10TH வினா விடை வகைகள் ஒருபொருட்பன்மொழி

10TH வினா விடை வகைகள் ஒருபொருட்பன்மொழி

10TH வினா விடை வகைகள் ஒருபொருட்பன்மொழி

10TH வினா விடை வகைகள் ஒருபொருட்பன்மொழி

  • வினா என்றால் என்ன, அதன் வகைகள் பற்றியும், விடை என்பதன் வகைகள் பற்றியும், ஒருபொருட் பன்மொழி என்றால் என்ன என்பதனையும் இங்கு அறிந்துக் கொள்வோம்.

வினா

  • “என்ன? எப்படி? எங்கு? ஏன்? என வினா மேல் வினாவைக் கேட்டு விடையை அறிய விரும்புகிறவனே சிறந்த அறிவாளியாக ஆக முடியும்” என்று கூறியவர்கள் = சாக்ரட்டீஸ், தந்தை பெரியார்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

வினா எத்தனை வகைப்படும்

  • வினா ஆறு வகைப்படும். அவை,
    1. அறிவினா
    2. அறியா வினா
    3. ஐய வினா
    4. கொளல் வினா
    5. கொடை வினா
    6. ஏவல் வினா
10TH வினா விடை வகைகள் ஒருபொருட்பன்மொழி
10TH வினா விடை வகைகள் ஒருபொருட்பன்மொழி

அறிவினா என்றால் என்ன

  • தான் ஒரு பொருளை நன்கறிந்திருந்தும் அப்பொருள் பிறர்க்குத் தெரியுமா என்பதனை அறியும்பொருட்டு வினாவப்படும் வினா அறிவினா.
  • எ.கா = திருக்குறளை இயற்றியவர் யார்? என ஆசிரியர் மாணவனிடம் வினவுவது.

அறியாவினா என்றால் என்ன

  • தான் அறியாத ஒரு பொருளை அறிந்துகொள்வதற்காகப் பிறரிடம் வினவுவது அறியாவினா எனப்படும்.
  • எ.கா = எட்டுத்தொகை நூல்களுள் புறம் பற்றியன எவை ? என மாணவன் ஆசிரியரிடம் வினவுவது.

ஐயவினா என்றால் என்ன

  • தனக்கு ஐயமாக இருக்கின்ற ஒருபொருள் குறித்து, ஐயத்தினைப் போக்கிக் கொள்வதற்காக வினவப்படும் வினா, ஐயவினா எனப்படும்.
  • எ.கா = அங்கே கிடப்பது பாம்போ ? கயிறோ?

கொளல் வினா என்றால் என்ன

  • தான் ஒரு பொருளை வாங்கிக்கொள்ளும்பொருட்டுக் கடைக்காரரிடம் வினவும் வினா, கொளல்வினா எனப்படும்.
  • எ.கா = பருப்பு உள்ளதா? என வணிகரிடம் வினவும் வினா.

கொடை வினா என்றால் என்ன

  • தான் ஒரு பொருளைக் கொடுப்பதற்காக, அப்பொருள் இருத்தலைப்பற்றிப் பிறரிடம் வினவுவது, கொடைவினா எனப்படும்.
  • எ.கா = மாணவர்களே! உங்களுக்குச் சீருடை இல்லையோ?

ஏவல் வினா என்றால் என்ன

  • ஒரு தொழிலைச் செய்யும்படி ஏவும் வினா, ஏவல் வினா எனப்படும்.
  • எ.கா = மனப்பாடச் செய்யுளைப் படித்தாயா?, முருகா சாப்பிட்டாயா?

விடை என்றால் என்ன

  • வினாவிற்கு ஏற்ப விடையளிப்பதுதான் மொழிநடையின் சிறப்பு.
  • வினாவும் விடையும் பிழையின்றி அமைதலே முறை.

விடையின் வேறு பெயர்கள்

  • இறை, செப்பு, பதில் என்பன விடையின் வேறுபெயர்கள் ஆகும்.

விடை எத்தனை வகைப்படும்

10TH வினா விடை வகைகள் ஒருபொருட்பன்மொழி
10TH வினா விடை வகைகள் ஒருபொருட்பன்மொழி
  • விடை எட்டு வகைப்படும். அவை,
    1. சுட்டு விடை
    2. மறை விடை
    3. நேர் விடை
    4. ஏவல் விடை
    5. வினாஎதிர்வினாதல் விடை
    6. உற்றதுரைத்தல் விடை
    7. உறுவது கூறல் விடை
    8. இனமொழி விடை

சுட்டு விடை என்றால் என்ன

  • “சென்னைக்கு வழி யாது?” என்று வினவினால், ‘இது’ என்பது போலச் சுட்டிக் கூறும் விடை, சுட்டுவிடை.

மறை விடை என்றால் என்ன

  • எதிர்மறுத்துக் கூறல் விடை = மறை விடை.
  • “இது செய்வாயா?” என்று வினவியபோது, செய்யேன் என்பது போல எதிர்மறுத்துக் கூறும் விடை, எதிர்மறைவிடை.

நேர் விடை என்றால் என்ன

  • உடன்பட்டுக் கூறுதல் = நேர் விடை ஆகும்.
  • “இது செய்வாயா?” என்று வினவியபோது, செய்வேன் என்று உடன்பட்டுக் கூறும் விடை, நேர்விடை.

ஏவல் விடை என்றால் என்ன

  • “இது செய்வாயா?” என்று வினவியபோது, ‘நீயே செய்’ என்று ஏவிக்கூறுவது ஏவல்விடை.

வினாஎதிர்வினாதல் விடை என்றால் என்ன

  • “இது செய்வாயா ?” என்று வினவியபோது, ‘செய்யாமலிருப்பேனோ ?’ என்று வினாவையே விடையாகக் கூறுவது, வினாஎதிர்வினாதல் விடை ஆகும்.

உற்றதுரைத்தல் விடை என்றால் என்ன

  • “இது செய்வாயா ?” என்று வினவியபோது, ‘உடம்பு நொந்தது’ என்று தனக்கு உற்றதனை விடையாகக் கூறுவது, உற்றதுரைத்தல்விடை.

உறுவதுகூறல் விடை என்றால் என்ன

  • “செய்வாயா?” என்னும் வினாவிற்குக் ‘கை வலிக்கும்’ எனத் தனக்கு வரப்போவதனை விடையாகக் கூறுவது, உறுவதுகூறல்விடை.

இனமொழிவிடை என்றால் என்ன

  • “ஆடுவாயா?” என்று வினவியபோது, ‘பாடுவேன்’ என ஆடுவதற்கு இனமான பாடுவதனை விடையாகக் கூறுவது, இனமொழிவிடை.

வெளிப்படை விடை

  • வெளிப்படை விடைகள் = மூன்று.
  • சுட்டு, மறை, நேர் ஆகிய மூன்றும் வெளிப்படை.

குறிப்பு விடைகள்

  • குறிப்பு விடைகள் = ஐந்து.
  • ஏவல், வினா எதிர்வினாதல், உற்றதுஉரைத்தல், உறுவதுகூறல், இனமொழி ஆகிய ஐந்தும் வினாக்களுக்கு உரிய விடையைக் குறிப்பால் உணர்த்துவன.

ஒருபொருட்பன்மொழி என்றால் என்ன

  • ஒரு பொருளையே தரும் பல சொற்கள் தொடர்வது, ஒருபொருட் பன்மொழியாகும்.
  • எ.கா:
    • திருமால் குன்றம் உயர்ந்தோங்கி நிற்கிறது.
    • அந்த ஏழைக் குழந்தையின் கண்கள் குழிந்தாழ்ந்து.
  • இவ்விரு தொடர்களிலும் ஒருபொருள் குறித்துத் தொடர்ந்துவரும் இருசொற்கள் உள்ளன. அவை உயர்ந்தோங்கிய, குழிந்தாழ்ந்து என்பவை. உயர்ந்து, ஓங்கி ஆகிய இரு சொற்களும், உயர்ந்த என்னும் ஒரே பொருளிலும், குழிந்து, ஆழ்ந்து என்பவை குழிந்து என்னும் ஒரே பொருளிலும் வருகின்றன.
  • எ.கா:
    • நடுமையம்.
    • மீமிசை ஞாயிறு.
  • இத் தொடர்களில் நடுப்பகுதி என்னும் ஒரே பொருளை உணர்த்தும் நடு, மையம் என்னும் இருசொற்களும், மேற்பகுதி என்னும் பொருளைத் தரும் மீ, மிசை என்னும் இருசொற்களும் இணைந்து வந்து ஒரே பொருளை உணர்த்தியுள்ளன.

 

Leave a Reply