10TH திரைப்படக்கலை உருவான கதை
10TH திரைப்படக்கலை உருவான கதை
- திரைப்படம் ஒரு அற்புதமான கலை.
- உலகில் பல்வேறு மொழிகள் இருப்பினும், மக்கள் அனைவரும் எளிதில் புரிந்துக்கொள்ளும் உலகமொழி திரைப்படம்.
- அது உதடுகளால் பேசும் மொழியன்று; உள்ளத்தால் பேசி, உணர்ச்சிகளால் உருவாகும் மொழி.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
திரைப்படத்தின் வரலாறு
- ஒளிப்படம் எடுக்கும் முறையை 1830ஆம் ஆண்டு கண்டுப்பிடித்த பின்னர், எட்வர்ட் மைபிரிட்சு என்ற ஆங்கிலேயர் முதலில் ஓடும் குதிரையை இயக்கப்படமாக எடுத்து வெற்றிபெற்றார்.
- படச்சுருள் உருவாக்கும் முறையைக் கண்டுப்பிடித்தவர் = ஈஸ்ட்மன்.
- ஒருவர் மட்டும் பார்க்கும் படக்கருவியைக் கண்டுபிடித்தவர் = எடிசன்.
- பலர் பார்க்கும் வகையில் படக்கருவியை வடிவமைத்தவர் = பிரான்சிஸ் சென்கின்சு.
- பிரான்சிஸ் சென்கின்சு என்ற அமெரிக்கர் 1894இல் ரிச்மண்ட் என்னுமிடத்தில் இயக்கப்படத்தைப் பலரும் பார்க்கும் வகையில் வடிவமைத்தார்.
- புதிய படவீழ்த்திகள் உருவாக, இவருடைய கருத்துகளே அடிப்படையாக அமைந்தன.
- பிரான்சிஸ் சென்கின்சு காட்டியப் படங்கள் = ஊமைப் படங்கள்.
திரைப்படம்
- ஊமைப் படங்களை, பேசும் படங்களாக மாற்ற பல்வேறு அறிஞர்கள் அயராது உழைத்தனர்.
- படத்திற்கு உரிய கதைக்கு ஏற்ற கதை மாந்தர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
- நடிகரின் குரல் இசைவாக இல்லாவிடில், மற்றொருவர் குரல் தரும் முறை கொண்டு வரப்பட்டது.
- ஒரு மொழிப் படத்தை, மற்றொரு மொழியில் மாற்றி அமைக்கும் முறைக்கு “மொழிமாற்றம்” என்று பெயர் ஆகும்.
- நடிப்பாற்றலை எடுத்துக்கூறிச் சில நேரங்களில் தாமே நடித்தும், காட்சிகள் அமைத்தும் படம் முடியும்வரை உழைக்கும் நுண்மாண் நுழைபுலம் உடையாரை இயக்குனர் என்பர்.
- கதைப்படங்கள் மட்டுமின்றிக் கருத்துப்படங்கள், செய்திப்படங்கள், விளக்கப்படங்கள், கல்விப்படங்கள் எனப் பல வளர்ச்சி நிலைகளைத் திரைப்படத்துறை அடைந்துள்ளது.
- விளக்கப் படங்களால் ஒருநாட்டு மக்களின் வாழ்க்கை முறைகளை உள்ளவாறு அறிந்துக் கொள்ள முடியும்.
திரைப்படச்சுருள்
- திரைப்படம் எடுக்கப் பயன்படும் படச்சுருள் செல்லுலாய்டு என்னும் பொருளால் ஆனது.
- படம் எடுக்கப் பயன்படும் சுருள், எதிர்ச்சுருள் எனப்படும்.
- ஒலி தனியாகவும், ஒளி தனியாகவும் பதிவுகள் செய்யப்பட்டு பின்னர் ஒருங்கிணைக்கப்படும்.
படம்பிடிக்கும் கருவி
- இது ஒளிப்பதிவு செய்யப் பயன்படுகிறது.
- படப்பிடிப்பின்போது படப்பிடிப்புக்கருவி அசைந்தால் படம் தெளிவாக இராது. ஆகையால், உறுதியான உயரமான இடத்தில் அக்கருவியைப் பொருத்திவிடுவர்.
- படப்பிடிப்புக் கருவியில் ஓரடி நீளமுள்ள படச்சுருள் 16 படங்கள் வீதம் ஒன்றன்பின்ஒன்றாகத் தொடர்ச்சியாக எடுக்கப்படும்.
ஒலிப்பதிவு
- நடிகர்களின் நடிப்பையும், பாடும் பாடல்களையும் உரையாடல்களையும் ஒலிப்பதிவு செய்வர்.
- உரையாடலில் எழும் ஒலிஅலைகள் ஒரு நுண்ணொலிபெருக்கியைத் தாக்கும். நுண்ணொலிபெருக்கி ஒலியலைகளை மின்அதிர்வுகளாக்கும். மின்அதிர்வுகள் பெருக்கப்பட்டு ஒருவகை விளக்கினுள் செலுத்தப்படுகின்றன.
திரைப்படக்காட்சிப் பதிவு
- ஒளிஒலிப்படக்கருவி என்னும் கருவி திரையரங்குகளில் திரைப்படம் காட்டப்பயன்படுகிறது.
- இக்கருவியில் மேற்பக்கம் ஒன்றும், அடிப்பக்கம் ஒன்றுமாக வட்டமான இரு பெட்டிகள் இருக்கும்.
- காட்டவேண்டிய படச்சுருளை மேல் பெட்டியில் பொருத்துவர்.
- முன்புறம் ஒரு மூடி இருக்கும். மூடிக்கு இரண்டு கைகள் உண்டு. அந்த மூடி நொடிக்கு எட்டுமுறை சுழலும்.
- அதன் கைகள் நொடிக்குப் பதினாறு முறை சுழலும். அதனால், அதன் கைகள் ஒளியை மறைக்கும். ஒளி மறைக்கும் போதெல்லாம் படச்சுருள் நழுவி, அடுத்த படம் வந்து நிற்கும்.
கருத்துப்படம்
- கருத்துப்படம் அமைக்கத் தொடங்கியவர் “வால்ட் டிஸ்னி” என்பார் ஆவார்.
- அவர் ஓவியர், ஒரே செயலைக் குறிக்கும் பல்லாயிரக்கணக்கான படங்களை வரைவார்.
- ஒவ்வொரு காட்சியிலும் வரும் விவரங்களையும், பின்னணியையும் தனித்தனியாக எழுதி, ஒளிபுகும் செல்லுலாய்டு தகட்டில் தீட்டி, திரைப்படப் படப்பிடிப்புக் கருவியைக்கொண்டு, இப்படங்களைப் படமாக்குவர்.
- படங்களை எழுதுவதற்குப் பதிலாகப் பொம்மைகளைக் கொண்டும் படங்களைத் தயாரிக்கின்றனர்.
செய்திப்படம்
- உலகில் பல்வேறு பகுதிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளையே படமாக்கிக் காட்டுவது செய்திப்படமாகும்.
- திரைப்படம் எடுப்பதனைவிடச் செய்திப்படம் எடுப்பது கடினமான பணியாகும்.
விளக்கப்படம்
- ஒரு நிகழ்வை மட்டும் எடுத்துக்கொண்டு, அதைப்பற்றிய முழு விளக்கத்தினையும் தருவது விளக்கப்படமாகும்.
கல்விப்படம்
- கல்வி கற்பிப்பதற்கென உருவாக்கப்படும் படங்கள் கல்விப்படங்கள்.
- வாழ்க்கையில் நேரில் காண முடியாத பல இடங்களையும் நேரில் பார்ப்பதனைப் போலவே காட்டுவதற்குக் கல்விப்படம் வழி செய்கிறது.
- அண்ணல் அம்பேத்கர்
- இலக்கணம் – பொது
- நற்றிணை
- புறநானூறு
- பேச்சுக்கலை
- வினா விடை வகைகள் ஒருபொருட்பன்மொழி
- பெரியபுராணம்