SAMACHEER KALVI 12TH TAMIL காப்பிய இலக்கணம்

SAMACHEER KALVI 12TH TAMIL காப்பிய இலக்கணம்

SAMACHEER KALVI 12TH TAMIL காப்பிய இலக்கணம்

  • காப்பியம் என்றவுடன் நினைவு வருவது சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி ஆகிய நூல்கள் ஆகும்.

காப்பியம் எத்தனை வகைப்படும்

காப்பியம் பெயர்க்காரணம்

  • காப்பியம் ஆங்கிலத்தில் EPIC என்பர். இது EPOS என்னும் கிரேக்கச் சொல்லில் இருந்து வந்தது.
  • EPOS = சொல் (அல்லது) பாடல் என்று பொருள்
  • வடமொழியில் இதனை “காவியம்” என்று கூறுவார்.

காப்பியம் என்றால் என்ன

  • காப்பியம் = காப்பு + இயம்
  • காப்பியம் = மரபைக் காப்பது, இயம்புவது, வெளிப்படுத்துவது என்றும், மொழியை சிதையாது காப்பது என்றும் காரணம் கூறுவார்

ஐம்பெரும்காப்பியங்கள்

  • உரைகளிலும் இலக்கிய நூல்களிலும் பஞ்சகாப்பியம், பஞ்சகாவியம் ஆகிய சொற்றொடர்களும் பெருங்கப்பிய நூல்களை குறிப்பிடுகிறது
  • மயிலைநாதர் = நன்னூலுக்கு உரை எழுதிய “மயிலை நாதர்”, தம் உரையில் “ஐம்பெருங்காப்பியம்” என்னும் சொற்றொடரை பயன்படுத்தி உள்ளார்
  • பஞ்சகாப்பியம் = பஞ்சகாப்பியம் என்னும் சொற்றொடரை “தமிழ் விடு தூது” நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது
  • பெருங்காப்பியம் ஐந்து = “பொருள்தொகை நிகண்டு” மற்றும் “திருத்தணிகை உலா” ஆகிய நூல்களில், பெருங்காப்பியம் ஐந்து என்று கூறி அவற்றில் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளது

ஐஞ்சிறுகாப்பியங்கள்

  • சிறுகாப்பியங்கள் ஐந்து என்று வழங்கும் வழக்கம் சி.வை. தாமோதனார் காலத்திற்கு முன்பே இருந்துள்ளது என்பது அவர் பதிப்பித்த சூளாமணி (1895) பதிப்புரையில் இருந்து அறிய முடிகிறது

காப்பியம் வேறு பெயர்கள்

SAMACHEER KALVI 12TH TAMIL காப்பிய இலக்கணம்

  • காப்பியம் என்ற சொல்லை குறிக்கும் பிற சொற்களாவன,
    • பொருட்டொடர்நிலைச் செய்யுள்
    • கதைச் செய்யுள்
    • அகலக்கவி
    • தொடர்நிலைச் செய்யுள்
    • விருத்தச் செய்யுள்
    • உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்
    • மகாகாவியம்

காப்பிய அமைப்பு முறை

SAMACHEER KALVI 12TH TAMIL காப்பிய இலக்கணம்

  • காப்பிய சிற்றுறுப்புகள் = காதை, சருக்கம், இலம்பகம், படலம்
  • காப்பிய பேருறுப்பு = காண்டம் (பல சிறிய உறுப்புகளின் தொகுதி)

காப்பிய இலக்கணம்

  • கப்பிய இலக்கணம் கூறும் நூல் = தண்டியலங்காரம்
  • வடமொழியில் “காவ்யதரிசம்” என்ற நூலைத் தழுவி தமிழில் எழுதப்பட்ட அணி இலக்கண நூல் = தண்டியலங்காரம்
  • இந்நூலில், பெருங்காப்பியம் சிறுங்காப்பியம் என்று இருவகையாகப் பிரிக்கப்பட்டு காப்பிய இலக்கணம் கூறப்பட்டுள்ளது.
  • காப்பியங்கள் ஒரே வகைச் செய்யுளாலும் அமையும்; பல்வகைச் செய்யுட்களாலும் அமையும் என்கிறது தண்டியலங்காரம்

பெருங்காப்பிய இலக்கணம்

 

 

தொடக்கம்

1.        வாழ்த்துதல்

2.        தெய்வத்தை வணங்குதல்

3.        வருபொருள் உரைத்தல்

–    ஆகிய மூன்றில் ஒன்றினைத் தொடக்கத்தில் பெற்று வரும். அவற்றுள் இரண்டோ மூன்றோ வரலாம்

 

 

 

திரண்ட பொருள்

1.        அறம்

2.        பொருள்

3.        இன்பம்

4.        வீடு

  • ஆகிய நான்கும் பெருங்காப்பியத்தின் திரண்ட பொருளாக அமைந்திருக்க வேண்டும்.
  • எனினும் இவற்றுள் பாவிகத்திற்கு ஏற்றவண்ணம் ஒன்றும் பலவும் சிறப்பாக அமைந்திருக்க வேண்டும்

காப்பியத் தலைவன்

தன்னிகர் இல்லாத் தன்மை உடையவனைக் காப்பியத் தலைவனாகக் கொண்டிருத்தல் வேண்டும்.
 

 

 

 

இயற்கை வருணனை உறுப்புகள்

1.        மலை – 1

2.        கடல் – 1

3.        நாடு – 1

4.        நகர் – 1

5.        சிறுபொழுது – 6

6.        பெரும்பொழுது – 6

7.        கதிரவன் தோற்றம் – 1

8.        சந்திரனின் தோற்றம் – 1

ஆகிய பதினெட்டு உறுப்புகளும் இயற்கை வருணனைகளாக அமைதல் வேண்டும்

 

 

முக்கிய நிகழ்வுகள்

1.        திருமணம் புரிதல்

2.        மக்களைப் பெற்றெடுத்தல்

3.        முடிசூடல்

முதலான நிகழ்வுகளைக் கொண்டிருக்க வேண்டும்.

 

 

 

பிற நிகழ்வுகள்

1.        அமைச்சர்களுடன் கலந்துரையாடல்

2.        தூது செல்லல்

3.        போர்ப் புரிய படைகள் அணிவகுத்தல்

4.        போர்நிகழ்ச்சி

5.        வெற்றி பெறுதல்

·         போன்ற நிகழ்வுகளும் இடம்பெறுதல் வேண்டும்.

சந்தி

சந்தி எனப்படும் கதைப்போக்கு (தொடக்கம், வளர்ச்சி, விளைவு, முடிவு என்பவை) வரிசைப்படி அமைந்திருக்க வேண்டும்.
 

 

அமைப்பு முறை

அமைப்பு முறையில் பெருங்காப்பிய உட்பிரிவுகளுள்

  • சருக்கம்
  • இலம்பகம்
  • பரிச்சேதம்

என்ற பெயர்களில் ஒன்றைப் பெற்றிருத்தல் வேண்டும்

 

சுவை

  • எண் வகை சுவை
  • மெய்ப்பாட்டுக் குறிப்புகளும் கேட்போர் விரும்பும் வண்ணம் அமைக்க வேண்டும்

சீவக சிந்தாமணி

  • பெருங்காப்பியத்திற்குரிய நான்கு வகை உறுதிப் பொருள்களும் பிற உறுப்புகளும் முழுமையாக அமைப்பெற்ற நூல் என்ற சிறப்பை பெற்ற ஒரே நூல் = சீவக சிந்தாமணி மட்டுமே ஆகும்

சிறுகாப்பிய இலக்கணம்

  • அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கினுள் ஒன்றோ இரண்டோ குறைந்து வருவது சிறுகாப்பியம் ஆகும்

பாவிகம்

SAMACHEER KALVI 12TH TAMIL காப்பிய இலக்கணம்

  • காப்பியத்தின் பண்பாகப் ‘பாவிகம்’ என்பதைத் தண்டியலங்காரம் குறிக்கின்றது.
  • பாவிகம் = காப்பியத்தில் கவிஞன் வலியுறுத்த விரும்பும் அடிப்படைக் கருத்து

SAMACHEER KALVI 12TH TAMIL காப்பிய இலக்கணம்

  • சிலப்பதிகாரத்தின் பாவிகம் = “அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும், உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர், ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்”

SAMACHEER KALVI 12TH TAMIL காப்பிய இலக்கணம்

  • கம்பராமாயண பாவிகம் = “பிறனில் விழைவோர் கிளையொடுங் கெடுப”

தண்டியலங்காரம்

  • அணிகளின் இலக்கணத்தைக் கூறும் நூல்களுள் முதன்மையானது தண்டியலங்காரம் ஆகும். இந்நூல் “முத்தம், குளகம், தொகைநிலை, தொடர்நிலை ஆகிய செய்யுள் வகைகளைக் கூறுகிறது.
  • இந்நான்கனுள் தொடர்நிலை என்னும் வகை, காப்பியத்தைக் குறிக்கிறது

தொடர்நிலை

  • தொடர்நிலை ஒரு பாடலையும் மற்றொரு பாடலையும் சொன்னாலும் பொருளாலும் தொடர்பு ஏற்படுத்தும் செய்யுள்வகையைக் குறிக்கும்.
  • இது இருவகைப்படும், அவை

ஒரே வகை, பல்வகை

SAMACHEER KALVI 12TH TAMIL காப்பிய இலக்கணம்

  • விருத்தம் என்னும் ஒரே வகை செய்யுளில் அமைந்த காப்பியங்கள் = சீவக சிந்தாமணி, கம்பராமாயணம் ஆகும்
  • பாட்டும் உரைநடையும் கலந்து பல்வகைச் செய்யுள்களில் அமைந்தது = சிலப்பதிகாரம்

தற்கால காப்பியங்கள்

 

பாரதியார்

பாஞ்சாலி சபதம்

குயில்பாட்டு

 

 

 

பாரதிதாசன்

பாண்டியன் பரிசு

தமிழச்சியின் கத்தி

இருண்ட வீடு

எதிர்பாராத முத்தம்

சஞ்சீவி பர்வதத்தின் சாரல்

வீரத்தாய்

புரட்சிக்கவி

கவிமணி

மருமக்கள் வழி மான்மியம்
 

கண்ணதாசன்

ஆட்டனத்தி ஆதிமந்தி

மாங்கனி

ஏசுகாவியம்

கவியோகி சுத்தானந்தபாரதி

பாரதசக்தி மகா காவியம்

புலவர் குழந்தை

இராவண காவியம்

 

Leave a Reply