வரைவுக் குழு

வரைவுக் குழு

வரைவுக் குழு

வரைவுக் குழு

  • அரசியல் நிர்ணய சபையில் உருவாக்கப்பட்ட குழுக்களில் மிக முக்கியமான குழு, வரைவு குழு ஆகும்
  • வரைவு குழு அமைக்கப்பட்ட தினம் = 1947, ஆகஸ்ட்29
  • இக்குழு 7 உறுப்பினர்களை உள்ளடக்கியது. அவர்கள்,
    1. டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் (தலைவர்)
    2. என் கோபாலசுவாமி ஐயங்கார்
    3. அல்லாடி கிருஷ்ணஸ்வாமி ஐயர்
    4. டாக்டர் கே.எம்.முன்ஷி
    5. சையத் மொஹம்மத் சாதுல்லா
    6. பி.எல்.மிட்டர், இவரின் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து இவ்விடத்திற்கு “என். மாதவ ராவ்” நியமிக்கப்பட்டார்
    7. டி.பி.கைத்தான், இவர் 1948ல் மரணம் அடைந்ததை தொடர்ந்து, இவ்விடத்திற்கு“டி.டி.கிருஷ்ணமாச்சாரி” நியமிக்கப்பட்டார்
  • வரைவுக் குழுவானது பல்வேறு அமைப்புகளிடம் இருந்து வரபெற்ற கருத்துருக்கள், மக்களின் கருத்துக்கள் போன்றவற்றை ஆராய்ந்து, தனது முதல் கட்ட வரைவு அறிக்கையை 1948 பிப்ரவரியில் சமர்ப்பித்தது
  • இந்த அறிக்கை சபை மற்றும் மக்களின் விவாதத்திற்கு வைக்கப்பட்டது
  • எட்டு மாதங்களுக்கு இந்த விவாதம் நீடித்தது.
  • பல்வேறு கருத்துக்கள், திருத்தங்களின் அடிப்படையில் வரைவுக் குழுவானது, தனது இரண்டாவது வரைவு அறிக்கையை 1948 அக்டோபர் மாதம் சமர்ப்பித்தது
  • வரைவு குழுவானது தனது வரைவு அறிக்கையை ஆறு மாதத்திற்கு உள்ளாகவே தயாரித்து சமர்ப்பித்தது

வரைவுக் குழு

  • வரைவு அறிக்கை தயாரிக்க மொத்தம் 141 நாட்கள் ஆனது
  • வரைவு அரசியலமைப்பு மீதான விவாதம் நடைபெற்ற நாட்கள் = 114
  • வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட 7635 திருத்தங்களில் 2473 திருத்தங்கள் விவாதிக்கப்பட்டது

வரைவுக் குழு குறிப்பு

  • இந்தியாவிற்காண அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்க முதலில் வரைவு அறிக்கையை உருவாக்கியவர் = பி.என்.ராவ் (பெனகல் நரசிங் ராவ்)
  • இவர் அரசியல்நிர்ணய சபையின் சட்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டவர்
  • ஹேக் நகரிலுள்ள சர்வதேச நடுவர் நீதிமன்றத்தில், நீதிபதியாக இருந்த முதல் நடுவர் இவராவார்
  • வரைவுக் குழுவிற்கு இவர் தனது “வரைவு அறிக்கையை” அளித்தார். அதில் அவர் உருவாக்கியவை
    • 243 விதிகள்
    • 13 அட்டவணைகள்

வரைவுக் குழு

  • இவரின் வரைவு அறிக்கையின் மீது பல்வேறு விவாதங்கள், திருத்தங்கள் போன்றவை மேற்கொள்ளப்பட்டு, இதனையும் சேர்த்து, வரைவு குழு இறுதி வரைவு அறிக்கையை சமர்ப்பித்தது
  • 1949 நவமபர் 25-ம் தேதி நடைபெற்ற இறுதி நிர்ணயசபை கூட்டத்தில் பேசிய அம்பேத்கர்
    • “அரசியல் நிர்ணயசபை உருவாக்க சட்டம் உருவாக்கிய பெருமை எனக்கு மட்டும் சேராது. இதில் பாதி பெருமை அரசியல் நிர்ணயசபை சட்ட ஆலோசகராக உள்ள சர் பி.என்.ராவ் அவர்களுக்கு உரித்தானது” என்றார்
  • வரைவு அறிக்கையை ஆராயும் சிறப்புக் குழு (Special Committee to Examine the Draft Constitution) உருவாக்கப்பட்டு அதன் தலைவராக ஜவஹர்லால் நேரு இருந்தார்

வரைவுக் குழு

  • வரைவு அறிக்கையில் இருந்தவை
    • 315 விதிகள்
    • 8 அட்டவணைகள்
  • ஆனால் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த பொழுது இருந்தவை
    • 395 விதிகள்
    • 22 பகுதிகள்
    • 8 அட்டவணைகள்

 

Leave a Reply