12 ஆம் வகுப்பு சிலப்பதிகாரம்

12 ஆம் வகுப்பு சிலப்பதிகாரம்

12 ஆம் வகுப்பு சிலப்பதிகாரம்
12 ஆம் வகுப்பு சிலப்பதிகாரம்

12 ஆம் வகுப்பு சிலப்பதிகாரம்

  • தமிழில் தோன்றிய முதல் பெருங்காப்பியம் சிலப்பதிகாரம்.
  • இக்காப்பியம் நெஞ்சை அள்ளும் சுவையுடையது.
  • சிலம்பால் உருவான நிகழ்வுகளையும் வரலாற்றையும் கூறுவதால் சிலப்பதிகாரம் எனப்பெயர் பெற்றது.
  • உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்று இந்நூல் அறியப்படுகிறது.
  • இக்காப்பியத்தைப் படைத்த இளங்கோவடிகள் சமண சமயம் சார்ந்தவர். கி.பி. 2-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இளங்கோவடிகளைச் சேரன் செங்குட்டுவனின் தம்பி என்பர்.
  • இந் நூல் புகார்க்காண்டம் , மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம் என்ற மூன்று காண்டங்களையும், மங்கல வாழ்த்துப் பாடல்” தொடங்கி “வரந்தரு காதை” ஈறாக முப்பது காதைகளையும் உடையது.

சிலப்பதிகாரம் கூறும் மூன்று உண்மைகள்

  1. அரைசியல் பிழைத்தோர்க்கு அறம்கூற்று ஆவதூஉம்
  2. உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்தலும்
  3. ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதூஉம்

சிலப்பதிகாரக் காப்பியச் சுருக்கம்

  • மாசாத்துவான் மகன் கோவலன்
  • மாநாய்க்கன் மகள் கண்ணகி.
  • கோவலன் கண்ணகியை திருமணம் செய்து, பின்பு மாதவியிடம் சென்று வாழ்கிறான்.
  • பின்பு மாதவியை விடுத்து, கண்ணகியிடம் திரும்பி செல்கிறான்.
  • கண்ணகியின் சிலம்பை விற்று மீண்டும் செல்வதை ஈட்ட வேண்டும் என்ற நோக்கில் மதுரை செல்கிறான் கோவலன்.
  • மதுரையில் கள்வன் எனக் கூறப்பட்டு கோவலன் கொள்ளப்படுகிறான்.
  • மதுரையை எரித்து கண்ணகி, இறுதியாக சேரநாடு செல்கிறாள்.

காப்பிய நாயகி கண்ணகி

  • காப்பிய நாயகியான கண்ணகியே இக்காப்பியத்தில் முதன்மைப் படுத்தப்படுகிறாள்.
  • அவளை அறிமுகம் செய்யவந்த இளங்கோவடிகள், இவ்வாறு கூறுகிறார்.

போதிலார் திருவினாள் புகழுடை வடிவென்றும்

தீதிலா வடமீனின் திறமிவள் திறமென்றும்

மாதரார் தொழுதேத்த வயங்கிய பெருங்குணத்துக்

காதலாள் பெயர்மன்னுங் கண்ணகியென் பாள்மன்னோ

சிலப்பதிகாரக் காப்பியச் சிறப்புகள்

  • குடிமக்கள் காப்பியம், முத்தமிழ்க் காப்பியம், நாடகக் காப்பியம், தேசியகாப்பியம் முதலான சிறப்புப்பெயர்களால் இந்நூல் அழைக்கப்படுகிறது.
  • அரங்க அமைப்பு முறைகள் பற்றிய செய்திகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
  • பூம்புகார், மதுரை, வஞ்சிமாநகர் பற்றிய வரலாற்றுச் செய்திகளையும், அக்காலச் சமுதாய அமைப்பு, ஆடல் வகைகள், இசைக் கருவிகள், கல்வி, வணிகம் பற்றிய குறிப்புகளையும், மூவேந்தர் ஆட்சிமுறை பற்றிய செய்திகளையும் கூறுகிறது.
  • ஆகவே தமிழர்க்குக் கிடைத்த அரிய காப்பியக் கருவூலமாகச் சிலம்பைக் கருதலாம்.
  • சிலப்பதிகாரம் பற்றி மேலும் அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

 

 

 

 

 

Leave a Reply