12TH SAMACHEER KALVI TAMIL தொன்மம்
12TH SAMACHEER KALVI TAMIL தொன்மம்
- தொன்மம் (புராணம்) என்றால் பழங்கதை, புராணம் என்றெல்லாம் பொருள் உள்ளது.
- தொல்காப்பியர் குறிப்பிடும் வனப்புகளுள் ‘தொன்மை’ என்பதும் ஒன்றாகும்.
- காலம்காலமாக உருவாக்கப்பட்டு இறுகி விட்ட கருத்து வடிவங்களும் தொன்மங்களே.
- கவிதையில் அது பழங்கதையைத் (புராணத்தை) துணையாகக் கொண்டு ஒரு கருத்தை விளக்குவதையே குறிக்கிறது.
தொன்மம் என்றால் என்ன
- கடவுள்கள், தேவர்கள் மக்கள், விலங்குகள் ஆகிய பல்வகை உயிரினங்களையும் ஒருங்கிணைத்து, படித்தால் நம்ப முடியாதது போல் தோன்றுகின்ற செய்திகளையும் நிகழ்ச்சிகளையும் கொண்டு இயங்குகின்ற பழமையான கதைகளையே தொன்மம் என்று கூறுவர்.
- நம் அன்றாடப் பேச்சில் மரபுத்தொடர்களாகத் தொன்மங்கள் கலந்துள்ளன.
தொன்மம் விளக்கம்
- சில தொன்மங்கள், சமய நம்பிக்கைகளையும் சடங்குகளையும் வெளிச்சமாக்குகின்றன.
- சில தொன்மங்கள் உவமைக் கதைகளாகவும் மெய்யியல் உருவகங்களாகவும் நின்று சமுதாயத்திற்கு வழிகாட்டுகின்றன.
- தொன்மங்களை அறிவியல் முறையில் ஆய்வு செய்யவோ புரிந்துகொள்ளவோ முடியாது. அவை சமுதாயத்தின் ஆழ்மனத்திலிருந்து வெளிப்படுவனவாகவும் அவை ஏற்பட்டால் கூட்டமைப்பின் குறியீடுகளாகவும் விளங்குகின்றன என்று ‘வெப்ஸ்டார்ஸ் தேர்டு நியூ இன்டர்நேஷனல் அகராதி’ புலப்படுத்துகின்றது.
தொன்மத்தை வெளிப்படுத்தும் கருவி
- தொன்மத்தை வெளிப்படுத்தும் முதன்மையான கருவி = கவிதை
கதைகள்
- இராமாயண அகலிகை கதை கொண்டு புதுமைப்பித்தன் உருவாக்கிய கதைகள் = சாபவிமோசனம், அகலிகை
- திருவிளையாடல் புராணம் கதையை கொண்டு அழகிரிசாமி உருவாக்கிய கதைகள் = விட்டகுறை, வெந்தழலால் வேகாது
- ஜெயமோகனின் சிறுகதை = பதம்வியூகம்
- எஸ். இராமகிருஷ்ணனின் நாடகம் = அரவான்
முருகக்கடவுள் பற்றிய தொன்மம்
- நற்றிணையில், முருகக் கடவுள் பற்றி கூறப்பட்டுள்ள பாடல்,
முருகு உறழ் முன்பொடு கடுஞ்சினம் செருக்கிப் பொருத யானை – நற்றிணை |
- யானை சினங்கொண்டு பேராற்றலுடன் போர்செய்த சிறப்பினை, முருகனின் வீரத்தோடு இணைத்துக் கூறியுள்ளது இந்த சங்க இலக்கியப் பாடல்
தொன்மம் பற்றி தொல்காப்பியர்
தொன்மை தானே சொல்லுங் காலை உரையொடு புணர்ந்த பழமை மேற்றே |
தொன்மம் பற்றி இளம்பூரனார்
- தொன்மையாவது உரையொடு பொருந்திப் போந்த பழமைத்தாகிய பொருள் மேல் வருவன. அவை இராமசரிதமும் பாண்டவசரிதமும் முதலாகியவற்றின் மேல்வருஞ் செய்யுள்
தொன்மம் பற்றி பேராசிரியர் உரை
- தொன்மை என்பது உரைவிராஅய்ப் பழமையனவாகிய கதைபொருளாகச் செய்யப் படுவது. அவை பெருந்தேவனார் பாரதம், தகரூர் யாத்திரை போல்வன.
இந்திய, கிரேக்கத் தொன்ம ஒப்புமைகள்
- கிரேக்கத் தொன்மங்களுக்கும் இந்தியத் தொன்மங்களுக்கும் நிறைய ஒப்புமைகள் உள்ளன.
- இந்திரன் – சீயஸ்பிடர், வருணன் – ஊரனாஸ், பலராமன்- டயானிசிஸ், கார்த்திகேயன் – மார்ஸ், சூரியன் – சோல், சந்திரன் – லூனஸ், விஸ்வகர்மன் – வன்கன், கணேசன் – ஜோனஸ், துர்க்கை – ஜீனோ , சரஸ்வதி – மினர்வா, காமன்- இராஸ் என்று பல ஒப்புமைகள் உள்ளன.
- 12TH SAMACHEER KALVI TAMIL மெய்ப்பாட்டியல்
- 12TH SAMACHEER KALVI TAMIL நடிகர் திலகம்
- 12TH SAMACHEER KALVI TAMIL காப்பிய இலக்கணம்
- 12TH SAMACHEER KALVI TAMIL வை.மு.கோதைநாயகி
- 12TH SAMACHEER KALVI TAMIL தொன்மம்
- 12TH SAMACHEER KALVI TAMIL தொன்மம்
- 12TH SAMACHEER KALVI TAMIL தொன்மம்
- 12TH SAMACHEER KALVI TAMIL தொன்மம்