11 ஆம் வகுப்பு கண்
11 ஆம் வகுப்பு கண்
- பிறந்தது = மதுரை மாவட்டம் போடி-மீனாட்சிபுரம் கிராமம்.
- பெற்றோர் = நாச்சிமுத்து, இலட்சுமி அம்மாள்.
- படைப்புகள் = சூரியகாந்தி, சகாராவைத் தாண்டாத ஒட்டகங்கள், தாஜ்மகாலும் ரொட்டித்துண்டும்.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
நா காமராசன் சிறப்புகள்
- மறுமலர்ச்சி யுகந்தின் கவிஞராக திகழ்ந்தவர் = நா.காமராசன்
- கிராமிய சந்தங்களுடன் புதுப்பார்வை திகழப் படிமக் கவிதைகள் பலவற்றை எழுதியுள்ளார்.
- இவரின் “கருப்பு மலர்கள்” என்னும் தொகுப்பு நூல், கவிதை உலகில் ஒரு திருப்பத்தை உருவாக்கியது.
படிமம் என்றால் என்ன
- உருவகம் என்ற வழக்கு புதுக் கவிதைகளிலே படிமம் என்று வழங்கப்படும்.
- அத்தகு படிமங்கள் புதுப்புது அகக்காட்சிகளைக் தோற்றுவிக்கும்.
- சொல்லுக்குள் ஆழ்ந்தாழ்ந்து கிடக்கும் இருண்மையும் துலக்கமும் இந்தப் படிமங்கள் வாயிலாய்த் தோன்றித் தோன்றி மறையும்.
- புதுக் கவிதைகளுக்கு உயிர்ப்பும் வாழ்வும் வழங்குவன படிமங்களே எனலாம்.
- கவித்துவக் காட்சிகளை விவரிக்கும் சொல்லாட்சிகளே படிமங்களாகும்.
அருஞ்சொற்பொருள்
- பிரபஞ்சவனம் = உலகமாகியகாடு
- இமைப்புதையல் = இமைகளுக்குள்ளே புதைந்து கிடக்கும் பெருஞ்செல்வம்
- ஊமை வண்டுகள் = கரிய நிறத்து வண்டுகள் போலும் கண்கள்.
- தீபங்கள் = வழிகாட்டிகள்.
இலக்கணக்குறிப்பு
- பகல்பூக்கள் ஏழாம் வேற்றுமைத்தொகை
- புருவக்கொடி = உருவகம்
- மனப்பறவை = உருவகம்