மௌரியர்களுக்கு பிந்தைய இந்திய வரலாறு

மௌரியர்களுக்கு பிந்தைய இந்திய வரலாறு
- மௌரியர்களின் ஆட்சிக்கு பிறகு வட இந்தியாவை ஆண்டவர்கள்? = சுங்க வம்சம்
- முதல் “பிராமண வம்சம்”? =சுங்க வம்சம்
- கடைசி மௌரிய அரசன்? = பிருகத்தத்தன்.
- கடைசி மௌரிய அரசனை கொன்று சுங்க வம்சத்தை நிறுவியவன்? = புஷ்யமித்ர சுங்கன்
- சுங்க வம்ச ஆட்சியாளர்களின் தலைநகரம்? = பாடலிபுத்திரம் (பின்னர் விதிஷாவை தலைநகராக கொண்டு ஆட்சி செய்தனர்)
- சாதவாகன வம்சத்தை நிறுவிய மன்னர்? = சிமுகா
- சாதவாகனர்களின் தலைநகரம்? = அமராவதி
- சிறந்த சாதவாகன மன்னன்? = கவுதமிபுத்திர சதகர்ணி
- எந்த ஆண்டு குஷான அரசர் கனிஷ்கர் ஆட்சி ஏறினார்? = 78 கி.பி
- வடக்கு மற்றும் வடமேற்கு இந்தியாவில் அதிக அளவு செம்பு நாணயங்களை வெளியிட்டவர்கள்? = குஷானர்கள்.
- கணிஷ்கரை தோற்கடித சீன படைத் தளபதி? = பென் சாவோ
- விக்கிரம சகாப்தம் துவங்குவது? = 56 கி.பி
- புகழ்மிக்க கலிங்க அரசன், “காரவேலர்” எந்த வம்சத்தை சேர்ந்தவர்? = சேதி வம்சம்
- இந்தியாவில் ஆட்சி புரிந்த முதல் ஈரானிய மன்னன்? = டரியஸ் 1
- யாருடைய ஆட்சிக் காலத்தில் “தாய்க்கடவுள் உமா” எனப் பெயரிடப்பட்ட நாணயங்கள் வெளியிடப்பட்டன? = குஷானர்கள் ஆட்சிக்காலத்தில்
- நாணயங்களில் புத்தரின் உருவம் பொறித்து வெளியிட்டவர்கள்? = குஷானர்கள்
- இந்தியாவில் முதன் முதலில் “தங்க நாணயத்தை” வெளியிட்டவர்கள்? = குஷானர்கள்.
- மௌரியர்களுக்கு பிந்தைய இந்திய வரலாறு
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
- இந்தியாவில் முதன் முதலில் தங்க நாணயத்தை வெளியிட்ட குஷான மன்னன்? = விமா காட்பிசஸ்.
- காந்தார கலை = இந்தியக் கலை + கிரேக்க கலை.
- கனிஷ்கரின் அவையில் இருந்த மருத்துவர்? = சரகர்.
- கனிஷ்கர் பின்பற்றிய சமயம்? = மகாயான புத்தம்
- மத்திய ஆசியப் பகுதியில் இருந்து இந்தியாவிற்கு வந்தவர்கள்? = வரிசையாக (இந்தோ-கிரேக்கர்கள் -> சைத்தியர்கள் (சாகர்கள்) -> பார்த்தியர்கள் -> குஷானர்கள்)
- குஷானர்கள் “யூச்சி” என்ற பழங்குடியின வம்சத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
- கனிஷ்கரின் முக்கிய தலைநகரம் பெஷாவர், அப்போது புருஷ்புரா என்று அழைக்கப்பட்டது.
- பாடலிபுத்திரம் கைப்பற்றப்பட்ட பிறகு, அவர் புத்த துறவி அஸ்வகோஷாவை தன்னுடன் பெஷாவருக்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
- கனிஷ்கர் நான்காவது பௌத்த சபையை காஷ்மீரில் உள்ள குண்டல்வனாவில் கூட்டினார்.
- அவர் தனது மதக் கருத்துக்களில் மிகவும் சகிப்புத்தன்மை கொண்டவராக இருந்தாலும் பௌத்தத்தை ஆதரித்தார். அவரது நாணயங்களில் இந்திய, கிரேக்க மற்றும் ஜோராஸ்ட்ரிய தெய்வங்களின் கலவை உள்ளது.
- அஸ்வோகோஷா முதல் சமஸ்கிருத நாடக ஆசிரியராகக் கருதப்படுகிறார்.
- முதலாம் வாசுதேவன் குஷாணர்களின் கடைசி பெரிய அரசன் ஆவான்.

சுங்கர்கள்
- மௌரியப் பேரரசின் கடைசி அரசர் = பிருகத்ரதா.
- பிருகத்ரதாவின் படைத்தளபதி = புஷ்யமித்ர சுங்கன்.
- மௌரிய பேரரசின் கடைசி அரசன் பிருகத்ரதாவை கொன்றவன் = புஷ்யமித்ர சுங்கர்.
- சுங்க வம்சத்தை தோற்றுவித்தவர் = புஷ்யமித்ர சுங்கர்.
- புஷ்யமித்ர சுங்கரின் தலைநகரம் = பாடலிபுத்திரம்.
- பாக்டீரியாவின் அரசன் மினான்டரை தோற்கடித சுங்க அரசன் = புஷ்யமித்ர சுங்கர்.
- கலிங்க அரசர் காரவேலனின் படையெடுப்பை முறியடித்த சுங்க மன்னன் = புஷ்யமித்ர சுங்கர்.
- புஷ்யமித்திரர் பின்பற்றிய சமயம் = வேதசமயம்.
- இருமுறை அஸ்வமேத யாகம் நடத்திய சுங்க அரசன் = புஷ்யமித்ர சுங்கன்.
- புஷ்யமித்ர சுங்கரின் மகன் = அக்னிமித்ரர்.
- “மாளவிகாக்னிமித்ரம்” என்ற நாடகத்தை இயற்றியவர் = காளிதாசர்.
- காளிதாசர் இயற்றிய “மாளவிகாக்னிமித்ரம்” என்ற நாடகத்தின் கதாநாயகனாக கருதப்படுபவர் = புஷ்யமித்ர சுங்கனின் மகன் அக்னிமித்திரர்.
- அக்னிமித்ரரின் மகன் = வசுமித்ரர்.
- அக்னிமித்ரரின் மகன் வசுமித்ரர், கிரேக்கர்களை சிந்து நதிக்கரையில் வெற்றி கொண்டார் என்ற தகவலை குறிப்பிட்டுள்ள நூல் = காளிதாசரின் மாளவிகாக்னிமித்ரம்.
- சுங்க வம்சத்தினர் ஆட்சி செய்த காலம் = நூறு ஆண்டுகள்.
- சுங்க வம்சத்தின் கடைசி அரசன் = தேவபூதி.
- சுங்க மன்னன் தேவபூதியின் படைத்தளபதி = வாசுதேவ கன்வர்.
- சுங்க வம்சத்தின் கடைசி அரசர் தேவபூதியை கொன்றவன் = தேவபூதியின் படைத்தளபதி வாசுதேவ கன்வர்.
- கன்வர் வம்சத்தை தோற்றுவித்தவர் = வாசுதேவ கன்வர்.
- மௌரியர்களுக்கு பிந்தைய இந்திய வரலாறு
சமஸ்கிருத மொழியின் இரண்டாவது இலக்கண அறிஞர்
- சமஸ்கிருத மொழியின் இரண்டாவது இலக்கண அறிஞர் = பதஞ்சலி.
- சமஸ்கிருத மொழியின் இரண்டாவது இலக்கண நூல் = யோகசூத்திரம்
- கூடுதல் தகவல்:
- சமஸ்கிருத மொழியின் முதல் இலக்கண அறிஞர் = பாணினி.
- சமஸ்கிருத மொழியின் முதல் இலக்கண நூல் = அஷ்டாத்யாயி.
- சமஸ்கிருத மொழியின் இரண்டாவது இலக்கண அறிஞரான பதஞ்சலியை ஆதரித்த மன்னன் = புஷ்யமித்ர சுங்கன்.

மௌரியர்களுக்கு பிந்தைய இந்திய வரலாறு முக்கிய வம்சங்கள்
- கன்வ வம்சத்தில் உள்ள அரசர்களின் எண்ணிக்கை = நான்கு.
- கன்வ வம்சம் ஆட்சி செய்த மொத்த ஆண்டுகள் = 45 ஆண்டுகள்.
- கன்வ அரசர்கள் நால்வர் = வாசுதேவர், பூமிபுத்திரர், நாராயணர், சுசர்மன்.
- கன்வ வம்சத்தை துவக்கி வைத்தவர் = வாசுதேவ கன்வர்.
- கன்வ வம்சத்தின் கடைசி அரசன் = சுசர்மன்.
- கன்வ வம்சத்தின் கடைசி அரசன் சுசர்மனை கொன்றவர் = சாதவாகன அரசர் சிமுகா.
சாதவாகனர்கள்
- குஷானர்கள் வடஇந்தியாவில் ஆட்சி செய்த காலம் = 300 ஆண்டுகள்.
- தென்னிந்தியாவில் சாதவாகனர்கள் (ஆந்திரர்கள்) ஆட்சி செய்த காலம் = 450 ஆண்டுகள்.
- சாதவாகன வம்சத்தை துவக்கி வைத்தவர் = சிமுகா.
- சாதவாகன வம்சத்தை நிறுவிய சிமுகா எத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்தார் = 23 ஆண்டுகள்.
- சிமுகாவை தொடர்ந்து ஆட்சிக்கு வந்தவர் = கிருஷ்ணா.
- யாருடைய ஆட்சிக் காலத்தில் சாதவாகன அரசு பேரரசாக உயர்ந்தது = கிருஷ்ணா, சதகர்ணி.
- அஸ்வமேத யாகம் செய்த சாதவாகன அரசர் = சதகர்ணி.
- சாதவாகன அரசர்களில் தலைச் சிறந்தவர் = கௌதமிபுத்திர சதகர்ணி.
- கௌதமிபுத்திர சதகர்ணியின் தாய் = கௌதமி பாலஸ்ரீ.
- “நாசிக் மெய்கீர்த்தி” (பிரசஸ்தி) வெளியிட்டவர் = கௌதமி பாலஸ்ரீ.
- சாதவாகனர்களின் (ஆந்திரர்கள்) கடல்சார் திறனையும், கடற்படை வலிமையையும் கூறும் நாணயங்கள் = கப்பலின் வடிவம் பொறிக்கப்பட்ட வசிஸ்டபுத்திர ஸ்ரீபுலமாயி நாணயங்கள்.
- மௌரியர்களுக்கு பிந்தைய இந்திய வரலாறு
கிரேக்கர்கள், பார்தியர்கள்
- அலெக்சாண்டர் இந்தியாவி விட்டு கிளம்பும் பொழுது, தான் ஆக்கிரமித்த பகுதிகளை நிர்வகிக்க தனது பிராந்திய ஆளுநர்களை நியமித்தார்.
- அவற்றில் கிழக்கு பகுதியில் அமைந்திருந்த 2 சத்ராபிகள் (மாநிலங்கள்) = பாக்டீரியா, பார்த்தியா (பகலவர்கள்).
- பாக்டீரியா சத்ராபி “முதலாம் டயோடாடஸ்” தலைமையில் சுதந்திர அரசாக ஆனது.
- பார்த்தியா சத்ராபி “அர்சாகஸ்” தலைமையில் சுதந்திர அரசாக உருவானது.
இந்தோ கிரேக்கர்கள்
- இந்தியாவின் வடமேற்கு பகுதியில் குடியேறி, இந்தியர்களோடு திருமண உறவு மூலம், இந்தியக் கலாச்சாரத்தில் கலந்தனர்.
முதலாம் டெமிட்ரியஸ்
- இவர் இந்தோ-கிரேக்க மன்னர் “யுதி டெமிஸ்” என்பவற்றின் மகன்.
- மாசிடோனியாவின் மன்னராக இருந்தவர் = முதலாம் டெமிட்ரியஸ்.
- சதுர வடிவிலான இருமொழி வாசகங்களைக் கொண்ட நாணயங்களை வெளியிட்டவர் = முதலாம் டெமிட்ரியஸ்.
- நாணயத்தின்,
- தலைப் பகுதியில் = கிரேக்க மொழியும்
- பூப்பகுதியில் = கரோஷ்தி மொழியும் இருந்தன.
- டெமிட்ரியஸ் என்ற பெயரில் மூவர் இருந்துள்ளனர்.
மினான்டர்
- இந்தோ கிரேக்க அரசர்களில் புகழ் பெற்றவர் = மினான்டர்.
- பாக்டீரிய அரசன் “மிலிந்தா” என்பவருக்கும், பௌத்தத் துறவி “நாகசேனாவுகும்” இடையே நடைபெற்ற உரையாடலை பற்றி கூறும் நூல் = மிலிந்த பன்கா.
- இந்த மிலிந்தா அரசனே “மினான்டர்” என கூறப்படுகிறது.
- மௌரியர்களுக்கு பிந்தைய இந்திய வரலாறு