SAMACHEER KALVI 12TH TAMIL சிறுபாணாற்றுப்படை

SAMACHEER KALVI 12TH TAMIL சிறுபாணாற்றுப்படை

SAMACHEER KALVI 12TH TAMIL சிறுபாணாற்றுப்படை

SAMACHEER KALVI 12TH TAMIL சிறுபாணாற்றுப்படை

  • சிறுபாணாற்றுப்படையை இயற்றியவர் நல்லூர் நத்தத்தனார். இது பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று; ஓய்மாநாட்டு மன்னனான நல்லியக்கோடனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு 269 அடிகளில் எழுதப்பட்ட நூல்.
  • பரிசுபெற்ற பாணன் ஒருவன் தான் வழியில் கண்ட மற்றொரு பாணனை அந்த அரசனிடம் ஆற்றுப்படுத்துவதாக இது அமைந்துள்ளது.
  • வள்ளல்களாகக் கருதப்பட்ட குறுநில மன்னர்கள் பற்றிய செய்திகள் இப்பாடப்பகுதியில் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன.

பா வகை

  • நம் பாடப்பகுதியான சிறுபாணாற்றுப்படையில் அமைந்து வந்துள்ள பா வகை = நேரிசை ஆசிரியப்பா

கடையேழு வள்ளல்கள் வாழ்ந்த இடம்

பேகன்

பொதினி மலை
பாரி

பறம்பு மலை

காரி

மலையமான் நாடு
ஆய்

பொதிய மலை

அதிகன் (அதியமான்)

தகடூர்
நள்ளி

நளிமலை

ஓரி

கொல்லிமலை

அருஞ்சொற்பொருள்

  • வளமலை – வளமான மலை (மலைநாடு) இன்று பழநி மலை என்று அழைக்கப்படுகிறது;
  • கவாஅன் – மலைப்பக்கம்
  • கலிங்கம் – ஆடை
  • சுரும்பு – வண்டு
  • நாகம் – சுரபுன்னை , நாகப்பாம்பு
  • பிறங்கு – விளங்கும்
  • பறம்பு – பறம்பு மலை
  • கறங்கு – ஒலிக்கும்
  • வாலுளை – வெண்மையான தலையாட்டம்
  • மருள – வியக்க
  • நிழல் – ஒளி வீசும்
  • நீலம் – நீலமணி
  • ஆலமர் செல்வன் – சிவபெருமான் (இறைவன்)
  • அமர்ந்தனன் – விரும்பினன்
  • சாவம் – வில்
  • மால்வரை – பெரியமலை (கரிய மலையுமாம்)
  • கரவாது – மறைக்காது
  • துஞ்சு – தங்கு
  • நளிசினை – செறிந்த கிளை (பெரிய கிளை)
  • போது – மலர்
  • கஞலிய – நெருங்கிய
  • நாகு – இளமை
  • குறும்பொறை – சிறு குன்று
  • கோடியர் – கூத்தர்
  • மலைதல் – போரிடல்
  • உறழ் – செறிவு
  • நுகம் – பாரம்

இலக்கணக் குறிப்பு

  • வாய்த்த, உவப்ப, கொடுத்த, ஈந்த – பெயரெச்சங்கள்
  • கவாஅன் – செய்யுளிசையளபெடை
  • தடக்கை – உரிச்சொல் தொடர்
  • நீலம் – ஆகுபெயர்
  • அருந்திறல், நெடுவழி, வெள்ளருவி, நெடுவேல், நன்மொழி, நன்னாடு- பண்புத் தொகைகள்
  • கடல்தானை – உவமைத்தொகை
  • அரவக்கடல் – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
  • மலைதல் – தொழிற்பெயர்
  • விரிகடல் – வினைத்தொகை

பிரித்து எழுதுக

  • நன்மொழி = நன்மை + மொழி
  • உரனுடை = உரன் + உடை

கடையேழு வள்ளல்கள்

  • வளமலையில் வாழும் மயிலுக்கு ஆடையை வழங்கியவன், பேகன்.
  • முல்லைக்கொடிக்கு தேரினை தந்தவன், பாரி.
  • இரவலர்க்கு இல்லை என்று கூறாமல் கொடுத்தவன், காரி.
  • நீல வண்ணக் கல் மற்றும் நாகம் வழங்கிய ஆடையை இறைவனுக்கு அளித்தவன், ஆய்.
  • நெல்லிக்கனியை ஒளவைக்கு அளித்தவன், அதிகன்.
  • குறிப்பறிந்து பொருள்களை வழங்கியவன், நள்ளி
  • மலை நாட்டை கூத்தர்க்கு பரிசாக வழங்கியவன், ஓரி

நல்லியக்கோடன்

  • நல்லியக்கோடன், தானே தனியொருவனாக இருந்து ஈகை என்னும் பாரத்தை தாங்கி இழுத்து செல்லும் வலிமை உடையவன்.
  • ஓய்மா நாட்டு நல்லியக்கோடனது நாடு திண்டிவனத்தைச் சார்ந்தது ஓய்மா நாடு என அழைக்கப்பட்ட நிலப்பகுதி ஆகும்.

கடையேழு வள்ளல்களின் பகுதிகள்

SAMACHEER KALVI 12TH TAMIL சிறுபாணாற்றுப்படை

பேகன்

  • பேகனின் ஊரான ஆவினன்குடி ‘பொதினி’ என்றழைக்கப்பட்டு, தற்போது பழனி எனப்படுகிறது.
  • பழனி மலையும் அதைச் சுற்றிய மலைப்பகுதிகளும் பேகனது நாடாகும்.

பாரி

  • பாரியின் நாடு பறம்பு மலையும், அதைச் சூழ்ந்திருந்த முந்நூறு ஊர்களும் ஆகும்.
  • பறம்பு மலையே பிறம்பு மலையாகி, தற்போது பிரான்மலை எனப்படுகிறது. இம்மலை சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டத்தில் சிங்கம்புணரிக்கு அருகில் உள்ளது.

காரி

  • காரியின் நாடு (மலையமான் திருமுடிக்காரி) மலையமான் நாடு என்பதாகும். இது மருவி ‘மலாடு’ எனப்பட்டது.
  • இது விழுப்புரம் மாவட்டம் தென்பெண்ணை ஆற்றங்கரையில் அமைந்துள்ள திருக்கோவிலூரும் (திருக்கோயிலூர்) அதைச் சூழ்ந்துள்ள பகுதிகளுமாகும்.

ஆய்

  • ஆய் நாடு (ஆய் அண்டிரன்) – பொதிய மலை எனப்படும் மலை நாட்டுப் பகுதியாகும்.
  • தற்போது அகத்தியர் மலை என்றும் அழைக்கப்படுகிறது.
  • இது திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றாலம், பாபநாசம் ஆகிய மலைப்பகுதிகளும் அதைச் சூழ்ந்துள்ள பகுதிகளுமாகும்.

அதியமான்

  • அதியமான் நாடு (அதிகமான் நெடுமான் அஞ்சி) ‘தகடூர்’ என்றழைக்கப்பட்ட தருமபுரியைத் தலைநகராகக் கொண்டு விளங்கிய பகுதி.
  • இப்பகுதியில் உள்ள ‘பூரிக்கல்’ மலைப்பகுதியில் இருந்து பறித்து வந்த நெல்லிக்கனியையே ஔவையாருக்கு அதிகமான் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

நள்ளி

  • நள்ளியின் நாடு (நளிமலை நாடன்) நெடுங்கோடு மலை முகடு என்றழைக்கப்பட்ட பகுதி.
  • ற்போது உதகமண்டலம் ஊட்டி என்று கூறப்படுகிறது.

ஓரி

  • ஓரியின் நாடு (வல்வில் ஓரி) – நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ‘கொல்லி மலையும்’ அதைச் சூழ்ந்துள்ள பல ஊர்களும் ஆகும்.

அறிமடமும் சான்றோர்க்கு அணி

  • முல்லைக் கொடி படரத் தேர் தந்த பாரியின் செயலும், மயிலுக்குத் தன் ஆடையைத் தந்த பேகனின் செயலும் அறியாமையால் செய்யப்பட்டவையல்ல.
  • இஃது அவர்களின் ஈகை உணர்வின் காரணமாகச் செய்யப்பட்டதேயாகும்.
  • இச்செயலே இவர்களின் பெருமைக்குப் புகழ் சேர்ப்பதாகிவிட்டது.
  • இதையே, பழமொழி நானூறு, “அறிமடமும் சான்றோர்க்கு அணி” என்று கூறுகிறது.

குமண வள்ளல்

  • புறநானூறு குறிப்பிடும் மற்றொரு வள்ளல் குமணன்.
  • இவன் முதிர மலையை (பழனி மலைத்தொடர்களில் ஒன்று) ஆட்சி செய்த குறுநில மன்னனாவான்.
  • தன் தம்பியாகிய இளங்குமணனிடம் நாட்டைக் கொடுத்துவிட்டுக் காட்டில் மறைந்து வாழ்ந்தான்.
  • இளங்குமணன் தன் அண்ணனின் தலையைக் கொய்து தருவோர்க்குப் பரிசில் அறிவித்திருந்தான்.
  • அப்போது தன்னை நாடிப் பரிசில் பெற வந்த பெருந்தலைச் சாத்தனார் எனும் புலவர்க்குக் கொடுப்பதற்குத் தன்னிடம் பொருள் இல்லாமையால், தன் இடையிலுள்ள உறைவாளைத் தந்து, “தன் தலையை அரிந்து சென்று, இளங்குமணனிடம் கொடுத்துப் பரிசில் பெற்றுச் செல்லுமாறு” கேட்டுக் கொண்டான்.
  • இதனால் இவன் ‘தமிழுக்குத் தலை கொடுத்த குமண வள்ளல்’ என்று போற்றப்படுகிறான்.
  • புறநானூறு 158 – 164, 165 ஆகிய பாடல்களிலும் இவனைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.

சிறுபாணன் பயணம்

SAMACHEER KALVI 12TH TAMIL சிறுபாணாற்றுப்படை

 

 

SAMACHEER KALVI 12TH TAMIL சிறுபாணாற்றுப்படை SAMACHEER KALVI 12TH TAMIL சிறுபாணாற்றுப்படை SAMACHEER KALVI 12TH TAMIL சிறுபாணாற்றுப்படை SAMACHEER KALVI 12TH TAMIL சிறுபாணாற்றுப்படை SAMACHEER KALVI 12TH TAMIL சிறுபாணாற்றுப்படை SAMACHEER KALVI 12TH TAMIL சிறுபாணாற்றுப்படை

Leave a Reply