10 ஆம் வகுப்பு கடவுள் வாழ்த்து
10 ஆம் வகுப்பு கடவுள் வாழ்த்து
மெய்தான் அரும்பி விதிர்விதிர்த் துன்விரை யார்கழற்கென் கைதான் தலைவைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பிஉள்ளம் பொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றி சயசய போற்றிஎன்னும் கைதான் நெகிழ விடேன்உடை யாய்என்னைக் கண்டுகொள்ளே – மாணிக்கவாசகர் |
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
சொற்பொருள்
- மெய் = உடல்
- விதிவிதிர்த்து = உடல் சிலிர்த்து
- விரை = மணம்
- நெகிழ = தளர
- ததும்பி = பெருகி
- கழல் – ஆண்கள் காலில் அணியும் அணிகலன்
- சயசய வெல்க வெல்க
இலக்கணக்குறிப்பு
- விடேன் – தன்மை ஒருமை வினைமுற்று
- கழல் = ஆகுபெயர்
மாணிக்கவாசகர் ஆசிரியர் குறிப்பு
- சைவ சமயக்குரவர் நால்வரில் ஒருவர்.
- திருவாதவூரில் பிறந்தவர்.
- இவ்வூர் மதுரைக்கு அருகில் உள்ளது.
- இவர் அரிமர்த்தன பாண்டியனிடம் தலைமை அமைச்சராக பணிப் புரிந்தார்.
- பாண்டிய மன்னனுக்காக குதிரை வாங்க சென்ற பொழுது, திருப்பெருந்துறை இறைவனால் ஆட்கொள்ளப் பெற்றவர்.
- இறைவனை மெய்யுருக பாடி கண்ணீர் மல்க அழுது தொழுதவர்.
- இவரை “அழுது அடியடைந்த அன்பர்” என்பர்.
- மாணிக்கவாசகர் எழுதியவை = திருவாசகமும் திருகோவையாரும்.
- இவர் எழுப்பிய கோவில், தற்போது “ஆவுடையார் கோவில்” என வழங்கப்படும் திருப்பெருந்துறையில் (புதுகோட்டை மாவட்டம்) உள்ளது.
- இவரது காலம் = கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு
திருவாசகம் நூல் குறிப்பு
- சைவத் திருமுறைகள் மொத்தம் பனிரெண்டு.
- அவற்றில் எட்டாவது திருமுறை இவரின் திருவாசகமும் திருகோவையாரும் ஆகும்.
- திருவாசகத்தில் 658 பாடல்கள் உள்ளன.
- திருவாசகத்தை சிறப்பிக்க, “திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்” என்னும் தொடர் வழங்கலாயிற்று.
- திருவாசகத்தை ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
- சதகம் என்பது நூறு பாடல்களைக் கொண்ட நூலைக் குறிக்கும்.
மாணிக்கவாசகர் பற்றி ஜி.யு.போப்
- உலக வரலாற்றிலேயே மேதையான மாணிக்கவாசகரை விடப் புலமை, உழைப்பு, துன்பத்தைப் பொறுத்தல், இடையறா நிலையான பக்தி ஆகியவற்றுடன் நம் மனதை கவர்கின்றவர் யாரும் இல்லை” என்கிறார் ஜி.யு.போப்.