10 ஆம் வகுப்பு எழுத்து
10 ஆம் வகுப்பு எழுத்து
- உயிர் பன்னிரண்டும், மெய் பதினெட்டும் ஆக முப்பது எழுத்துகளை “முதலெழுத்துகள்” என்பர்.
- முதல் எழுத்துகளை சார்ந்து வரும் எழுத்துகளைச் சார்பெழுத்துகள் என்பர்.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
குறுக்கங்கள் எத்தனை வகைப்படும்
- குறுக்கங்கள் நான்கு வகைபப்டும். அவை,
- ஐகாரக்குறுக்கம்
- ஔகாரக்குறுக்கம்
- மகரக்குறுக்கம்
- ஆய்த்க்குறுக்கம்
ஐகாரக்குறுக்கம் என்றால் என்ன
- “ஐ” என்னும் நெட்டெழுத்தைத் தனியாக ஒலித்தால், இரண்டு மாதிறல் அளவில் ஒலிக்கும்.
- ஆனால், இவ்வெழுத்தைச் (ஐ) சொல்லின் முதலிலும் இடையிலும் ஈற்றிலும் வருமாறு எழுதி ஒலித்துப் பார்த்தல், ஒலி குறைந்து ஒலிக்கும்.
- ஐம்பது = சொல்லுக்கு முதலில் வந்து ஒன்றரை மாத்திரையாகக் குறைந்தது
- தலைவன் = சொல்லுக்கு இடையில் வந்து ஒரு மாத்திரையாகக் குறைந்தது
- கடலை = சொல்லுக்கு ஈற்றில் வந்து ஒரு மாத்திரையாகக் குறைந்தது
- இவ்வாறு சொல்லுக்கு முதல், இடை, கடை ஆகிய மூவிடங்களில் வரும் ஐகாரம் தன் மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒலிக்கும்.
- இவ்வாறு குறைந்து ஒலிக்கும் ஐகாரம் ஐகாரக்குறுக்கம் எனப்படும்.
ஔகாரக்குறுக்கம் என்றால் என்ன
- ‘ஔ’ என்னும் நெடில் எழுத்தும், ‘ஐ’ என்னும் நெட்டெழுத்தைப்போலவே தனியாக ஒலிக்கும்போது, இரண்டு மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒலிப்பதில்லை.
- ஆனால், சொல்லுக்கு முதலில் மட்டுமே வரும் ஔகாரம் ஒன்றரை மாத்திரை அளவினதாய்க் குறைந்து ஒலிக்கும்.
- அதுவே ஔகாரக்குறுக்கம் எனப்படும்.
- ஒளவை, வௌவால் = ஒன்றரை மாத்திரையாகக் குறைந்தது.
- சொல்லுக்கு இடையிலும் இறுதியிலும் ஔகாரம் வாராது.
மகரக்குறுக்கம் என்றால் என்ன
- ‘ம்’ என்னும் மெய்யெழுத்து தன் மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒலித்தல் மகரக்குறுக்கம் எனப்படும்.
- அதாவது, ‘ம்’ என்னும் மெய்யெழுத்து, செய்யுளில் தனக்குரிய அரை மாத்திரை அளவிலிருந்து, கால் மாத்திரை அளவாகக் குறைந்து ஒலிக்கும்.
- போலும் – போல்ம் – போன்ம்
- மருளும் – மருள்ம் – மருண்ம்
- செய்யுளில் இடம்பெறும் போலும், மருளும் ஆகிய மகர ஈற்றுச் சொற்கள், ஈற்றயல் உகரங் கெட்டு, போல்ம், மருள்ம் என்றாகிப் பின் போன்ம், மருண்ம் எனத் திரியும். இவ்வாறு திரியும் னகர, ணகரங்களின் முன்னுள்ள மகரம், தன் அரை மாத்திரை அளவிலிருந்து குறைந்து கால் மாத்திரை அளவில் ஒலிக்கும்.
- மகர ஈற்றுச்சொல் முன் வகர (வ்) முதல்மொழி வந்து சேரும்போது, நிலைமொழி மகரம் குறைந்து ஒலிக்கும்.
- வரும் + வண்டி = வரும் வண்டி. ‘ம்’ தன் அரை மாத்திரையிலிருந்து குறைந்து, கால் மாத்திரையாக ஒலிக்கும். (வரும் இது மகர ஈற்று நிலைமொழி. வண்டி இது ‘வ்’ என்னும் வகர முதல் மொழி.)
- இவ்விரண்டு இடங்களிலும் குறைந்து ஒலிக்கும் மகரமே மகரக்குறுக்கம் எனப்படும்.
ஆய்தக்குறுக்கம் என்றால் என்ன
- ஆய்தக்குறுக்கம் ஆய்தம் + குறுக்கம் ஆய்தக்குறுக்கம். ( ‘ஃ’ என்னும் எழுத்து குறைந்து ஒலிப்பது.)
- நிலைமொழியில் தனிக்குறிலை அடுத்து வரும் லகர, ளகரங்கள் வருமொழியிலுள்ள தகரத்தோடு (த்) சேரும்போது ஆய்தமாகத் திரியும்.
- இவ்வாறு திரிந்த ஆய்தம் தன் அரை மாத்திரை அளவிலிருந்து குறைந்து கால் மாத்திரை அளவாக ஒலிக்கும்.
- அதுவே ஆய்தக்குறுக்கம் எனப்படும்.
- பிறகு, வருமொழியிலுள்ள தகரம் (த்) நிலைமொழிக்கேற்ப றகரமாக (ற்) வும், டகரமாகவும் (ட்) மாறிப் புணரும்.
- கல் + தீது = கஃறீது
- முள் + தீது = முஃடீது
- 10 ஆம் வகுப்பு பொதுத்தமிழ்
- 11 ஆம் வகுப்பு சிறப்புத் தமிழ்
- 11 ஆம் வகுப்பு பொதுத்தமிழ்
- 12 ஆம் வகுப்பு சிறப்புத் தமிழ்
- 12 ஆம் வகுப்பு பொதுத்தமிழ்
- ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல்
- 6TH TAMIL அணி இலக்கணம்
- 6TH TAMIL மனிதநேயம்
- 6TH TAMIL ஆசியஜோதி