12 ஆம் வகுப்பு தமிழ்நாட்டுக் கலைச்செல்வங்கள்

12 ஆம் வகுப்பு தமிழ்நாட்டுக் கலைச்செல்வங்கள்

12 ஆம் வகுப்பு தமிழ்நாட்டுக் கலைச்செல்வங்கள்
12 ஆம் வகுப்பு தமிழ்நாட்டுக் கலைச்செல்வங்கள்

 

12 ஆம் வகுப்பு தமிழ்நாட்டுக் கலைச்செல்வங்கள்

  • தமிழகத்திலே காணப்பெறும் கலைச்செல்வங்களைக் காணும்போது தமிழர்கள் மிகப் பழங்காலம் தொட்டே கலையைப் பேணிப் பாதுகாத்து வந்திருக்கின்றனர் என்பது தெரியவரும்.
  • கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, இசைக்கலை, நாட்டியக்கலை என்று பல்வகையாகப் பிரித்து நாடோறும் வளர்த்திருக்கின்றனர்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

கட்டடக்கலை

  • கட்டடக்கலை என்றால் கோயில்களின் கட்டடக்கலையைத் தான் கூறமுடிகிறது.
  • மற்றபடி அரசர்கள் வாழ்ந்த அரண்மனைகள் பற்றியோ, செல்வந்தர்கள் வாழ்ந்த மாளிகைகளைப் பற்றியோ பொது மக்கள் வீடுகளைப் பற்றியோ கூற முடியவில்லை.
  • ஏனெனில், அவற்றைப்பற்றி இலக்கியங்கள் கூறும் செய்திகள் அல்லாது, நேரிடைச் சான்றுகள் ஏதும் கிட்டாததனாலேயாகும்.
  • கொற்கையில் நிகழ்ந்த அகழ்வாய்விலும் உறையூரில் மேற்கொண்ட அகழ்வாய்விலும் கி.பி. 11-12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கட்டடப் பகுதிகள் கிடைத்தன.
  • அண்மையில் தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத் துறையால் கங்கைகொண்ட சோழபுரத்தின் பகுதியான உள்கோட்டையில் முதலாம் இராசேந்திர சோழன் எடுப்பித்து, வாழ்ந்த அரண்மனைப் பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குடைவரைக் கோயில்கள்

  • தமிழகத்தின் பல பகுதிகளில் குடைவரைக் கோயில்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
  • பல்லவர்கள், பாண்டியர்கள், அதியர், முத்தரையர் ஆகியோர் அமைத்தவைகளாகும் அவை.
  • கி.பி. 9 ஆம் நூற்றாண்டோடு குடைவரைக் கோயில்கள் அமைக்கும் பணி நின்று விட்டது.
12 ஆம் வகுப்பு தமிழ்நாட்டுக் கலைச்செல்வங்கள்
12 ஆம் வகுப்பு தமிழ்நாட்டுக் கலைச்செல்வங்கள்

பழமையான குடைவரைக் கோவில்

  • தமிழகத்தில் காணப்படும் குடைவரைக் கோவில்களில் மிகவும் பழமையானது = இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பிள்ளையார்ப்பட்டி என்னும் ஊரின் குடைவரைக் கோயிலே தமிழகத்தில் இன்று காணப்பெறும் குடைவரைக் கோயில்களுள் பழமையானதாகும்.
  • இதனைக் கட்டியோர் பாண்டியர்கள்.

குன்றுகளை செதுக்கி கோயில்கள் உருவாக்கம்

  • பல்லவர் = மாமல்லபுரத்தில் உள்ள ஐந்து ரத கோவில்கள்
  • பாண்டியர்கள் = கழுகுமலையில் உள்ள வெட்டுவான் கோயில்.
  • இம்முறை கி.பி. 8 ஆம் நூற்றாண்டளவிலேயே நின்றுவிட்டது.

கற்கோவில்கள்

  • கற்களை ஒன்றோடு ஒன்றாக அடுக்கி அமைக்கும் கோயிற்பணி பல்லவர், பாண்டியர் காலந்தொட்டு ஏற்பட்டு இந்நாள் வரை தொடர்ந்து நிலவி வருகிறது.
  • பல்லவர் = மாமல்லபுரத்துக் கடற்கரைக் கோயில், காஞ்சிபுரத்துக் கைலாயநாதர் கோயில்
  • பாண்டியர் = திருப்பத்தூர் திருத் தளிநாதர் கோயில்
  • சோழர் = நார்த்தாமலை விசயாலய சோழீச்சுரம், தஞ்சை இராசராசேச்சுரம் என்னும் தஞ்சைப் பெருவுடையார் கோயில், கங்கைகொண்ட சோழபுரத்துக் கங்கைகொண்ட சோழீச்சுரம், தாராசுரம் ஐராவதேசுவரர் கோயில், திரிபுவனம் திரிபுவன வீரேச்சுரம் கோவில்.

கோபுரம் அமைத்தல்

  • கோயில்களில் கோபுரம் அமைத்தல் பல்லவர் காலத்தில் தொடங்கி விசயநகர மன்னர்கள் காலத்தில் மிகவும் உன்னத நிலை எய்தியது.

சிற்பக்கலை

  • விலங்கினங்களில் குறிப்பாக, யானையின் உருவத்தைச் செதுக்குவதில் பல்லவர் காலத்துச் சிற்பிகள் கை தேர்ந்தவர்களாக விளங்கியிருக்கின்றனர்.
  • பல்லவர் காலச் காலச் சிற்பங்களை மாமல்லபுரம் ஒன்றிலேயே கண்டு களித்துவிடலாம்.
  • கோயில்களின் அதிட்டானத்தில் காணப்படும் சிறு சிற்பங்கள் சோழர்காலச் சிற்பிகளின் வல்லமையைப் புலப்படுத்துவனவாகும்.
  • இராமாயணக் காட்சிகளையும், சிவபுராணக் காட்சிகளையும் தேர்ந்தெடுத்துச் சிறுசிறு புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கியிருப்பது அவர்களின் சிற்பக்கலைத் திறனுக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.
  • கடவுள் தன்மைக்கும் கலை அம்சத்துக்கும் தரப்பட்ட முக்கியத்துவம், விசயநகர நாயக்கர் காலங்களில் மனிதத் தன்மைக்கும் உடற்கூறுகளுக்கும் தரப்படலாயின.

செப்புப்படிமக் கலை

  • இன்றைக்கு சுமார் 2800 ஆண்டுகட்கு முன்பிருந்தே தமிழ்நாட்டில் செப்புப்படிமக்கலை மிக உன்னத நிலையில் வளர்ச்சி பெற்றிருக்கிறது.
  • “தெய்வச் செப்புத் திருமேனி” கிடைத்த இடம் = திருநெல்வேலி மாவட்டம் ஆதிச்சநல்லூர்.
  • செப்புப்படிமக்கலை பழக்கத்தில் இருந்ததா இல்லையா என்பதுபற்றி ஆராய்ச்சியாளர்களிடையே கருத்து வேறுபாடு உள்ள காலம் = பல்லவர் காலம்.
  • பல்லவர் காலத் செப்புத் திருமேனிகள் = கூரம் நடராசர், கொடுமுடி திரிபுராந்தகர், திரிபுரசுந்தரி செப்புத் திருமேனிகள்.

செப்புத் திருமேனிகளின் பொற்காலம்

  • செப்புத் திருமேனிகளின் பொற்காலம் எனப்படும் காலம் = சோழர்கள் காலம்.
  • செப்புத் திருமேனிகள் அதிகளவில் செய்யப்பட்ட காலம் = சோழர்கள் காலம்.
  • செம்பியன் மாதேவி போன்ற சோழப் பேரரசிகள், செப்புத் திருமேனிகள் செய்தளிப்பதைத் தாம் இம்மண்ணுலகில் பிறந்ததன் கடமை என்று எண்ணினர்.

சிறப்பு இழத்தல்

  • சிற்பக்கலை எவ்வாறு பிற்காலத்தில் சீரழிந்ததோ அதே போன்று செப்புப் படிமக்கலையும் விசயநகர நாயக்கர் காலத்தில் சிறப்பிழந்து காணப்படுகிறது.

ஓவியங்கள்

  • “எவ்வகைச் செய்தியும் உவமங்காட்டி” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = மதுரைக்காஞ்சி.
  • “மையறு படிவத்து வானவர் முதலா – எவ்கையுயிர்களும் உவமங் காட்டி” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = மணிமேகலை.
12 ஆம் வகுப்பு தமிழ்நாட்டுக் கலைச்செல்வங்கள்
12 ஆம் வகுப்பு தமிழ்நாட்டுக் கலைச்செல்வங்கள்

ஓவியக்கலை

  • தமிழ்நாட்டில் தற்போது கிடைத்துள்ள ஓவியங்களில் மிகவும் பழமையானவை = பல்லவர் கால ஓவியங்கள்.
  • ஓவியக்கலையில் பெரும்பணி புரிந்த மன்னர்கள் = பல்லவர்கள்.
  • பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் தானே ஒரு சிறந்த ஓவியனாகத் திகழ்ந்துள்ளான்.
  • தமிழ் மன்னர் இவ்வாறு வளர்த்த ஓவியங்களை அவர்கள் கட்டிய கோயில்களின் நுழைவாயிலின் இரு பக்கங்களிலும் கருப்பக்கிரகச் சுவர்களிலும் பிரகாரங்களிலும் விதானத்திலும் தீட்டினர்.
  • அவ்வாறு தீட்டப்பட்ட ஓவியங்கள் மாமண்டூர்க் குகைகளின் வெளி மண்டபத்திலும் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில், பனமலைக் கோயில், தஞ்சைப் பெருவுடையார் கோயில் முதலிய பல இடங்களிலும் காணப்பெறுகின்றன.

ஆடல் மகள் ஓவியம்

  • பனமலையில் உள்ள மண்டபத்தில் காணப்படும் எழிலார்ந்த ஆடல் மகளின் ஓவியம் மிகச் சிறப்பு வாய்ந்தது.
  • ஆடல் மகள் ஓவியம் கிடைக்கப்பெற்ற இடம் = பனைமலை கோவில்.

மரச் சிற்பக்கலையும் தந்தச் சிற்பக்கலையும்

  • மரச் சிற்பக்கலை கி.பி.16 ஆம் நூற்றாண்டிலிருந்தே காணப்படுகிறது.
  • தந்தச் சிற்பக்கலை குறிப்பாக, நாயக்க மன்னர்கள் காலங்களில்தான் சிறப்புப் பெற்றிருக்கிறது.
  • திருவரங்கத்தில் நாயக்க மன்னர், அவரது பட்டத்தரசி ஆகியோரது உருவங்கள் நான்கடி உயரத்தில் தந்தத்தில் கம்பீரமாகக் காட்சியளிக்கின்றன.
  • மதுரைக்கு அருகிலுள்ள அழகர் கோயிலிலும் தந்தச் சிற்பங்கள் நிரம்ப இருக்கின்றன.
  • 12 ஆம் வகுப்பு தமிழ்நாட்டுக் கலைச்செல்வங்கள்
  • 12 ஆம் வகுப்பு தமிழ்நாட்டுக் கலைச்செல்வங்கள்
  • 12 ஆம் வகுப்பு தமிழ்நாட்டுக் கலைச்செல்வங்கள்
  • 12 ஆம் வகுப்பு தமிழ்நாட்டுக் கலைச்செல்வங்கள்

 

 

Leave a Reply