10TH பாரதரத்னா எம் ஜி இராமச்சந்திரன்

10TH பாரதரத்னா எம் ஜி இராமச்சந்திரன்

10TH பாரதரத்னா எம் ஜி இராமச்சந்திரன்

10TH பாரதரத்னா எம் ஜி இராமச்சந்திரன்
10TH பாரதரத்னா எம் ஜி இராமச்சந்திரன்

10TH பாரதரத்னா எம் ஜி இராமச்சந்திரன்

  • பாரதரத்னா பட்டம் பெற்றவர் எம்.ஜி.ஆர் எனப்படும் எம்.ஜி. இராமச்சந்திரன் ஆவார்.
  • எம்.ஜி.ஆர் இலங்கையில் உள்ள கண்டியில் 1917ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 17ஆம் நாள் பிறந்தார்.
  • எம்.ஜி.ஆரின் பெற்றோர் = கோபாலமேனன், சத்தியபாமா.
  • எம்.ஜி.ஆருக்கு இரண்டு வயதாகும் பொழுது அவரின் தந்தை மரணம் அடைந்தார்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

  • வறுமையின் காரணமாக எம்.ஜி.ஆரின் குடும்பம் தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணம் நகருக்கு குடிபெயர்ந்தனர்.
  • எம்.ஜி.ஆரின் சகோதரர் = சக்கரபாணி.
  • கும்பகோணத்தில் உள்ள ஆணையடிப் பள்ளியில் இருவரும் சேர்ந்து படித்தனர்.
  • வறுமையின் காரணமாக படிப்பை இருவராலும் தொடர முடியவில்லை.
  • எம்.ஜி.ஆர் மற்றும் அவரின் சகோதரர் சக்கரபாணி இருவருக்கும் நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
  • நாடகங்களில் நடித்து, திரைப்படத்துறையில் ஈடுபட்டுச் சிறுசிறு பாத்திரங்களில் நடித்துக் கதாநாயகனாக உயர்ந்தார்.
  • அறிஞர் அண்ணாவின் பேச்சாற்றல், பழகும் பண்பு, உண்மை, நேர்மை, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவை எம்.ஜி.ஆரை மிகவும் கவர்ந்தது.
  • நடிப்பையும், அரசியலையும் தம் இரு கண்களாக கருதினார் எம்.ஜி.ஆர்.
  • தாம் நடித்த திரைப்படங்கள் வாயிலாக, நல்ல வாயிலாக, நல்ல பல கருத்துகள் மக்களைச் சென்றடையப் பெருமுயற்சி எடுத்தார்.
  • இத்தகைய செயல்பாடுகள் படிப்பறிவற்ற பாமர மக்கள், எளியோர்கள், உழவர்கள், தொழிலாளர்கள் முதலியோரிடையே மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.
  • கடினஉழைப்பே ஒரு நாட்டுக்கு வளர்ச்சியைக் கொடுக்கும் என்று இராமச்சந்திரன் நம்பினார்.
  • மக்கள் அவரை, “புரட்சி நடிகர்” என்றும், “மக்கள் திலகம்” என்றும் போற்றினர்.
  • அறிஞர் அண்ணாவின் நெஞ்சம் கவர்ந்தவராக எம்.ஜி.ஆர். விளங்கியதனால், அவரை அறிஞர் அண்ணா, “இதயக்கனி” என்று போற்றினார்.
  • இவர் 1963ஆம் ஆண்டு, சென்னை மாநிலச் சட்டமன்ற மேலவை உறுப்பினர் ஆனார்.
  • 1967 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பரங்கிமலைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
  • 1972 ஆம் ஆண்டில், தாமிருந்த இயக்கத்தில் இருந்து வெளியேறி புதிய கட்சியை தொடங்கினார்.
  • அவர் 1977ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெருவெற்றி பெற்று முதல்வராகப் பதவி ஏற்றார்.
10TH பாரதரத்னா எம் ஜி இராமச்சந்திரன்
10TH பாரதரத்னா எம் ஜி இராமச்சந்திரன்
  • 11 ஆண்டுகள் தமிழ்நாட்டின் முதல்வராகப் பணியாற்றினார்.
  • சென்னை பல்கலைக்கழகம் அவரது பணிகளைப் பாராட்டி, டாக்டர் பட்டம் வழங்கியது.
  • இந்திய அரசு, சிறந்த நடிகருக்கான பாரத் பட்டம் வழங்கியது.
  • எம்.ஜி. இராமச்சந்திரன் வறுமை, பசிக்கொடுமை ஆகிய இரண்டனையும் இளமையிலேயே உணர்ந்தவர்.
  • அதனால் அவர், பெருந்தலைவர் காமராசர் காலத்தில் அறிமுகப்படுத்திய மதிய உணவுத் திட்டத்தைத் தொடக்கப்பள்ளியில் படிக்கும் குழந்தைகள் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் சத்துணவு வழங்கும் திட்டமாகச் செயல்படுத்தினார்.
  • மதிய உணவுத் திட்டத்தை சத்துணவு வழங்கும் திட்டம் ஆக மாற்றினார்.
  • 12.1987 ஆன்று இயற்கை எய்தினார்.
  • 1988 ஆம் ஆண்டு இந்திய அரசு அவரின் மறைவுக்குப் பின் பாரதரத்னா விருது (இந்திய மாமணி) வழங்கியது.

 

Leave a Reply