9TH TAMIL சிற்பக்கலை

Table of Contents

9TH TAMIL சிற்பக்கலை

9TH TAMIL சிற்பக்கலை
9TH TAMIL சிற்பக்கலை

9TH TAMIL சிற்பக்கலை

  • கல்லிலும், உலோகத்திலும் கருவிகள் செய்த மனிதன், அவற்றில் சிற்பமென்னும் நுண்கலையை வடிக்கத் தொடங்கினான்.
  • மனித நாகரிக வளர்ச்சியின் தொடக்கம் = சிற்பக்கலை.
  • உயிரற்ற கல்லிலும் உலோகத்திலும் தமிழர் மன உணர்வுகளையும் நிகழ்வுகளையும் செதுக்கிவைத்த சிற்பங்கள், இன்றும் வரலாற்றின் வாயில்களாக விளங்குகின்றன.
  • தமிழ்ச் சிற்பிகள் கல்லில் வடித்த கவிதைகளே சிற்பங்கள்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

சிற்பக்கலை

  • கல், உலோகம், செங்கல், மரம் முதலியவற்றைக் கொண்டு கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் உருவங்கள் அமைக்கும் கலையே சிற்பக்கலை எனலாம்.

சிற்பக்கலை பற்றி தமிழ் இலக்கியங்கள்

  • சிற்பக்கலை பற்றி “திவாகர நிகண்டு” பதிவு செய்துள்ளது.

கல்லும் உலோகமும் செங்கல்லும் மரமும்

மண்ணும் சுதையும் தந்தமும் வண்ணமும்

கண்ட சருக்கரையும் மெழுகும் என்றிவை

பத்தே சிற்பத் தொழிற்குஉறுப் பாவன

–    திவாகர நிகண்டு

  • “பத்தே சிற்பத் தொழிற்குஉறுப் பாவன” என்று கூறும் நூல் = திவாகர நிகண்டு.
  • சிற்பத் தொழிலின் உறுப்புகள் பத்து என்று கூறும் நூல் = திவாகர நிகண்டு.
  • சிற்பக்கலை பற்றி குறிப்பிடும் ஐம்பெருங்காப்பிய நூல் = மணிமேகலை.
  • சிற்பக்கலை பற்றிய குறிப்புகள் காணப்படும் நூல் = திவாகர நிகண்டு, மணிமேகலை.

சிற்பங்களின் வகைகள்

  • சிற்பங்கள், அவற்றின் உருவ அமைப்பின் அடிப்படையில் இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை,
    • முழு உருவச் சிற்பங்கள்
    • புடைப்புச் சிற்பங்கள்

முழு உருவச் சிற்பங்கள்

  • உருவத்தின் முன்பகுதியும் பின்பகுதியும் தெளிவாகத் தெரியும் வகையில் முழு உருவத்துடன் அமைந்த சிற்பங்களை முழு உருவச் சிற்பங்கள் என்பர்.

புடைப்புச் சிற்பங்கள்

  • பின்பகுதி தெளிவாக தெரியாமல் முன்பகுதி மட்டும் தெரியும்படி அமைக்கப்பட்ட சிற்பங்களைப் புடைப்புச் சிற்பங்கள் என்பர்.
  • புடைப்புச் சிற்பங்களை சிற்பங்களை அரண்மனைகள், கோவில்கள் போன்ற இடங்களில் காணலாம்.
  • குறிப்பாகக் கோவிலின் தரைப் பகுதி, கோபுரம், தூண்கள், நுழைவாயில்கள், சுவர்களின் வெளிப்புறங்கள் என எல்லா இடங்களிலும் புடைப்புச் சிற்பங்களை பார்க்கலாம்.

சிற்பங்கள் அமைக்கப்படும் நான்கு நிலைகள்

  • சிற்பங்கள் நான்கு நிலைகளில் உலோகத்தினாலும் கல்லினாலும் வடிவமைக்கப்படுகின்றன. அவை,
    • தெய்வ உருவங்கள்
    • இயற்கை உருவங்கள்
    • கற்பனை உருவங்கள்
    • முழுவடிவ (பிரதிமை) உருவங்கள்

கற்கவிஞர்கள்

  • சிற்பக் கலைஞர்களை “கற்கவிஞர்கள்” என்று அழைப்பர்.
  • ஏனென்றால் அவர்கள் சிற்ப இலக்கண மரபைப் பின்பற்றிக் கலை நயத்துடனும் மிகுந்த தேர்ச்சியுடனும் சிற்பிகள் சிற்பங்களை வடிவமைக்கின்றனர்.
9TH TAMIL சிற்பக்கலை
9TH TAMIL சிற்பக்கலை

பல்லவர் காலச் சிற்பங்கள்

  • பல்லவர் காலச் சிற்பங்கள் எவ்வாறு அமைக்கப்பட்டன = சுதையினாலும், கருங்கற்களினாலும்.
  • கோவில் தூண்களில் சிற்பங்களின் வேலைப்பாடு பிரசித்தி பெற்றது.
  • தூண்களில் யாளி, சிங்கம், தாமரை மலர், நுட்பமான வேலைப்பாடுகள் நிறைந்த வட்டங்கள் போன்றவை பொறிக்கப்பட்டன.
  • பல்லவர் காலச் சிற்பங்கள் = கோவிலின் “அணைத்து” இடங்களிலும் சிற்பங்கள் மிளிர்ந்தன.
  • பல்லவர் காலச் சிற்பக்கலைக்கு சான்று = மாமல்லபுரச் சிற்பங்கள்.
  • மாமல்லபுரத்தில் பாறையை செதுக்கி சிற்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
  • மாமல்லபுரம் சிற்பங்கள் = புலிக்குகை, பஞ்ச பாண்டவர் இரதம்
  • காஞ்சி கைலாசநாதர் கோவில் சுற்றுச்சுவர் (முழுவதும்) சிற்பங்களின் கலைக்கூடமாகத் திகழ்கிறது.
  • எங்கு சுற்றுச்சுவர் முழுவதும் சிற்பங்களின் கலைக்கூடமாகத் திகழ்கிறது = காஞ்சி கைலாசநாதர் கோவிலில்.
  • காஞ்சி வைகுந்தப் பெருமாள் கோவிலிலும் பல்லவர் காலச் சிற்பங்கள் மிகுதியாக உள்ளன.
  • இங்குத் தெய்வ உருவங்களும் பிற சிற்பங்களும் கோவிலின் உட்புறச் சுவரில் செதுக்கப்பட்டுள்ளன.
  • பல்லவர் காலக் குடைவரைக் கோவில்களின் நுழைவு வாயிலின் இருபுறங்களிலும் காவலர்கள் நிற்பது போன்று சிற்பங்கள் படைக்கப்பட்டுள்ளன.
  • பல்லவர் கால சிற்பங்கள் உள்ள இடம் = மாமல்லபுரம், காஞ்சி, திருச்சி மலைக்கோட்டை
  • பல்லவர் கால சிற்பங்கள் உள்ள கோவில்கள் = மாமலபுரம் கடற்கரைக் கோவில், காஞ்சி வைகுந்தப் பெருமாள் கோவில், காஞ்சி கைலாசநாதர் கோவில், திருச்சி மலைக்கோட்டை கோவில்.

தொல்காப்பியத்தில் சிற்பக்கலை

  • தமிழின் தொன்மையான இலக்கண நூலாகிய தொல்காப்பியத்தில் சிற்பக்கலை பற்றிய குறிப்பு காணப்படுகிறது.
  • போரில் விழுப்புண் பட்டு இறந்த வீரருக்கு நடுகல் நடப்படும்.
  • அக்கல்லில் அவ்வீரரின் உருவம் பொறிக்கப்பெறும்.
  • தமிழரின் தொடக்ககாலச் சிற்பக்கலைக்குச் சான்றாக இதையும் குறிப்பிடலாம்.

சிலப்பதிகாரத்தில் சிற்பக்கலை

  • சிலப்பதிகாரத்தில் கண்ணகிக்குச் சிலைவடித்த செய்தி இடம் பெற்றுள்ளது.

மணிமேகலையில் சிற்பக்கலை

  • மாளிகைகளில் பல சிற்பங்களில் சுண்ணாம்புக் கலவை (சுதைச் சிற்பங்கள்) இருந்ததை மணிமேகலை மூலம் அறிய முடிகிறது.

பாண்டியர் காலச் சிற்பங்கள்

  • பாண்டியர் காலச் சிற்பங்கள் அமைந்துள்ள இடங்கள் = குகைக்கோவில்கள் (திருமயம், பிள்ளையார்பட்டி, குன்றக்குடி, திருப்பரங்குன்றம்)
  • கோவில்பட்டிக்கு மேற்கே கழுகுமலை வெட்டுவான்கோவிலில் அமைந்துள்ள சிற்பங்களும் பாண்டியர் காலச் சிற்பக்கலைக்குச் சான்றுகளாகும்.

சோழர் காலச் சிற்பங்கள்

  • கற்சிற்பங்கள் அமைக்கும் கலை வளர்ச்சி பெற்ற காலம் = சோழர்கள் காலம்.
  • முதலாம் இராசராசன் கட்டிய தஞ்சைப் பெரியகோவில், முதலாம் இராசேந்திர சோழன் எழுப்பிய கங்கை கொண்ட சோழபுரம், இரண்டாம் இராசராசன் எழுப்பிய தாராசுரம் ஐராவதீசுவரர் கோவில், மூன்றாம் குலோத்துங்கச் சோழன் அமைத்த திரிபுவன வீரேசுவரம் கோவில் போன்றவை சோழர் காலச் சிற்பக்கலையின் கருவூலங்களாகத் திகழ்கின்றன.
    • முதலாம் இராசராசன் = தஞ்சைப் பெரிய கோவில்
    • முதலாம் இராசேந்திர சோழன் = கங்கை கொண்ட சோழபுரம் கோவில்
    • இரண்டாம் இராசராசன் = தாராசுரம் ஐராவதீசுவரர் கோவில்
    • மூன்றாம் குலோத்துங்கச் சோழன் = திரிபுவன வீரேசுவரம் கோவில்
    • இரண்டாம் பராந்தகச் சோழன் = மூவர் கோவில்
  • தஞ்சைக் கோவிலில் சிறப்பு வாய்ந்தது = 14 அடி உயரமுள்ள வாயிற்காவலர் உருவங்களும், மிகப்பெரிய நந்தியும்.
  • ஒரே கல்லில் அமைந்த நவக்கிரகமும், சிங்கமுக் கிணறும் உள்ள இடம் = கங்கை கொண்ட சோழபுரம்.
  • நடன முத்திரைகளுடன் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ள இடம் = புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை கோவில்.
  • இரண்டாம் பராந்தகச் சோழன் கட்டிய மூவர் கோவில் அமைந்துள்ள இடம் = புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பாளூர்.
  • திருச்சிராப்பள்ளி மாவட்டம் சீனிவாச நல்லூரில் உள்ள “குரங்குநாதர் கோவில்” சோழர் கட்டிடக் கலைக்கு மற்றொரு உதராணம் ஆகும்.
  • சோழர் கால இறுதியில் திருவரங்கக் கோவிலினுள் அமைக்கப்பட்ட சிற்பங்களில் வெளிப்படும் முக பாவனைகள் சோழர்காலச் சிற்பக்கலை நுட்பத்திற்கு மிகச்சிறந்த சான்றுகளாகும்.
  • திருவரங்கக் கோவிலினுள் அமைக்கப்பட்ட சிற்பங்களில் வெளிப்படும் முக பாவனைகள் = சோழர் கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டு ஆகும்.
  • சோழர்காலத்தில் மிகுதியான செப்புத் திருமேனிகள் உருவமைக்கப்பட்டன.
  • கடவுளின் உருவங்களும், மனித உருவங்களும் மிகுந்த கலைநுட்பத்தோடு வடிவமைக்கப்பட்டன.
  • கடவுளின் உருவங்களும், மனித உருவங்களும் மிகுந்த கலைநுட்பத்தோடு வடிவமைக்கப்பட்ட காலம் = சோழர் காலம்.
  • சோழர்காலம் செப்புத்திருமேனிகளின் ‘பொற்காலம்’ என்று அழைக்கப்படும் அளவிற்கு அவை அழகுற அமைந்துள்ளன.
  • செப்புத்திருமேனிகளின் ‘பொற்காலம்’ என்று அழைக்கப்படுவது = சோழர் காலம்.
  • சோழர் கால சிற்பக்கலை சிற்பங்கள் அமைந்துள்ள இடம் = தஞ்சைப் பெரியகோவில், கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம் ஐராவதீசுவரர் கோவில், திரிபுவன வீரேசுவரம் கோவில், மூவர் கோவில், புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை கோவில், குரங்குநாதர் கோவில், திருவரங்கக் கோவில்.

விஜயநகர மன்னர் காலச் சிற்பங்கள்

9TH TAMIL சிற்பக்கலை
9TH TAMIL சிற்பக்கலை
  • கோவிலில் மிக உயரமான கோபுரங்கள் அமைக்கும் வழக்கம் எப்பொழுது துவங்கப்பட்டது = விஜயநகர மன்னர் காலத்தில்.
  • கோபுரங்களில் சுதைகளால் ஆன சிற்பங்கள் அதிகளவு இடம் பெற்ற காலம் = விஜயநகர மன்னர்கள் காலம்.
  • தெலுங்கு, கன்னட நாடுகளின் சிற்பக்கலை தமிழகத்தில் புகுந்த காலம் = விஜயநகர மன்னர்கள் காலம்.
  • ஆடை, அணிகலன்கள் அணிந்த நிலையில் சிற்பங்கள் அமைக்கப்பட்டது = விஜயநகர மன்னர்கள் காலத்தில்.
  • கோவில் மண்டபங்களில் மிகுதியான சிற்பங்கள் அமைக்கபட்டது = விஜயநகர மன்னர்கள் காலத்தில்.
  • யாருடைய ஆட்சிக் காலத்தில் “குதிரையின் உருவங்களை சிற்பங்களில்” வடிவமைக்க ஆரம்பிக்கப்பட்டது = விஜயநகர மன்னர்கள் காலத்தில்.
  • விஜயநகர மன்னர்கள் காலத்தில் குதிரையின் உருவங்களைச் சிற்பங்களில் இடம் பெறச் செய்தனர்.
  • வீரர்கள் அமர்ந்த நிலையில் குதிரைகள் முன்கால்களைத் தூக்கி நிற்பது போன்ற சிற்பங்களை மண்டபத் தூண்களில் அமைத்தனர்.
  • அத்துடன் பல்வேறு ஓசைகளை எழுப்பும் இசைக் கற்றூண்களையும் இவர்கள் அமைத்தது குறிப்பிடத்தக்கது.
  • ஓசைகளை எழுப்பும் இசைக் கற்றூண்களை சிற்பங்களில் அமைத்தவர்கள் = விஜயநகர மன்னர்கள்.

நாயக்கர் காலச் சிற்பங்கள்

9TH TAMIL சிற்பக்கலை
9TH TAMIL சிற்பக்கலை
  • ஆயிரங்கால் மண்டபங்களை அமைத்தவர்கள் = நாயக்கர் மன்னர்கள்.
  • மண்டபத் தூண்களில் சிற்பங்களை செதுக்கியவர்கள் = நாயக்கர் மன்னர்கள்.
  • நாயக்கர் மன்னர்கள் கால கோவில் சிற்பங்கள் உள்ள இடம்,
    • மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
    • இராமேசுவரம் பெருங்கோவில்
    • திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில்
    • கிருஷ்ணாபுரம் பெருமாள் கோவில்
    • திண்டுக்கல் தாடிக்கொம்பு பெருமாள் கோவில்
    • பேரூர் சிவன் கோவில்
  • மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்
    • ஆயிரங்கால் மண்டபத் தூண்களில் கண்ணப்பர், குறவன் குறத்தி போன்ற சிற்பங்கள் உள்ளன.
    • அரிச்சந்திரன், சந்திரமதி சிற்பங்களில் ஆடை, ஆபரணங்கள் கலை நயத்துடன் காணப்படுகின்றன.
    • இறந்த மைந்தனைக் கையில் ஏந்தியபடி நிற்கும் சந்திரமதி சிலையும் அமைந்துள்ளது.
    • இறந்த மைந்தனைக் கையில் ஏந்தியபடி நிற்கும் சந்திரமதி சிலை அமைந்துள்ள இடம் = மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
  • நாயக்கர் காலச் சிற்பக் கலை நுட்பத்தின் உச்சநிலைப் படைப்பு = கோயம்புத்தூருக்கு அண்மையிலுள்ள பேரூர் சிவன் கோவிலில் உள்ள சிற்பங்கள்.
    • விழியோட்டம், புருவ நெளிவு, நக அமைப்பு என மிக மிக நுட்பமாகக் கலைநயத்துடன் அவை படைக்கப்பட்டுள்ளன.
  • விழியோட்டம், புருவ நெளிவு, நக அமைப்பு என மிக மிக நுட்பமாகக் கலைநயத்துடன் அமைக்கப்பட்டுள்ள சிற்பங்கள் உள்ள இடம் = கோயம்புத்தூர் பேரூர் சிவன் கோவில்.
  • கிருஷ்ணாபுரம் வேங்கடாசலபதி கோவிலில் உள்ள குறவன் குறத்தி, இரதிதேவி சிலைகள் காண்போரை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளன.

பௌத்த சமண சிற்பங்கள்

9TH TAMIL சிற்பக்கலை
9TH TAMIL சிற்பக்கலை
  • பௌத்த மதத்தைத் தழுவிய தமிழர்கள், புத்தரின் உருவத்தை அமர்ந்த, நின்ற, படுத்த (கிடை) நிலைகளில் சிற்பங்களாகப் படைத்து வழிபட்டனர்.
  • சமண மதத்தில் சில சிற்பங்கள் அளவுக்கு மீறிய உயரமும், பருமனும் உடையனவாக உள்ளன.
    • சான்றாக விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கு அண்மையில் உள்ள திருநாதர்குன்று என்னும் இடத்தில், ஒரு பாறையில் இருபத்துநான்கு தீர்த்தங்கரர் உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன.
    • தமிழகத்தில் ஒரு பாறையில் இருபத்துநான்கு தீர்த்தங்கரர் உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ள இடம் = விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள திருநாதர்குன்று.
  • துரைக்கு அண்மையில் சமணர்களின் படுக்கைகள் செதுக்கப்பட்ட இடங்களிலும் மலைப்பாறைகளிலும் சமணச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
9TH TAMIL சிற்பக்கலை
9TH TAMIL சிற்பக்கலை

தமிழக சிற்பக்கலையின் தனிச்சிறப்புகள்

  • யோகக்கலை, நாட்டியக்கலைக் கூறுகளும் தமிழகச் சிற்பக்கலையில் இடம் பெற்றுள்ளன.

இன்றைய சிற்பக்கலை

  • தமிழகத்தில் கட்டப்படும் கோவில்களில் இன்றும் சுதைச் சிற்பங்களும் கற்சிற்பங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. செங்கல், பைஞ்சுதை (சிமெண்ட்), கற்கள் ஆகியவற்றைக் கொண்டு கலைநயமிக்க சிற்பங்கள் உருவாக்கப்படுகின்றன.
  • சிமெண்ட் என்பதன் தமிழ்ச்சொல் = பைஞ்சுதை.

சிற்பக்கலை மேம்பாட்டிற்கு தமிழக அரசின் பணி

  • தமிழக அரசு, சிற்பக் கலைஞர்களைப் பரிசளித்துப் பாராட்டிச் சிற்பக்கலையை வளர்த்து வருகிறது.
  • மாமல்லபுரத்தில் தமிழ்நாடு அரசு சிற்பக்கல்லூரியை நடத்தி வருகிறது.
  • தமிழ்நாட்டில் சிற்பக்கல்லூரி அமைந்துள்ள இடம் = மாமல்லபுரம்.
  • சுவாமிமலை, கும்பகோணம், மதுரை ஆகிய இடங்களில் உலோகப் படிமங்கள் செய்யும் பயிற்சி நிலையங்கள் அமைந்துள்ளன.
  • சென்னையிலும் கும்பகோணத்திலும் உள்ள அரசு கவின்கலைக் கல்லூரிகளில் சிற்பக்கலையைப் பயிலலாம்.

சிற்பச்செந்நூல்

  • சிற்பக்கலை குறித்த செய்திகளை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் தமிழ்நாடு தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் “சிற்பச்செந்நூல்” என்ற நூலை வெளியிட்டுள்ளது.
  • சிற்பக்கலை குறித்த செய்திகளை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் தமிழ்நாடு தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள நூல் = சிற்பச்செந்நூல்.

 

Leave a Reply