11TH TAMIL சிற்றிலக்கியங்கள்

11TH TAMIL சிற்றிலக்கியங்கள்

11TH TAMIL சிற்றிலக்கியங்கள்
11TH TAMIL சிற்றிலக்கியங்கள்

11TH TAMIL சிற்றிலக்கியங்கள்

ஆசியா உம்மா பாடல்கள் – சூஃபித்துவம்

  • மெய்ஞ்ஞானத்தேடலையும் மறைபொருள் சார்ந்த ஆன்மீக உட்பரிமாணத்தையும் குறிப்பதே சூஃபித்துவம்.
  • அதன் தொடக்கப் புள்ளியாக அலி இபின் அபி தாலிஃப் கருதப்படுகிறார்.
  • சூஃபித்துவத்தின் ஆணிவேர், இசுலாத்தின் அடிப்படையான மனிதநேயத்திலும் ஆன்மீகத்திலும் வேரூன்றியுள்ளது.
  • தத்துவக்கோட்பாடுகளையும் அறிவு சார்ந்த தருக்கங்களையும் தாண்டி, ஆழ்ந்த அன்பையும் பக்தியையும் வலியுறுத்தும் அகத்தரிசனமே சூஃபித்துவத்தின் அடிப்படை எனலாம்.
  • தூய்மையான ஆன்மீகத் தேடலில் மானுட இருப்பினை மீட்பதே சூஃபிக்களின் நோக்கமாகும்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

ஆசியா உம்மா

  • சீதக்காதி மரபு வந்த ஹபீபு முகம்மது மரைக்காயருக்கும் ஹபீபு உம்மாவுக்கும் மகளாகப் பிறந்தவர் செய்யிது ஆசியா உம்மா.
  • இவர் கல்வத்து நாயகத்தின் சீடர்.
  • இவர் மெய்ஞ்ஞான தீப இரத்தினம், மாலிகா இரத்தினம் ஆகிய பாடல்களை அரபுத்தமிழ் வடிவத்தில் இயற்றினார்.
  • இவை ‘மெய்ஞ்ஞானப் பாடல் எனும் தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ளன.

கீர்த்தனை

  • சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று = கீர்த்தனை
  • “கீர்த்தி” என்ற சொல்லுக்கு பொருள் = புகழ், இசை
  • கீர்த்தனை என்பதை இசைப்பாடல் என்பர்.
  • இசைக்கூறுகள் மிகுந்து காணப்படுவதால் இதனை கீர்த்தனை என்பர்.
  • கீர்த்தனையாக வளர்ச்சி பெற்ற பாடல் வகை = சிந்து பாடல் வகை
  • கீர்த்தனைகளில் முதன்மை அளிக்கப்படுவது = சொற்களுக்கு

கீர்த்தனைகளின் மூன்று நிலை

  • கீர்த்தனைகளில் மூன்று நிலைகள் உள்ளன. அவை,
    • பல்லவி
    • அநுபல்லவி
    • சரணம்

கீர்த்தனை சிற்றிலக்கியம்

  • 17 நூற்றாண்டில் தோன்றி வளர்ந்த இச்சிற்றிலக்கியம், பிற்காலத்தில் மக்களின் சிக்கல்களையும் பேசத் துவங்கியது.

சர்வ சமய சமரசக் கீர்த்தனைகள்

11TH TAMIL சிற்றிலக்கியங்கள்
11TH TAMIL சிற்றிலக்கியங்கள்
  • “சர்வ சமய சமரசக் கீர்த்தனைகள்” என்னும் இசைப்பாடல நூலினை பாடியவர் = மாயூரம் வேதநாயகம் பிள்ளை ஆவார்.
  • இந்நூலின் பெயருக்கு ஏற்ப அணைத்து சமயத்திற்க்கும் பொதுவான சமரசக் கீர்த்தனையை வேதநாயகம் அவர்கள் பாடியுள்ளார்.
  • சர்வ சமய சமரசக் கீர்த்தனை நூலின் உள்ள மொத்த கீர்த்தனைகள் = 192 கீர்த்தனை பாடல்கள்.

நூல் பாகுபாடு

  • வேதநாயகர் இவற்றை, ஐந்தாக வகைப்படுத்தியுள்ளார். அவை,
    • தேவதோத்திரக் கீர்த்தனைகள்
    • ஈசுவர வருடத்துப் பஞ்சத்தைப் பற்றிய கீர்த்தனைகள்
    • ஹிதோபதேசக் கீர்த்தனைகள்
    • உத்தியோக சம்பந்தக் கீர்த்தனைகள்
    • குடும்ப சம்பந்தக் கீர்த்தனைகள்

மாயுரம் வேதநாயகம் பிள்ளை

  • வேதநாயகர் திருச்சிராப்பள்ளிக்கு அருகில் உள்ள குளத்தூரில் பிறந்தவர்.
  • சிறுவயதிலேயே ஆங்கிலப் பயிற்சி பெற்றமையால், ஆங்கில அரசாங்கம் இவரை மாவட்ட நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராக அமர்த்தியது.
  • பின்பு, தரங்கம்பாடி, சீர்காழி, மாயூரம் ஆகிய இடங்களில் மாவட்ட நீதிமன்றத்தில் முன்சீப்பாகப் பணியாற்றினார்.
  • கி.பி. (பொ.ஆ.) 1876 ஆம் ஆண்டு வெளியான இவரின் பிரதாப முதலியார் சரித்திரம்’ என்னும் புதினம் தமிழில் வெளியான முதல் புதினம் ஆகும்.
  • மாயுரம் வேதநாயகம் பிள்ளை பற்றி மேலும் 
    அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply