6TH TAMIL அணி இலக்கணம்

6TH TAMIL அணி இலக்கணம்

6TH TAMIL அணி இலக்கணம்

6TH TAMIL அணி இலக்கணம்

  • எதிலும் அழகைக் காண விரும்புவது மனிதர்களின் இயல்பு. நாம் நம்மை அணிகலன்களால் அழகுபடுத்திக் கொள்கிறோம்.
  • அதுபோல் கவிஞர்கள் தங்கள் கற்பனைத் திறத்தாலும் புலமையாலும் தாங்கள் இயற்றும் பாடல்களில் அழகைச் சேர்க்கின்றனர்.
  • இதனை விளக்குவது அணி இலக்கணம் ஆகும்.
  • அணி என்பதற்கு அழகு என்பது பொருள்.
  • கவிஞர் தமது கருத்தைச் சுவையோடு சொல்வதற்கு உதவுவது அணி.
  • மருந்தைத் தேனில் கலந்து கொடுப்பது போல் கருத்துகளைச் சுவைபடக் கூறுவது அணியாகும்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

இயல்பு நவிற்சி அணி என்றால் என்ன

6TH TAMIL அணி இலக்கணம்
6TH TAMIL அணி இலக்கணம்
  • ஒரு பொருளின் இயல்பை உள்ளது உள்ளபடியே அழகுடன் கூறுவது இயல்பு நவிற்சி அணி ஆகும்.
  • இதனைத் தன்மை நவிற்சி அணி என்றும் கூறுவர்.
  • எ.கா:

தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு – அங்கே

துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி

அம்மா என்குது வெள்ளைப்பசு – உடன்

அண்டையில் ஓடுது கன்றுக்குட்டி

நாவால் நக்குது வெள்ளைப்பசு – பாலை

நன்றாய்க் குடிக்குது கன்றுக்குட்டி

–    கவிமணி தேசிக விநாயகனார்

  • இப்பாடலில் கவிஞர் பசுவும் கன்றும் ஒன்றுடன் ஒன்று கொஞ்சி விளையாடுவதை இயல்பாக எடுத்துக் கூறியுள்ளார்.
  • எனவே இது இயல்பு நவிற்சி அணி ஆகும்.

உயர்வு நவிற்சி அணி என்றால் என்ன

6TH TAMIL அணி இலக்கணம்
6TH TAMIL அணி இலக்கணம்
  • ஒரு பொருளின் இயல்பை மிகைப்படுத்தி அழகுடன் கூறுவது உயர்வு நவிற்சி அணி ஆகும்.
  • எ.கா:

குளிர்நீரில் குளித்தால்

கூதல் அடிக்குமென்று

வெந்நீரில் குளித்தால்

மேலே கருக்குமென்று

ஆகாச கங்கை

அனல் உறைக்குமென்று

பாதாள கங்கையைப்

பாடி அழைத்தார் உன் தாத்தா

  • இதில் உயர்வு நவிற்சி அணி அமைந்துள்ளது.

 

 

Leave a Reply