11TH TAMIL காலத்தை வென்ற கலை

Table of Contents

11TH TAMIL காலத்தை வென்ற கலை

11TH TAMIL காலத்தை வென்ற கலை
11TH TAMIL காலத்தை வென்ற கலை

11TH TAMIL காலத்தை வென்ற கலை

  • கலையும் அறிவியலும் மனித குல வளர்ச்சியுடன் பின்னிப் பிணைந்தவை.
  • மனிதனின் படைப்புத் திறனால் உருவானது கலையாகும்; அது நம் மனத்தில் அழகுணர்வை ஏற்படுத்தி மகிழ்வைத் தருகிறது.
  • நுண்கலை, பயன்கலை, பருண்மைக்கலை, கவின்கலை, நிகழ்த்துகலை எனக் கலைகள் பலவகைப்படும்…
  • கலை ஒரு சமூகத்தின் நாகரிகத்தையும் பண்பாட்டு மேன்மையையும் எதிரொலிக்கின்றது.
  • தமிழகத்தில் பழங்காலத்திலேயே சிற்பம், கட்டடம், ஆடல், பாடல் முதலிய கலைகள் சிறப்புற்றிருந்தன.
  • ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் கம்பீரமாகக் காட்சியளிக்கும் தஞ்சைப் பெரிய கோவிலின் கட்டடக் கலைநுட்பம் நம்மை வியப்படையச் செய்கிறது.

பெரியகோவிலில் உயரமான கோபுரம்

  • தஞ்சை பெரியகோவிலில் உயரமான கோபுரம் = கேரளாந்தகன் கோபுரம் ஆகும்.
  • 988 ஆம் ஆண்டு சேரநாட்டை வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் இக்கோபுரத்திற்கு இப்பெயர் வைக்கப்பட்டது.
  • தஞ்சை கோவிலில் உள்ள இரண்டு கோபுரங்கள் = கேரளாந்தகன் திருவாயில், இராசராசன் திருவாயில்.
  • இந்த இரண்டு நுழைவாயில்களும் பிற்கால சோழர்களின் தனிச்சிறப்பு வாய்ந்தது ஆகும்.

அகநாழிகை என்றால் என்ன

  • கோவில் வாயில்களின் மேலே அமைக்கப்படுவது = கோபுரம்
  • கோவில் கருவறையின் மேலே அமைக்கப்படுவது = விமானம்
  • கருவறையின் மற்றொரு பெயர் = அகநாழிகை

பெரிய கற்றளி கோவில்

  • இந்தியாவில் உள்ளதிலேயே மிகப்பெரிய மற்றும் உயரமான கற்றளி கோவில் = தஞ்சை பெரிய கோவில் ஆகும்.
  • முழுமையாக கற்களைக் கொண்டே கட்டப்பட்ட மிகப்பெரிய கோவில் = தஞ்சை பெரிய கோவில்.
  • 11 ஆம் நூற்றாண்டில் ஆட்சிபுரிந்த முதலாம் இராசராச சோழன் தஞ்சைப் பெரிய கோவிலை 1003 ஆம் ஆண்டு தொடங்கி 1010 ஆம் ஆண்டுவரை கட்டினான்.
  • 2010 ஆம் ஆண்டு இக்கோவிலின் 1000 ஆம் ஆண்டு பூஜை நடைபெற்றது.
  • இக்கோவில் கட்ட ஆன காலம் = ஆறு ஆண்டுகள்
  • இக்கோவிலை “தட்சிண மேரு” என்று இராசராசனால் பெருமையுடன் அழைக்கப்பட்டுள்ளது.
  • இக்கோவிலின் விமானத்தின் உயரம் = 216 அடி
  • கோவில் கருவறை விமானம் = 13 தளங்களை கொண்டது

கற்றளி கோவில் என்றால் என்ன

  • செங்கற்களை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி காட்டுவது போல், கருங்கற்களை ஒன்றன் மீது ஒன்று அடுக்கி வைத்து கட்டுவது கற்றளி கோவிலாகும்.
  • கற்றளி வடிவ முறையை அறிமுகம் செய்தவன் = பல்லவ மன்னன் இரண்டாம் நரசிம்மவர்மன் (7 ஆம் நூற்றாண்டு)
  • கற்றளி கோவில்களுக்கு உதாரணங்கள் = மகாபலிபுர கடற்கரைக் கோவில், காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில், பனைமலைக் கோவில்

ஆரம்பகால கோவில்கள்

  • தமிழகத்தில் தொடக்க காலத்தில் மண்ணால் கட்டி, மேலே மரத்தால் சட்டகமிட்டனர். அதன் மேல் செப்பு, பொன் தகடுகளால் கூரை வேய்ந்தனர்.
    • எ.கா = தில்லைக் கோவில், குற்றாலநாதர் கோவில்
  • அடுத்த நிலையில் செங்கற்களால் கோவில் கட்டினர்.
    • எ.கா = சோழன் செங்கணான் 78 கோவில்களை இம்முறையில் கட்டியதாக திருநாவுக்கரசர் தம் பதிகமொன்றில் கூறுகிறார்.

கோவில் பெரிய இடமாக அமையக் காரணம்

  • கோவில் என்பது வெறும் வழிபடும் தலம் மட்டுமன்று.
  • அங்கே இசை, நடனம், நாடகம் போன்ற அருங்கலைகள் வளர்க்கப்பட்டன.
  • அது, மக்கள் ஒன்றுகூடும் இடமாகவும் இருந்தது.
  • எனவே, மக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய செய்திகள் அனைத்துமே அங்கே கல்வெட்டுகளாகப் பொறிக்கப்பட்டன.
  • அதுமட்டுமல்லாமல் பஞ்ச காலத்தில் மக்களுக்கு உதவுவதற்கான தானியக் கிடங்குகளும் கோவிலுக்குள் அமைக்கப்பட்டிருந்தன.
  • கருவூலமாகவும் மருத்துவமனையாகவும், போர்க்காலங்களில் படை வீரர்கள் தங்கக்கூடிய இடமாகவும் கோவில்கள் பயன்பட்டன.

மண்டகப்பட்டு கல்வெட்டு

  • செங்கல், சுண்ண ம், மரம், உலோகம் முதலியவை இல்லாமலே பிரம ஈசுவர விஷ்ணுக்களுக்கு ‘விசித்திர சித்தன்’ என்று அழைக்கப்பட்ட முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் குடைவரைக் கோவில்களை அமைத்ததாக மண்டகப்பட்டுக் கல்வெட்டு கூறுகின்றது.
  • விசித்திர சித்தன் என்று அழைக்கப்பட்டவன் = முதலாம் மகேந்திரவர்ம பல்லவன்

காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில்

  • முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் வழி வந்த இராசசிம்மனோ தம் முன்னோர்களையும் விஞ்சும் வகையில் உன்னதச் சிறப்பும் எழிலும் வாய்ந்ததாகக் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலை அமைத்து அழியாப் புகழ் பெற்றான்.
  • இராசசிம்மன் கட்டிய கோவில் = இராசசிம்மேச்சுரம் என்று அழைக்கப்பட்டது.

இந்திய கட்டிட கலைப் பாணிகள்

  • இந்தியக் கட்டிடக் கலைப்பாணியை 3 வகையாக கூறுவர். அவை,
    • நாகரம்
    • வேசரம்
    • திராவிடம்
  • தஞ்சைக் கோவில் = எண்பட்டை வடிவில் கட்டப்பட்ட திராவிட கலைப்பாணி கோவிலாகும்.

இராசராசன் கட்டினான் என்பதற்கான சான்று

11TH TAMIL காலத்தை வென்ற கலை
11TH TAMIL காலத்தை வென்ற கலை
  • 1886 ஆம் ஆண்டு ஜெர்மனி அறிஞர் ஷூல்ஸ், 6 ஆண்டுகள் தீவிரமாக கல்வெட்டுகளைப் படியெடுத்து வாசித்து இக்கோவிலை இராசராச சோழன் தான் கட்டினான் என்று உறுதி செய்தார்.

தஞ்சை பெரிய கோவில் ஓவியங்கள்

  • 1930ஆம் ஆண்டில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணிபுரிந்த எஸ். கே. கோவிந்தசாமி தஞ்சைப் பெரிய கோவில் கருவறையின் இரு தளங்களில் உள்ள சுற்றுக்கூடம், சாந்தார நாழிகைப் பகுதிச்சுவர்களில் ஓவியங்கள் காணப்பட்டதை முதன்முதலில் கண்டறிந்தார்.
  • தஞ்சை பெரியகொவிளில் இருந்த ஓவியங்களை முதன்முதலில் கண்டறிந்தவர் = எஸ். கே. கோவிந்தசாமி
  • அதில், தட்சிணாமூர்த்தி ஓவியம், சுந்தரர் வரலாறு, திரிபுராந்தகர் ஓவியம் முதலியன சுவர் முழுவதுமாகப் பெரிய அளவில் வரையப்பட்டுள்ளன.

ஃப்ரெஸ்கோ

  • சோழர் கால ஓவியங்கள் மீதே நாயக்கர் ஆட்சியில் ஓவியங்கள் வரைந்திருந்ததை அறிந்து அதனை வெளியுலகத்துக்குத் தெரியப்படுத்தியவர் = ஃப்ரெஸ்கோ

ஃப்ரெஸ்கோ ஓவியங்கள்

11TH TAMIL காலத்தை வென்ற கலை
11TH TAMIL காலத்தை வென்ற கலை
  • ஃப்ரெஸ்கோ என்பது இத்தாலி மொழிச் சொல்.
  • ஃப்ரெஸ்கோ என்பதன் பொருள் = புதுமை
  • சுண்ணாம்பு காரைப்பூச்சு மீது அதன் ஈரம் காயும் முன் வரையப்படும் பழமையான ஓவிய தொழிநுட்பம் இது.
  • இவ்வகை ஓவியங்களை அஜந்தா, எல்லோரா, சித்தன்னவாசல் ஆகிய இடங்களில் காணலாம்.

பெரியகோவில் நந்தி மண்டபம்

  • தஞ்சை பெரியகோவிலில் உள்ள நந்தியும், மண்டபமும் சோழர் காலத்தை சேர்ந்தது அல்ல.
  • இது தற்போது நாம் பார்க்கும் பெரிய நந்தியும், மண்டபமும் நாயக்கர் காலத்தில் அமைக்கப்பட்டவை ஆகும்.
  • இராசராசன் அமைத்த நந்தி சிலை, தற்போது தென்புறத் திருச்சுற்றில் உள்ளது.

13 தளங்களை கொண்ட கருவறை

  • தஞ்சைக் பெரிய கோவிலின் சிகரத்திலுள்ள பிரமந்திரக் கல் ஒற்றைக்கல்லால் ஆனது அல்ல.
  • அவை 13 தளங்களை உடைய கருவறை விமானத்தின் மேல் எண்பட்டை அமைப்பில் எட்டுக் கற்கள் நெருக்கமாக வைத்து ஓட்டப்பட்டுள்ளது.

கோவில் கோபுரங்கள்

  • 12 ஆம் நூற்றாண்டில் இருந்து கோபுரங்கள் தனிச்சிறப்புப் பெற்றன.
  • வெளிக்கோபுரத்தை உயரமாகவும் உட்கோபுரத்தை உயரம் குறைவாகவும் அமைக்கப்பட்டன.

இராசராசனின் திருவாயில்

  • கோவிலில் இரண்டு வகை கோபுரங்களை கட்டும் புதிய மரபை துவக்கி வைத்தவர் = இராசராசன்.
  • அதனைத் “திருவாயில்” என்று கூறுவர்.
  • கங்கைகொண்ட சோழபுரம், தாராசுரம், திரிபுவனம் ஆகிய இடங்களில் இரண்டு வாயில்கள் கொண்ட கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இரண்டாம் குலோத்துங்கச்சோழன்

  • நான்கு புறங்களிலும் நான்கு கோபுரங்களை அமைக்கும் மரபை துவக்கி வைத்தவர் = இரண்டாம் குலோத்துங்கச் சோழன்.
  • கீழ்ப்பகுதியைக் கல்லாலும் மேற்பகுதியைச் செங்கற்களாலும் கட்டியிருப்பர்.

மிக உயர்ந்த கோபுரங்கள்

  • புகழ்பெற்ற கோவில்கள் பலவற்றிலும் மிகவுயர்ந்த கோபுரத்தை எழுப்பியது = விஜயநகர அரசு.
  • காஞ்சி, தில்லை, திருவண்ணாமலை, திருவரங்கம், மதுரை ஆகிய இடங்களில் உள்ள கோவில்களில் உள்ள கோபுரங்கள் எல்லாமே 150அடிக்கு மேல் உயரம் உள்ளவை.

இராசராசனின் பட்டத்தரசி ஒலோகமாதேவி

  • இராசராசன் காலத்தில் பெண் அதிகாரிகள் அரசுப்பணிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
  • இராசராசனின் பட்டத்தரசி ஒலோகமாதேவி திருவையாற்றில் கட்டிய கோவில் ஒலோகமாதேவீச்சுரம் என்று வழங்கப்படும். அந்தக் கோவிலில் உள்ள கல்வெட்டில், பெண் அதிகாரிகள் பற்றிய குறிப்புகள் உள்ளன.

“உடன் கூட்டத்து அதிகாரம் செய்கின்ற

கோவலூரு டையான் காடந்

னூற்றெண்மநையும் அதிகாரிச்சி

எருதந் குஞ்சிர மல்லியையும்”

  • இவ்வரிகளில் ‘எருதந் குஞ்சிர மல்லி’ என்ற பெண் அதிகாரியைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகாரிச்சி சோமயன் அமிர்தவல்லி

  • மேலும் ஒலோகமாதேவீச்சுரம் கோவிலில் உள்ள மற்றொரு கல்வெட்டில் முதலாம் இராசாதிராசன் காலத்திலும் ஓர் அதிகாரிச்சி பற்றிய குறிப்பு இருக்கிறது.
  • அவர் பெயர் = அதிகாரிச்சி சோமயன் அமிர்தவல்லி.

கோவிலை எடுப்பித்தவர்கள் பற்றிய கல்வெட்டு

  • கோவிலை எடுப்பித்தவர்கள் பற்றிய கல்வெட்டில், “நாம் கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும், கொடுப்பார் கொடுத்தனவும் இந்தக் கல்லிலே வெட்டி அருள்க….” என்று கோவில் கட்ட உதவியவர்கள் சிறப்பிக்கப்பட்டுள்ளனர்.
  • தான் மட்டுமே பங்களிக்காமல் மற்றவர்களின் உதவியையும் பெற்றதோடு அதனைக் கல்வெட்டாகவும் ஆவணப்படுத்தியிருக்கும் இராசராசனின் பாங்கு போற்றத்தக்கது.
  • தனக்கு அடுத்தபடியான இடத்தைத் தன் தமக்கை குந்தவை தேவிக்கு (அக்கன்) அளித்துள்ளார்.
  • அடுத்து, பெண்டு என்னும் சொல்லால் அவருடைய மனைவியர் கொடுத்த கொடையைக் குறிப்பிடுவதோடு கொடுப்பார் கொடுத்தனவும் என்று சொல்வதன் மூலம் இராசராசன், மற்றவர்களின் கொடையையும் உலகம் அறியும்படி செய்துள்ளார்.

பிரடிரிகா வொன்ஸ்லீவிங்

  • “கட்டிடக்கலை என்பது உறைந்துபோன இசை” என்று கூறியவர் = பிரடிரிகா வொன்ஸ்லீவிங்.

 

 

 

 

 

 

Leave a Reply