வ வே சு ஐயர்
வ வே சு ஐயர் குறிப்பு
- முழுப்பெயர் = வரகனேரி வேங்கட சுப்பிரமணிய ஐயர்.
- ஊர் = திருச்சி
- பெற்றோர் = வேங்கடேச ஐயர் – காமாட்சியம்மாள்
வ வே சு ஐயர் சிறப்பு பெயர்கள்
- தமிழ் சிறுகதை தந்தை
- திறனாய்வின் முன்னோடி
- தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தின் முதல்வர்
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
வ வே சு ஐயர் புனைப்பெயர்
- பாரதப்பிரியன்
இதழ்
- பாலபாரதி
தமிழின் முதல் சிறுகதை
- குளத்தங்கரை அரசமரம் (சிறுகதையின் சிகரம் என அழைக்கப்படும் சிறுகதை)
தமிழில் முதல் சிறுகதை தொகுப்பு
- மங்கையர்க்கரசியின் காதல்
கடிதங்கள்
- இலண்டன் கடிதங்கள்
- இராஜகோபாலன் கடிதங்கள்
கட்டுரை
- கவிதை
- ஜுஸப் கரிபால்டி (Giuseppe Garibaldi) சரித்திரம்
- ழான் ழாக் ரூசோ எழுதிய ஜனசமூக ஒப்பந்தம்
- பிரயோக இலக்கணம் (பயன்பாட்டு இலக்கணம் – Applied Grammar)
- மறுமலர்ச்சி
வ வே சு ஐயர் எழுதிய நூல்கள்
- KAMBARAAMAAYANA – A STUDY (கம்பராமாயண ஆராய்ச்சி – ஆங்கிலத்தில் எழுதினார் – பெல்லாரி சிறையில் இருந்த பொழுது)
- The Kural or The Maxims of Thiruvalluvar
- மாஜினியின் சுயசரிதை
- கரிபாலிடியின் வரலாறு
- நெப்போலியன்
- தன்னம்பிக்கை
- குரு கோவிந்த்சிங்
- சந்திர குப்த சக்கரவரத்தியின் சரித்திரம்
- புக்கர் வாஷிங்டன்
- கம்பராமாயணம் – ஓர் ஆராய்ச்சி
வ.வே.சு.ஐயர் சிறுகதைகள்
- மங்கையர்க்கரசியின் காதல்
- காங்கேயன்
- கமல விஜயம்
- ழேன் ழக்கே
- குளத்தங்கரை அரசமரம்
- எதிரொலியாள்
- லைலா மஜ்னு
- அனார்கலி
வ.வே.சு.ஐயர் குறிப்புகள்
- லண்டன் சென்று பாரிஸ்டர் பட்டம் பெற வேண்டும் என்ற விருப்பத்தின் அடிப்படையில் லண்டன் சென்று அங்கு இந்தியா ஹவுஸில் தங்கினார்.
- இவரின் அரசியல் குரு = சாவர்க்கர்
- பட்டம் பெற வந்த வ.வே.சு. வை சுதந்திர வீரராக்கியது இந்தியா ஹவுஸ். அங்கு அடிக்கடி சென்றபோது தீவிர தேசிய இயக்கவாதியான வீர சாவர்க்கர் போன்ற புரட்சி வீரர்களின் தொடர்பு அவருக்குக் கிடைத்தது.
- இவர் இலண்டனில் வாழ்ந்த காலத்தில் பாரதியாரின் இந்தியா பத்திரிகைக்கு எழுச்சியூட்டும் கட்டுரைகள் எழுதி அனுப்பி வந்தார்.
- 1909இல் தசரா பண்டிகையைத் தேசிய விழாவாக இந்தியா ஹவுசில் கொண்டாடினர். அதில் சிறப்பு விருந்தினராகக் காந்தி அடிகளை அழைத்து வந்து பேச வைத்தனர்.
- புதுச்சேரியில் தர்மாலயம் என்ற இல்லம் அமைத்து சுதந்திரப்போருக்கு வீரர்களைத் தயாரிக்கும் விதமாக அவர்களுக்குக் குத்துச்சண்டை, குஸ்தி, சிலம்பம், துப்பாக்கிச் சுடுதல் போன்ற பயிற்சிகளை வ.வே.சு. கற்பித்தார்.
- அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.
- தமிழ்த்தென்றல் திரு. வி. கலியாணசுந்தரனார், தேசபக்தன் இதழிலிருந்து விலகவும், அதன் ஆசிரியர் பொறுப்பை வ.வே.சு. ஏற்றார்.
- 1922-இல் சேரன் மாதேவியில் தமிழ்க்குருகுலம் என்ற கல்வி நிலையத்தைத் தொடங்கினார்.
- இவர் அமைத்த ஆசிரமம் = பரத்வாஜ் ஆசிரமம்
- 1924-இல் பாலபாரதி என்ற இதழைத் தொடங்கினார்.
- கம்ப நிலையம் என்ற நூல் விற்பனையகத்தைத் தொடங்கி ஏராளமான நூல்களை வெளியிட்டார்.
- இலண்டனில் இருந்தபோது பாரதியின் இந்தியா இதழில் லண்டன் கடிதம் என்ற பெயரில் தொடர்ந்து எழுதினார்.
- 1909-ஆம் ஆண்டு மே 29-ஆம் தேதி, புதுச்சேரியில் இருந்து வெளிவந்த “இந்தியா” (ஆசிரியர் பாரதியார்) இதழில், ஜுஸப் கரிபால்டி (Giuseppe Garibaldi) சரித்திரம் என்ற கட்டுரைத் தொடரை எழுதினார் வ.வே.சு.ஐயர்.
- இதைத் தொடர்ந்து 1909-ஆம் ஆண்டு ஜூன் 5-ஆம் தேதி இந்தியா இதழில், “ழான் ழாக் ரூசோ எழுதிய ஜனசமூக ஒப்பந்தம்” எனும் தலைப்பில் எழுதப்பட்ட வ.வே.சு.ஐயரின் தமிழாக்கக் கட்டுரைத்தொடர் வெளிவரத் தொடங்கியது.
- “இந்தியா” பத்திரிக்கையில் 1908-ஆம் ஆண்டு நவம்பர் 28-ஆம் தேதி முதல் வ.வே.சு.ஐயர் எழுதிய “இலண்டன் கடிதங்கள்” வெளிவரத் தொடங்கின.
வ.வே.சு.ஐயர் சிறப்புகள்
- தமிழில் மறுமலர்ச்சி (Renaissance) என்ற சொல்லை உருவாக்கியவர் வ.வே.சு ஐயர்
- பன்னிரண்டாம் வயதில் தகுதித் தேர்வு எழுதி (மெட்ரிகுலேஷன்) மாநிலத்தில் ஐந்தாவதாகத் தேறினார்.
- பதினாறாம் வயதில் பி.ஏ. பட்டத் தேர்வில் மாகாணத்தில் முதலாவதாகத் தேறினார். பின்னர் சென்னை சென்று வக்கீல் பரீட்சையில் முதல் பிரிவில் தேறி, சென்னை மாநகர் ஜில்லா கோர்ட்டில் முதல் வகுப்பு ப்ளீடராகச் சேர்ந்து வக்கீல் தொழில் நடத்தினார்
- கிரேக்கம், இலத்தீன், பிரெஞ்சு, ஆங்கிலம், சமஸ்கிருத, தமிழ் மொழிகளில் ஆழ்ந்த புலமை பெற்றவராய் விளங்கினார்.
- மகாகவி பாரதியார் தலித்தாகப் பிறந்த ரா. கனகலிங்கத்துக்குப் பூணூல் அணிவித்த புண்ணிய நிகழ்வை தலைமை தாங்கி நடத்தினார் வ.வே.சு.
- திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். திருக்குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு The Kural or The Maxims of Thiruvalluvar என்னும் தலைப்பில் 1916-ல் வெளிவந்தது
- தமிழ்நாடு அரசு வ.வே.சுப்பிரமணியம் நினைவைப் போற்றும் வகையில் திருச்சியில் வரகனேரி, அக்ரஹாரத்தில் உள்ள அவர் வாழ்ந்த இல்லம் வ.வே.சு. ஐயர் நினைவகம் எனும் பெயரில் நினைவு இல்லமாக்கப்பட்டுள்ளது.
- “திருவள்ளுவரையும் கம்பரையும் தனது வழிபாடு தெய்வங்களாக வ.வே.சு.ஐயர் கொண்டாடினார்” என்று சாமிநாதசர்மா கூறியுள்ளார்.
- வ.வே. சு ஐயரின் படைப்புகள் தமிழக அரசால் 1998-ல் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.
- சுப்ரமணிய பாரதியின் கண்ணன்பாட்டு நூலுக்கு வ.வே.சு.ஐயர் எழுதிய முன்னுரை தமிழில் எழுதப்பட்ட அழகியல்நோக்கு கொண்ட முதல் நவீன இலக்கிய விமர்சனம் என ஜெயமோகன் குறிப்பிடுகிறார்.
திறனாய்வின் முன்னோடி வ வே சு ஐயர்
- 1918-ஆம் ஆண்டில் வெளிவந்த வ.வே.சு.ஐயரின் “கவிதை” எனும் கட்டுரை தான் கவிதை பற்றிய விமர்சனத்துறைக்கு ஓர் ஆரம்பம் செய்து வைத்திருக்கிறது என்பதை திறனாய்வாளர் சி.சு.செல்லப்பா சுட்டிக்காட்டியுள்ளார்.
- இந்த அரிய ஒப்பியல் ஆய்வில் வ.வே.சு.ஐயர் சங்க இலக்கியமான “மலைபடுகடாம்” கவிதையை பிரெஞ்சு எழுத்தாளர் சேனாங்கூர், தாகூர், வேர்ட்ஸ்வர்த் ஆகியோரின் படைப்புகளுடன் ஒப்பிட்டு ஒப்பாய்வு செய்துள்ளார்.
- வ.வே.சு.ஐயர் ஆங்கிலத்தில் திருக்குறளை மொழிபெயர்த்து, அதற்கு மிக நீண்ட ஆய்வு முன்னுரையும் வழங்கித் திறனாய்வின் முன்னோடியாகத் திகழ்ந்தார்.
தமிழ் சிறுகதை தந்தை – வ வே சு ஐயர்
- தமிழின் முதல் சிறுகதையான “குளத்தங்கரை அரச மரம்” எழுதியவர்
- குளத்தங்கரை அரசமரம் தாகூர் எழுதிய “காட்டேர் கதா” என்ற வாங்க மொழியின் கதைத் தழுவல் ஆகும்
- குளத்தங்கரை அரச மரம் இடம் பெற்றுள்ள சிறுகதைத் தொகுதி மங்கையர்க்கரசியின் காதல்
- தமிழின் முதல் சிறுகதை தொகுப்பு = மங்கையர்க்கரசியின் காதல்
- மங்கையர்க்கரசியின் காதல் எட்டு சிறுகதைகளைக் கொண்டது (மூன்று தழுவல் கதைகள், ஒன்று வரலாற்று கதை)
- லைலா மஜ்னு, அனார்கலி போன்ற பாத்திரங்களைத் தமிழுக்கு அறிமுகம் செய்தவர்
- சிறுகதைகளை “காபுலி வாலா” என்ற தொகுப்பின் மூலம் மொழிப்பெயர்த்து வெளியிட்டார்
- 1917-ஆம் ஆண்டில் வெளிவந்த “மங்கையர்க்கரசியின் காதல், காங்கேயன், கமல விஜயம், ழேன் ழக்கே, குளத்தங்கரை அரசமரம்” ஆகிய ஐந்து சிறுகதைகளைத் தொகுத்து மங்கையர்க்கரசியின் காதல் என்ற சிறுகதைத் தொகுப்பை கம்ப நிலையம் சார்பில் வெளியிட்டார்.
- இவரின் மறைவுக்கு பின்னர் “லைலா மஜ்னு, எதிரொலியாள், அனார்கலி” ஆகிய கதைகள் சேர்க்கப்பட்டு இரண்டாவது தொகுதி வெளியிடப்பட்டது.
- இரண்டாம் பதிப்பின் முன்னுரையில் இராசாசி அவர்கள், “இக்கதைகளை ஒருவன் படித்துப் புத்தகத்தை கீழே வைக்கும் காலத்தில் அவன் மனதில் பரிசுத்தமான உணர்சிகளும், உன்னதமான எண்ணங்களும் ததும்பும்” என்றார்.
- ந.பிச்சமூர்த்தி
- சி.சு.செல்லப்பா
- தருமு சிவராமு
- பசவய்யா
- இரா.மீனாட்சி
- சி.மணி
- சிற்பி பாலசுப்ரமணியம்
- மு.மேத்தா
- ஈரோடு தமிழன்பன்
- அப்துல் ரகுமான்
- கலாப்ரியா
- கல்யாண்ஜி
- ஞானக்கூத்தன்
- தேவதேவன்
- சாலை இளந்திரையன்
- ஷாலினி இளந்திரையன்
- ஆலந்தூர் மோகனரங்கன்
- அய்யப்ப மாதவன்