11 ஆம் வகுப்பு அகநானூறு
11 ஆம் வகுப்பு அகநானூறு
- அகம் + நான்கு + நூறு = அகநானூறு.
- அகப்பொருள் இலக்கணத்திற்கு இலக்கியமாய்த் திகழும் 400 பாடல்கள் அமைந்த நூல் அகநானூறு.
- நூலின் அடிஎல்லை = 13 – 31
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
அகநானூறு வேறு பெயர்கள்
- அகம்
- அகப்பாட்டு
- நெடுந்தொகை
அகநானூறு பிரிவுகள் யாவை
- அகநானூறு மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
- அகநானூறு நூலில் உள்ள 3 பிரிவுகள் = களிற்றியானைநிரை, மணிமிடைபவளம், நித்திலக்கோவை
- களிற்றியானைநிரை = 120 பாடல்கள்
- மணிமிடைபவலம் = 180 பாடல்கள்
- நித்திலக்கோவை = 100 பாடல்கள்.
அகநானூறு பாடல் அமைப்பு முறை
- 1,3,5 என ஒற்றைப்படை எங்கள் அமைந்த பாடல்கள் = பாலைத்திணை பாடல்கள்
- 2,8 என வருவன = குறிஞ்சித்திணை பாடல்கள்
- 4,14 என வருவன = முல்லைதினைப் பாடல்கள்
- 6,16 என வருவன = மருதத்திணை பாடல்கள்
- 10,20 என வருவன = நெய்தல் திணை பாடல்கள்.
அகநானூறு தொகுத்தவர்
- அகநானூறு நூலை தொகுத்தவர் = மதுரை உப்பூரிகுடிகிழார் மகனார் உருதிரசன்மனார்
அகநானூறு தொகுப்பித்தவர்
- அகநானூறு நூலை தொகுப்பித்தவர் = பாண்டியன் உக்கிரப்பெருவழுதி
ஔவையார் ஆசிரியர் குறிப்பு
- ஔவையார் சங்ககாலப் பெண்பாற்புலவருள் சிறந்து விளங்கியவர்.
- அவர் அதியமான் நெடுமானஞ்சி என்னும் குறுநில மன்னனுடன் ஆழ்ந்த நட்புக் கொண்டவர்.
- அம்மன்னன் அவைக்களப் புலவராகத் திகழ்ந்தவர்.
- நீண்டநாள் வாழச் செய்யும் அமிழ்தத்தை ஒத்ததோர் அரிய நெல்லிக்கனியைத் தான் உண்ணாது அதியமான் ஔவைக்கு ஈந்து மகிழ்ந்த செய்தியைப் புறநானூற்றால் அறியலாம்.
- ஔவையார் பாடிய பாடல்களைப் புறநானூற்றிலும், நற்றிணையிலும், குறுந்தொகையிலும் காணலாம்.
வெள்ளிவீதியார் ஆசிரியர் குறிப்பு
- வெள்ளிவீதியார் சங்க காலத்தில் வாழ்ந்த பெண்பாற்புலவர்களுள் ஒருவராவர்.
- கரிகாலன் மகள் ஆதிமந்தி என்பவள் தன் கணவனைத் தேடி அலைந்தது போல இவளும் தன் கணவனைத் தேடி அலைந்தாள் என்பதனைச் சங்கப் பாடல்கள் சிலவற்றிற் காண்கிறோம்.
- வெள்ளிவீதியார் கணவனைத் தேடியலைந்த செய்தியை ஔவையார் தனது பாடலில் பதிவு செய்துள்ளார்.
- “காலே பரிதப்பினவே கண்ணே, நோக்கி நோக்கி வாளிழந்தனவே” என்ற இவர் பாடலைக் குறுந்தொகையிற் படிக்கும் பொழுது கற்போர் நெஞ்சம் உருகும்.
- வெள்ளிவீதியார் பாடிய பாடல்களின் எண்ணிக்கை = 11.
- இவர் பாடியனவாகக் குறுந்தொகையில் எட்டும் நற்றிணையில் இரண்டும் அகநானூற்றில் இரண்டும் திருவள்ளுவமாலையில் ஒன்றும் காணக் கிடைக்கின்றன.
காலே பரிதப்பினவே கண்ணே, நோக்கி நோக்கி வாளிழந்தனவே
- “காலே பரிதப்பினவே கண்ணே, நோக்கி நோக்கி வாளிழந்தனவே” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = குறுந்தொகை
- “காலே பரிதப்பினவே கண்ணே, நோக்கி நோக்கி வாளிழந்தனவே” என்று பாடியவர் = வெள்ளிவீதியார்.
சொற்பொருள்
- ஓங்குமலை = உயர்ந்தமலை
- சிலம்பு = மலைச்சாரல்
- வேங்கை பிடவு = மலைநிலத்தே வளரும் மரங்கள்
- ஊன்பொதியவிழாக் கோட்டுகிர் = தசைப்பகுதியினின்று வெளிவராத நகங்கள்
- நிகழ்த்த = வலிமையற்று ஓய்ந்த
- பசிகூர்ந்தன = பசி மிகுந்ததாக
- உழுவை = ஆண்புலி
- முடங்கர் = முடுக்கான இடம்
- ஓர்க்கும் = உற்றுக் கேட்கும்
- கவலை = கிளைவழி
- உண்ணா உயக்கம் = உணவும் உண்ணாத வருத்தம்
- சாஅய் = மெலிவுற்று
- பெயர்வு = நீக்கம் (நீங்குதல்)
- மருந்து பிறிது இன்மை = வேறு மருந்தொன்றும் இன்மையான்
- வினையிலேன் = செயலற்றுப் போயினேன்
இலக்கணக்குறிப்பு
- ஓங்குமலை = வினைத்தொகை
- அவிழாக் கோட்டுகிர் = ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
- நிரம்பா நீளிடை = ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
- நீளிடை = வினைத் தொகை
- உண்ணா உயக்கம் = ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
- சாய் அய் = இசைநிறையளபெடை
- தொல்கவின் = பண்புத்தொகை
- பிரிந்தோர் = வினையாலணையும் பெயர்
- 11 ஆம் வகுப்பு அகநானூறு
- 11 ஆம் வகுப்பு அகநானூறு
- 11 ஆம் வகுப்பு அகநானூறு