10TH TAMIL பெரியபுராணம்
10TH TAMIL பெரியபுராணம்
- அப்பூதியடிகள் பிறந்த ஊர் = திங்களூர்.
- திருநாவுக்கரசரிடம் பேரன்புடையவர் = அப்பூதியடிகள்.
- தன் வீட்டில் உள்ள அனைத்துப் பொருள்களுக்கும் திருநாவுக்கரசர் எனப் பெயர் சூட்டியவர் = அப்பூதியடிகள்.
- அப்பூதியடிகளின் மகனின் பெயர் = திருநாவுக்கரசு.
- பாம்பு கடித்து இறந்த அப்பூதியடிகளின் மகனை எப்பதிகம் பாடி திருநாவுக்கரசர் உயிர் பிழைக்கச் செய்தார் = “ஒன்றுகொலாம்” என்னும் பதிகம்.
- அப்பூதியடிகளிடம் “உணர்வில்லாத சிறுமையேன் யான்” என்று கூறியவர் = திருநாவுக்கரசர்.
- சூலை நோயால் ஆட்கொள்ளப்பட்டு சைவ சமயத்திற்கு மாறியவர் = திருநாவுக்கரசர்.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
சேக்கிழார் ஆசிரியர் குறிப்பு
- பெரியபுராணத்தை அருளியவர் சேக்கிழார்.
- இவர் தற்போதைய காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் பிறந்தவர்.
- சேக்கிழாரின் இயற்பெயர் அருண்மொழித்தேவர்.
- சேக்கிழார் யாரிடம் தலைமை அமைச்சராக பணியாற்றினார் = அநபாயச்சோழனிடம்.
- “உத்தமசோழப் பல்லவர்” என்னும் பட்டம் பெற்றவர் = சேக்கிழார்.
- “தெய்வச் சேக்கிழார்” என்று போற்றப்படுகிறார் இவர்.
- “தொண்டர்சீர் பரவுவார்” என்று அழைக்கப்படுபவர் = சேக்கிழார்.
- சேக்கிழாரின் காலம் கி. பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு.
சேக்கிழார் சிறப்பு பெயர்கள்
- உத்தமசோழப் பல்லவர்
- தெய்வச் சேக்கிழார்
- தொண்டர்சீர் பரவுவார்
பெரியபுராணம் நூல் குறிப்பு
- தனியடியார்கள் மொத்தம் = 63.
- தொகையடியார்கள் மொத்தம் = 9.
- சிவனடியார்கள் மொத்தம் = 72.
- தனியடியார் அறுபத்துமூவரும், தொகையடியார் ஒன்பதின்மரும் ஆக எழுபத்திருவர் சிவனடியார் ஆவர்.
- அவ்வடியார்களின் வரலாற்றைக் கூறுவதால், பெருமை பெற்ற புராணம் என்னும் பொருளில் “பெரியபுராணம்” என்னும் பெயர் பெற்றது.
- பெரியபுராணத்திற்கு சேக்கிழார் இட்ட பெயர் = “திருத்தொண்டர் புராணம்”.
- தில்லை நடராசப்பெருமான், “உலகெலாம்” என்று அடியெடுத்த்துக் கொடுக்கப் சேக்கிழார் பெரியபுராணத்தை படைத்ததாக கூறப்படுகிறது.
பக்திச் சுவைநனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ
- “பக்திச் சுவைநனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ” என்று பாடியவர் = மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார்.
- மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார், “பக்திச் சுவைநனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ” எனச் சேக்கிழார் பெருமானைப் புகழ்கிறார்.
உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியம்
- உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியந்தான், “பெரியபுராணம்” என்பார் திரு.வி.க.
சொற்பொருள்
- காய்ந்தார் – நீக்கினார்
- ஆ – பசு
- நிறைகோல் – துலாக்கோல் (தராசு)
- மந்தமாருதசீதம் – குளிர்ந்த காற்றுடன் கூடிய நீர்
- ஈறு – எல்லை
- புவனம் – உலகம்
- தெருளும் – தெளிவில்லாத
- கமலம் – தாமரை
- திருநீற்றுக்காப்பு – திருநீறு
- பொற்குருத்து – இளமையான வாழைக்குருத்து
- மல்லல் – வளமான
- வால் – கூரிய
- அல்லல் – துன்பம்
- உதிரம் – குருதி
- மறைநூல் – நான்மறை
- பூதி – திருநீறு
- பணிவிடம் – பாம்பின் நஞ்சு
- மனை – வீடு
- மேதி – எருமை
- தடம் – தடாகம்
- சந்தம் – அழகு
- கல்மிதப்பு – கல்லாகிய தெப்பம்
- சூலை – கொடிய வயிற்றுநோய்
- கரம் – கை
- மிசை – மேல்
- நேர்ந்தார் – இசைந்தார்
- ஒல்லை – விரைவு
- ஆம் – அழகிய
- அரா – பாம்பு
- அங்கை – உள்ளங்கை
- மேனி – உடல்
- சேய் – குழந்தை
- மெய் – உண்மை
- சவம் – பிணம்
- வாகீசர் – திருநாவுக்கரசர்.
இலக்கணக்குறிப்பு
- செலவொழியா வலி – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
- உறுவேனில் – உரிச்சொற்றொடர்
- பந்தர் – கடைப்போலி
- பொங்குகடல் – வினைத்தொகை
- அறிந்து, அடைந்து – வினையெச்சம்
- பொழிந்திழிய – வினையெச்சம்
- வந்தவர் – வினையாலணையும் பெயர்
- தாய்தந்தை – உம்மைத்தொகை
- தீண்டிற்று – ஒன்றன்பால் வினைமுற்று
- பூதி சாத்த – இரண்டாம் வேற்றுமைத்தொகை
- நோக்கி – வினையெச்சம்
- பணிவிடம் – ஆறாம் வேற்றுமைத்தொகை
- வழிக்கரை – ஆறாம் வேற்றுமைத்தொகை
- நீர்த்தடம் – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை
- அணைந்த வாகீசர் – பெயரெச்சம்
- பெருமையறிந்து – இரண்டாம் வேற்றுமைத் தொகை
- கரகமலம் – உருவகம்
- தேசம் – இடவாகு பெயர்
- நற்கறிகள், இன்னமுதம் – பண்புத்தொகை
- மல்லலம் குருத்து – உரிச்சொற்றொடர்
- துளங்குதல் – தொழிற்பெயர்
- அங்கணர் – அன்மொழித்தொகை
- எழுந்து, சென்று – வினையெச்சம்
- கேளா – செய்யா என்னும் வாய்ப்பாடு வினையெச்சம்
பிரித்தறிதல்
- செலவொழியா = செலவு + ஒழியா
- வழிக்கரை = வழி + கரை
- வந்தணைந்த = வந்து + அணைந்த
- எம்மருங்கும் = எ + மருங்கும்
- எங்குரைவீர் = எங்கு + உறைவீர்
- கண்ணருவி = கண் + அருவி
- உடம்பெல்லாம் = உடம்பு + எல்லாம்
- திருவமுது = திரு + அமுது
- மனந்தழைப்ப = மனம் + தழைப்ப
- நற்கரிகள் = நன்மை + கறிகள்
- இன்னமுது = இனிமை + அமுது
- வாளரா = வாள் + அரா
- அங்கை = அம் + கை
- நான்மறை = நான்கு + மறை
- பாவிசை = பா + இசை
- தமிழ் வளர்ச்சி
- பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனைகள்
- 10TH TAMIL பெரியபுராணம்
- 10TH TAMIL பெரியபுராணம்
- 10TH TAMIL பெரியபுராணம்
- 10TH TAMIL பெரியபுராணம்
- சொல்
- தொகைச்சொல்
- கம்பராமாயணம்
- அண்ணல் அம்பேத்கர்
- இலக்கணம் – பொது
- நற்றிணை
- புறநானூறு
- பேச்சுக்கலை
- வினா விடை வகைகள் ஒருபொருட்பன்மொழி