11TH TAMIL ஓவியப்பா
நால்வகை புலவர்கள்
- கவிபாடும் திறமைக்கு ஏற்ப புலவர்களை நான்கு வகையாக பிரிப்பர். அவை,
- ஆசுகவி
- மதுரகவி
- சித்திரக்கவி
- வித்தாரக்கவி
ஆசுகவி என்றால் என்ன
- பொருளடி, பாவணி முதலியன தந்து, மற்றொருவன் பாடுக என்ற உடனே பாடுவோன் ஆசுகவி ஆவான்.
மதுரகவி என்றால் என்ன
- பொருட்செல்வம், சொற் செல்வம், தொடை விகற்பம் செறிய, உருவகம் முதலிய அலங்காரத்தோடு இனிய ஓசையுடன் அமுதமுறப் பாடுவோன் மதுரகவி ஆவான்.
சித்திரக்கவி என்றால் என்ன
- மாலைமாற்று, சுழிகுளம், நாகபந்தம், சக்கரம், எழுகூற்றிருக்கை முதலிய மிளிர கவி பாடுவோன் சித்திரகவி.
வித்தாரக்கவி என்றால் என்ன
- மாலை, யமகம், கலம்பகம், தசாங்கம், புராணம் முதலியன விரித்துப் பாடுவோன் வித்தாரகவி.
பனுவர் என்றால் யார்
- ஆசுகவி, மதுரக்கவி, வித்தாரக்கவி, சித்திரக்கவி ஆகிய கவிகளைப் பாடுவோர் பனுவர் எனப்பட்டனர்.
|
11TH TAMIL ஓவியப்பா
- சித்திரகவியை ‘ஓவியப்பா’ என்றும் கூறுவர்.
- சித்திரகவி என்பது தமிழில் காணப்படும் இலக்கிய வகைமைகளுள் ஒன்று.
சித்திரக்கவியின் தோற்றுவாய்
- சித்திரக்கவியின் தோற்றுவாய் எனப்படுவது = தொல்காப்பியம் குறிப்பிடும் ‘வண்ணங்கள்’ ஆகும்.
- ஓவியப் பாங்குடன் அமைந்த சித்திரக்கவி நூல் = திருமங்கையாழ்வாரால் பாடப்பட்ட ‘திருவெழுகூற்றிருக்கை’.
- திருமங்கையாழ்வாரை பின்பற்றி சித்திரக்கவி பாடியவர் = அருணகிரிநாதர்
- சித்திரக்கவி படைத்த மற்றொருவர் = பாம்பன் சுவாமிகள்
நாகபந்தம் என்றால் என்ன
- ஓவியப்பாவின் வகைகளுள் ‘நாகபந்தம்’ என்பதும் ஒன்று.
- நாகப்பிணை என இதனைத் தனித்தமிழ்ச் சொற்களால் குறிப்பிடலாம்.
- இரண்டு, நான்கு, எட்டு என நாகப்பாம்புகள் ஒன்றோடொன்று பின்னிக்கொண்டிருப்பது போலப் படம் வரையப்படும்.
- பாடல் ஒன்றின் எழுத்துகள் நாகங்களின் தலையிலிருந்து வால் வரையில் உள்ள கட்டங்களில் எழுதப்பட்டிருக்கும்.
- எந்த நாகத்தின் தலையிலிருந்து படித்தாலும் அதே பாடல் வரும்படி பாடலின் அமைப்பு இருக்கும்.
- இவ்வாறு அமைக்கும்போது, கவிதையின் மொத்த எழுத்துகளும் சித்திரத்திற்குள் சுருங்கித்தோன்றும்.
- சொல்வளம் மிக்கவர் பாடுவது = நாகபந்தம்.
இரட்டை நாகபந்தம் என்றால் என்ன
- இரண்டு பாம்புகள் ஒன்றோடு ஒன்று பின்னிப்புணர்ந்து விளையாடுவன போலச் சித்திரம் வரைந்து, அப்பாம்பின் உருவங்களில் கணக்கிட்ட அறைகள் வகுத்துச் சந்திகளில் நின்ற அறைகளில் பொதுவான எழுத்துகளமையப் பாடப்படுவது, இரட்டை நாகபந்தம் ஆகும்.
- இரட்டை நாகபந்தத்தில் பாம்பின் தலைப்பகுதியிலிருந்து தொடங்கி வால் பகுதி வரைசென்று பொருள்காண வேண்டும்.