12 TAMIL புறநானூறு
12 TAMIL புறநானூறு
- வாழ்வின் அணியாக விளங்குவது கல்வி.
- கற்றோர் எந்நிலையிலும் சிறந்தே இருப்பர். தாலும் நிலை வரினும் கலங்காது இருப்பார்.
அருஞ்சொற்பொருள்
- வாயிலோயே – வாயில் காப்போனே
- வள்ளியோர் – வள்ளல்கள்
- வயங்குமொழி – விளங்கும் சொற்கள்
- வித்தி – விதைத்து
- உள்ளியது – நினைத்தது
- உரன் – வலிமை
- வறுந்தலை – வெறுமையான இடம்
- காவினெம் – கட்டிக்கொள்ளுதல்
- கலன் – யாழ்
- கலப்பை – கருவிகளை வைக்கும் பை
- மழு – கோடரி
இலக்கணக்குறிப்பு
- வயங்குமொழி – வினைத்தொகை
- அடையா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
- அறிவும் புகளும் – எண்ணும்மை
- சிறாஅர் – இசைநிறை அளபெடை
பாடாண் திணை
- ஒருவருடைய புகழ், வலிமை, கோடை, அருள் போன்ற நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது பாடான் திணையாகும்
பரிசில் துறை
- “பரிசு வேண்டி வாயிலில் நிற்பது” – பரிசில் துறை
பாடல் விவரம்
- இப்பாடலில் பயின்று வந்த பா வகை = நேரிசை ஆசிரியப்பா
- இப்பாடலில் பயின்று வந்த திணை = பாடாண் திணை
- இப்பாடலில் பயின்று வரும் துறை = பரிசில் துறை
பாடலில் வந்த உவமைகள்
- பரிசிலர்க்குச் = சிறுவரும்
- கல்விக்கு = கோடரியும்
- போகும் திசைக்கு = காடும்
- உணவுக்கு = காட்டில் உள்ள மரங்கள்
புறநானூறு நூல் குறிப்பு
- சிற்றரசனான “அதியமான் நெடுமான் அஞ்சி” பரிசில் தராமல் காலம் நீட்டித்த போது ஔவையார் பாடிய பாடல் இது
- இப்பாடல் இடம்பெற்றுள்ள புறநானூறு, எட்டுத்தொகை நூல்களில் ஒன்று.
- புறநானூறு புறப்பொருள் பற்றியது
- புறநானூறின் வேறு பெயர்கள் = புறம், புறப்பாட்டு
- இந்நூல், தமிழர்களின் போர், வீரம், நாகரிகம், பண்பாடு, நெறிப்பட்ட வாழ்க்கை முதலியவற்றை விளக்கமாக எடுத்துரைக்கிறது.
ஔவையார்
- அதியமானிடம் நட்புப் பாராட்டிய ஔவை அவருக்காகத் தூது சென்றவர்.
- அதியமானின் அரசவைப் புலவராக இருந்தவர்
- இவர் பாடியதாக அகநானூற்றில் 4, குறுந்தொகையில் 15, நற்றிணையில் 7, புறநானூற்றில் 33 என 59 பாடல்கள் நமக்கு கிடைத்துள்ளன.
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை
- தமிழர் குடும்ப முறை
- விருந்தினர் இல்லம்
- கம்பராமாயணம்
- உரிமைத்தாகம்
- பொருள் மயக்கம்
- பரிதிமாற்கலைஞர்
- திருக்குறள்
- பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்
- இதில் வெற்றிபெற
- இடையீடு