின் போதனைகள் ‘தம்மா’ என்று குறிப்பிடப்படுகின்றன.
  • கர்மா கோட்பாட்டை பௌத்தம் ஏற்றுக் கொண்டது. (ஒருவனுடைய செயல்களே அவனது வாழ்க்கையின் தரத்தைத் தீர்மானிக்கிறது என்பதாகும்).
  • புத்தர் கடவுளின் இருப்பை ஏற்றுக்கொள்ளவும் இல்லை. மறுக்கவும் இல்லை. ஆனால் பிரபஞ்ச விதிகளை நம்பினார்.
  • நிர்வாண நிலை அடைவதே வாழ்க்கையின் இறுதி நோக்கம் என்று புத்தர் வலியுறுத்தினார்.
  • புத்தர் அகிம்சையை வலியுறுத்தினார்.
  • சாதிபடிநிலையினை புத்தர் நிராகரித்தார்.
  • வாழ்க்கைச் சக்கரம் – உலகைப் பற்றிய புத்தரின் பார்வையை பிரதிபலிக்கிறது.

பௌத்த சங்கங்கள்

  • புத்தர் தனது கருத்துக்களைப் பரப்ப சங்கங்களை நிறுவினார்.
  • அதில் உறுப்பினர்களாக இருந்த துறவிகளை “பிட்சுக்கள்” என்று அழைக்கப்பட்டனர்.

சைத்தியம் என்றால் என்ன

  • சைத்தியம் என்பது ஒரு பௌத்தக் கோவில் அல்லது பௌத்த தியானக் கூடம் ஆகும்.

விகாரைகள் என்றால் என்ன

  • விகாரைகள் என்பது புத்த மடாலயங்கள் (அல்லது) புத்த துறவிகள் வாழும் இடங்கள் என்பர்.

ஸ்தூபி என்றால் என்ன

  • புத்தருடைய உடல் உறுப்புகளின் எஞ்சிய பாகங்கள் மீது கட்டப்பட்டிருக்கும் கட்டிடம். இவை கலைத்திறமை வாய்ந்த நினைவுச் சின்னங்கள் ஆகும்.

புத்த மதப் பிரிவுகள்

  • புத்த மதம் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை,
    1. ஹீனயானம்
    2. மகாயானம்

ஹீனயானம் மகாயானம்

ஹீனயானம்மகாயானம்
புத்தரின் சிலை, உருவப் படங்களை வணங்க மாட்டார்கள்புத்தரின் சிலை, உருவத்தை வணங்குபவர்கள்.
எளிமையாக இருப்பர்.சடங்குகளை பின்பற்றுவர்.
நோக்கம் = தனிமனிதர்கள் முக்தி அடைதல்.நோக்கம் = உலகில் உள்ள அனைத்து உயிர்களும் முக்தி அடைதல்.
பயன்பாட்டு மொழி = பிராகிரதம்.பயன்பாட்டு மொழி = சமஸ்கிருதம்.
ஹீனயானம் “தேரவாதம்” என்றும் அழைக்கப்படுகிறது. இப்பிரிவு இலங்கை, மியான்மர் மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் பரவியது.மகாயானம் “மத்திம வழி” என்று அழைக்கப்படுகிறது. இப்பிரிவு ஆசியா, திபத், சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் பரவியது.

புத்த மதம் இந்தியா முழுவதும் பரவியதற்கான காரணங்கள்

  • மக்கள் பேசும் மொழியில் போதனைகள் இருந்தன.
  • விரிவான வேதகால மதச் சடங்குகளை புத்தம் மதம் நிராகரித்தது.
  • மக்கள் “தம்மத்தை” கடைப்பிடிக்க வலியுறுத்தியது.
  • புத்தரின் கருத்துக்களை பரப்ப புத்த சங்கங்கள் முக்கியப் பங்கு வகித்தன.
  • அசோகர், கனிஷ்கர், ஹர்ஷர் போன்ற அரசர்கள் புத்த மதம் பரவுவதற்கு ஆதரவு அளித்தனர்.
  • பௌத்த விகாரைகள் அல்லது மடாலயங்கள் சிறந்த கல்வி மையங்களாகச் செயல்பட்டன. அவற்றில் ஒன்று நாளந்தா. அங்கு சீனப் பயணி யுவான்-சுவாங் பல ஆண்டுகள் தங்கி கல்வி பயின்றார்.

அஜந்தா குகை சுவரோவியங்கள்

  • மகாராஸ்டிரா மாநிலத்தின் அவுரங்கபாத் என்னுமிடத்தில் உள்ள “அஜந்தா குகையில்” உள்ள சுவர்களிலிலும், மேற்கூரையிலும் வரையப்பட்டுள்ள ஓவியங்களில் புத்த மத ஜாதகக் கதைகள் சித்தரிக்கப்பட்டுள்ளன.

நடுவு நிலை வழி என்றால் என்ன

  • இடை வழி (நடுவு நிலை வழி): உலக சுகங்களின் மீது தீவிரமான பற்றும் இல்லாமல், அதே சமயம் கடுமையான தவ வாழ்வையும் மேற்கொள்ளாமல் இருப்பதைக் குறிக்கிறது.

பௌத்த மாநாடுகள்

  • முதலாவது பௌத்த மாநாடு நடைபெற்ற இடம் = இராஜகிருகம்.
  • இரண்டாவது பௌத்த மாநாடு நடைபெற்ற இடம் = வைசாலி.
  • மூன்றாவது பௌத்த மாநாடு நடைபெற்ற இடம் = பாடலிபுத்திரம்.
  • நான்காவது பௌத்த மாநாடு நடைபெற்ற இடம் = காஷ்மீர்.
மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்
மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்

தமிழ்நாட்டின் புத்தமதத்தின் செல்வாக்கு

  • சமண சமய பரவலுக்கு பிறகே தமிழகத்தில் புத்த மதம் பரவியது.
  • இரட்டை காப்பியங்களில் ஒன்றான “மணிமேகலை” பௌத்த இலக்கியமாகும்.
  • மணிமேகலை நூலில் விரிவாக கூறப்பட்டுள்ள இடம் = காஞ்சிபுரம்.
  • தமிழகத்தில் புத்தர் சிலை அமைந்துள்ள இடங்கள் = காஞ்சிபுரம் மாவட்டம் பல்லூர் மற்றும் நாகப்பட்டினம்.
  • காஞ்சிபுரம் புகழ் பெற்ற ஒரு பௌத்த மையமாகும். பௌத்த தர்க்கவியல் அறிஞரான தின்னகர் மற்றும் நாளந்தா பல்கலைக் கழகத்தின் மிகப்பெரும் அறிஞர் தர்மபாலர் இவ்வூரைச் சேர்ந்தவர் ஆவார்.
  • கி.பி. (பொ.ஆ.) ஏழாம் நூற்றாண்டில் யுவான் சுவாங் காஞ்சிபுரத்திற்கு வருகை தந்தார். அங்கு அசோகரால் கட்டப்பட்ட 100 அடி உயரமுள்ள ஸ்தூபியை அவர் பார்த்தாய்க் குறிப்பிட்டுள்ளார்.

ஜாதகக் கதைகள்

  • புத்த மதக் ஜாதகக் கதைகள் மிகவும் புகழ் பெற்றவை ஆகும்.
  • புத்தர் முந்தைய பிறவிகளில் மனிதராகவும், விலங்காகவும் இருந்ததைக் குறித்த கதைகளாகும் இவை.
  • ஜாதகக் கதைகள் அறநெறிகளை கூறும் கதைகளாகும்.

சமணமும் பௌத்தமும் ஒற்றுமைகள்

  • மகாவீரர், புத்தர் இருவருமே அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இருந்தபோதிலும் அவர்கள் அரச குடும்ப உரிமைகளை நிராகரித்து, துறவு வாழ்க்கையைத் தேர்வு செய்தனர்.
  • வேதங்களின் ஆதிக்கத்தை மறுத்தனர்.
  • மக்கள் பேசிய மொழிகளில் போதித்தனர்.
  • அனைத்து சாதியினரையும், பெண்களையும், சீடர்களாக ஏற்றுக் கொண்டனர்.
  • இரத்த பலிகளை எதிர்த்தனர்.
  • ‘கர்மா’ என்ற கோட்பாட்டை ஏற்றுக் கொண்டனர்.
  • மதச் சடங்குகளை நடத்துவதன் மூலம் முக்தி அடையமுடியும் என்பதற்கு மாறாக சரியான நடத்தையும் சரியான அறிவுமே முக்திக்கான வழி எனக் கூறினர்.

சமணம் பௌத்தம் வேறுபாடு

சமண மதம்பௌத்த மதம்
தீவிரமான துறவறத்தை பின்பற்றியதுஇடை வழி (நடுவு நிலை வழி) பின்பற்றியது.
இந்தியாவில் மட்டுமே இருந்தது.உலகின் பல பகுதிக்கு பரவியது.
கடவுள் இருப்பதாக சமணம் நம்பவில்லை. ஒவ்வொரு உயிரிலும் ஜீவன் இருப்பதை நம்பியது.“அனாத்மா” (எல்லையற்ற ஆன்மா), “அனித்யா” (நிலையாமை) ஆகிய கருத்துக்களுக்கு அழுத்தம் தந்தது.

 

 

  • வரலாறு என்றால் என்ன
  • மனிதர்களின் பரிணாம வளர்ச்சி
  • சிந்துவெளி நாகரிகம்
  • தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்
  • மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்
  • மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்
  • மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்
  • மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்
  • மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்
  • மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்
  • மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்
  • மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்
  • மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்

 

Leave a Reply